- நந்திவர்மன் வேதனை
பாகூர் அரசு மேனிலைப் பள்ளியில் 14.11.2010 அன்று பண்பாட்டுக் கழகம் சார்பில் பண்பாட்டுப் பயிலரங்கம் நடந்தது. ஆசிரியர் தமிழுலகன் முன்னின்று பள்ளிகள் தோறும் பண்பாட்டுப் பயிலரங்கை நடத்தி வருகிறார். அந்தப் பயிலரங்கில் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு பற்றி நந்திவர்மன் பேசியதாவது.
தமிழர்களுக்கு ஆங்கிலமே உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்ற மயக்கம் உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் உலகில் 30 மொழிகளை அமெரிக்காவில் புகழ்பெற்ற நாளேடு நியுயார்க் டைம்சு 1998 ல் பட்டியல் இட்டது. உலக மக்கள் தொகையில் 14.75 விழுக்காடு மக்கள் சீன-மண்டாரின் மொழி பேசுகின்றனர். மூன்று நாடுகளில் அது ஆட்சிமொழி. ஐக்கியநாடுகள் மன்ற ஆட்சிமொழிகளுள் ஒன்று. 885ää000ää000 மக்கள் சீன மொழி பேசுகிறார்கள். உலக மக்கள் தொகையில் 5.33மூ விழுக்காடு மக்கள் பேசும் ஸ்பானிஷ் மொழி 20 நாடுகளில் ஆட்சிமொழிää ஐக்கிய நாடுகள் மன்ற ஆட்சிமொழிகளுள் ஒன்று 322ää000ää000 மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசுகிறார்கள்.
மூன்றாமிடத்தில் உள்ள ஆங்கிலம் இந்தியா போல ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட 51 நாடுகளில் ஆட்சி மொழியாக இன்னமும் வைத்திருப்பதால் அதுவே உலகில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியென நினைத்துக் கொண்டுள்ளோம்.
இந்த வரிசையில் தமிழ் 19வது இடத்தில் உள்ளது. தெலுங்கு 15வது இடமும் மலையாளம் 30வது இடமும் பெற்றுள்ளன. இந்த மூன்று மொழிகளும் திராவிட மொழிகளாக பட்டியலில் சொல்லப்படுகின்றன. தமிழ் இரண்டு நாடுகளில் ஆட்சிமொழி. அந்த 2 நாடுகளும் இந்தியாவுக்குள் இல்லை. நாம் இந்திய ஆட்சிமொழிகளுள் தமிழை ஒன்றாக்க பேச்சளவில் போராடி வருகிறோம்.
சாகித்திய அகாதெமி இந்திய மொழிகளின் வரலாற்றை புத்தகமாக்கியது. 1968ல் பி.கே.பரமேசுவரன் நாயர் மலையாள மொழியின் வரலாற்றை எழுதினார். மலையாளம் தமிழின் கிளை மொழி அல்ல என்று அதில் எழுதிவிட்டார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்டிய டாக்டர் கால்டுவெல் கருத்தை உலகமே ஏற்று தமிழின் சேய்மொழிகளாக தெலுங்கையும் கன்னடத்தையும் மலையாளத்தையும் துளுவையும் கூறி வருகிறது. ஏதோ ஒரு மூலத்திராவிட மொழியில் இருந்து தமிழும் மலையாளமும் பிறந்ததாக பரபேசுவரன் நாயர் கட்டுக்கதை கட்டியது 1968ல் என்றால் இன்று வரை நாம் சாகித்ய அகாதெமியை தட்டிக் கேட்கவில்லை. ஏதோ ஒரு மூலதிராவிட மொழி என்று உளறும் பரமேசுவரன் நாயரை அந்த மூல மொழியின் பெயரைச் சொல் பார்ப்போம் என எவரும் சவால் விட்டதில்லை. இதையெல்லாம் செய்ய வேண்டிய நம் தமிழறிஞர்கள் மனப்பாடம் செய்து மாணவர்களுக்கு சொல்லி வந்த சரக்கையே ஆயுளுக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். புதிதாக தினமும் படிக்கவில்லை.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்று பழமொழி உண்டு. இதே நூலில் தொடர்ந்து பொய் எழுதிய பரமேசுவரன் நாயர் தடுக்கி விழுகிறார்.
“தமிழ் என்ற சொல்லுக்கு இன்று வழக்கில் உள்ள பொருளில் மலையாளத்தை எக்காலத்திலும் தமிழ் என்று குறிப்பிட்டதில்லை. மூலத் திராவிட மொழியின் பிரிவுகள் என்ற கருத்தில் கன்னடத்தை கரிநாட்டுத் தமிழ் என்றும் துளுவை துளு நாட்டுத் தமிழ் என்றும் சொல்லி வந்ததைப் போலவே மலையாளத்தை மலை நாட்டுத்தமிழ் என்றும் சொல்லி வந்தார்கள்” என அவரே எழுதுகிறார். மூலத்திராவிட மொழி தமிழென்பது நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறது நாயரே! ஏன் தமிழர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறீர்கள் என நம்மவர் கேட்கவில்லை.
இதனால் இன்று மலையாளம் செம்மொழி தகுதி கேட்கிறது. தெலுங்கு கேட்கிறது. கன்னடம் கேட்கிறது. உலகின் இயற்கை மொழிகள் பட்டியலில் கன்னடத்தையம் மலையாளத்தையும் சேர்த்து விட்டனர். நாம் தூங்கிக்கொண்டுள்ளோம். காஞ்சிபுரத்துக் கம்பண்ணக் கவுண்டன் பெங்களுரைக் கட்டினான். அவன் பெயரை கெம்பே கவுடா ஆக்கி பெங்களுரில் கெம்பே கவுடா சர்க்கிள் அமைத்து விட்டனர். வரலாற்றை மறைக்கின்றனர்.
தமிழ் இயற்கை மொழிகள் பட்டியலில் உள்ளது. தமிழிலிருந்த பிறந்த மொழிகளான தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் இயற்கைப் பட்டியலில் சேர்த்தது தவறு என தமிழ்நாட்டு அறிஞர்கள் தட்டிக்கேட்பதில்லை.
திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் தமிழ். தமிழிலிருந்து பிறந்த மொழிகள் தாமே வானில் இருந்து வந்து குதித்த மொழிகள் போல இன்று பேசுகின்றன. உலகில் 85 திராவிட மொழிகள் பேசும் 200 மில்லியன் மக்கள் உள்ளனர். இந்த 85 மொழிகளின் பெயரையாவது நம் மாணவர்களுக்குச் சொன்னோமோ? நாம் சொல்லித் தராவிட்டால் இந்த வரலாறு மறைக்கப்படும் என்பதை மறந்தோம்.
பாபா சாகேப் அம்பேத்கார் எழுதிய சு10த்திரர் வரலாறுää தாழ்த்தப்பட்டோர் வரலாறு ஆகிய 2 நூல்களை கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும். இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ். தமிழ் பேசிய அந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய நாகர்கள் சமசுகிருதச் செல்வாக்குக்கு வீழ்ந்தபோது தென்னிந்திய நாகர்களைக் குறிக்க திராவிடர்கள் என்ற சொல் வந்தது என எழுதியுள்ளார்.
சீனமொழியில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தரின் வரலாற்றில் அவர் இளமையில் தமிழ் கற்றார் என்பது பதிவாகியுள்ளது.
இயேசு வாழ்ந்த காலத்தில் அவரின் குடும்பம் பேசிய மொழி அராமிக் மொழி அந்த மொழியில் தாயை ஆயா என அழைப்பார்கள். இயேசு தன் தாயை ஆயா என்று தமிழ்ச்சொல்லால் அழைத்திருக்கக் கூடும்.
கருநாடகம் நம்மோடு சண்டையிடும் ஒகேனக்கல்லின் பழைய பெயர் உகுநீர்க்கல். அந்த பெயரை தொலைத்து விட்டோம். தமிழ்ப்பெயருக்கு பதில் கன்னடப் பெயரை வைத்துக் கொண்டோம். இதனால் கன்னடர்கள் நம் ஊர் தங்களுக்குச் சொந்தமென வாதாடுகிறார்கள்.
1971 ல் புகழ்பெற்ற ரீடர்சு டைஜஸ்ட் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் இமய மலையில் நேபாளத்துக்கும் திபேத்துக்கும் இடையே இருந்த கணவாய்க்கு சோழர் கணவாய் என்ற பெயர் இருந்தது. சோழர் படைகள் இமயம் சென்றன என்பதற்கு அந்தக் கணவாய் பெயரே சாட்சி. நாம் தூங்கினோம் அந்தப் பெயரை மாற்றிவிட்டார்கள்.
அரியானாவில் உள்ள காலிபங்கன் என்ற இடத்திலும் ராஜஸ்தானிலும் பழங்காலத்தில் ஓடிய கக்கர் என்ற ஆறு வறண்டு போனது. வடநாட்டார் அதற்கு சரசுவதி ஆறு என்று பெயர் சுட்டி ஆரிய நாகரிகம் அங்கே பிறந்ததாக கதை விடுகின்றனர். நம் சிந்துசமவெளி நாகரிகத்துக்கு திராவிட நாகரிகம் என்ற பெயர் இருந்தது. அதை மறைத்து சரசுவதி நாகரிகமென புதுப்பெயர் சு10ட்டிவிட்டனர். ஆனால் அங்கு வாழும் மக்கள் குவாரி கன்யா என்பதே அந்த ஆற்றின் பழைய பெயர் என்று கூறுகின்றனர் குஜராத் மொழியில் குமாரி என்பதை குவாரி என்;றே கூறுவர். குவாரி கன்யா ஆறு குமரி கன்யா ஆறு ஆகும். கன்னியாகுமரியில் இருந்து சென்றவர்கள் அங்கு வாழ்ந்த பழங்கால மக்கள். அதனால் குவாரிகன்யா ஆறு எனப் பெயரிட்டனர்.
இதையெல்லாம் மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதியை தொடர்ந்து எழுதி முடித்து இன்று 31 தொகுதிகளாக சுமார் 10ää000 விலையில் தமிழக நூலகங்கள் அனைத்துக்கும் சென்றுள்ள அகராதியை உருவாக்கிய அறிஞர் மதிவாணன் பல நூல்களில் பதிவு செய்துள்ளார்.
மதிவாணன் நூல்களை மாணவர்கள் படித்தல் வேண்டும். வரலாற்றில் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் மதிவாணர். இன்று மலையாளத்தை செம்மொழி ஆக்க ஐராவதம் மகாதேவன் புனையும் கட்டுக்கதைகளையும் தவிடுபொடி ஆக்குபவர் மதிவாணன்” எனத் தமிழ்மாமணி நந்திவர்மணி நந்திவர்மன் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தமிழறிஞர் இலெனின் தங்கப்பா தலைமை தாங்கினார் தமிழுலகன் முன்னிலை வகித்தார். காலைநிகழ்ச்சியில் பேராசிரியர் இராமதாசுää பேராசியர் குழந்தை வேலனார் கருத்துரை ஆற்றினார்.
அருமை
பதிலளிநீக்கு