செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அடக்கம்: அன்பு: பண்பு: எளிமை: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வெற்றிக்கு வித்திட்டன: -


18 ஆண்டுகள் அரசியலை துறந்து கிரானைட் ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தியபோது ஆந்திரமாநிலம் வாரங்கலில் இருந்த சமயத்தில் லோக்தள் கட்சித் தலைவராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசுடன் நந்திவர்மனுக்கு நட்பு ஏற்பட்டது. அது பல ஆண்டுகள் கடிதத் தொடர்பாகவும் நேரடிச் சந்திப்பாகவும் இருந்து வந்தது. 1996 அக்டோபர் 26ல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் திராவிடப்பேரவை அரசியல் கட்சியாக பதிவு பெற்ற பிறகு புதுவைக்கு ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் பங்கேற்க ஜார்ஜ் பெர்னாண்டஸ் வந்தார். நந்திவர்மன் இல்லம் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் திராவிடப்பேரவையும் சமதாக் கட்சியும் இணைந்து ரெவேசொசியல் அரங்கில் நடத்திய பஞ்சாலை தொலாளர் மாநாட்டிலும் பங்கேற்றார். நந்திவர்மன் தங்கை மகள்கள் கனிமொழி – கயல்விழி மீது பாசம் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் எப்போதும் மடல் எழுதினாலும் முதலில் அவர்கள் பெயர்களை எழுதிவிட்டுத் தான் நந்திவர்மன் பெயரை எழுதுவார். 1998 திசம்பரில் டில்லியில் கூடிய சமதாக் கட்சியின் தேசியக் செயற்குழுவில் நந்திவர்மனின் திராவிடப்பேரவையும் நாகாலாந்து முதல்வர் வமூசோவின் நாகாலாந்து மக்கள் கட்சியும் மிஜோராம் முதல்வர் பிரிகேடியர் சைலோவின் மிஜோராம் மக்கள் மாநாட்டுக் கட்சியும் தோழமைக் கட்சிகளாகவும் இந்த மூவரும் சமதா செயற்குழு – பொதுக்குழுக்களுக்கு நிரந்தர சிறப்பு அழைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.

அப்போதுதான் புதுடில்லியில் தற்போதைய பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாருடன் நந்திவர்மனுக்கு நட்பு ஏற்பட்டது. சமதாக் கட்சியின் செயற்குழுவில் 66 பேர் இருந்தாலும் சுமார் பத்துபேர் தான் விவாதங்களில் ஈடுபடுவார்கள். அந்த 10 பேரில் ஒருவனாக நந்திவர்மன் பேசுவதுண்டு.  நிதிஷ்குமாருக்கு முன் வரிசையில் உட்காரவோ மேடையில் உட்காரவோ பிடிக்காது. கடைசிவரிசையில் அமர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நகைச்சுவையாகப் பேசுவார். மேடைக்கு அழைப்பட்டால் யார் மனமும் புண்படாமல் மென்மையாக பேசுவார். நந்திவர்மன் கொண்டு வரும் நூல்களைää திராவிட இயக்கம் பற்றிய குறிப்புகளை ஆவலுடன் பெற்றுக் கொள்வார் எப்போது தேர்தலில் நந்திவர்மன் போட்டியிட்டாலும் முழுச்செலவை பீகார் சமதா செய்யும் என்பார்.

ஜார்ஜ் பெர்னாண்டசே அவருக்கு எல்லாம். அவர் பேச்சை மீறமாட்டார். மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பீகாரில் முழுப்புரட்சி இயக்கம் தொடங்கினார். கட்சிகளற்ற ஜனநாயகம் வேண்டும் என்றார். அப்போது இளைஞர்களாக இருந்த லாலுபிரசாத்தும் நிதிஷ்குமாரும் அதில் ஈடுபட்டார்கள். ஜனதாதளத்தில் சேர்ந்தனர். அப்போதே நதிஷ்குமாருக்கு சாணக்கியர் என்ற பட்டம் கொடுத்து பேசுவார்கள் கட்சிக்காரர்கள். லாலு பிரசாத் ஜனதாதளத்தை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி துவக்கினார். ஜனதாதளத் தலைவராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். அவர் வழியில் நின்றார் நிதிஷ்குமார். குருவை மிஞ்சாத சீடர். நிதிஷ்குமாரால் தான் கொங்கணி மொழியை தாய்மொழியாகக் கொண்டு கன்னடத்தில் இதழ் ஆசிரியராகத் தொடங்கி மும்பையில் தொழிங்சங்க வாதியாக விளங்கி பாராளுமன்றத்தில் நுழைந்த ஜார்ஜட்பெர்னாண்டஸ் பீகார் அரசியல்வாதி ஆனார். அங்கிருந்து தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு தேர்வு பெற்றார்.

மத்தியில் தேசிய ஜனநாயக முன்னணி அமைந்தபோது அதன் அமைப்பாளர் ஆனார் ஜார்ஜ்பெர்னாண்டஸ். தேர்தல் அறிக்கையை ஜார்ஜ்பெர்னாண்டஸ் தயாரித்தார். அவர் எழுதினால் எவரும் திருத்தம் சொல்லமாட்டார்கள். திமுகழக தேர்தல் அறிக்கைகளும் முரசொலிமாறனால் மட்டுமே தயாரிக்கப்படும். தேசிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புத் திட்டத்தையும் சேது சமுத்திரத் திட்டத்தையும் சேர்க்கச் செய்தார் நந்திவர்மன்.

6.1.1999ல் தூத்துக்குடியில் சோசலிஸ்ட் மாநாடு. பார்வையாளராகச் சென்ற நந்திவர்மனை மேடைக்கு அழைத்து மொழிபெயர்க்கச் செய்து பேச்சின் இறுதியில் 5 நிமிடம் நந்திவர்மன் பற்றி பாராட்டிப் பேசினார் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ். சேது சமுத்திரத் திட்டம் துவக்கப்படும் என அப்போது அறிவித்தார். அந்தச் சமயத்தில் தரைவழி – கப்பல்போக்குவரத்து அமைச்சராக நிதிஷ்குமார் இருந்தார். புதுவைக்கு பிரதமர் வாஜ்பாய் வந்த நாளில் அவரது ஹெலிகாப்டர் உப்பளத்தில் இறங்கும் ஓசை கேட்ட சமயத்தில் பாதுகாப்பு அமைச்சார் ஜார்ஜ்பெர்னாண்டஸ் நந்திவர்மனுடன் பேசி தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக்கழக அறங்காவலராக போடப்போகிறேன் என்றார். நிதிஷ்குமார் அதற்கான ஆணை பிறப்பித்தார். 18 ஆண்டுகளாக தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் 1856 சுமை தூக்கும் தொழிலாளர்கள் தனியார் வசம் இருந்தனர். அவர்களை அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய மத்திய அமைச்சர் நிதிஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். அதற்குள் அவர் இலாகா மாற்றப்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் அமைச்சரானார். ஆனாலும் 1.1.2000 அன்று 1856 தொழிலாளர்களும் 64 பணியாளரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

பிரிக்க முடியாத குரு ஜார்ஜ்பெர்னாண்டசுக்கும் சீடர் நிதிஷ்குமாருக்கும் பிளவை தன் சுயநலத்திற்காக ஏற்படுத்தியவர் ஜெயா ஜெட்லி. ஜார்ஜ்பெர்னாண்டஸ் மொரார்ஜி தேசாய அரசில் அமைச்சராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த ஜெட்லியை மணந்துகொண்ட மலையாள பெண்மணி ஜெயா ஜெட்லி. அவர் கைவிணை பொருட்கள் ஏற்றுமதி செய்பவர். ஜார்ஜ்பெர்னாண்டசுக்கு பணம் தேவைபடும்போதெல்லாம் கடன் தருபவர். இதனால் கட்சிக்குள் மூக்கை நுழைப்பார் அந்த பெண்மணி. தேசிய ஜனநாயக முன்னணி ஒரு ராஜ்ய சபா சீட்டை சமதாக் கட்சி பீகாரில் ஒதுக்கியது. அதை பீகாரைச் சேர்ந்தவருக்கு தர நிதிஷ்குமார் விரும்பினார். ஆனால் ஜெயா தனக்கே வேண்டும். தான் இல்லாவிட்டால் எவருக்கும் கிடைக்கக்கூடாது என சீட்டை சரண்டர் செய்ய வைத்தார். ஜார்ஜ்பெர்னாண்டஸ் நிதிஷ்குமார் நட்பில் விரிசல் ஏற்பட இப்படி ஜெயா காரணமானார்.

குஜராத்தில் பாஜகட்சி – சமதாக் கட்சி கூட்டணி உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்த போது தனது எம்.பி கனவுக்காக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை முறித்து ராஜ்கோட் நகரில் கூடிய செயற்குழுவில் தனித்து போட்டியிட சமதாவை களம் இறக்கி எல்லாம் தொகுதிகளிலும் தோற்க ஜெயா காரணமானார். இதனால் 2004 ஏப்ரல் 11ல் பாட்னாவில் கூடிய செயற்குழுவில் ஜார்ஜ்பெர்னாண்டஸை தலைவர் பதவி தேர்தலில் தோற்குமாறு செய்து சரத்யாதவை கொண்டுவரும் நிர்பந்தம் நிதிஷ்குமாருக்கு எற்பட்டது. அப்போது ஐக்கிய ஜனதாதளத்தை உடைக்க பாட்னாவில் ரிபப்ளிக்கன் ஓட்டலில் கூட்டம் கூட்டினார் ஜெயா ஜெட்லி. கௌரவம் பார்க்காமல் போட்டி கூட்டம் நடந்த இடத்துக்கே வந்தார் நிதிஷ்குமார். ஜார்ஜ்பெர்னாண்டசுடன் இருந்த நந்திவர்மனை என் நண்பனான நீயுமா இங்கு வந்துவிட்டாய் என வேதனையுடன் கேட்டார். ஜார்ஜ்பெர்னாண்டஸ் தங்கியிருந்த அறைக்கே சரத்யாதவை அழைத்துவந்து அவருக்க இனிப்பு தந்து புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு ஆதரவு கேட்டார் சரத் யாதவ். அப்பொழுது அந்த அறையில் நந்திவர்மனும் இலட்சத்தீவு எம்.பி பூக்குன்னிகோயாவும் இருந்தனர். அப்பொழுது பிளவு தவிர்க்கப்பட்டது. ஏப்ரல் 14 2004 ல் டில்லியில் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இல்லத்தில் சுமார் 10 தலைவர்கள் கூடி தனிக்கட்சி பற்றி ஆலோசித்தபோது குறுக்கிட்ட நந்திவர்மன் இனி பீகாரில் விஷ்ப்பரிட்சை வேண்டாம். டில்லியில் ஜார்ஜ்பெர்னாண்டஸ் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவரும் சோஷலிஸ்ட்டுமான முலாயம்சிங் யாதவுடன் உத்திரபிரதேசத்தில் கைகோர்த்து அரசியல் நடத்துவதே இனி புத்திசாலித்தனம் என நந்திவர்மன் சொன்ன யோசனை ஜெயா ஜெட்லிக்கு பிடிக்கவில்லை.

வீம்புக்காக ஜார்ஜ்பெர்னாண்டஸ் - நிதிஷ்குமார் நட்பை முறித்த ஜெயா ஜெட்லி கடந்த தேர்தலில் பீகாரில் ஜார்ஜ்பெர்னாண்டஸையும் அவரது நண்பர்களையும் சுயேட்சைகளாக போட்டியிட வைத்தார். வாழ்நாளில் மிக அவமானகரமான தோல்வி ஜார்ஜ்பெர்னாண்ட ஸ்க்கு ஏற்பட்டது. முன்னாள் மகாராஜாவும் எப்பொழுதுமே வெற்றி பெற்று வந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த திக்விஜய்சிங்கும் தோற்றார். ஆனால் பண்பில் இமயமாக விளங்கி நிற்கும் நிதிஷ்குமார் உடல் நலிவுற்று பதவியேற்பு உறுதிமொழியைக்கூட சிவானந்ததிவாரி உதவியில்லாமல் படிக்கமுடியாத நிலையில் இருந்த தன் குருநாதர் ஜார்ஜ்பெர்னாண்டஸை மாநிலங்களவை உறுப்பினராக்கி தன் பெருந்தன்மையை உலகுக்கு வெளிகாட்டினார்.

ர்pக்ஷாவில் பயணித்து ஏழையும் இல்லம் வந்தால் இன்முகத்துடன் வரவேற்று குறை கேட்கும் நிதிஷ்குமார் காலத்தில்தான் கிராம புற மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் கொடுக்கப்பட்டது. பாட்னா நகரம் சென்னை நகரம் போல மேம்பாலங்கள் நிறைந்த நகரமாக மாறியது. பனைமரங்களின் நிழல்களில் கள் அருந்தி வீட்டுச்சுவர்களில் சாணியால் வரட்டி தட்டி ஆடுமாடுகளை செல்வமாகக் கொண்டு அரிசி உணவை விரும்பி உண்ணும் வட திராவிடராகிய பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் ஒரு உண்மையான தலைவர்.அவரது மைத்துனி ரேணுகுமாரி எம்.பியாக இருந்து வீராவேசமாக இந்தியில் பேசக்கூடியவர்.
 
 எனினும் அவர் அனைத்து நண்பர்களையும் குடும்பமாக கருதி அவர்களையே அரசியலில் முன்னிருத்துவார் என திராவிட பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.