உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு
தமிழ்மாமணி நந்திவர்மன்
கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700 அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில் கடலில் 9000 நாட்கள் இருந்து 120000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 16764 வகை மீன்களை விளக்கியுள்ளனர். இன்னும் இனம் கண்டறியப்படாத 750000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில் மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும் இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில் அனைத்துலக ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின் புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின் செய்தியை வெளியிட்டது. கடலடியில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்த இத்துணை நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கூட்டாக இணைந்து கோடிகோடியாகச் செலவழித்தது போன்று மனித குலத்தின் நாகரிகத் தடயங்களை கண்டுஎடுக்க முயற்சிகள் இல்லையே! முனைப்பும் இல்லையே! என்று சிந்தித்தேன்.
வரலாற்றில் புதிய உண்மைகள் வெளிப்பட்டால் நேற்று வரை நாம் கூறிவந்த காலக்கணக்கை திருத்திக் கொண்டாக வேண்டும். ஆண்டுக்கணக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கருத்தும் என்னுள் சுரக்க இன்னொரு பத்திரிக்கைச் செய்தியே காரணமாயிற்று.
பாறை ஓவியங்கள் - பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் முன்னோடி என்பது நாமறிந்ததே! பிரான்சு நாட்டின் குகை ஒன்றில் பாறையில் 30000த்திலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால மனிதன் ஓவிய வடிவில் தன் உள்ளக் கிடக்கைiயை வெளிப்படுத்த முனைந்துள்ளது பற்றி சென்னையிலிருந்து வெளிவரும் தி டைம்சு ஆப் இந்தியா 20 பிப்ரவரி 2010-ல் செய்தி வெளியிட்டது.
விக்டோரியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோடு கோடுகளாகப் புள்ளிகளாக கோணல் மாணலான கிறுக்கல்களாக அரை வட்டங்களாகப் பாறைகளில் தென்பட்ட வடிவங்கள் 30000 முதல் 40000 ஆண்டு முன்பு அக்காலமனிதன் தன் எண்ணத்தை ஓவியமாக வெளிப்படுத்தாமல் குறியீடுகளாக வெளிப்படுத்த முற்பட்டதைக் கண்டறிந்தனர். Genevieveon Petzinger என்ற பேராசிரியர் தலைமையிலான குழுவினர் பிரான்சு நாடெங்கும் 146 இடங்களில் கண்டுபிடித்த எழுத முயன்ற மனிதன் 35ää000 ஆண்டு முன்போ 25ää000 ஆண்டு முன்போ 10ää000 ஆண்டு முன்போ வாழ்ந்திருக்கக் கூடும். 26 வகை குறியீடுகள் அதே வடிவில் பல்வேறு இடங்களில் கிடைத்தது வியப்பளித்தது. குறிப்பாக Les Trains Freres என்ற இடத்தில் நான்கு வகையான இணையான குறியீடுகள் தென்பட்டன.இது பிரான்சில் கிடைத்த தடயங்கள். மனிதகுல வரலாற்றில் புதிய ஒளி பாய்ந்தது.
கண்டறியப்பட்டுள்ளன. நமது பாறை ஓவியங்கள் பற்றிப் பலநூல்கள் உள்ளன. உலகெங்குமுள்ள பாறை ஓவியங்கட்கும் நமது ஓவியங்கட்கும் ஒப்பீட்டாய்வு நடந்தால் நம் வரலாற்று முன்மை வெளிப்படுமெனச் சிந்தித்தேன்.
சகாரா பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பாறை ஓவியங்களும் குறியீடுகளும் அங்கிருந்த பண்பாட்டைää வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அங்கு நிகழ்ந்த இயற்கை மாறுபாடுகளைப் பதிவு செய்கின்றன. நைல் நதியின் மேற்குப் புறமுள்ள நைசர் லிபியா அல்சீரியா போன்ற நாடுகளில் இவை
Homo sapiens எனும் மதிமாந்தர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். 160000 ஆண்டு முன் அங்கிருந்து பரவினர் என்பதை அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட mt DNA மற்றும் Y குரோமோசோம்கள் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவே மனித குலத் தொட்டில் என்று சொல்லிவருகிறோம். மண்டை ஓடுகளே மனிதனின் பயணத்தை அடையாளம் காட்டுகின்றன. சுமார் 200000 ஆண்டு முன்பு மதிமாந்தரினம் அறிந்திருந்த தொழில்நுட்பம் neandertals அறிந்திருந்த நுட்பங்களைவிடப் புதிதாக மாறுபட்டதாக இருக்கவே Neandertal கிலள அல்ல மதிமாந்தரினம் என்பதும் அவை அக்காலத்தே தனித்தோங்கியவை என்பதும் தெளிவாகியது. இவ்வேறுபாடு இருவகையினர் தம் மண்டை ஓடுகளில் இருந்தே பெறப்பட்டது.
1878-ல் 27000 த்துக்கோ 23000 ஆண்டுக்கோ முற்பட்ட பாறை வாழிடத்தில் Les Eyzies என்ற தென்மேற்கு பிரெஞ்சுக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறைபடிவமாகிப் போயிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து முதல் மாந்தரினத்தவர் எவ்வாறிருந்தனர் என யூகிக்க முடிந்தது. அம்மாந்தன் Go magnm எனப் பெயரிடப்பட்டான். நவீன அய்ரோப்பியரை ஒத்திருந்தான். ஆண்கள் 5 அடி 4 அங்குலம் முதல் 6 அடி உயரம் வரை இருந்தனர். இவ்வாறாக உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் உறைந்து போன படிமங்கள் இவற்றால் பொதுவாக இன்றைய மாந்தன் ஓரிலக்கம் ஆண்டுகளாக உலகில் உலா வந்துள்ளான் எனச் சொல்லி வந்தோம்.
ஆனால் The Hidden History of Human Race நூலாசிரியர் மைக்கேல் ஏ. கிரமோ மற்றும் ரிச்சர்டு எல். தாம்சன் அதிர்ச்சியூட்டும் செய்திளை தம்நூலில் பதிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத் தொல்மாந்தவியல் அறிஞர் ஆர்.எச். டியூட்டல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் லாயிடோலி என்னுமிடத்தில் 1979-ல் எரிமலைச் சாம்பல் படிவங்கள் மீது கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் தற்கால மாந்தரின் காலடிகளை ஒத்து இருந்தது. இதை 1990 மார்ச்சில் வெளியான Natural History இதழிகையில் எழுதிய ஆர்.எச். டியூட்டல் இது புதிராக உள்ளது. மதிமாந்தன் வாழ்ந்தபோதே இக்கால மாந்தனை ஒத்த மனித உயிர்களும் இருந்துள்ளன என்கிறார். அக்காலடிச் சுவடுகள் 360 (மில்லியன்) பத்திலக்கமாண்டுகள் பழமையானவை. ஆக 1.60 பத்திலக்கமாண்டு முன்பிருந்தே மதிமாந்தரிடமிருந்து பிறந்த மாந்த குலம் 3.60 பத்திலக்கமாண்டு முன்பும் இருந்துள்ளது. மாந்தகுலத்தின் தொன்மை இன்னும் பழமையானதாகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன் புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 1.66 பத்திலக்கம் ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது. நான் இதை மேற்கோள் காட்டியபோது ஏளனம் செய்தார்கள். சென்னை பூண்டியை அடுத்து ஒரு இலட்சம் ஆண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என நியு இந்தியன் எக்ஸ்பிரசு (செய்தியாக்கிய போதும் சிரித்தார்கள் இன்றோ 3.6 பத்திலக்கமாண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்று தடயம் தான்சானியாவில் கிடைக்கிறது. கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள். இவற்றின் அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள். சீனா தன் நாட்டுப் பழம்பெருமையை உயர்த்த வரலாற்றில் திருத்தங்களை முன்மொழிகிறது. அமெரிக்காவைச் சீனம் கண்டுபிடித்த ஆண்டு 1421 எனச் சீனாவில் நடந்த கண்காட்சி பற்றி International Herald Tribune நாளேடு செய்தி வெளியிட்டது. Gavin Mensies இது பற்றி எழுதினார். இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் நண்பர் பகவான்சிங் பணிபுரியும் டெக்கான் கிரானிக்கல் ஏட்டிலும் வெளிவந்தது. 1405-க்கும் 1423க்கும் மிடையே 28000 வீரர்களுடன் 317 கப்பல்களுடன் ழெங்ஹீ என்ற இசுலாமியச் சீனர் கடலோடிய போது அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதைக் கொண்டாட சிங்கப்பூரில் 2005-ல் சீனா கண்காட்சி நடத்தியது. 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவில் அருங்காட்சியகம் அமைத்தது.
புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல் நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே சோழர் கணவாய் இருந்ததை வெளியிட்டது. போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர் படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில்ää புலி கயல் எனும் மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்! எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா?
புகழ்மிகு News Week இதழிகை 30.08.2004-ல் Unearthing the Bible என்ற கட்டுரையை வெளிட்டது. மெலிண்டாவின் க. கிறிசுபோபர்டிக்கி எழுதிய இந்தக் கட்டுரையில் விவிலியம் கூறும் இடங்கள் ஊர்கள் அரசர்கள் பற்றி நடக்கும் தேடுதல் வேட்டைப் பதிவாகியுள்ளது. Foundation of Biblical Archaeology இத்தேடலில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் Foundation for Sangam Archaeology துவக்கும்படி நமது அரசை நாம் கேட்போமா?
26.9.2003-ல் வெளியான Frontline எட்டில் செய்தியாளர் டி.எசு சுப்பிரமணியன் சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த வரைபடம் பற்றிக் குறிப்படுவார். “கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் என்ற அந்தவரைபடம் தெற்கில் பல்லவ பாண்டிய சோழ சேரநாடுகளையும் வடக்கில் கடம்ப காசுமீர் காந்தார நேபாள விதர்பா நாடுகளையும் காட்டும் அந்த வரைபடத்தையாவது மக்களிடம் பரப்பி கி.பி. நான்காம் நூற்றாண்டின் தமிழகத்தையாவது அறிமுகம் செய்தோமா?
புதிய புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சிந்துச் சமவெளி அகழ்வாய்வும் புதுவை அருகன்மேட்டு அகழ்வாய்வும் நிலத்தில் அகழ்ந்து நிகழ்த்தப்பட்டவை. ஆயின் நம் பழந்தமிழகம் இன்றுள்ள தமிழகமா? இல்லை அன்றோ! எனவே கடலடி அகழ்வாய்வு மூலம் நம் முன்னோர் நாகரிகத்தைக் கண்டறிய முடியும்.
இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான ஆர். பாலகிருட்டிணன் ஊர்ப்பெயராய்வு மூலம் தமிழன் இந்தியாலெங்கும் பரவி இருந்ததை வெளிப்படுத்துவார். Tamil A Toponymical Probe அவருடையது. ஆந்திரா (29)அருணாச்சலப்பிரதேசம் (11) அசாம் (38) பீகார் (53) கூச்சரம் (5) கோவா (1) அரியானா (3) இமாச்சலப்பிரதேசம் (34) கர்நாடகா (24) மகாராட்டிரா (120) மேகாலயா (5) மணிப்பூர் (14) மத்தியப் பிரதேசம் (60) நாகாலாந்து (4) ஓரிசா (84) பஞ்சாப் (4) ராஜஸ்தான் (26) தமிழ்நாடு (10) உத்திரப்பிரதேசம் (64) மேற்குவங்கம் (24) என இந்தியா எங்கும் “தமிழ்” எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இடுவார். தமிழ்க்கோடா தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கருகே மதுரை பழனி தேனீ என்றும் ஊர்ப் பெயர்கள் உளவாம். இவரை தமிழ்த் தொகைக் காட்சிகள் செவ்வி கண்டிட வேண்டாமா? அவர் சுட்டும் ஊர்களுக்குச் சென்று தமிழரின் பரவலைத் தரணிக்கு அறிவிக்கவும் இந்திய வரைபடத்தில் 612 தமிழூர்களை பதிந்து தமிழரின் இந்தியப் பரவலை என்று விளக்கும் வரைபடங்களை நம் பள்ளிகளில் - கல்விக் கூடங்களில் தொங்கவிட்டும் பாட நூலில் இடம் பெறச் செய்தும் பரப்புரை நிகழ்த்தல் நம் கடனன்றோ!
நம் கடற்கரையை ஒட்டிய கடலடி அகழ்வாய்வுகள் மூலம் சில புதிய தகவல்கள் கிடைத்தன. Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன். பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடத்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டலாவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது.
கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது. யேவழையெட ஐளெவவைரவந ழக ழுஉநயழெபசயிhல யும் இந்த ஆய்வில் இணைந்திருந்தது.
இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக் கண்டுபிடிக்கும் முன்பே 1999ல் ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச். பிரசாத்தும் கூட்டாக கட்டுரையில் கடலூர் புதையுண்ட மாமல்லபுரம் பற்றிச் சொல்லி இருந்தனர். இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார். புவியியல் மாற்றம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. மாமல்லபுரம் அருகே கடல் மட்டம் உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக் காரணம் என்றார் கிரளன் மில்ன்.
மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார். “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக் காட்சியை www.atlantia.org இணையத்தில் காணலாம்.
பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.
பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை வெளியிட்டது.
அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார்.
“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது.
அச்செய்தி படித்த நாள் முதல் கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500 ஆண்டு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது என்றது அறிவியலுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன்.
“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்.
15000-14000 ஆண்டு முன்பும்ää 12000-11000 ஆண்டு முன்பும் 8000-7000 ஆண்டு முன்பும் முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது. பிளாட்டோ நூலில் பெருவெள்ளத்தில் அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம் மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப் பேரிடர் 12000-10000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலாம். தமிழிலக்கியம் கூறும் குமரிக்கண்டமும் அதில் கூறப்படும் கடற்கோளும் இதே காலத்தினதே என தியோசபிகல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சன்ரைசு இதழில் ஹாரியங் எழுதி இருந்தார். கடைசி பனியூழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பூம்புகார் 11500 ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும் என்று கூறியதும் அறிவுக்குப் பொருந்தியது.
துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? உடன் பிறந்தே கொல்லும் வியாதி காரணமா? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்? மனம் பதைத்தேன்.
இப்போது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் google maps-wikimapia இரண்டும் தௌ;ளத்தெளிவாக காட்டுவதை சிறு குழந்தை கூடக் கணினியில் பார்த்துவிட முடியும். அப்படிப் பார்த்த போது புதுவை கடலை ஒட்டி இளநீல வண்ணமாக இருக்கும் கடல்தரை சிறிது தூரம் சென்றதும் கருமையான கடலைக் காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கிழக்கே கடலில் பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன். கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய நிறுவனம் கடலடியில் வெடிப்பு உள்ளதைச் சொன்னது. 1857-ல் கடலடியில் புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும் பதிவாகி இருந்தது. 2172000 கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக் கடலில் புதுவையை ஒட்டிக் தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில் எவரும் தேடியதில்லை. மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது. கருவிகள் துணையின்றிக் காரியம் ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன.ஆனால் கடலடியில் நாகரிகத்தைத் தேடும் ஆய்வுகள் நடக்கவில்லை.
தமிழக இலக்கியங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. தமிழக இலக்கியங்கள் மட்டுமல்ல உலகத்தில் 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. நம் பிங்கல நிகண்டு நாவலந்தீவாக நம் நாடு இருந்தது பற்றிப் பேசும். ஆக நாற்புறமும் நீரால் சூழப்பட்டத் தீவாகத் தமிழகம் எங்கிருந்தது? என்ற வினா எழுந்தது.
உலகின் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக விளங்கியதை அறிவியல் உலகம் விளக்கியது.எல்லா நிலமும் என்று இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்ட ஒரே கண்டம் தெரிந்தது. இன்றைய உலக வரைபடத்தை எடுத்துவைத்துக் கொண்டு 1912-ல் கத்திரிக் கோலால் ஒவ்வொரு கண்டத்தையும் பொருந்துகிறதா என்று பார்த்து ஒரே கண்டமாக உலகம் இருந்தது பிரிந்தது என்று கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாட்டின் தந்தையாக அறிவியல் உலகு பின்னாளில் ஏற்றுக் கொண்ட ஆல்பிட் வெக்கனர் 1912-ல் சொன்னார். அப்படி ஒன்றாக இருந்த பங்கேயோ பிரிந்ததை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புவி அறிவியல்துறையும் விளக்கும் படங்களை காட்டுகின்றன. அந்தப் படங்களில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்தியா காட்டப்படுகிறது. நாவலந்தீவாக நாமிருந்தோம்! அறிவியல் உறுதி செய்தது. நாவலந்தீவாக நாம் எங்கிருந்தோம்? அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மறைந்துபோன அட்வாண்டிசு பற்றி பிளாட்டோ பேசுவாரே? அதன் ஒரு பகுதியாக இருந்தோமா?
அட்லாண்டிசு இப்படி இருந்திருக்கக் கூடும் என அறிஞர்கள் பலர் வருணித்து பல வரைபடங்களை வெளியிட்டார்கள் இதை தொகுத்தாலே தனி நூலாகிடும்.பசிபிக் பெருங்கடலில் இருந்த இலமூரியாக் கண்டம் தேவாங்குகள் பல நாடுகளில் கிடைத்ததால் தேவாங்குகள் பெயரால் இலமூரியாக் கண்டம் எனப்பட்டது. நடுவண் இந்தியாவில் திராவிட இனத்தவரான கோண்டுகள் வாழும் பகுதியில் கிடைக்கும் செடி உறைபடிவமாக எல்லா இடங்களிலும் பொதுவாகக் கிடைத்தமையில் கோண்டுவானா எனவும் அக்கண்டம் பெயர் பெற்றது.
தமிழிலக்கியச் சான்றுகள் கொண்டு குமரிக்கண்டம் என்று நந்தமிழ் அறிஞர்கள் சொன்னதும் கொண்டுவானா எனப்படுவதும் இலமூரியா எனப்படுவதும் மூ என்று சொல்லப்படுவதும் ஒரே கண்டத்தையே! நம் அறிஞர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலில் குமரிக்கண்டம் இருந்தாக சொன்னார்கள். அப்படிச் சொன்ன அறிஞர்களை மறுத்து ஒரு பெண் பேராசியை நூல் எழுதினார். கண்டம் ஒன்றும் மூழ்கவில்லை! ஒரு தாலுக்கா அளவே நிலம் மூழ்கியது என்றார். ஒருதாலுக்கா அளவு கடல் கொண்டதற்கா உலகின் 600 தொன்மங்கள் ஓலமிடுகின்றன என்று நெடிய பட்டியல் மூலம் உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள் பற்றிப் பேசும் 82நூல்கள் பற்றிக் குறிப்புகளுடன் இந்நூல் உங்களிடம் வருகிறது. ஒப்பிடுங்கள்! ஒப்பீடுகளை ஆய்வாக்குங்கள்! அறிவியலும் தமிழும் கைகோர்க்கட்டும். புதிய முடிவுகள் வரட்டும்! மேலும் புதிய உண்மைகள் வெளிவரின் அறிவை மேம்பாடு செய்க!
தமிழ்மாமணி நந்திவர்மன்
நாள் : 2.11.2010
தங்களுடைய அறிவியல்பூர்வமான கட்டூரை அற்புதமாக உள்ளது...
பதிலளிநீக்குதமிழ் இயற்கையாக உருவான மொழி ... பல தொன்மையான மொழிகளின் சொற்களுக்கு வேர் சொற்கள் தமிழ் மொழியிலேயே உள்ளது. திரு.ம.சொ.விக்டர் என்ற அற்புதமான் தமிழ் அறிஞ்சர் தமிழை பற்றி பல ஆய்வு நூல்களை வெளியிட்டு நிருபித்துள்ளார்... இவரை போன்று அற்புதமானவர்கள் பலர் உள்ளனர்... ஆனால் பல இலட்ச்சக்கணக்கான தமிழ்ர்களுக்கு இவரை போன்றோர் தெரிவதில்லை, சுயநலத்திர்க்காக தமிழை பயன்படுத்துகின்றவர்களே தெரிகின்றனர்.....