திங்கள், 16 மே, 2011

காந்தியாரே கண்டித்தும் திருந்தாத ஊழல் வரலாறு!

ஊழலை ஒழிப்பதாக ஊரெல்லாம் முழங்கிய காங்கிரசார் பொது வாழ்க்கையில் சரியான முன்னுதாரணம் படைக்கத் தவறி விட்டார்கள். கொண்டா வெங்கடப்பய்யா குழு பொது வாழ்க்கையின் தரத்தைக் குலைக்கும் காங்கிரசாரின் போக்குக் குறித்து தன் மனவேதனையை வெளிப்படுத்தி எழுதிய மடலை மகாத்மா காந்தி தன் பிரார்த்தனைக்கூட்டத்திலேயே 1948 ஜனவரி 12-ஆம் நாள் படித்து வேதனைப்பட்டார். ஆந்திரத்திலே பரவி வந்த ஊழல் பற்றிய அம்மடலை மனவேதனையோடு படித்த காந்தியார் ஊழல் ஆந்திராவின் ஏகபோக உடமையாக இல்லை. நாடெங்கும் காணப்படும் கேடாகவே வளர்ந்து நிற்கின்றது என்று வருந்திக் கூறினார்.

இந்தக் குமுறலின் பின்னுள்ள கதை இதுதான். 1945-ல் சென்னை நாளேடுகள் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் டி. பிரகாசம் பல இடங்களில் பொற்கிழி பெற்ற செய்திகளைச் சுமந்து வந்தன. காந்தியார் 1946 ஜனவரியில் தன்னுடைய ‘அரிஜன’ வார ஏட்டில் காங்கிரஸ் தலைவர்கட்குப் பொற்கிழி அளிக்கப்படுவதைப் பொதுப்படையாகக்கண்டித்து எழுதினார். சர்தார் பட்டேல் பிரகாசத்திற்கு விளக்கம் கேட்டுச் சு10டான கடிதம் ஒன்றை அனுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரகாசம் விடுதலைப் போரில் தனக்கேற்பட்ட இழப்பினை ஈடு செய்ய மக்கள் மனமுவந்து நல்கிய காணிக்கைகள் என்று பொற்கிழி தரப்படுவதைப் பற்றிப் பதிலளித்தார். பட்டேல் ஏழை எளிய மக்களை கசக்கிப் பிழிந்து மிரட்டி உருட்டி பெறப்பட்ட காணிக்கையானது தவறான ஒரு முன்னுதாரணத்தைத் தோற்றுவிக்கும் என்றார்.

ஏட்டோடு கண்டனம் செல்லாதுபோயிற்று. நாட்டிலே கேட்டிற்கான வித்து வேரூன்றிவிட்டது. காங்கிரஸ் பட்டேல் அஞ்சியபடி தோற்றுவித்த தவறான முன்னுதாரணம் ஊழலைப் பெருமளவில் உற்பத்தி செய்து விட்டது.

காந்தியார் கடுமையாக எச்சரிக்கவேää பிரகாசம் தாம் பெற்ற காணிக்கைகளைக் காங்கிரஸ் கட்சியின் கணக்கிலே ஒப்படைத்தார். பிரகாசம் அரசியலை விட்டு அப்புறப்படுத்தப்படவேண்டும் என்று ‘அரிஜன’ ஏட்டில் அவரைக் கண்டித்து காந்தியார் எழுத நினைத்ததை பட்டேலும் நேருவும் தடுத்து நிறுத்தினார்கள்.

கொண்டா வெங்கடப்பய்யா காந்தியார்க்கு எழுதியது போலவே சென்னை அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களைக் காங்கிரஸ் தலைவர் இராஜேந்திர பிரசாத்திற்கு அனுப்பினார். காங்கிரஸ் தலைவரோ கட்சியின் பொதுச் செயலாளர் சங்கர் ராவ் தேவிடம் புகார்களின் உண்மை தன்மை பற்றிக் கண்டறியச் சொன்னார். அந்தச் செயலாளர் முன்னாள் முதல்வர் பிரகாசம் மீதும் அப்போதைய முதல்வர் குமாராசாமி ராஜா மீதும் சொல்லப்பட்ட புகார்களைப் பற்றி ஒரு முடிவும் எடுக்க முடியாமற் போகவே நேருää பட்டேல்ää இராஜேந்திர பிரசாத் ஆகிய மூவர் குழுவிடம் ஊழல் புகார்கள் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன. பிரகாசம் குற்றவாளி அல்லர் என்று விடுவிக்கப்பட்டார். குற்றவாளி என்று அந்த மூவர்குழு கண்டுபிடித்த ஏனைய அமைச்சர்கள் அப்போது அமைச்சர்களாக இல்லாத காரணத்தால் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என 1950 பிப்ரவரியில் தள்ளுபடி செய்தனர்.

காங்கிரஸ் நாட்டைத் தன் சொத்தாகக் கருதியதோடு ஊழலை உட்கட்சி விவகாரமாகக் கருதி அன்றே செயல்பட்டது. தன் கட்சிக்கொரு நீதி மாற்றுக் கட்சிக்கொரு நீதியா? என்ற கேள்வி எழக்கூடும். கேள்வி நியாயமானதே தன் கட்சிக்காரர் ஊழல் புகார்கட்கு உட்படுத்தப்பட்டால் புகார் உண்மையா? பொய்யா? ஆதாரமுண்டா? என்று கண்டறியும் பொறுப்பைத் தன் கட்சித் தலைமையிடம் ஒப்படைப்பதும்ää மாற்றுக்கட்சி விவகாரமென்றால் விசாரணைக் கமிஷன் நியமித்து அரசியல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைப்பதும் காங்கிரஸ் அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டு வரும் போக்காகும்.

1950-ல் மட்டுமல்ல 1958-ல் கெய்ரான் விவகாரத்தின்போதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. கிருஷ்ணமேனன் சம்பந்தப்பட்ட ஜீப் ஊழலை நாடாளுமன்றப் பொதுக் கணக்குக்குழு தன் ஒன்பதாவது அறிக்கையில் குறிப்பிட்டு – ஒருவர் அல்லது இருவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய விவகாரம் என எழுதிற்றுää மத்திய அரசோ 1954 டிசம்பர் 18-ம் நாள் குழு தன் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டதே ஒழிய உயர் நீதிமன்ற நீதிபதியிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்பது வேதனைக்குரியதுää இதனைவிடக் கொடுமையான செயல் பொதுக்கணக்குக்குழு மறுத்தவுடன் விவகாரம் இத்தோடு முடிந்தது என்ற மத்திய அரசின் அறிவிப்புத்தான்!

விசாரணைக் கமிஷன் நியமிக்கவேண்டும் என்ற பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரையைப் புதைகுழிக்கு அனுப்பியது பெரிதல்ல விசாரணைக் கமிஷன் தீர்ப்பையே தூக்கி எறிந்ததும் உண்டு. முந்திரா ஊழலில் அன்றைய நிதி அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் மீதான எம்.சி.சாக்ளா கமிஷன் அறிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் நேரு டி.டி.கே.விற்கு மடலெழுதினார். டி.டி.கே யின் பதவி விலகல் மடலை ஏற்றுக்கொண்டு நேரு எழுதிய மடலில் விசாரணைக் கமிஷன் வெளிப்படுத்திய உண்மை எதுவாக இருப்பினும்ää என்னைப் பொறுத்தவரை உங்களுடைய (டி.டி.கே) பங்கு மிகச் சிறியது என்றும் என்ன நடந்தது என்பது நிச்சயமாக உங்களுக்கே (டி.டி.கே) தெரியாது என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று நேரு எழுதினார். நேருவின் நற்சான்றிதழ் கிட்டிவிட்டால் ஊழல்பேர் வழி உத்தமனாகிவிடுவார்.

மூன்று விசாரணைகள் டி.டி.கே மீது நடந்ததால் நேரு காலத்திற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.டி.கே. மீதான புகார்களை அடுக்கியபோது சாஸ்திரி விசாரணை நடத்த விரும்பினார். டி.டி.கே. அவர்களோ நேரு பாணியிலேயே விவகாரத்தை முடிக்குமாறு வேண்டினார். சாஸ்திரியால் விசாரணை நடத்த உறுதி பூண்டிருந்ததனால் டி.டி.கே. பதவி விலகலோடு கதையை முடித்துக் கொண்டார்.

கே.டி.மாளவியா சம்பந்தப்பட்ட சிராஜூதீன் விவகாரத்தில் நீதிபதி தனது அறிக்கை தந்தபின் கே.டி. மாளவியா இராஜினாமா செய்தார். அந்தப் பதவி விலகலை ஏற்றபோதும் மாளவியாவின் ஒழுக்கம் - நிதி நிலைமை ஆகியவற்றை முழுமையாகத் தான் நம்புவதாக எழுதி நற்சான்று நல்கினார்.

பிரதாப் சிங் கெய்ரான் மீதான ஊழல் புகார்களை விசாரணைக்கு உட்படுத்தும் நேரத்தில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய குறிப்பு புகார்களைத்தான் கிஞ்சித்தும் நம்பவில்லை என நேரு கூறினார். வேண்டியவர் மீது விசாரணை வந்தபின்னரும் அவர்கள் உத்தமர்கள் எனத் தாம் நம்புவதாக ஒரு பிரதமர் கூறலாமா? இது நீதித்துறையில் தலையிடுவதாக ஆகாதா? தீர்ப்பு எவ்வாறு அளிக்கவேண்டும் என்று முன்னாடியே எடுத்துச் சொல்வது ஆகாதா? என்று எவரும் கேட்டாரில்லை. இந்த முன்னுதாரணம் நேரு புத்திரியாலும் மேற்கொள்ளப்படலாயிற்று.

கெய்ரான் மீதான புகார்களைக் காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டுத்தான் முதலில் விசாரித்தது. அது எப்படி நியாயமாகும்? நீதிபதி நடத்த வேண்டும் விசாரணையை ஒரு மேலிடமே நடத்தலாமா? என்று செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு “யார் விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்களோ அவர்கள் விசாரிக்கலாம் என்றார் நேரு பண்டிதர்.

நாட்டையும் கட்சியையும் ஒன்றாகவே கருதும் மனப்பான்மை இந்திரா மனதிலும் குடிபுகுந்தது. நாட்டை தன் கட்சியின் பொதுச் சொத்தாக கருதினார் தந்தை வழியில் இந்திரா. வேறு வழியின்றி எஸ்.ஆர்.தாஸ் என்ற நீதிபதியிடம் கெய்ரோன் விவகாரம் பின்னால் ஒப்படைக்கப்பட வேண்டிய அளவு கோரிக்கை வலுத்தது. தாஸ் கமிஷனே முதல்முதலாக அறிவிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் மட்டுமல்ல ஏனைய விசாரணைக் கமிஷன்களுக்கும் முன்னோடியாகியது.

புகார் கொடுத்தவர்களே புகார்களை நிருபித்தாக வேண்டும் என்பது தான் தாஸ் கமிஷன் அணுகுமுறை! மத்திய அரசு விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் பலனில்லை அன்று! விசாரணைக்குட்படுத்தப்பட்ட கெய்ரான் பஞ்சாப் முதல்வராகப் பதவியில் நீடித்தபோதுதான் விசாரணை நடத்தப்பட்டது.

தாஸ் கமிஷன் அறிக்கை கெய்ரானுடைய நேர்மையான நிர்வாகம் - பஞ்சாப்பைப் பசுமைப் புரட்சி குலுங்கும் பூமியாக மாற்றியபாங்கு – தொழில் மயமாக்கிய தொண்டுää நிலையான அரசுää நிர்வாக நேர்த்தி – எல்லைப்பிரச்சினைகளில் ஏற்பட்ட தொல்லைகளை வென்று மளமளவென்று ஒருமைப்பாட்டை இறுதி செய்த ஆற்றல் இவை போற்றிப் புகழப்பட்டன.

ஒரு கண்ணில் வெண்ணெய் - மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா? ஏன்ற கேள்வி எழவே செய்யும்.

கெய்ரான் கீர்த்தி பற்றி குற்றம் வெளியான பின்பும் பாராட்டுரை! கேரளத்தில் 1967 தேர்தலுக்குப்பின் எதிர்க்கட்சி அரசுகளும் விசாரணைக் கமிஷன் நியமித்துள்ளன. 1967 மார்ச் 6ம் தேதி மார்க்சிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரி தலைமையில் எட்டுக் கட்சிக் கூட்டணி அரசு பதவி ஏற்றது. வலது-இடதுகளுக்கான அரசியல் தகராறுகளினால் அமைச்சரவையின் ஆயுள் முடிக்கப்பட்டது. புகழ்பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லாவை நீதிபதியாகக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப் பெற்றது. இரண்டாண்டுகளாகக் கேரள அரசியலில் 67 முதல் நடை பெற்ற சு10ழ்நிலைகளைத் தன் சொற்றொடர்களால் உருதுக் கவிஞரான நீதிபதி அழகுறப் படம் பிடிப்பது சுழலை வர்ணிப்பதாகவே தோன்றுகிறது.

“அமைதியான அணுகுமுறைக்கோ தெளிவான சிந்தனைக்கோ அங்கே இடமில்லை. குற்றச்சாட்டு ஒவ்வொன்றும் உண்மையா என்று உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிட நேரமும் நினைப்பும் இல்லை.

“அவசரமாகத் தேவைப்பட்ட வெடிமருந்தாக ஒவ்வொரு குற்றச்சாட்டும் தேவைப்பட்டது. ஒவ்வொரு தோட்டாவும் வெற்றுத்தோட்டாவாகப் போனாலும் வெடிப்பதற்குத் தேவையாயிற்று. ஓசைக்காக வெற்றுத் தோட்டா வெடிக்கப்பட்டது போல ஆசைக்காக அவசர அவசரமாக குற்றச்சாட்டுக்கள் கொடுக்கப்பட்டன.” என்று கேரள நிலைமையை மேலும் வருணிக்கிறார் நீதிபதி முல்லா.

ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச்சரவை கவிழ்ந்தது. பல அமைச்சர்கள் அந்தச்சமயம் விசாரணைக் கமிஷன்களைச் சந்திக்க நேரிட்டது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சிமீது ஊழல் புகார்களைக் குவித்தது. ஒரு கட்சி அரசு முந்தைய அரசு மீதான புகார்களை விசாரிக்கக் கமிஷன் நியமித்தால் அடுத்து வரும் அரசும் அதே பாணியில் விசாரணைக் கமிஷன்களை நியமித்தது. 1969 செப். 9ல் வலது கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கே. சேகரன் (நாயர்) இடது அமைச்சர்களான திருமதி கே.ஆர். கௌரி (வருவாய்த் துறை)ää இ.கே.இம்பிச்சி பாவா (போக்குவரத்து) ஆகியோர் மீதான புகார்களை உள்துறை அமைச்சரிடம் தந்து விசாரணைக் கமிஷன் நியமிக்குமாறு வற்புறுத்தினார்.

மத்தய அரசினிடம் மர்மப்பெட்டி தூக்கி அலையவில்லை சேகரன் நாயர்! மாநில உள்துறை அமைச்சரிடமே புகார்களை தந்து ‘விசாரித்திடுக’ என்று குரலெழுப்பியது கவனிக்கத்தக்கது. கர்ஷக தொழிலாளிக் கட்சித் தலைவரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான பி. வெல்லிங்டன்மீது விசாரணைக்கமிஷன் நியமிக்க வேண்டும் என்று வலது கம்யூ. உறுப்பினர் இ. சந்திரசேகரன் (நாயர்) சட்டமன்றில் தீர்மானமே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. 1969 அக்டோபர் 10-ம் தேதி இந்திய சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் கேரள சோஷலிஸ்டகட்சியைச் சார்ந்த மத்தாய் மஞ்சு10ரன் மீது பேரவைத் தலைவரிடம் புகார்பட்டியலைத் தந்தார். முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பதிலடி தந்தார். வெலிங்டன்மீது விசாரணைக்கு உத்தரவிட்டதோடு கூட்டணியில் இடம் பெற்ற வலது கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் எம்.என்.கோவிந்தன் நாயர் (வேளாண்மை) டி.வி.தாமஸ் (தொழில்) ஆகியோர் மீதும் இந்திய சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த பி.ஆர். குரூப் மீதும் விசாரணைக் கமிஷன்களை நியமித்தார். அரசியலில் தங்களை வஞ்சிக்க நம்பூதிரிபாடு முயல்கிறார் என்றதும் இடது கம்யூ. அமைச்சர்கள் கே.ஆர்.கௌரி இ.கே.இம்பிச்சி பாவாää எம்.கே.கிருஷ்ணன்ää ஆகியோர் மீதும் மத்தாய் மஞ்சு10ரன் (கே.எஸ்.பி.) மீதும் விசாரணைக்கமிஷன் நியமிக்க வேண்டும் என்று வலதுசாரிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானம் நிறைவேறிய காரணத்தால் நம்பூதிரிபாடு அமைச்சரவை பதவி விலக நேர்ந்தது.

சி. அச்சுதமேனன் தலைமையிலான புதிய அரசு 1969 நவம்பர் 1ல் பொறுப்பேற்று ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி வேலுப்பிள்ளை தலைமையில் நான்கு விசாரணைக் கமிஷன்களை அமைத்தது. முல்லா கமிஷன் ஏற்கனவே நம்பூதிரிபாடினால் அமைக்கப்பட்டிருந்தது. கேரள விசாரணைக் கமிஷன்களில் சில அணுகு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. வேண்டியவர்க்குச் சலுகை வழங்குதல்ää ஊழல் அல்ல என்று கேரள விசாரணைக் கமிஷன்கள் தீர்ப்பு நல்கின. வேண்டியோர்க்குச் சலுகை காட்டுவது (குயஎழரசவைளைஅ) பற்றி நீதிபதி முல்லா தன் அறிக்கையில் குறிப்பிடுவதாவது. “ஒருவர் தான் விரும்புபவர்க்கு ஆதரவாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துதல் மனித இயற்கை’ ஆதரவாளர்க்கு ஆதரவாகவே ஒருவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவாரே ஒழிய எதிரிக்கு இசைவாகப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு மாறானது.

அரசியல் ரீதியாக வேண்டியோர்க்குச் சலுகை வழங்குதலை நியாயப்படுத்தும் சிலநெறி முறைகளும் கோட்பாடுகளும் ஜனநாயக அரசியல் முறையில் தோன்றிவிட்டன. தொகுதி நலன் பேணுதல் என்பது (ரேசளiபெ வாந ஊழளெவவைரநnஉல) இவற்றில் ஒரு கோட்பாடாகும். தொகுதி நலன் பேணல் என்றால் என்ன? உங்கள் ஆதரவாளர்க்கு முன்னுரிமை காட்டாமலும்ää உங்கள் அரசியல் கட்சி நலன்களுக்கு இசைவாக நடக்காமலும் நடுவுநிலைமை என்று சொல்லி உங்கள் தொகுதியைப் பேணுதல் இயலுமா?

தகுதி அடிப்படையில் ஒருவரைத் தேர்வுசெய்வது என்பது முற்றிலும் இயலாததுää ஆதாம்-ஏவாள் பெற்றெடுத்த எந்த மனிதனும் ஒரு வேலைக்குப்போட்டியிடுகின்ற பல்லாயிரக்கணக்கான மனுதாரர்களில் இருந்து ஒவ்வொரு பொறுப்புக்கும் தகுதியானவனைத் தேர்ந்தெடுத்தல் இயலவே இயலாது. தன் குழுவின் செல்வாக்கை வாக்காளரிடையே வலுப்படுத்துவது ஒவ்வொரு அரசியல்வாதியின் கடமை. தன் ஆதரவாளர் நலன் பேணினால் ஓர் அரசியல்வாதி வீழ்ச்சியுறமாட்டான்”.

என்றுää “நீதிபதி முல்லாகோட்பாடு” கூறுகின்றது. ஓர் அமைச்சர் தன் சொந்தத் தொகுதிக்கு முன்னுரிமை தருதல் இயற்கை. சொந்தக்கட்சியின் நலன் பேணுதலும் கட்சிக்காரர்களுக்குச் சலுகை காட்டுதலும் இயற்கை என்று நீதிபதி முல்லா தந்த தீர்ப்பால் எதிரிகள் ஊழல் என்று சொன்ன எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் அடிபட்டு விழுந்தன. ஓர் அமைச்சரின் செயலுக்கு அமைச்சரவை ஒப்புதல் நல்கி இருந்தால் அந்த அமைச்சர் தவறு செய்தவர் அல்ல என்பது கேரளக்கமிஷன்கள் கையாண்ட அணுகுமுறை அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றிருந்தாலேபோதும் அமைச்சர் ஒரு தவறும் செய்தவர் அல்லர் என்பது கேரளத் தீர்ப்பு!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளைவதிருக்கட்டும். முற்பகலில் எப்படியெப்படியெல்லாம் விசாரணைக் கமிஷன்கள் முடிந்தன ; என்பதையும் நாட்டோரும் நல்லோரும் ஒப்பிட்டுப் பார்த்தாக வேண்டும்.

. இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.