சனி, 25 டிசம்பர், 2010

நேபாளத்திடம் மன்னிப்பு கேட்டது இலங்கை


கொழும்பு, டிச.24- நேபாளத்தில் அமைதியை ஏற்படுத்த ராஜபட்சவிடம் உதவி கோரப்பட்டதாக வெளியான தகவலுக்காக இலங்கை வெளியுறவுத்துறை இணையமைச்சர் நாமல் பெரேர, நேபாளத்திடம் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நேபாளம் சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபரை நாமல் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நேபாள அதிபர் ராம் பரன், தமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவை பீஜிங்கில் சந்தித்தபோது கேட்டுக்கொண்டார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முன்பு கூறியிருந்தார். தற்போது அவரது கூற்றுக்காக வெளியுறவுத்துறை இணையமைச்சர் நேபாளத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னிப்பு கேட்கப்பட்ட தகவலை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை அமைச்சர் தரப்பில் நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 கருத்துகள்

 நன்றாக கூறினீர்கள் தோழர் வெற்றிசெல்வன் அவர்களே.....

இதேபோல் ஈழ தமிழர்களிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய காலம் வரும்.

By வெற்றிவேலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக