புதுச்சேரி அரசு முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரின் தந்தையாருமான் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் வெ.வெங்கடசுப்பா [ ரெட்டியாரின்] நூற்றாண்டு விழாவை 16.08.2010 அன்று செயராம் திருமண மண்டபத்தில் கொண்டாடியது.அதில் 2008-2009 ஆண்டுக்கான தமிழ்மாமணி விருதுகளை ஆறு தமிழ் அறிஞர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.இக்பால் சிங் வழங்கினார். 91 வயது மூத்த தமிழறிஞரும் பாவேந்தரின் சீடருமான வைணவ வித்தகர் சித்தன் அவர்களும்,திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நாவலர்.நந்திவர்மன் அவர்களும், பேராசிரியர் திருமாவளவன் அவர்களும், புலவர் திருமேனி நாகராசன் அவர்களும்,பரிதி.வெங்கடேசன் அவர்களும், மா.தன.அருணச்சலம் அவர்களும் விருதுகளையும் 30,000 ரூபாய் பொற்கிழியையும் 3 பவுன் தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.
முதலமச்சர் வெ.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.
கலைப்பண்பாட்டுத்துறை அமைச்சர் எம்.ஒ.எச்.ஷாஜகான் வரவேற்றார்.
சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் இரா,சிவா, ஆர்,விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
47 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும் 20,000 ரூபாய் பொற்கிழியும் 2 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக