ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

ஈழப் போரை மையக் கருவாக வைத்து காவியம்

இராமாயணத்துக்கும் மகாபாரதத்துக்கும் விழா எடுத்து கதைக் கரு தமிழர் வரலாறு சாராத ஒன்று என்றாலும் இலக்கியச் சுவை என்று பீற்றிக் கொண்ட தமிழ்ப் புலவர்காள். 2009 ன் பிறகு ஈழப் போரை மையக் கருவாக வைத்து ஈழாயணம் எழுத வேண்டும் என்று நான் முன்வைத்த 
வேண்டுகோளை ஏற்று கம்பரின் யாப்பு போல பிசிறு தட்டாமல் மரபுப் பா எழுத வல்ல பாவலர் செம்பியன் எழுத ஒப்புக் கொண்டுள்ளார். பொள்ளாச்சி நசனிடமும் உறுதி அளித்துள்ளார். நேற்று நாங்கள் முதல் கலந்துரையாடல் நடத்தினோம். வரலாற்றை தொகுத்துத் தருவதோடு காண்டங்களாக மடலங்களாக பகுததுத் தரும் பணி எனக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது. செம்பியன் மே 17 குள் எழுதத் தொடங்க வேண்டும் . இதற்கென ஒரு இணைய இதழை பதிவு செய்து அதில் படி ஏற்றிக் கொண்டே வந்து காவியம் முழுமை அடையும் போது மின்-நூலாக்கவும் திட்டம். இதில் குறுக்கிட்டு குட்டையை குழப்பாமல் இதை எப்படி செப்பமாகச் செய்வது என்று மட்டும் தமிழர்கள் தமிழ்த் தலைவர்கள் யோசனை சொல்லி உதவினால் போதும்.

இலக்குவனாரின் குறள் நெறி இதழ்களை தமிழம்




இலக்குவனாரின் குறள் நெறி இதழ்களை தமிழம் வலைத்தளம் படவடிவக்கோப்பாக்கி இணையத்தில் ஏற்றுகிறது. என்னிடம் இருந்த இரண்டு இதழ்கள் ஏற்றப்பட்டு விட்டன. அனைத்து இதழ்களையும் பொள்ளாச்சி நசனுக்கு அனுப்பி உதவுக.
நந்திவர்மன்