சனி, 9 ஏப்ரல், 2011

என் உயிரின் இயக்கம் கனிமொழி



பேரண்டத்தில் எங்கோ இருக்கும் கருந்துளையால் உலகில் நேரும் நிலநடுக்கம். நிலநடுக்கத்தாலும் கடலடியில் எரிமலை வெடிப்பாலும் குமரிக்கண்டத்தின் பகுதியான் சப்பான் சந்தித்த பேரழிவை உலகறியும்.

பிறந்தது முதல் அறுவைப் பண்டுவர் நிகழ்த்திய அறுவைகளால் மூளையில் கனிமொழிக்கு இதுவரை நேர்ந்த அதிர்வுகளால் நடுங்கினோம்.ஆயின் அவள் உள்ள உறுதியால் மீண்டெழுந்தாள். குறும்புப்பேச்சால் குடும்பத்தை குதூலிக்க வைத்தாள்.கட்வுள் உண்டா இல்லையா சண்டையில் என்னை வாதத்தில் மடக்கி மகிழ்வாள்.மாமா இந்தச் சாராய் ஆலை துர்நாற்றம் கடற்கரைக்கு வருவோரை தாக்குகிறதே என்றாள். உச்ச நீதிமன்றம் சென்று பொதுநல வழக்கு மூலம் துரத்தினேன் அந்த ஆலையை ஊருக்கு வெளியே.கனிமொழியின் கட்டளை நிறைவேறியது.

தோழர் ஜார்ஜ் பெர்ணான்டசு எப்போது மடல் எழுதினாலும் கனிமொழியையே  முதலில் விளிப்பார்.அவள் பிறந்த நாளும் ஜார் ஜ் பிறந்த நாளும் கலைஞர் பிறந்த நாளும் சூன் 3.கடந்த ஆண்டு நினைவு இழப்பு நோயால் படுத்த படுக்கையாக் உள்ள தோழரின் பிறந்த நாளை கனிமொழி கொண்டாடினாள்.


கடந்த ஆகத்து முதல் அப்பல்லோ மருத்துவ மனையின் கசாப்புக் கடைக்காரர்கள் 4 அறுவை முடிப்பதும் வீட்டுக்கு அனுப்புவதும் பின்னரும் மீண்டும் மருதுவமனை செல்வதும் வாடிக்கை ஆகி விட்டது.

போன அறுவைகுப்பின் சுற்றி இருபோர் யாரெனத் தெரியா நிலை ஏற்பட்டு நினைவு கிடைக்கப்பெற்றாள்.உண்ணும் உணவு உடனே வாந்தியாக வரும். தலை வலிக்கும்.கடுஞ்சுரமடிக்கும்.

தூங்கிக்கொண்டே இருந்தாள் இரவுபகலாக. நேற்று 8.4.2011 இரவு மீண்டும் மண்டையில் ஓட்டை போட்டு குழாய் பொருத்தி அவள் மூளையில் சுரக்கும் நீரை வடியச் செய்துதுள்ளனர்.

பெரியாரின் மண்டைச்சுரப்பை உலகு தொழுதது,

கனிமொழியின் மண்டை சுரப்புக்காக என் உயிர் அழுதது.


நந்திவர்மன்