புதன், 29 செப்டம்பர், 2010

200 கம்பெனிகள் உலகை ஆளுவது இன்று

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டது - அன்று



200 கம்பெனிகள் உலகை ஆளுவது இன்று

உலகை நடத்திச் செல்வது யார்?
உலகில் அரசுகளை இயக்குவது யார்;? நேரில் நாம் பார்க்கும் முகங்களா? நாடுகளின் தலைவர்களா? இல்லை இல்லை. அரசியல்வாதிகள் வெறும் பொம்மைகளே! பின்னால் இருந்து இயக்கும் பொம்மலாட்டக்காரர்கள் யார்? எவர்? என உலகமே அறியாது.

மக்கள் தேர்வு செய்யும்அரசுகள், பெரும் வணிகக் குழுமங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், வங்கி அதிபர்கள், இராணுவம் என இந்தக் கூட்டுச் சக்திகளே நாடுகளை இயக்குகின்றன என்பது பொதுவான கருத்தாகும். சதிகள் பற்றிய செய்திகளைச் சொல்லும் Conspiracy books திடுக்கிடும் பல தகவல்களை சொல்கிறது.

 செல்வாக்கு மிக்க பலம் பொருந்திய பல இரகசியக் குழுக்கள் காலங்காலமாக மன்னர்களையும் அரசுகளையும் பின்னிருந்து இயக்கி வந்துள்ளதை இந்த இணையதளம் பட்டியல் இடுகிறது Who really runs the World ? என்ற நூல் தாம் பர்னெட் மற்றும் அலெக்சு கேம்சு இணைந்து எழுதிய நூல் ஆகும்.இந்நூலோ உலகை உண்மையில் தங்களது சுயநல நோக்கத்துக்காக பின்னிருந்து ஆளுவது 200 பன்னாட்டு நிறுவனங்களே என்று “பகீர்” தகவலை தருகிறது.

உலகம் யாருடைய உடைமை என்ற நூல் கேவின் கே ஹில் எழுதியது. இந்நூல் உலகின் 197 நாடுகளிலும் 66 சுயாட்சிப் பகுதிகளிலும் யார்? எவர்? நில உடைமையாளர்களாக உள்ளனர் என விரிவாகவே பட்டியல் இடுகிறது.

உலகில் 26பெரும் நிலச்சுவான்தார்கள் உள்ளனர்.அய்ரோப்பாவின் நிலங்களில் 60சதவிகிதம் செல்வச்சீமான்கள் கையில் உள்ளது. ஓவ்வோராண்டும் 48000 மில்லியன் யுரோ வேளாண் ஊக்கத்தொகை இந்தச் சீமான்களுக்கே போகிறது. இப்படி விவரிக்கும் அந்நூல் உலகின் “நெம்பர் ஓன்” நில உடைமையாளராக சுட்டிக்காட்டுவது யாரைத் தெரியுமா? பிரிட்டன் நாட்டு அரசியார் ராணி எலிசபெத்தையே! அரசியாருக்கு உலகெங்கும் 6600 மில்லியன் ஏக்கர் நிலம் சொந்தம் சட்டப்படி சொந்தம். அந்தந்த நாட்டுச் சட்டப்படி சொந்தம். இந்த நிலத்தை மதிப்பிடுவது சிரமமே! ஓவ்வொரு நாட்டிலும் ஒரு விதமாக மதிப்பு இருக்கும். ஏக்கர் ஒன்று 5000 டாலர் என வைத்துக் கொண்டால் 33,000,000,000,000 (33 டிரில்லியன் டாலர்) மதிப்பு சொல்லலாம்! கனடாவில் மட்டும் 2467 மில்லியன் ஏக்கர். ஆசுதிரேலியாவில் 1900 மில்லியன் ஏக்கர். பப்புவா நியு கினியாவில் 114 மில்லியன் ஏக்கர் நியுசிலாந்தில் 66 மில்லியன் ஏக்கர்.

ஒரே ஒரு அரசியாருக்கு இவ்வளவு நிலம் சொந்தமா? இதை யாரும் பேசாமல், மறைந்த மூப்பனாருக்கு எவ்வளவு சொந்தம் என்பதையே தமிழ்நாட்டில் பேசினார்கள். வெளி உலக விவகாரம் தெரியாத காரணத்தால்தானோ? எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று பொதுவுடமை பேசும் நண்பர்களுக்கு பிடித்தமான ரஷ்யநாடு தான் உலகின் இரண்டாவது நில உடைமையாளர். ரஷ்ய அரசுக்குச் சொந்தமாக 4219 மில்லியன் ஏக்கர் உள்ளது. சௌதி அரேபியா அரசர் அப்துல்லாவுக்கு 553 மில்லியன் ஏக்கரும் தாய்லாந்து மன்னர் பூஜ்பாலுக்கு 126 மில்லியன் ஏக்கரும் மொராக்கோ நாட்டின் அரசர் முகம்மதுவுக்கு 113 மில்லியன் ஏக்கரும் ஓமன் நாட்டு-சுல்தான் குவாபூசுக்கு 76 மில்லியன் ஏக்கரும் சொந்தமாக உள்ளன. 2007 பிப்ரவரி 27ல் எடுக்கப்பட்ட கணக்கு இது.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறி மக்களாட்சி நாடுகளில் மக்களை எமாற்றுகிறார்களே! எவரும் ஒழிந்து விட்ட மன்னராட்சியில் மன்னர்களுக்கா இவ்வளவு நிலங்கள் உடைமை என்று கேட்பதில்லையே ஏன்? இந்த மன்னர்களும் மக்களுக்கு நிலங்களை பகிர்ந்தளிக்க மனம் வராமல் இன்னும் பேராசைக்காரர்களாக இருக்கிறார்களே! இது நியாயம் ஆகுமா?

உலகின் நிலங்களில் 1ஃ6 ஆறில் ஒரு பங்கு அரசியார் எலிசபெத்துக்குச் சொந்தம். அதே போல் 2000 மில்லியன் ஏக்கர் அதாவது உலக நிலங்களில் 1ஃ16 பதினாறில் ஒரு பங்கு பெரும் நிலச்சுவான்தார்களிடம் உள்ளது.

இந்நூல் போலவே பல திடுக்கிடும் தகவல்களை உலக சோஷலிச இயக்கம் அள்ளித் தருகிறது.

உலகில் பத்து கோடா கோடீசுவரர்களிடம் 133 மில்லியன் டாலர் சொத்து உள்ளது. உலகின் வளர்ச்சி குறைந்த நாடுகள் அனைத்தின் தேசிய வருவாயை விட 1.5 மடங்கு (ஒன்றரை பங்கு கூடுதல்) இந்த 10 பேரிடம் மாட்டிக் கொண்டுள்ளது. இது 10 ஆண்டு முன்பு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் வெளியிட்ட புள்ளி விவரம்.

உலக மக்கள் தொகையில் ஐந்து பேரில் ஒருவர் ஒரேயொரு டாவருக்கும் குறைவாக வறுமையில் வாடும்போது 10 செல்வந்தர்கள் பன்னீரில் குளிக்கிறார்கள்.

1990 ல் இருந்ததைவிட இன்று 54 நாடுகள் ஏழ்மையடைந்துள்ளன. ஆப்ரிக்காவில் சகாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள 20 நாடுகளும் கிழக்கு அய்ரோப்பாவில் 17 நாடுகளும் இலத்தீன் அமெரிக்காவில் 6 நாடுகளும் கிழக்காசியாவில் பசிபிக் பகுதியில் 6 நாடுகளும் அரபு நாடுகளில் 5 நாடுகளும் முன்பை விட வறுமையில் வாடுகின்றன. முன்னேற்றப்படிகளில் கீழிறங்கி உள்ளன.

உலகை மாற்ற வல்ல 50 உண்மைகள் என்ற நூலை ஜெசிகா வில்லியம்சு எழுதினார். இதில் இன்னமும் உலகில் 27 மில்லியன் அடிமைகள் உள்ளனர் என்கிறார் அவர். ஆபிரகாம் லிங்கன் வந்ததும் அடிமைத்தளை அகன்றது என்று படித்தோம். இன்னமும் அடிமைத்தனம் நிலவும் அவலம் நீடிக்கிறதே! ஓவ்வொரு நிமிடமும் உலகெங்கும் கார்கள் மோதி 2 பேர் உயரிழந்த வண்ணமுள்ளனர். கென்யா நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு லஞ்சமாக செலவழிக்கிறது என்று அதிர்ச்சித் தகவல்கள் நீளுகின்றன.

அமெரிக்காவில் மத்திய வங்கி 1900 ல் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள ஜெகிள் தீவுகளில் சில வங்கி அதிபர்கள் கூடி ரகசியமாக முடிவெடுத்ததால் உருவானது. அதை வங்கி என்று சொல்லாமல் வார்த்தை ஜாலம் காட்டி குநனநசயட சுநளநசஎந ளுலளவநஅ என்று பெயரிட்டு அமெரிக்கர்கள் கண்ணை ஏமாற்றினார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வங்கிகள் மூலமாக பணத்தை உலகின் எந்தப் பகுதிக்கும் கொண்டு சென்று லாபமீட்டினர். பதுக்கி வைத்தனர். சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்தனர். தங்கள் சட்டைப் பைக்குள் அரசியல் தலைவர்களை தூக்கி வைத்துக்கொண்டு நாடுகள் மக்கள் நலம் நாடாமல் தங்கள் நலன் பேணுமாறு பார்த்துக் கொண்டனர்.

இந்த வணிகச் சூதாடிகளும் வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அணிந்து கொண்டுள்ள இன்னொரு முகமூடிதான் சர்வதேச நாணய நிதியம்! இந்த நிதியம் வளரும் நாடுகளுக்கு கடன் தருகிறது. கடனோடு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கிறது. வணிக நலனுக்காகவே செயல்படும் இந்த நிதியத்தின் அடிமைகள்தான் இந்தியாவையும் ஆளுகிறார்கள்! இவர்கள் பொம்மைகள்! சர்வதேச நாணய நிதியமே பொம்மலாட்டக்காரன். பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளை! உலகில் ஏழைகளுக்கு என்றும் விடிவே இல்லை!.

நந்திவர்மன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக