அண்ணா தி.மு.கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா தி.மு.கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 அக்டோபர், 2015

மீண்டும் அரசியலில் 1994 ல் தள்ளிய கூட்டமாகும்.



1978 ல் ஆமதாபாத் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் மறைந்த செந்தமிழ்ச் செல்வனின் அழைப்பில் அங்கு சென்று இலக்கியக் கூட்டங்களிலும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவிலும் பேசி விட்டு இனி அரசியலே வேண்டாம் என்று துறவு பூண்டு கரும்பளிங்கு /வண்ணப் பளிங்கு ஏற்றுமதியில் ஆறு கூட்டு -இரண்டு தனிஉரிமை நிறுவனங்கள் நடத்தி இழப்புகள் ஏற்பட்டு எந்தையார் இறப்புக்கு மீண்டும் புதுவை வந்து ஒதுங்கி இருந்த என்னை நியூ டைம்ஸ் ஒப்செர்வர் எம்.பி.ஜான் அவரது ஆங்கில வார ஏட்டுக்கு இணையசிரியனாக பொறுப்பு அளித்த போது தமிழக முன்னாள் அமைச்சர்கள் ஜி. .விசுவநாதன் , அழகு திருநாவுக்கரசு , எஸ்.ஆர்.இராதா ஆகியோர் எம்.ஜி.ஆர் மன்றங்களின் கூட்டமைப்பு துவக்கி அண்ணா தி.மு.கழகத்தை  துவக்கிய என்னை தஞ்சாவூரில் ஆளுநர் சென்னா  ரெட்டி, மூப்பனார் கலந்து கொண்ட விழாவுக்கு  பேச அழைத்து மீண்டும் அரசியல் சாக்கடையில் இறக்கி விட்டனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மன்றங்களின் கூட்டமைப்புக்கு கூட்டம் நடத்த    தடைகள் இருந்ததால் புதுவையில் நடத்தும் பொறுப்பு என்னிடம் தந்தனர் . புதுவை கம்பன் கலை அரங்கத்தில் 1994 மே அன்று நடந்த கூட்டத்தில் நான் பேசுகிறேன். என் இருக்கையில் என் தங்கை பத்மாவதி தேவகுமாரனின் மகள்கள் கனிமொழி-கயல்விழி உள்ளனர். நடிகர் பெயரிலான மன்றப் பொறுப்பு வேண்டாம் என்றதால் எனக்காக திராவிட இளைஞர் பேரவை என்று உருவாக்கி என்னை அமைப்பாளனாக  அறிமுகம் செய்தனர். இக்கூட்டமே 1978 முதல் எந்த அரசியலும் வேண்டாம் என்று துறவு பூண்டு இருந்த என்னை மீண்டும் அரசியலில் 1994 ல் தள்ளிய கூட்டமாகும். 

திங்கள், 14 நவம்பர், 2011

காங்கிரஸ் ஆரம்பிக்க வைத்த அண்ணா தி.மு.கழகம்

அம்மா தி.மு.க அறியாத எம்.ஜி.ஆரை பகடைக்காயாக்கி


எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி அல்ல அண்ணா தி.மு.கழகம். முன்பு காங்கிரஸ் ஈ.வெ.கி.சம்பத்தை முன்னிறுத்தி உடைத்தது போலவே, மீண்டும் தி.மு.கழகத்தை பிளக்க சதித்திட்டம் தீட்டிய காங்கிரஸ் எம்.ஜி.ஆரை கருவியாக்கி தி.மு.கழகத்தை உடைத்தது. புதுவை துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டி காங்கிரஸ்காரரான் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்தில் ஊடுருவி முதலமைசரானதால் கொந்தளித்த என்னிடம் அண்ணா பெயரில் கட்சித் தொடங்கச் சொன்னார். அக்டோபர் 16 1972 ல் அறிவித்தேன்.அனகாபுதூர் ராமலிங்கம் சென்னையில் அறிவிக்க இரண்டும் அக்டோபர் 18- 1972ல் தினமணிச் செய்தி ஆனது.

கட்சி துவக்கிய என்னை பாண்டிய நெடுஞ்செழியன் ஆராயாமல் கோவலனை கொலைக்களம் அனுப்பியது போல அமெரிக்க உளவாளி என் அபாண்டம் சுமத்தி நீக்கியபோது நவசக்தி நாளேடு இரண்டு தலையங்கங்கள் தீட்டியது. அதில் ஒன்று மேலே. முழு வரலாறும் செய்திகளும் கீழுள்ள சங்கிலியை சொடுக்கினால் அறியலாம்.



நந்திவர்மன்