திங்கள், 31 மே, 2010

பூம்புகார் கடலடி ஆய்வு முடிவுகளைப் போற்றுவோம் - குமரிக் கண்ட ஆய்வுக்கு குரல் கொடுப்போம்

- நந்திவர்மன்  


திராவிட மொழிகள் பற்றிப் பிற நாட்டார் ஆய்வுகள் செய்யத் தொடங்கி நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தவவைகளைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போமாக!

A Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் 1905 ல் சியோல் நகரில் தி மெதடிசுடு பப்ளிசிங் அவுசு வெளியிட்ட நூலாகும். பி.ஒமர் அல்பர்ட்டு இந்நூலெழுதி நூற்றாண்டு ஆகிறது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கொரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் ஒப்பிலக்கணம் உண்டு என உணர நூறாண்டு ஆகி விட்டது.

The Genealogy of the Japanese Language: Tamil and Japanese என்ற தலைப்பில் “சப்பானிய மொழியின் மரபியல்: தமிழும் சப்பானியமும்” என்ற நூலெழுதிய சுசுமோ ஓனோ பற்றி நமது ஊடகங்களில் செய்தி வந்ததுண்டா? “சப்பானிய மொழி திராவிட மொழியே” என்று டாக்டர் பொற்கோ, நந்தன் (1998 சூலை) இதழில்தான் எழுத முடிந்தது. இதுபற்றி ஆங்கில ஏடுகள் ஏன் வெளியிடுவதில்லை? வெளியிடாத அந்த ஏடுகள் ஏன் தமிழின் பெருமைமிகு வரலாற்றை மறைக்கப் பார்க்கின்றன என நாம் எண்ணிப் பார்த்தோமா? அவற்றின் உள்நோக்கம் உணர்ந்த பிறகாவது நம்மிடமுள்ள தொலைக்காட்சி ஊடகங்களை உண்மையை வெளிக்கொணர நாம் பயன்படுத்தினோமா?

திராவிட மொழிகள் பேசுவோர் 20 கோடியாகும். ஊரல் இன மொழிகளான அங்கேரியன் 1.40, ஃபின்னிசு 0.50, எசுதோனியன் 0.10, மார்த்வின் 0.30 என சுமார் 2 கோடி முப்பது லட்சம் பேராவர். அல்டாய்க் மொழிகளைப் பேசுவோர் பட்டியலில் துருக்கி 4.50, பிற துருக்கிய இன மொழிகள் 5.50, மங்கோலியன் 0.50, எனச் சுமார் 10 கோடியே ஐம்பது இலட்சம் பேருள்ளனர். சப்பானிய மொழி பேசுவோர் 12 கோடியும் கொரிய மொழி பேசுவோர் 6 கோடியும் உள்ளனர். பெருநாட்டில் கொசுவா மொழி பேசுவோர் 1.20 கோடியாவர். ஆக மிக நெருங்கிய ஒற்றுமை கொண்ட ஒட்டுநிலை மொழிகளை (Agglutinative Languages) பேசுவோர் 50 கோடிக்கும் மேலாவர். இம்மொழிகள் பற்றி வெளிவந்துள்ள நூற்களைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

1. A Comparitive Grammar of the Dravidian: Languages: A Robert Caldwell (1856)

2. Attinites Des Langues Dravidianness et des langues oural - Altaiques: C. Schoebel: 1873

3. Dravidisch and Uralisch in Zeitschrift fur Indologies and Iranistik: Oho Schrader (1925)

4. Dravidian studies IV : The body in Dravidian and Uralian: T. Burrow (1943-46)

5. Dravidian and Uralian: A Peep into the Prehistory of Language Families: Two lectures on the Historicity of Language Families: M Andronay (1968) அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

6. Dravidian and Uralian : The Lexical Evidence (1968)

7. The Dravido - Altaic Relationship: Some Views and Future Prospects (1987) (செக்கோசுலாவியா)

8. Dravidian Linguistics an Introduction: V. Kamil Zvelebil (1990) புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

9. 1000 Duraljan Etyma : An Extended study in the lexical similarities in the Major Agglunitative Languages (2000) பின்லாந்து

10. Migration and Diffusion (வியன்னாவிலிருந்து வெளியான தொகுதி 1-3, சூலை செப்டம்பர் 2000) இதழில் பக்கங்கள் 62க்கம் 80க்கும் மிடையே பின்லாந்தின் உக்ரோ மொழி பேசுவோருக்கும் பாசுக்கு மொழி பேசுவோருக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள், கி.மு. 7000 அளவில் திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிகளுக்கும் இடையே நிலவிய ஒற்றுமைப் பண்புகள் பற்றி பேராசிரியர் Bemon Zoigniew, Szalek எழுதியுள்ளனர்.

தமிழ்ச் சொற்கள்’ என்ற நூலில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழில் எழுதப்பட்ட இந்த நூலை எத்தனைத் தமிழாசிரியர்கள் வாங்கிப் படித்திருப்பர்? எத்தனை பேர் படித்ததை வகுப்பறைகளில் மாணாக்கர்களுக்குப் போதித்திருப்பர்? மாலை வேளைகளில் ஒலிப்பெருக்கி பிடிக்க வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல இளவயதில் மனப்பாடம் செய்த சில பாடல்களையே திரும்பத் திரும்பக் கூறுவதால்விளைந்த பயனென்னா? அதற்குப் பதில் தமிழில் உள்ள இதுபோன்ற நூலில் சொல்லப்பட்ட சில செய்திகளையாவது வெளியில் பரப்புரை செய்ய முன்வருவாராயின் உலக முதன்மொழி தமிழென்ற உண்மை ஒவ்வொரு தமிழனுள்ளத்திலும் பதியாதா? தமிழின் பெருமையை நிலைநாட்ட உலகெங்கிலும் எடுத்து வைக்கப்படும் வாதங்களை விடாமல் கூர்ந்து கவனித்துக் குறித்து வைத்துக் கொண்டு உரிய முறையில் பதிவு செய்பவர்கள் சிலர் உளர். அவர்களுள் பி. இராமநாதன் க.மு.ச.மு.தனியிடம் பெறுகிறார். ‘சிந்துவெளித் தொல் தமிழ் நாகரிகம்’ பற்றி தமிழிலும் A New Account of the History and Culture of the Tamils” என ஆங்கிலத்திலும் அவரெழுதிய நூல்களை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அவரை எத்தனை மேடைகளில் தமிழறிஞர்கள் ஏற்றி இருப்பார்கள்? நம்மால் முடியாத பணியை நம்மில் ஒருவன் ஆற்றுங்கால் உவந்து அவன் அறிவுழைப்பைப் போற்றும் அறவுணர்ச்சியும் தமிழார்வலர்களிடையே அற்றுப் போய்விட்டதா?

நம்மவர் சோம்பலை நன்குணர்ந்து பெருந்தமிழ் அறிஞர் இரா. மதிவாணன் நூல்களைப் படிக்காத சோம்பேறிகளும் உரித்த வாழைப்பழத்தை உண்பதுபோல எளிதாக எடுத்தாளட்டும் என தமிழைப் என தமிழைப் பற்றியும் தமிழ்ப்பண்பாடு பற்றியும் தகைசால் அறிஞர்கள் கூறியதை திரட்டி ஆங்கிலத்தில் Quotations on Tamil and Tamil Culture” என நூலாக்கியுள்ளார். இருமொழி அறிந்தோர் அதைத் தமிழாக்கலாமே! அன்றி புதுப்புது மேற்கொள்களைத் திரட்டி புது நூலியற்றலாமே! அதுவும் இயலாததாயின் மேற்கோளாகவாவது பயன்படுத்தி தமிழின் பெருமையை நிலை நாட்டலாமே! ‘கல்தோன்றி மண்«£ன்றாக் காலத்தே’ என்ற ஒரு வரியை மட்டும் ஆயிரமாண்டுகள் சொல்லிச் சொல்லித் தமிழின் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கப்போகிறோமா? புதிய அறிவியல் செய்திகள், ஆய்வுகள், அறிஞர் முடிவுகள் துணையோடு நம் தொன்மையை நிறுவத் துடிப்புடன் பாடாற்றாமல், சோம்பிக் கிடக்கும் தமிழறிஞர் தமிழின் அக புறப்பகைவர்களின் தமிழழிப்பு பணி தொடர்வதை வேடிக்கை பார்க்கப் போகிறார்களா?

செய்தித்தாள்களைப் படிக்கும் தமிழறிஞர்கள் தாங்கள் எழுதிய கட்டுரை வெளிவருமாயின் அதை மடுமே படிக்கும் இயல்பினராக உள்ளனர். தமிழுக்கு ஏற்றம் தரும் செய்திகளைப் படிப்பதுமில்லை. பரப்புவது மில்லை என்பது என் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக ஒரு செய்தி.

பூம்புகார் அருகே 9500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய நகரம்: விஞ்ஞானி தகவல்: - தினமணி டிசம்பர் 4 2002.

‘பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார். வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா? உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை?

கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும்.

‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்.

இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர்)

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன”

என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது. இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.



நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா

Copyright © 2008 thamizhkkaaval.net.

கடல்கொண்டாலும் பழந்தமிழகத்தை கண்டறிய வேண்டாமா நம் குமரிக்கண்ட வரலாற்றை

நந்திவர்மன்
பொதுச்செயலர், திராவிடப்பேரவை,


180 மில்லியன் ஆண்டுகள் முன்பு அண்டார்டிகாவை மையமாகக் கொண்ட பெருநிலப்பரப்பு ஒன்றிருந்தது என "பிரிட்டிசு அண்டார்டிகா சர்வே"யின் இணையதளம் தெரிவிக்கிறது. தென்னமரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசுதிரேலியா, நியுசிலாந்து ஆகிய ஒருங்கிணைந்த பெருநிலப்பரப்பின் மையத்தில் அண்டார்டிகா இருந்தது. அந்த பெருநிலப்பரப்பை கோணடுவானா என்று பெயரிட்டு அழைத்தார்கள். கோண்டுவானாப் பெருநிலத்தின் அடியில் ஓரிடத்தில் வெந்தணல் கனன்று கொண்டிருந்தது. அது உண்டாக்கிய எரிமலைப் பிரதேசம் ஒன்றிருந்தது. அந்த எரிமலைப் பிரதேசத்தின் எச்சங்களை தென்னாப்பிரிக்காவிலும் படகோனியாவிலும் அண்டார்டிகாவிலும் தாசுமேனியாவிலும் இன்றும் காணலாம் என்கின்றனர் அறிவியல் வல்லுனர்கள். கோண்டுவானா உடைந்து பிரிந்தது மூன்று கட்டங்களாக நிகழ்ந்தது.

 தென்னமரிக்காவும் ஆப்பிரிகாவும் மேற்குப் பகுதிகளாக பிரிந்தன. அண்டார்டிகாவும் ஆசுதிரேலியாவும் இந்தியாவும் நியுசிலாந்தும் கிழக்காகவும் பிரிந்தன. 150 மில்லியன் ஆண்டு முன்பு நிகழ்ந்த அந்தப் பிரிவினால் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே கடல்பாதை தோன்றிற்று.

இரண்டாவது கட்டமாக 130 மில்லியன் ஆண்டு முன்பு ஆப்பிரிக்க-இந்தியத்தட்டில் இடம் பெற்றிருந்த தென்னமரிக்கா அதிலிருந்து கழன்று கொண்டது. தென்அட்லாண்டிக் கடல் திறந்து கொண்டதால் இது நிகழ்ந்தது. இந்துமாக்கடலின் தரை விரிவாவதால் அண்டார்டிகாவிலிருந்து ஆப்ரிக்க-இந்திய தட்டு பிரிந்தது. கடைசியாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும் நியுசிலாந்தும் பிரிந்தன. கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு எதுவெனில் தென்அட்லாண்டிக் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட குறுந்தட்டுகளாக அது உடைந்து பிரிந்து சிதறியதைக் குறிப்பிட்டாகல் வேண்டும்.

650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும், இந்தியாவும், தென்னமரிக்காவும், ஆப்பிரிக்காவும் அண்டார்டிகாவும் ஒரே கண்டமாக விளங்கின. அங்கிருந்து தான் தமிழர் வரலாற்றை நாம் தொடங்க வேண்டும். வடவேங்கடம் தென்குமரி இடையிலான தமிழ்கூறும் நல்லுலகம் நம் வரலாற்றின் இறுதிக்கட்டம். முதற்கட்டம் கோண்டுவானாப் பெருங்கண்டத்தில் துவங்குகிறது. அந்தக் கண்டத்தை இலெமூரியாக் கண்டம் எனவும் அழைப்பர். குமரிக்கண்டம் என்றும் கூறுவர். கோண்டுவானா பெருங்கண்டத்தின் நிலம்வளர் தாவரங்கள் பற்றியும் நீர்வாழ் மீனினம் பற்றியும் அங்கு திரிந்த விலங்கினங்கள் பற்றியும் கலிபோர்னியப் பல்கலைக்கழகம் பல அரிய உண்மைகளை கண்டெத்துச் சொல்லியுள்ளது.

கடினப்பாறைகள் பல அடங்கிய பெருந்தொகுதி ஒரு கூட்டமாக நகருவதை 1960 ல் அறிஞர்கள் தட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஒரு தட்டின் மீதமர்ந்ததிருந்த கண்டங்களும் கடல்களின் தரையும் அந்தத் தட்டு நகரும்போது நகர்வதனை Plate - tectonics என்று பெயரிட்டனர். 1912ல் தொடங்கிய ஆய்வு 1960 ல் பெயரிடுவதில் முடிந்தது. 1912 ல் ஆல்பிரட் வெக்கனர் அவர்களும் பிராங்க் டெய்லர் அவர்களும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகம் ஒரேயொரு பெருங்கண்டமாக விளங்கியது என்றும் அதிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்து சிதறியவையே இன்றுள்ள கண்டங்கள் எனவும் கண்டறிந்தனர்.

ஆல்பிரட்டு வெக்னர் (1880-1930) செருமானிய வானவியல், நிலவியல் அறிஞராவார். கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின் தந்தையாக அவர் போற்றப்படுகிறார். அவரது "ORIGIN OF CONTINENTS AND OCEANS" என்ற நூல் உலகமே ஒரே கண்டமாக விளங்கிய உண்மையை உரைத்தது. அந்தக் கண்டத்திற்கு பங்கேயா என அவர் பெயரிட்டார். பங்கேயா என்றால் எல்லா நிலமும் All Earth என்ற பொருள் தரும் சொல்லாகும். நாம் அந்தப் பெருங்கண்டத்தைப் பற்றி அறிந்தாக வேண்டும். கல்தோன்றி, கற்களின் பெருந்திரள் தொகுதிகள் நகர்வதே கண்டங்களின் சுழற்சி எனில் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பற்றி நுண்மாண் நுழை புலமொடு சொல்லிய தமிழ்க் கவிஞனையும் நாம் நினைவு கூர்ந்தாகல் வேண்டும்.

உலகத்தின் வரைபடத்தில் - இன்றுள்ள கண்டங்களை தனித்தனியே வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறதா என்று பார்த்தவர் ஆல்பிரட் வெக்னர். ஒரு புதிரை விடுவிப்பது போல அவர் தேடினார். படங்களை பொருத்தி வெற்றி கண்டார். எல்லாக் கண்டங்களின் படங்களும் பொருந்தின. ஒன்றாக இருந்த பெருங்கண்டமே உடைந்தது என நிறுவ இது அவருக்கு கிட்டிய முதல் சான்றாக அமைந்தது. தெனன்மரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டெக்கப்பட்ட விலங்கினங்களின் மற்றும் தாவரங்களின் புதை வடிவம் பொருந்துவதைக் கண்டறிந்தார். இரு கண்டங்களின் பாறைகளும் பொருந்துவதை அறிந்தார். பனிப்பாறைகளின் உறைநிலைப் படிவங்கள் தென்னமரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஆசுதிரேலியாவிலும் 300 மில்லியன் ஆண்டுகள் முன்பு படர்ந்திருந்தன. தெற்கு பகுதிக் கண்டங்கள் மீது பனிப்பாறைகள் படர்ந்திருந்தது போல வடக்கிலுள்ள கண்டங்கள் மீது ஏனில்லை? வட கண்டங்கள் நிலநடுக்கோட்டருகில் அப்போது இருந்திருக்கக் கூடும்.

ஆல்பிரட் வெக்கனரின் கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. HAROLD JEFERY ஒரு கேள்வி எழுப்பினார். கடினப்பாறைகள் நிறைந்த பெருநிலப்பரப்பு எவ்வாறு கடலின் தரையை உழுதவண்ணம் நகர்ந்திருக்க முடியும்? கடலின் தரை அதனால் உடைந்திருக்காதா? விரிசல் விட்டிருக்காதா? என்று வினா எழுப்பினார். வினாக்கள் எழுப்பாமல் விடைகள் கிடைப்பதில்லை. விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கக் கேள்விகளே காரணமாக அமைந்தன. அறிவாளர்கள் என தனிக் கூட்டத்துக்கு முத்திரை குத்தி ஆய்வு நம் பணி அல்ல எனத் தமிழர்களாகிய நாம் நினைக்கிறோம். மேனாடுகளில் மக்களும் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் அந்நாடுகள் அறிவியலில் முன்னேறுகின்றன. நாம் பின்தங்கியுள்ளோம். JUERGEN HENRICHS என்பவர் அப்படி ஆய்வு செய்பவர். தமது வினாக்களை இணையத்தில் பதிவு செய்து அதனைப் படிப்பவர்களிடம் பதில் கிடைக்குமா என எதிர்பார்ப்பவர். அவர் செருமானியர். Scientific American என்ற ஏட்டை ஆங்கிலத்தில் அவர் படிக்கவில்லை. செருமானிய மொழிப் பதிப்பு வழியாகப் படித்தார். தாய்மொழி வழியில் அவர் படித்ததால் அவரால் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானியர் பன்னெடுங் காலமாகச் சூரியனின் Photospere நடுநிலைக் கோட்டருகே (Equator) வேகமாகக் சுழல்வதை அறிந்துள்ளனர். துருவங்கள் அருகே அவ்வாறு வேகமாகச் சுழல்வதில்லை. அதில் Photospere என்றால் என்ன? ஞாயிறு - விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஔ¤க்கோசம் என பேராசிரியர் அ.சிதம்பரநாதர் செட்டியார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1965ல் வௌ¤யிட்டு 1988 ல் மறுமதிப்பு செய்யப்பட்ட ஆங்கிலத் தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக வௌ¤யீடு கூறுகிறது. மொழிபெயர்ப்புச்சிக்கல் காரணமாகவே ஆங்கிலங்கலந்த தமிழ் என்னும் புதிய மணிப்பிரவாளம் வழக்காற்றில் உள்ள உண்மையை உணர வேண்டும். உணர்ந்து நாணுற வேண்டும்.

"When rotating objects contract, the core, becoming more compact, rotates faster than surface a difference that is necessarily most marked at the equator and least at the poles". இது அந்த தன்னார்வ ஆய்வாளரின் விளக்கமாகும். அவ்வாறு விளக்கமளிக்கும் அவர் "Continents are being carried along by an eastward equatorial stream in the earth's mantle, driven by the earth's core rotaing faster than surface" இவைகளை தமிழாக்கி என்னால் தரமுடியும். ஆனால் ஆங்கில வழிக்கல்வி கற்ற உங்களுக்குப் புரியவேண்டுமானால் ஆங்கிலத்தில் தருதலே சிறப்பு என எண்ணி அவ்வாறு தந்துள்ளேன். எல்லா நிலநடுக்கமும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். குடிமகன் ஒருவனுக்கும் குவலயத்தில் நிகழும் நிகழ்வுகளுக்குரிய காரணங்களை கண்டறியும் துடிப்புள்ளது கண்டு தமிழ்க்குடிமகன்கள் நாணிட வேண்டாமா? ஈட்டிய பொருளை குடிக்கக் செலவிட்டு குடும்பத்தையே மறந்துவிடும் குடிமகன்கள் உலகின் பிறநாட்டு குடிமகன்கள் போல நேரத்தையும் நினைப்பையும் உலகின் நிலைபற்றி ஆராயச் செலவிடும் நாள் வந்தால் அந்நாளே தமிழர் வரலாற்றில் பொற்காலமாகப் போற்றப்படும். அண்ணா பேசிய பேச்சு நிலையும் நினைப்பும் உங்கள் நினைவில் நிழலாடவில்லையா! நினைப்பு உயர்ந்தால் தான் நாட்டின் நிலை உயரும் என்றாரே நம் உயிரினில் கலந்து உணர்வினில் வாழும் ஒப்பிலாப் பேராசான் அறிஞர் அண்ணா. உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் என்ற வள்ளுவமும் அண்ணன் கருத்தை ஒத்ததே!

64,186,000 சதுர மைல் பரப்புள்ள பசிபிக் பெருங்கடல் சராசரியாக 15,215 அடி ஆழமுடையது. மரியானா பகுதியில் போட்ட குழி 36,200 அடி ஆழமுடையதாக இருந்தது. அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவு 33,420,000 சதுர மைல்களாகும். சராசரியாக 12,881 மைல் ஆழமும் போர்ட்டோரீகா அருகில் 28,231 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் 28,350,000 சதுர மைல் பரப்புள்ளது. சராசரியாக 13,002 மைல் ஆழமும் சாவா அருகில் 25,344 அடி ஆழமும் கொண்டது. ஆர்டிக்கடல் 5106 சதுர மைல் பரப்பும் சராசரியாக 3953 அடி ஆழமும் கொண்டது. ஈராசியா அருகில் 17,881 அடி ஆழமுடையது. நிலவுலகின் 70 சதவீத பரப்பை கடல்களே நிறைந்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது நமது கடல்களைப் பற்றிய தௌ¤வான அறிவு நமக்கு வேண்டாமா? உழுதுண்டு வாழவாரே வாழ்வர் எனவும் உழவர்களே உலகிற்கு அச்சாணி எனவும் வள்ளுவம் நிலத்தில் உழுது பயிரிடும் உழவரைப் பாராட்டுகிறது. கடலில் நமக்காக மீன்களை வேட்டையாடி வரும் மீனவரும் உழவர்போல் தொழத் தக்கவரே என்பது என் கருத்து. மீனவர்கள் அரும்பாடுபட்டு நமக்களிக்கும் மீனைச் சுவைத்து உண்ணுகிறோம். உழவர் திருநாள் போல் மீனவர் திருநாளை உலகினர் ஏன் கொட்£டுவதில்லை? நான் அச்சாதியினன் அல்லன். எச்சாதியினனும் அல்லன். உலகின் 97 சதவீத நீர் கடலில் தான் உள்ளது. மீன்களுக்காக இல்லாவிடினும் முத்துக்களுக்காக இல்லாவிடினும் நீர் நிறை கடலே நம் குடிநீர்த் தேவைக்கும் ஈடுகொடுக்கும் என்பதற்காகவாவது நமது கடல்கள் பற்றித் தமிழர்கள் அய்வு செய்ய வேண்டாமா?

ஞால நிலப்பாகம் இன்றுள்ளவாறு 5 கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொனறு தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana) பாலதிக்கம் (Baltica) அமசோனியம் (Amazonia) அங்காரம் (Angara) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுத்திருந்தது என்ற தேவநேயப் பாவாணர் தம் தமிழர் வரலாறு நூலில் வி.ஆர். ராமச்சந்திர தீட்சதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியா எனும் நூல் கருத்தை பதித்துள்ளார்.

நாவலந் தீவே இறலித் தீவே

குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே

சான்மலித் தீவே தெங்கின் தீவே

புட்கரத் தீவே எனத்தீ வேழே

ஏழுபெரும் தீவும் ஏழ்பொழி லெனப்படும்

என்பது திவாகர நிகண்டு ஏழு கண்டங்களாக ஞாலம் இருந்ததை திவாகர நிகண்டு வழி அறியலாம்.

உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில் ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும் போது எக்கெல் இந்து மாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்ரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவி இருந்த ஒரு கண்டமாயிருந்தது என்பார்.

கிளேற்றர் இப்பழங்காலப் பெருங்கண்டத்திற்கு அதில் வதிந்த குரங்கொத்த உயிரி பற்றி இலெமூரியா என்று பெயரிட்டுள்ளார் எனவும் பாவாணர் "தமிழர் வரலாறு" எழுதுகையில் பதிந்துள்ளார். இலக்கியச் சான்றுகள் ஏற்புடையன அல்ல என்று தமிழிலக்கியச் சான்றுகளை ஒதுக்கித் தள்ளுவோர் உள்ளனர். இலமூரியா பற்றித் தமிழர் கூறினால் நீங்கள் ஏற்கத் தயங்குவீர்கள். ஆங்கிலேயர் கூறினால் ஆகா! ஆகா! என நீங்கள் மெச்சக்கூடும். இங்கு கூறுபவர் ஆங்கிலேயரல்ல. பிரெஞ்சுக்காரர்.

James Churchward 5 நூல்கள் எழுதினார். அவை 1. The Lost continent of Mu 2. The Children of Mu 3. The Sacred Symbols of Mu 4. The Cosmic Forces of Mu 5. The Second Book of the Cosmic Forces of Mu சேம்சு சர்ச்வார்டின் நண்பர் அகத்தும் அவர் மனைவி அலிசுலெ பிளங்கோனும் மாயன் நாகரிகம் பற்றிய ஆய்வுகளுக்காக மத்திய அமெரிக்க காடுகளில் திரிந்தவர்கள். பல பழைய இலக்கிய சுவடிகளை கண்டெடுத்தார்கள். அதனை மொழி பெயர்த்தார்கள். மாயன் நாகரிகத்தில் அரசி மூ கோலோச்சினாள். அதைக் கொண்டு அவர்கள் இலமூரியாக்கண்டத்தை மூ என்று அழைத்தார்கள். மூ என்னும் கண்டம் 5000 மைல் நீண்டது. 3000 மைல் அகண்டது என சேம்சு சர்ச்வார்டு கூறுகிறார். அந்தப் பிரெஞ்சு தம்பதிகள் கண்டெடுத்த மாயன் நாகரிக இலக்கிய ஏடுகளில் இருந்து தானறிந்தவற்றை சேம்சு சர்ச்வார்டு மேற்சொன்ன 5 நூல்களில் பதிவு செய்தார். மறைந்த மூ கண்டம் 60000 ஆண்டு முன்பு ஒரு கொடி நிலநடுக்கத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலில் மூழ்கியதாக அவர் கூறுகிறார். அவாய் தீவுகளும் பசிபிக் தீவுகளும் மறைந்த அந்தக் கண்டத்தில் மலைகளாக இருந்த உயர்ந்த சிகரங்களாக விளங்கியமையால் கடலுள் மூழ்காமல் மிச்ச முள்ளவை என்கிறார் அவர். மறைந்த கண்டம் பற்றி கல்வெட்டெழுத்துகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மறைந்த கண்டத்தின் வரைபடம் செதுக்கப்பட்டிருந்தது. டாக்டர் சேவியர் காப்ரெழா அக்கல்வெட்டை கண்டெடுத்தார். இராபர்ட் சாரௌக்க அதனைப் புகைப்படம் பிடித்தார். ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆதம் மாலிக்கின் செயலரான பரீதா இசுகோவியத் 1972 ல் Mauiக்கு வந்தார். அங்கிருந்த அழிவுகளையும் வரலாற்றையும் ஆய்ந்து அவை உண்மை எனும் முடிவுக்கு வந்தார். 50000 ஆண்டு முன்பு இலமூரியா(அ)மூ கண்டம் மறைந்த போது 2000த்துக்கு மேல் தமிழர்களாகிய எங்களுக்கு எண்ணிக்கை தெரியாதே? மேடைதோறும் ஈராயிரமாண்டு நாகரிகம் எமதென்று கிளிப்பிள்ளைகள் போல் சொல்லும் புலவர் கூட்டம் எங்களுடையது என்கிறீர்களா? மாயன் நாகரிகமாவது 50000 ஆண்டு சென்னையை ஒட்டியுள்ள பூண்டியில் 100000 ஆண்டு முன்பு தமிழன் வாழ்ந்தான். நம்ப மறுக்கிறீர்களா? New India Express செப்டம்பர் 6-2004 இதழின் முதல்பக்கத்தைப் பாருங்கள். நாங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் என்று தப்பிக்க பார்க்காதீர்கள்.

One Lakh Years ago People Lived in Poondi முதல் பக்கத்தில் எல்லாப் பதிப்புகளிலும் வௌ¤யான செய்தி. தமிழக அரசின் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு பற்றிய செய்தி. கண்டெடுத்த அறிஞர்களை போற்றுவோம். கடல்கொண்ட குமரிக் கண்டத்தை கடலடியில் தேடுவோம்.
 thamizhkkaaval.net. 





--



- Show quoted text -

nandhivarman



--~--~---------~--~----~------------~-------~--~----~

You received this message because you are subscribed to the Google Groups "dravidaperavai" group.

To post to this group, send email to dravidaperavai@googlegroups.com

To unsubscribe from this group, send email to dravidaperavai+unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/dravidaperavai?hl=en

-~----------~----~----~----~------~----~------~--~---





Reply Reply to all ForwardNandhi is not available to chat



Reply
Nandhi Varman to indoeelamfrate., universal, tamildom, TamilNet, com, Tamil, editor, Editor, editor

show details 12/04/2009





Images are not displayed.

Display images below - Always display images from nandhivarman@gmail.com

- Show quoted text -



முகப்பு
எம்மைப்பற்றி
தொடர்பிற்கு
முந்திய இதழ்கள்






திருவள்ளுவர் ஆண்டு ௨0௪0, மீனம், க ( 14 - 03 - 2009 ) திங்கள் மின்னிதழ்ஆண்டு : க இதழ் : ௧0



கண்டஙகள் சுழற்சியால் கடல்கொண்டாலும் பழந்தமிழகத்தை கண்டறிய வேண்டாமா நம் குமரிக்கண்ட வரலாற்றை - நந்திவர்மன் பொதுச்செயலாளர் திராவிடப்பேரவை



180 மில்லியன் ஆண்டுகள் முன்பு அண்டார்டிகாவை மையமாகக் கொண்ட பெருநிலப்பரப்பு ஒன்றிருந்தது என "பிரிட்டிசு அண்டார்டிகா சர்வே"யின் இணையதளம் தெரிவிக்கிறது. தென்னமரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசுதிரேலியா, நியுசிலாந்து ஆகிய ஒருங்கிணைந்த பெருநிலப்பரப்பின் மையத்தில் அண்டார்டிகா இருந்தது. அந்த பெருநிலப்பரப்பை கோணடுவானா என்று பெயரிட்டு அழைத்தார்கள். கோண்டுவானாப் பெருநிலத்தின் அடியில் ஓரிடத்தில் வெந்தணல் கனன்று கொண்டிருந்தது. அது உண்டாக்கிய எரிமலைப் பிரதேசம் ஒன்றிருந்தது. அந்த எரிமலைப் பிரதேசத்தின் எச்சங்களை தென்னாப்பிரிக்காவிலும் படகோனியாவிலும் அண்டார்டிகாவிலும் தாசுமேனியாவிலும் இன்றும் காணலாம் என்கின்றனர் அறிவியல் வல்லுனர்கள். கோண்டுவானா உடைந்து பிரிந்தது மூன்று கட்டங்களாக நிகழ்ந்தது. தென்னமரிக்காவும் ஆப்பிரிகாவும் மேற்குப் பகுதிகளாக பிரிந்தன. அண்டார்டிகாவும் ஆசுதிரேலியாவும் இந்தியாவும் நியுசிலாந்தும் கிழக்காகவும் பிரிந்தன. 150 மில்லியன் ஆண்டு முன்பு நிகழ்ந்த அந்தப் பிரிவினால் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே கடல்பாதை தோன்றிற்று.

இரண்டாவது கட்டமாக 130 மில்லியன் ஆண்டு முன்பு ஆப்பிரிக்க-இந்தியத்தட்டில் இடம் பெற்றிருந்த தென்னமரிக்கா அதிலிருந்து கழன்று கொண்டது. தென்அட்லாண்டிக் கடல் திறந்து கொண்டதால் இது நிகழ்ந்தது. இந்துமாக்கடலின் தரை விரிவாவதால் அண்டார்டிகாவிலிருந்து ஆப்ரிக்க-இந்திய தட்டு பிரிந்தது. கடைசியாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும் நியுசிலாந்தும் பிரிந்தன. கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு எதுவெனில் தென்அட்லாண்டிக் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட குறுந்தட்டுகளாக அது உடைந்து பிரிந்து சிதறியதைக் குறிப்பிட்டாகல் வேண்டும்.

650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும், இந்தியாவும், தென்னமரிக்காவும், ஆப்பிரிக்காவும் அண்டார்டிகாவும் ஒரே கண்டமாக விளங்கின. அங்கிருந்து தான் தமிழர் வரலாற்றை நாம் தொடங்க வேண்டும். வடவேங்கடம் தென்குமரி இடையிலான தமிழ்கூறும் நல்லுலகம் நம் வரலாற்றின் இறுதிக்கட்டம். முதற்கட்டம் கோண்டுவானாப் பெருங்கண்டத்தில் துவங்குகிறது. அந்தக் கண்டத்தை இலெமூரியாக் கண்டம் எனவும் அழைப்பர். குமரிக்கண்டம் என்றும் கூறுவர். கோண்டுவானா பெருங்கண்டத்தின் நிலம்வளர் தாவரங்கள் பற்றியும் நீர்வாழ் மீனினம் பற்றியும் அங்கு திரிந்த விலங்கினங்கள் பற்றியும் கலிபோர்னியப் பல்கலைக்கழகம் பல அரிய உண்மைகளை கண்டெத்துச் சொல்லியுள்ளது.

கடினப்பாறைகள் பல அடங்கிய பெருந்தொகுதி ஒரு கூட்டமாக நகருவதை 1960 ல் அறிஞர்கள் தட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஒரு தட்டின் மீதமர்ந்ததிருந்த கண்டங்களும் கடல்களின் தரையும் அந்தத் தட்டு நகரும்போது நகர்வதனை Plate - tectonics என்று பெயரிட்டனர். 1912ல் தொடங்கிய ஆய்வு 1960 ல் பெயரிடுவதில் முடிந்தது. 1912 ல் ஆல்பிரட் வெக்கனர் அவர்களும் பிராங்க் டெய்லர் அவர்களும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகம் ஒரேயொரு பெருங்கண்டமாக விளங்கியது என்றும் அதிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்து சிதறியவையே இன்றுள்ள கண்டங்கள் எனவும் கண்டறிந்தனர்.

ஆல்பிரட்டு வெக்னர் (1880-1930) செருமானிய வானவியல், நிலவியல் அறிஞராவார். கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின் தந்தையாக அவர் போற்றப்படுகிறார். அவரது "ORIGIN OF CONTINENTS AND OCEANS" என்ற நூல் உலகமே ஒரே கண்டமாக விளங்கிய உண்மையை உரைத்தது. அந்தக் கண்டத்திற்கு பங்கேயா என அவர் பெயரிட்டார். பங்கேயா என்றால் எல்லா நிலமும் All Earth என்ற பொருள் தரும் சொல்லாகும். நாம் அந்தப் பெருங்கண்டத்தைப் பற்றி அறிந்தாக வேண்டும். கல்தோன்றி, கற்களின் பெருந்திரள் தொகுதிகள் நகர்வதே கண்டங்களின் சுழற்சி எனில் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பற்றி நுண்மாண் நுழை புலமொடு சொல்லிய தமிழ்க் கவிஞனையும் நாம் நினைவு கூர்ந்தாகல் வேண்டும்.

உலகத்தின் வரைபடத்தில் - இன்றுள்ள கண்டங்களை தனித்தனியே வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறதா என்று பார்த்தவர் ஆல்பிரட் வெக்னர். ஒரு புதிரை விடுவிப்பது போல அவர் தேடினார். படங்களை பொருத்தி வெற்றி கண்டார். எல்லாக் கண்டங்களின் படங்களும் பொருந்தின. ஒன்றாக இருந்த பெருங்கண்டமே உடைந்தது என நிறுவ இது அவருக்கு கிட்டிய முதல் சான்றாக அமைந்தது. தெனன்மரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டெக்கப்பட்ட விலங்கினங்களின் மற்றும் தாவரங்களின் புதை வடிவம் பொருந்துவதைக் கண்டறிந்தார். இரு கண்டங்களின் பாறைகளும் பொருந்துவதை அறிந்தார். பனிப்பாறைகளின் உறைநிலைப் படிவங்கள் தென்னமரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஆசுதிரேலியாவிலும் 300 மில்லியன் ஆண்டுகள் முன்பு படர்ந்திருந்தன. தெற்கு பகுதிக் கண்டங்கள் மீது பனிப்பாறைகள் படர்ந்திருந்தது போல வடக்கிலுள்ள கண்டங்கள் மீது ஏனில்லை? வட கண்டங்கள் நிலநடுக்கோட்டருகில் அப்போது இருந்திருக்கக் கூடும்.

ஆல்பிரட் வெக்கனரின் கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. HAROLD JEFERY ஒரு கேள்வி எழுப்பினார். கடினப்பாறைகள் நிறைந்த பெருநிலப்பரப்பு எவ்வாறு கடலின் தரையை உழுதவண்ணம் நகர்ந்திருக்க முடியும்? கடலின் தரை அதனால் உடைந்திருக்காதா? விரிசல் விட்டிருக்காதா? என்று வினா எழுப்பினார். வினாக்கள் எழுப்பாமல் விடைகள் கிடைப்பதில்லை. விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கக் கேள்விகளே காரணமாக அமைந்தன. அறிவாளர்கள் என தனிக் கூட்டத்துக்கு முத்திரை குத்தி ஆய்வு நம் பணி அல்ல எனத் தமிழர்களாகிய நாம் நினைக்கிறோம். மேனாடுகளில் மக்களும் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் அந்நாடுகள் அறிவியலில் முன்னேறுகின்றன. நாம் பின்தங்கியுள்ளோம். JUERGEN HENRICHS என்பவர் அப்படி ஆய்வு செய்பவர். தமது வினாக்களை இணையத்தில் பதிவு செய்து அதனைப் படிப்பவர்களிடம் பதில் கிடைக்குமா என எதிர்பார்ப்பவர். அவர் செருமானியர். Scientific American என்ற ஏட்டை ஆங்கிலத்தில் அவர் படிக்கவில்லை. செருமானிய மொழிப் பதிப்பு வழியாகப் படித்தார். தாய்மொழி வழியில் அவர் படித்ததால் அவரால் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானியர் பன்னெடுங் காலமாகச் சூரியனின் Photospere நடுநிலைக் கோட்டருகே (Equator) வேகமாகக் சுழல்வதை அறிந்துள்ளனர். துருவங்கள் அருகே அவ்வாறு வேகமாகச் சுழல்வதில்லை. அதில் Photospere என்றால் என்ன? ஞாயிறு - விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஔ¤க்கோசம் என பேராசிரியர் அ.சிதம்பரநாதர் செட்டியார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1965ல் வௌ¤யிட்டு 1988 ல் மறுமதிப்பு செய்யப்பட்ட ஆங்கிலத் தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக வௌ¤யீடு கூறுகிறது. மொழிபெயர்ப்புச்சிக்கல் காரணமாகவே ஆங்கிலங்கலந்த தமிழ் என்னும் புதிய மணிப்பிரவாளம் வழக்காற்றில் உள்ள உண்மையை உணர வேண்டும். உணர்ந்து நாணுற வேண்டும்.

"When rotating objects contract, the core, becoming more compact, rotates faster than surface a difference that is necessarily most marked at the equator and least at the poles". இது அந்த தன்னார்வ ஆய்வாளரின் விளக்கமாகும். அவ்வாறு விளக்கமளிக்கும் அவர் "Continents are being carried along by an eastward equatorial stream in the earth's mantle, driven by the earth's core rotaing faster than surface" இவைகளை தமிழாக்கி என்னால் தரமுடியும். ஆனால் ஆங்கில வழிக்கல்வி கற்ற உங்களுக்குப் புரியவேண்டுமானால் ஆங்கிலத்தில் தருதலே சிறப்பு என எண்ணி அவ்வாறு தந்துள்ளேன். எல்லா நிலநடுக்கமும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். குடிமகன் ஒருவனுக்கும் குவலயத்தில் நிகழும் நிகழ்வுகளுக்குரிய காரணங்களை கண்டறியும் துடிப்புள்ளது கண்டு தமிழ்க்குடிமகன்கள் நாணிட வேண்டாமா? ஈட்டிய பொருளை குடிக்கக் செலவிட்டு குடும்பத்தையே மறந்துவிடும் குடிமகன்கள் உலகின் பிறநாட்டு குடிமகன்கள் போல நேரத்தையும் நினைப்பையும் உலகின் நிலைபற்றி ஆராயச் செலவிடும் நாள் வந்தால் அந்நாளே தமிழர் வரலாற்றில் பொற்காலமாகப் போற்றப்படும். அண்ணா பேசிய பேச்சு நிலையும் நினைப்பும் உங்கள் நினைவில் நிழலாடவில்லையா! நினைப்பு உயர்ந்தால் தான் நாட்டின் நிலை உயரும் என்றாரே நம் உயிரினில் கலந்து உணர்வினில் வாழும் ஒப்பிலாப் பேராசான் அறிஞர் அண்ணா. உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் என்ற வள்ளுவமும் அண்ணன் கருத்தை ஒத்ததே!

64,186,000 சதுர மைல் பரப்புள்ள பசிபிக் பெருங்கடல் சராசரியாக 15,215 அடி ஆழமுடையது. மரியானா பகுதியில் போட்ட குழி 36,200 அடி ஆழமுடையதாக இருந்தது. அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவு 33,420,000 சதுர மைல்களாகும். சராசரியாக 12,881 மைல் ஆழமும் போர்ட்டோரீகா அருகில் 28,231 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் 28,350,000 சதுர மைல் பரப்புள்ளது. சராசரியாக 13,002 மைல் ஆழமும் சாவா அருகில் 25,344 அடி ஆழமும் கொண்டது. ஆர்டிக்கடல் 5106 சதுர மைல் பரப்பும் சராசரியாக 3953 அடி ஆழமும் கொண்டது. ஈராசியா அருகில் 17,881 அடி ஆழமுடையது. நிலவுலகின் 70 சதவீத பரப்பை கடல்களே நிறைந்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது நமது கடல்களைப் பற்றிய தௌ¤வான அறிவு நமக்கு வேண்டாமா? உழுதுண்டு வாழவாரே வாழ்வர் எனவும் உழவர்களே உலகிற்கு அச்சாணி எனவும் வள்ளுவம் நிலத்தில் உழுது பயிரிடும் உழவரைப் பாராட்டுகிறது. கடலில் நமக்காக மீன்களை வேட்டையாடி வரும் மீனவரும் உழவர்போல் தொழத் தக்கவரே என்பது என் கருத்து. மீனவர்கள் அரும்பாடுபட்டு நமக்களிக்கும் மீனைச் சுவைத்து உண்ணுகிறோம். உழவர் திருநாள் போல் மீனவர் திருநாளை உலகினர் ஏன் கொட்£டுவதில்லை? நான் அச்சாதியினன் அல்லன். எச்சாதியினனும் அல்லன். உலகின் 97 சதவீத நீர் கடலில் தான் உள்ளது. மீன்களுக்காக இல்லாவிடினும் முத்துக்களுக்காக இல்லாவிடினும் நீர் நிறை கடலே நம் குடிநீர்த் தேவைக்கும் ஈடுகொடுக்கும் என்பதற்காகவாவது நமது கடல்கள் பற்றித் தமிழர்கள் அய்வு செய்ய வேண்டாமா?

ஞால நிலப்பாகம் இன்றுள்ளவாறு 5 கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொனறு தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana) பாலதிக்கம் (Baltica) அமசோனியம் (Amazonia) அங்காரம் (Angara) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுத்திருந்தது என்ற தேவநேயப் பாவாணர் தம் தமிழர் வரலாறு நூலில் வி.ஆர். ராமச்சந்திர தீட்சதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியா எனும் நூல் கருத்தை பதித்துள்ளார்.

நாவலந் தீவே இறலித் தீவே

குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே

சான்மலித் தீவே தெங்கின் தீவே

புட்கரத் தீவே எனத்தீ வேழே

ஏழுபெரும் தீவும் ஏழ்பொழி லெனப்படும்

என்பது திவாகர நிகண்டு ஏழு கண்டங்களாக ஞாலம் இருந்ததை திவாகர நிகண்டு வழி அறியலாம்.

உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில் ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும் போது எக்கெல் இந்து மாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்ரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவி இருந்த ஒரு கண்டமாயிருந்தது என்பார்.

கிளேற்றர் இப்பழங்காலப் பெருங்கண்டத்திற்கு அதில் வதிந்த குரங்கொத்த உயிரி பற்றி இலெமூரியா என்று பெயரிட்டுள்ளார் எனவும் பாவாணர் "தமிழர் வரலாறு" எழுதுகையில் பதிந்துள்ளார். இலக்கியச் சான்றுகள் ஏற்புடையன அல்ல என்று தமிழிலக்கியச் சான்றுகளை ஒதுக்கித் தள்ளுவோர் உள்ளனர். இலமூரியா பற்றித் தமிழர் கூறினால் நீங்கள் ஏற்கத் தயங்குவீர்கள். ஆங்கிலேயர் கூறினால் ஆகா! ஆகா! என நீங்கள் மெச்சக்கூடும். இங்கு கூறுபவர் ஆங்கிலேயரல்ல. பிரெஞ்சுக்காரர்.

James Churchward 5 நூல்கள் எழுதினார். அவை 1. The Lost continent of Mu 2. The Children of Mu 3. The Sacred Symbols of Mu 4. The Cosmic Forces of Mu 5. The Second Book of the Cosmic Forces of Mu சேம்சு சர்ச்வார்டின் நண்பர் அகத்தும் அவர் மனைவி அலிசுலெ பிளங்கோனும் மாயன் நாகரிகம் பற்றிய ஆய்வுகளுக்காக மத்திய அமெரிக்க காடுகளில் திரிந்தவர்கள். பல பழைய இலக்கிய சுவடிகளை கண்டெடுத்தார்கள். அதனை மொழி பெயர்த்தார்கள். மாயன் நாகரிகத்தில் அரசி மூ கோலோச்சினாள். அதைக் கொண்டு அவர்கள் இலமூரியாக்கண்டத்தை மூ என்று அழைத்தார்கள். மூ என்னும் கண்டம் 5000 மைல் நீண்டது. 3000 மைல் அகண்டது என சேம்சு சர்ச்வார்டு கூறுகிறார். அந்தப் பிரெஞ்சு தம்பதிகள் கண்டெடுத்த மாயன் நாகரிக இலக்கிய ஏடுகளில் இருந்து தானறிந்தவற்றை சேம்சு சர்ச்வார்டு மேற்சொன்ன 5 நூல்களில் பதிவு செய்தார். மறைந்த மூ கண்டம் 60000 ஆண்டு முன்பு ஒரு கொடி நிலநடுக்கத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலில் மூழ்கியதாக அவர் கூறுகிறார். அவாய் தீவுகளும் பசிபிக் தீவுகளும் மறைந்த அந்தக் கண்டத்தில் மலைகளாக இருந்த உயர்ந்த சிகரங்களாக விளங்கியமையால் கடலுள் மூழ்காமல் மிச்ச முள்ளவை என்கிறார் அவர். மறைந்த கண்டம் பற்றி கல்வெட்டெழுத்துகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மறைந்த கண்டத்தின் வரைபடம் செதுக்கப்பட்டிருந்தது. டாக்டர் சேவியர் காப்ரெழா அக்கல்வெட்டை கண்டெடுத்தார். இராபர்ட் சாரௌக்க அதனைப் புகைப்படம் பிடித்தார். ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆதம் மாலிக்கின் செயலரான பரீதா இசுகோவியத் 1972 ல் Mauiக்கு வந்தார். அங்கிருந்த அழிவுகளையும் வரலாற்றையும் ஆய்ந்து அவை உண்மை எனும் முடிவுக்கு வந்தார். 50000 ஆண்டு முன்பு இலமூரியா(அ)மூ கண்டம் மறைந்த போது 2000த்துக்கு மேல் தமிழர்களாகிய எங்களுக்கு எண்ணிக்கை தெரியாதே? மேடைதோறும் ஈராயிரமாண்டு நாகரிகம் எமதென்று கிளிப்பிள்ளைகள் போல் சொல்லும் புலவர் கூட்டம் எங்களுடையது என்கிறீர்களா? மாயன் நாகரிகமாவது 50000 ஆண்டு சென்னையை ஒட்டியுள்ள பூண்டியில் 100000 ஆண்டு முன்பு தமிழன் வாழ்ந்தான். நம்ப மறுக்கிறீர்களா? New India Express செப்டம்பர் 6-2004 இதழின் முதல்பக்கத்தைப் பாருங்கள். நாங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் என்று தப்பிக்க பார்க்காதீர்கள்.

One Lakh Years ago People Lived in Poondi முதல் பக்கத்தில் எல்லாப் பதிப்புகளிலும் வௌ¤யான செய்தி. தமிழக அரசின் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு பற்றிய செய்தி. கண்டெடுத்த அறிஞர்களை போற்றுவோம். கடல்கொண்ட குமரிக் கண்டத்தை கடலடியில் தேடுவோம்.





ஞாயிறு, 30 மே, 2010

நேதாஜியின் மரண மர்மங்கள்


பிரபாகரன்  உயிரோடு இருக்கிறார். போரில் கொல்லப்படவில்லை என அழுத்தந்திருத்தமாக சொல்லி வருகிறார்கள். அதுபோலவே நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறார் என்ற சர்ச்சையும் பல ஆண்டுகள் நடந்தது. மத்திய அரசுக்கு மண்டைக் குடைச்சல் தந்தது.
நேதாஜி துவக்கிய கட்சி அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகும். அதன் இணைய தளத்தில் நேதாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் சுபத்ரா போஸ் இந்திய பாராளுமன்ற மக்களவையில் பேசிய பேச்சின் பதிவு இருக்கிறது. அதிலிருந்து சில….

“1945 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இரண்டாம் உலகப் போர் ஆசியாவில் முடிவுக்கு வந்த நேரம். ஹிரோ~pமா நாகசாகி என்ற நகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதால் ஜப்பான் சரணாகதி அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. நேதாஜியும் தோல்வியை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர் முன்னே இரண்டு வழிகள் இருந்தன. ஆங்கிலோ – அமெரிக்கப் படைகளிடம் சரணடைவது அல்லது இன்னொரு நாட்டுக்கு தப்பிச்சென்று அடைக்கலம் தேடி அங்கிருந்து விடுதலைப் போரை தொடர்வது. சரணாகதி அடைவது என்பது நேதாஜியின் சுபாவத்திலே இல்லை. பின்வாங்கி பாங்காக் வந்த நேதாஜி சோவித் யூனியனுக்கு தப்பிச் செல்ல எண்ணினார். ஜப்பான் அரசும் அவருக்கு ர~;யா தப்பிச் செல்ல உதவுவதாக வாக்களித்திருந்தது. ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டவுடன் ர~;யாவும் ஜப்பான் மீது போர் தொடுப்பதாக அறிவித்து விட்டது. இதனால் வாக்களித்தப்படி ஜப்பான் நடந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வட சீனாவில் உள்ள மஞ்சு10ரியாவுக்கு நேதாஜியை இட்டுச் செல்ல ஜப்பான் ஒப்பியது.

சீனா ஜெனரல் ~pயாங்-கே-n~க் ஆட்சியில் இருந்தாலும் மஞ்சு10ரியா கம்யூனிஸ்டு சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே தாமே ர~;யாவுக்குள் சென்று விடவும் அவர் திட்டமிட்டார். ஜப்பானிய உதவியுடன் நேதாஜியும் அவர் நணபர்கள் சிலரும் சைகோன் வந்தடைந்த போது அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்ல இயலாது. நேதாஜியுடன் ஒருவர் மட்டுமே மஞ்சு10ரியாவுக்கு அழைத்துச் செல்ல முடியும். மற்றவர்களை அடுத்த விமானத்தில் அனுப்புவதாக ஜப்பான் கூறியது. கர்னல் ஹபியூர் ரகுமானை மட்டும் தன்னுடன் இட்டுச் செல்ல நேதாஜி தீர்மானித்தார்.

• நேதாஜி விமான விபத்தில் மறைந்ததாகச் சொல்லப்பட்ட இரண்டு மாதங்கள் கழித்து பிரிட்டனில் காபினட் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் 25 அக்டோபர் 1945 ல் அமைச்சரவை இயற்றிய தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டி~; அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் - வால்யூம் ஐஏ நூலில் இந்தியாவில் ஒரே எதிரியாக நேதாஜி வருணிக்கப்பட்டார். அவருக்கு என்ன தண்டனை விதிப்பது என்பது விவாதிக்கப்பட்டது. அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து என்ன தண்டனை அளிப்பது என அமைச்சரவை விவாதித்துள்ளது. ஆக நேதாஜி இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம் கழித்து பிரிட்டி~; அரசின் அமைச்சரவை நேதாஜியை கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க முடியும்?

• பிரிட்டி~; இந்திய அரசு பிரிட்டனில் உள்ள அரசுக்கு 23 அக்டோபர் 1945 ல் அனுப்பிய கடிதத்தில் நேதாஜியை கைது செய்தால் நாடே கொந்தளிக்கும் “அவர் எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும். அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்” என்று எழுதி இருந்தது.

• 1946 அக்டோபர் 30 ல் இடைக்கால அரசின் அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் மங்கள் சிங் என்று உறுப்பினர் கேள்விக்கு பதிலளிக்கையில் நேதாஜி உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்று கூற முடியாத நிலையில் உள்ளதாகச் சொன்னார். அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தேவப்பிரதா பிஸ்வாஸ் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினர் பரூண் முகர்ஜி அவர்களும் புதுச்சேரிக்கு வந்திருந்த போது பேட்டி கண்டோம்………. விபரங்கள் இனி.

21.1.1967 ல் நேதாஜியின் பிறந்த நாள் வருவதற்கு இரண்டு நாள் முன்பே முன்னாள் மத்திய அமைச்சர் பேராசிரியர் சமர் குகா பிறந்த நாள் வாழ்த்து கூறி நேதாஜிக்கே எழுதிய மடலில் சு10ரியன் உதிப்பதற்காக எல்லோரும் காத்துக் கொண்டுள்ளோம் என நேதாஜியின் மீள்வருகை பற்றி சு10சகமாக குறிப்பிட்டார் ஜாதவ்பூர் பல்கலைக் கழகப் பேராசியர் இந்த முன்னாள் அமைச்சர் ஏனோதானோ அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நேரு 1964 ல் மறைந்த பிறகு நேதாஜி தன்னை வெளிப்படுது;திக் கொள்ள சிந்திதிருக்கக் கூடும் என்பதற்கு பேராசிரியரின் கடிதமே சாட்சியமாகும்.

• ஜஸ்டிஸ் முகர்ஜி கமி~ன் அறுபதாண்டுகள் சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த நீதி விசாரணைக் கமி~ன் என்ற இடத்தில் 18 ஆகஸ்ட் 1945 ல் விமான விபத்து நடக்கவே இல்லை. எனவே விபத்தல் நேதாஜி இறந்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தீர்ப்பளித்தது.

14.5.1999 ல் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.கே.முகர்ஜி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. 1) நேதாஜி உயிருடன் உள்ளாரா? இறந்து விட்டாரா? 2) அவர் இறந்திருந்தால் விமான விபத்தில் இறந்தாரா? 3) ஜப்பானியக் கோவிலில் உள்ள சாம்பல் நேதாஜி எரியூட்டப்பட்ட சாம்பலா? 4) வேறெங்கே அல்லது வேறெந்த விதத்தில் நேதாஜி இறந்தார்? எப்படி இறந்தார்? எந்த இடத்தில் இறந்தார்? 5) அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் எங்கே இருக்கிறார்? இந்த வினாக்களுக்கு விடை தேட அமைக்கப்ட்ட நீதி விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பம் தரவில்லை. பல்வேறு இடையூறுகளுக்கிடையே கமி~ன் 8 நவம்பர் 2005ல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.

 மார்ச் 23 – 2000 அன்று இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கு கமி~ன் நோட்டீஸ் அனுப்பியது. கோப்பு எண்.12 (226) 56-Pஆ) கமி~னுக்கு தரப்பட வேண்டுமென அரசை கமி~ன் கேட்டது. நேதாஜி மறைந்த சு10ழ்நிலை பற்றிய விசாணைகள் அடங்கிய அந்த ஃபைல் காணவில்லை அழிக்கப்ட்டு விட்டதென கமி~னுக்க பிரதமர் அலவலகத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்த ஒரு பெண்மணி மே 2 2000ல் பதிலளித்தார். கமி~னும் விடாக்கண்டனாக மீண்டும் மே 23 2000 அன்று அந்த இயக்குநருக்க “ அந்த கோப்பின் உள்ளடக்கம் என்ன? எந்தச் சு10ழ்நிலையில் அந்த கோப்பு அழிக்கப்பட்டது? என்ற வினாக்களை தொடுத்தது. அந்தப் பெண் இயக்குநர் பதிலளிக்கும் முன் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான இயக்குநர் ஏ.கே.பைடாண்டி சு10ன் 22 2000த்தில் கமி~ன் முன் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

நேதாஜி மறைவு பற்றிய கோப்புகளோ இந்திய தேசிய ராணுவம் பற்றிய கோப்புகளோ கேட்டு பல துறைகளுக்கு வினாக்கள் வருவதால் சம்மநதப்பட்ட இலாக்காக்கள் பதில் தாக்கல் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே காபினாட் செயலகத்திலோ இண்டலிஜென்ஸ் பீரோவிலோ “ ரா” (சுயுறு) அமைப்பிடமோ நேதாஜி தொடர்பான எந்தத் தகவலுமில்லை என்று கமி~ன் முன் மேற்சொன்ன துறைகளுக்காக இவரே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

முழுப்பூசணிக்காயை உள்துறை அமைச்சக இயக்குநர் சு10ன் 22 2000ல் சோற்றில் மறைக்கப்பார்த்தார் மே 23 2000ல் கமி~ன் கேட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலக இயக்குநர் சு10லை 2004ல் பதில் அளித்தார் கோப்பு எண்.12 (226) 56-Pஆ) நேதாஜி மறைந்த சு10ழ்நிலைகள் பற்றிய விசாரணைகள் தொடர்பான அட்டவணை ஃ காபினட் முடிவுகள் அடங்கியது வழக்கமாக பழைய கோப்புகளை அழிக்கும் நடைமுறைப்படி 1972 ல் அழிக்கப்பட்டுவிட்டன என பதில் அனுப்பினார். காபினட் செயலகத்தில் காபினட் முடிவுகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படும் அங்கிருந்து தகவல் பெற்றுக் கொள்ளூறு கமி~னுக்கு பதில் அனுப்பினார்.

உடனே கமி~ன் பிரதமர் அலுவலகத்தையும் உள்துறை அமைச்சக செயலாளரையும் நேதாஜி சுபா~; சந்திர போஸ் தொடர்பாக கோப்புகளை அழிக்கப் பிறப்பிக்கப்பட்ட ஆணையை கேட்டது. என்னென்ன கோப்புகள் அழிக்கப்பட்டன என்றும் பட்டியல் கேட்டது. இதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலக இயக்குநர் செப்டம்பர் 21 2000த்தில் பைல்களை அழிப்பது தொடர்பான எந்த ஆணையையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

இப்படி கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் அம்பலமாகும் என்பது போல் முன்னுக்குப்பின் முரணாக மத்திய அரசு இலாக்காக்களே உளறிக் கொட்டி உண்மையை யூகிக்குமாறு செய்துவிட்டன.

கோஸ்லா கமி~ன் விசாரணை நடைபெற்று வநத சமயத்திலேயே 1972 கோப்புகள் அழிக்கப்பட்டன அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சமர் குகா சனவரி 3 1974 ல் இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு கடிதம் எழுதி கோப்பு அழிக்கப்பட்டதை விசாரிக்குமாறு கோரினார். இதற்கு பதில் அளித்த இந்திராகாந்தி அந்தக் கோப்பில் புதிதாக எதுவுமில்லையென்று மழுப்பினார்.

ர~;ய உளவுத்துறையான முபுடீ அமெரிக்க உளவுத்துறையான ஊஐயு போல உலகெங்கும் ஒரு காலத்தில் பேசப்பட்டது. கேஜிபியின் முன்னாள் உளவாளி வாசிலி மித்ரொகின் கேஜிபியும் உலகமும் என்ற தலைப்பில் பரபரப்பான புத்தகம் வெளியிட்டார். வுhந முபுடீ யனெ வாந றுழசடன நூலாசிரியர் வாசிலி மித்ரொகினுக்கு நேதாஜிக்கும் ர~;யாவுக்கும் இருந்த தொடர்புகள் தெரியும். அவர் முகர்ஜி கமி~ன் முன் ஆஜரான முக்கிய சாட்சியமான புரபிராய் என்ற பெண்மணிக்கு தன் ஆவணக்காப்பகத்தில் இருந்து முக்கிய தகவல்களை தந்து உதவினார் இதற்காக ர~;யாவுக்கே சென்றது முகர்ஜி கமி~ன். மாஸ்கோவில் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இர்க்ஹீட்ஸில் ஒம்சுக்கில் நேதாஜி பற்றிய பாதுகாக்கப்பட்ட ரகசிய ஆவணங்களை தேடிச் சென்றது முகர்ஜி கமி~ன்.

முகர்ஜி கமி~ன் முன் நான்கு பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார் சாட்சியான புரபிராய்ää ர~;யாவில் உள்ள ஃபெடரல் செக்யூரிட்டி பீரோவில் உள்ள ஆவணங்கள்ää கிரெம்ளின் நகரில் இருந்த குடியரசுத் தலைவரின் ஆவணக்காப்பக ஃபைல்கள்ää ராணுவ உளவுத் தகவல் ஆவணக்காப்பக கோப்புகள் என்ற இந்த 3 இடங்களிலும் நேதாஜி பற்றிய பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் என ரகசிய முத்திரை குத்தப்பட்ட ஆவணங்களை பார்ப்பதற்கு முகர்ஜி கமி~னை ர~;யா அனுமதிக்குமா? என்ற கவலையை புரபி ராய் வெளிப்படுத்தி இருந்தார். மூன்றரை ஆண்டுகள் போராடி அனமதி வாங்கி முகர்ஜி கமி~ன் ர~;யா சென்றது. ஓம்சுக் நகர் வழியாகத்தான் மஞ்சு10ரியாவில் இருந்து நேதாஜி ஊடுருவினார் என்பார்கள். இர்க்~Pட்சில் இருந்த முள்வேலி முகாம் போன்ற முகாமில்தான் நேதாஜி இருந்தார் என்றும் செய்திகள் உலவின. கமி~ன் கண்டறிந்தது அறிக்கையில் உள்ளது.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் தேவபிரதாபிஸ்வாஸ் பேட்டி :

இது பற்றி அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவ பிரதா பிஸ்வாஸிடம் கேட்டோம்.

1. நேதாஜி ஆகஸ்ட் 18 – 1945 ல் தாய்பேய் விமான நிலையத்திலோ அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் இறக்கவில்லை. முகர்ஜி கமி~ன் முன்பு அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யபட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது.

2. தாய்வான் நாட்டு அரசும் தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்று கூறி விட்டது.

3. ஜப்பான் அரசும் சுபா~; சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்க சு10ட்டிய புனை பெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை என்று தெரிவித்துவிட்டது. ஜப்பானிய கோவில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்த சாம்பல் மற்றும் எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனை நடத்தவிடாமல் தடுத்து குழப்பியதும் உலகுக்கே தெரியும்.

4. முகர்ஜி கமி~ன் அறிக்கையும் ஆகஸ்ட் 18 1945 ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது.

இதில் வேடிக்கை என்னவன்றால் இந்திய அரசு எந்தவித காரணமும் கூறாமல் தானே நியமித்த முகர்ஜி கமி~ன் அறிக்கையை ஏற்க முடியாது என்று நிராகரித்ததுதான் என்றார் தேவபிரதா பிஸ்வாஸ்.

• நேதாஜி பற்றிய உண்மைகளை எப்படி உலகம் தெரிந்து கொள்வது? புpரபாகரன் பற்றிய உண்மைகளை இறுதிப்போரில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றிய உண்மைகளை உலகம் அறியவிடாமல் இலங்கை அரசு நடந்து கொள்வது போல இந்திய அரசு நேதாஜி வி~யத்தில் நடந்து கொண்டதா என்று கேட்டோம்.

“ பிரபாகரன் அறையில் நேதாஜியும் படமும் புலியின் படமும் இருக்கும் என ஈழம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்த தேவபிரதா பிஸ்வாஸ் அறையில் இருந்த புலி பொம்மையை டேபிளில் வைத்து புலியோடு சேர்த்து படமெடுக்க சொன்னார்.

“நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சகமும் வெளியுறவு அமைச்சகமும் அழித்து ஒழித்து விட்டார்கள். இதை நீதிபதி முகர்ஜி கமி~னே சொல்லியுள்ளது. எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? என்று கேட்டோம். இல்லை! சுமார் 800 ஃபைல்கள் ரகசிய ஃபைல்கள் ஊடயளளகைநைன குடைந என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம் உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ஊடயளளகைநைன குடைந ஆக வைத்திருந்து னுந - ஊடயளளகைநைன குடைந என ஆய்வாளர்களுக்காக பொது ஆவணமாக அறிவிப்பார்கள். இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால் இந்த 800 ஃபைல்களையும் நிரந்தரமாக ஊடயளளகைநைன குடைந ஆக இந்திய அரசு வைத்துள்ளது. இது பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என உலகம் அறிந்து கொள்ளும்” என்றார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.

இதை யாரும் பார்க்க முடியாதா? என்று கேட்டோம். மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் பரூண் முகர்ஜி “எனக்கு காட்டினார்கள் ஆனால் அதைப் பற்றி பேசவோ – மேற்கோள் காட்டவோ கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டு காட்டினார்கள்” என்றார். அதிர்ந்து போனோம்!

நேதாஜி உயிருடன் இருந்தர் என நீங்கள் சொல்லி வந்தீர்கள்? அரசு இறந்து விட்டதாகத்தானே கூறி வந்தது என்று கேட்டோம்.

மறைந்த பிறகு நாட்டின் உயர் தலைவர்களை கௌரவிக்கும் பாரத ரத்னா வருதை நேதாஜிக்கு மத்திய அரசு அளித்தது. அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை எழுந்தது. அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியாமல் மத்திய அரசு பின்வாங்கியது. அதுமட்டுமல்ல கொடுத்த பாரத ரத்னாவையேதிரும்ப பெற்று ஜகா வாங்கியது என்று போட்டு உடைத்தார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.

நேதாஜி 1985 ல் இறந்தாரா?

பைசியாபாத்தில் 1985ல் இறந்த பகவான்ஜிதான் நேதாஜியா? பகவான்ஜி பார்ப்பதற்கு நேதாஜி போலவே இருந்தார். நேதாஜி போலவே பேசினார். அந்த வயதில் அவரது உயரமும் தோற்றமும் ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்களும் அந்த துறவி வீட்டில் அகப்பட்டன. பல் இடுக்கும் ஒத்திருந்தது. வயிற்றின் கீழே இருந்த தழும்பும் ஒத்திருந்தது. டீ. லால் என்ற ஆராய்ச்சியாளர் இருவருடைய எழுத்தும் நடையும் ஒத்துள்ளன என்றார். இந்துஸ்தான் டைம்சு நாளேடு இந்த ஆய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

2001ல் இது பற்றி புலனாய்வு செய்தவர்கள் ஆகஸ்ட் 18 – 1945 ல் நேதாஜி விமான விபத்தில் கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை திட்டமிட்டே கட்டப்பட்டது. பின் தொடரும் நேச நாடுகள் படைகள் பிடியில் இருந்து தப்பிக்கவே இக்கதை அவிழ்த்து விடப்பட்டது. நேதாஜி சோவியத் யூனியனுக்குள் நழுவிச் சென்றிருக்கலாம் என்று செய்திகள் அடிபட்டது.

பைசியாபாத்தில் துறவி ஒருவரே நேதாஜி என்ற கிசு கிசு கிளம்பும் வரை இப்படியே உலகம் நினைத்தது. கும்நாமி பாபா என்று அறியப்பட்ட அந்தத் துறவி மிக மிக மர்மயோகியாகவே வாழ்ந்தார். திரைக்குப் பின்னிருந்தே மற்றவர்களை சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்டாமல் வாழ்ந்தார். அவர் மறைந்த பொழுது அவரே நேதாஜி என்று செய்திகள் பரவவே உத்திரப்பிரதேச நீதிமன்றம் அவருடைய உடைமைகளை சீல் வைத்து பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு ஆணையிட்டது. திசம்பர் 22 2001 ல் முகர்ஜி கமி~னுக்காக சீல் உடைக்கப்பட்டது.

பகவான்ஜி ஒரு வங்காளிää ஆங்கிலம்ää இந்துஸ்தானிää சமஸ்கிருதம்ää ஜெர்மன் மொழியில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார் தங்க வாட்ச் அணிந்திருந்தார். 1945 ல் நேதாஜி மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ தங்க வாட்சோ அகப்படவில்லை.

நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்லää அவரது தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ராய்ää லீலா ராய்ää சுனில் தாஸ்ää திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் இருந்தனர்.

ஓவ்வொராண்டும் நேதாஜியின் பிறந்த தினமான சனவரி 23 அன்று அவரது சீடர்கள் குறிப்பாக டாக்டர் பவித்ரா மோகன் ராய் பகவான்ஜியின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். நேதாஜியின் மூத்த சகோதரர் சுரே~; போசுக்கு 1971 ல் கோஸ்லா கமி~ன் விடுத்த சம்மனின் ஒரிஜினல் பகவான்ஜியின் உடைமைகளுடன் இருந்தது. 1985 ல் துறவியார் மறைந்த பொழுது கல்கத்தாவில் டாக்டர் பவித்ரா மோகன் ராய் சொன்னாராம். “நான் மட்டும் வாய் திறந்தால நாடே பற்றி எரியும்” என. இதுப்பற்றி தேவபிரதா பிஸ்வாஸிடம் கேட்டோம்.

நேதாஜி இன்று உயிருடன் இல்லை அவர்தான் நான் என்று பலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் அதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. 1945 ஆகஸ்ட் 18 – ல் நேதாஜி இறக்கவில்லை. என்பது மட்டும் உறுதி என்றார் அவர் ர~;யா சென்றதாக சொல்கிறார்களே அவர் சென்ற இடம் மர்மமாகவே இருக்கிறதே இதுபற்றி உங்கள் கருத்து என்ன அவர் எங்கு சென்றிருக்க கூடும் என்று கேட்டோம் வியட்நாம் அப்பொழுது விடுதலை பெற்று விட்டது. வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும் நேதாஜிக்கும் நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்டும் என்றார்.

ஏன் நேதாஜி உயிருடன் இருந்தும் தலைமறைவாக இருந்தார்? விடை தெரியாத வினா? ஆனால் ஆந்நாளில் பி.டி.அய். செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் நேதாஜியின் மெய்க்காப்பளராக இருந்த உஸ்மான்பட்டேல் கூறியதாக ஒரு செய்தி ஆங்கில நாளேடுகளில் வெளிவந்தது. நேருää காந்திää ஜின்னா மூவரும் பிரிட்டி~; நீதிபதியிடம் உடன்பாட்டுக்கு வந்து நேதாஜி இந்தியாவுக்குள நுழைந்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்று உறுதி அளித்ததாக நீதிபதி கோஸ்லா கமி~ன் முன் உஸ்மான் பட்டேலின் பிரமாண வாக்குமூலம். இவ்வளவு மர்மங்களா தலைசுற்றியது.

அகில இந்திய பார்வர்டு பிளாக் பொது செயலாளர் தேவப்பிரதா பிஸ்வாஸ் கூறினார் “நேதாஜி மர்மம் போலவே பிரபாகரன் மரணமும் மர்மமாகவே இருக்கும். பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி அல்ல அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குகிறோம் என்று உலக நாடுகள் அறிவித்தால் அவர் வெளியே வரக்கூடும். நேதாஜியை குற்றவாளியாக பிரிட்டி~; அரசு அறிவித்தது அதை இந்திய அரசு விளக்கிக்கொள்ளவில்லை

நேதாஜி வரலாறு மட்டுமல்ல இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றை இந்திய அரசு வெளியிடவே இல்லை. ஏன் சுதந்திர போரின் உண்மை வரலாற்றை வெளியிட இந்திய அரசு மறுக்கிறது? நேருவின் அரசு இந்த வரலாற்றை எழுத இராதாவினோத்பால் என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார் அது புத்தகமாகி வெளியே வரவில்லை என்றார் தேவபிரதா பிஸ்வாஸ்.

பெரியார் வரலாற்றை தொகுத்து எழுதிட அறிஞர் நெ.து. சுந்தரவடிவேலு தலைமையில் எம்.ஜி.ஆர் அரசு குழு அமைத்தது. அந்த வரலாற்றை ஏழு ஆண்டுகள் அரம்பாடு பட்டு எழுதி கையெழுத்துப்படியை ஒப்படைத்தார்கள். அரசு செலவில் இல்லாமல் தன் சொந்த செலவில் வெளியிட நினைத்த எம்.ஜி.ஆர் ரூபாய் பத்து இலட்சம் பணமும் கொடுத்தார். ஹேப்பியாக இருக்கிறார் பணம் பெற்றவர் - கையெழுத்துப்படியையாவது அந்த புண்ணியவான் கலைஞர் அரசிடம் கொடுத்து எம்.ஜி.ஆர் ரின் ஆசையை நிறைவேற்றுவாரா? என நம்மனம் நினைத்தது.

தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிராம் பெல் என்று தான் நாம் இன்று வரை சொல்லி கொண்டு வருகிறோம். அவரல்ல அவருக்கு முன்பே இத்தாலியரான அந்தோணியோ மியூசி என அமெரிக்க நாட்டில் செனட் விவாதித்து வரலாற்றை அங்கு திருத்தி உள்ளது. நாம் பொய் வரலாற்றை திருத்தாமல் திரும்ப திரும்ப பழம்பாட்டை பாடிக்கொண்டிருக்கிறோம்.















:

முரசொலி மாறனோடு

1973 ல் முரசொலி செல்வம் இல்லத்தில் முரசொலி மாறனோடு நான் எடுத்துக் கொண்ட படம்.திராவிட மாணவ்ர் முன்னேற்றக் கழக புதுவை மாநில அமைப்பாளராக இருந்த நான் முரசொலி மாறன் எழுதிய ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் நூலைப் படித்தது முதல் அவர் மீது தனிப்பற்று கொண்டவன்

ஆயிரம் விளக்கில் இன்று பாரத ஸ்டேட் வங்கி உள்ள இடத்தில் முரசொலி பழைய அலுவலத்தில் சிறிய அறையில் ஏகப்பட்ட புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் மாறன் அவர்களால் அமெரிக்க நூலகத்தில் உறுப்பின்னாக சேர்த்து விடப்பட்டேன்.புத்தகம் படிக்கும் பழக்கமே அவரைப் பார்த்துத் தான் எனக்கு ஏற்பட்டது. பீட்டர்ஸ் பிரின்சிபல் என்ற புத்தகத்தை எனக்கு அவர் பரிசளித்தார்.உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் வேண்டும் என்ற உணர்வை என்னுள் மூட்டிய புத்தகம் அது.அவர் அமைச்சராக இருந்த போதும் கடிதங்களுக்கு பதில் அளித்தார்.என் 25 வயதில் அவ்ரோடு எடுத்துக்கொண்ட படத்தை 63 வயதில்  வெளியிட்டு பழைய நினைவுகளை பசுமையாக பாதுகாப்பதில் மகிழ்கிறேன்.


நந்திவர்மன்

சனி, 29 மே, 2010

கடலடியில் வரலாற்றுப் புதையல்! கண்டெடுக்க வாரீர்

- நந்திவர்மன்

கடவுளின் கைரேகைத் தடங்கள்  என்ற நூல் 1994 ல் வெளியாயிற்று. உலகெங்கும் பரபரப்புடன் விற்றுத் தீர்ந்தது. இந்நூல் ஆசிரியர் உலகப் புகழை உடனே எட்டி விட்டார். உலகில் நாகரிகம் என்பதே 6000 ஆண்டு பழமையுடையது என்ற கருத்து ஓங்கி இருந்தது! வந்தார் கிரகாம் ஹான்காக்!  தடாலடியாக 17000 ஆண்டுக்கு முன்பே மனித குலம் நாகரிகமடைந்திருந்தது என்று போட்டாரே ஒரு போடு! சும்மா கப்சா விடவில்லை. இந்தியா அருகில் உள்ள கடலடியில் மூழ்கி ஆய்வு செய்தார். ஜப்பான் தாய்வான் சீனா அருகில் உள்ள கடல்கள் அடியில் நாகரிகம் இருந்த அடையாளங்களைத் தேடினார். அரபிக் கடலடியிலும் மத்திய தரைக்கடல் அடியிலும் சான்றுகளைத் தேடினார். அவர் தேடுவதற்கு தூண்டுதலாக உலக இலக்கியங்கள் அமைந்தன. தமிழர்களின் சங்க இலக்கியம் வேதங்கள் உள்ளிட்ட நூல்கள் கூறும் கடற்கோள்களை நினைத்துக் கொண்டார். பைபிள் கூறும் நோவாவின் படகை நினைத்துக் கொண்டார். கடற்கோள் பற்றியும் பெரு வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகள் பற்றியும் பல நாடுகளில் பலமொழிகளில் சுமார் 600 புராணங்கள் தொன்மங்கள் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவை அத்தனையும் கட்டுக்கதையாகிட முடியாது என்று கிரகாம் ஹான்காக் நம்பினார்.

இன்றிலிருந்து 17000 ஆண்டு முன்பு உலகில் நாகரிகம் மிகுந்த சமுதாயங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். 17000 முதல் 7000 ஆண்டு வரை ஆங்காங்கே கடற்கோள்கள் நடந்தன. ஆழிப்பேரலைகள் எழுந்தன. அதில் 15 மில்லியன் சதுர கிலோ மீட்டர் மக்கள் வாழ்ந்த நாடுகளும் நிலங்களும் கடலடியில் மூழ்கியது. அந்தப் பகுதிகளில் மனித குலத்தில் முன்னோடி நாகரிகம் பற்றி தேடியாக வேண்டும். தமிழர் வரலாற்றை உலக வரலாற்றில் இருந்து பிரித்து தனியே கண்டறிய முடியாது. ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்த நிலம் இன்று கடலாக உள்ளது. இந்தியா ஒரு காலத்தில் நான்கு புறமும் கடல் நீரால் சு10ழப்பட்ட நாவலந்தீவு ஆக இருந்தது. நாவலந்தீவு என்பது தமிழ் இலக்கண நூல் பிங்கல நிகண்டு கூறும் .

இந்தியா இன்றுள்ள இடத்தில் இப்போது இருப்பது போன்ற வடிவில்தான் இருந்தது என்று முடிவு கட்டிக்கொண்டு வரலாறு எழுதக் கூடாது. எழுதுவதும் தவறு. சிலப்பதிகாரத்தில் இந்துமாக்கடல் கொண்ட குமரியாறும் பஃறுளியாறும் பல மலைத்தொடர்களும் பற்றி பேசப்படும். எனவே இது போல் இலக்கியங்கள் கூறும் நாகரிகங்களைக் கண்டறிய கடலடி ஆய்வில் இறங்கினார் கிரகாம் ஹான் காக்!

ஜப்பான் அருகே அவர் கண்டெடுத்த சான்றுகள் பற்றி சொர்க்கத்தின் கண்ணாடி  என்ற நூலில் பதிவு செய்தார். மால்டா இந்தியா ஜப்பான் பகாமாஸ் எனக் கடலடியில் அவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளை  நூலில் பதிவு செய்தார். அந்த நூலில் தான் நமது பூம்புகார் பற்றிய வியத்தகு கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

செம்மொழித் தமிழுக்கு மாநாடு நடக்க உள்ளது. இந்திய அரசு 1000 ஆண்டு பழமையும் இலக்கிய வளமுள்ள மொழியை செம்மொழி என அறிவிக்கலாம் என்று வரையறை வகுத்தது! அதன்படி தமிழ்ச்செம்மொழி என அறிவிக்கப்பட்டது. ஆனால் 1000 ஆண்டு வரலாறு எங்களுக்கும் உண்டு என்று வேறு சில மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் இடம் கேட்கின்றன.

ஆனால் 1000 ஆண்டா? தமிழ் வரலாறோ கி.மு. 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதை பூம்புகார் நகரின் சில கூறுகளை கடலடியில் கண்டெடுத்து கிரகாம் ஹான்காக்! 11500 ஆண்டு பழமை நமக்குண்டு என்று நிறுவுகிறார். இவரை செம்மொழி மாநாட்டுக்கு நாம் அழைத்துச் சிறப்பிக்க வேண்டாமா? அவர் கண்டுபிடித்தது கொஞ்சமே! இன்னும் கூடுதலாக கடலடியில் நாம் ஆய்வு செய்தாக வேண்டாமா? மூழ்கிய நம் நகரங்களை முத்து குளிப்பது போல் மூழ்கி வெளியே எடுத்து வர வேண்டாமா? பூம்புகார் மட்டுமல்ல புதையுண்ட நம் குமரிக் கண்டத்தையும் நாம் மீட்டெடுக்க வேண்டாமா? ஆய்வு செய்திடல் வேண்டாமா?

பூம்புகாரை எப்படி கடல் விழுங்கிறது? குமரிக்கண்டமும் அதிலிருந்த குமரியாறும் இந்தமாக்கடலில் எப்படி மூழ்கின? பஃறுளியாறும் பல அடுக்குளாக இருந்த மலைகளும் எப்படி கடலடியில் மூழ்கின? இந்த வினாக்களுக்கு விடை கிரகாம் ஹான்காக் இடம் கிடைக்கிறது. அவர் சொல்கிறார் “மனித குல வரலாற்றில் கடந்த முக்கிய பேரழிவு பற்றி நாம் மறந்து விட்டோம். பனி ஊழிக்காலத்தின்  கடைசியில் 12000 ஆண்டுகள் முன்பு உலகில் கடல்களை ஒட்டிய கடற்கரை ஓரங்களில் கடலோடிகளாகவும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் வாழ்ந்தார்கள்! அவர்கள் கடல் மட்டம் உயர்ந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டு வாழ்ந்த நாடுகளை விட்டு துடைத்து எறியப்பட்டார்கள். இந்தப் பேரழிவு உலகில் உள்ள 600 தொன்மக் கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலை உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து மனித குலத்தை அழித்த நிகழ்வு ஏதாவது ஒரு வகையில் பல நாட்டு இலக்கியங்களில் இடம் பிறந்துள்ளது.

அந்தக் காலச் சுநாமி

எப்படி நடந்திருக்கும் அந்தக் காலத்துக் சுநாமி? அப்போது வட அமெரிக்காவுக்கும் வடஐரோப்பாவுக்கும் இடையே கடல் இல்லை. பனிப்பாறைகளே இருந்தன. அண்டார்டிகாவில் இன்று இருப்பது போல! அதுவும் 3 மைல் ஆழத்துக்கு பனிப்பாறைகள் இருந்தன. அதன் மீது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் போகக் கூடிய சு10ழ்நிலை இருந்தது. புவி வெப்பமாதல் பற்றி இன்று அலறுகிறோம்! அன்று வெப்பத்தால் இந்தப் பாறைகள் உருகி கடல் தோன்றியது. உருகிய பனி பாறைகள் உலகெங்கும் ஆழிப்பேரலைகளை உருவாக்கின. பல நாடுகளை அவை விழுங்கின. அப்படி அழிந்து போனது நம் குமரிக்கண்டம்! கடலுள் மூழ்கியது நம்ம பூம்புகார். இவற்றை முதலில் கண்டறிந்த பெருமைக்குரியவர் கிரகாம் ஹான்காக்! .

அவர் மட்டுமல்ல  உலகில் பல நாட்டவரும் கடலடி அகழ்வாய்வில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கிக் காணாமல் போன கப்பல்களை தேடுவதில் தொடங்கினார்கள். உலகெங்கும் 3 மில்லியன் கப்பல்கள் கடலடியில் மூழ்கிவிட்டன. இவற்றில் பெரும்பகுதி இன்றும் கண்டெக்கப்படவில்லை. இப்படி கடலடியில் கப்பல்கள் தேடியவர்கள் கட்டிடங்களை கண்டார்கள். நாகரிகங்களை கண்டறிந்து வருகிறார்கள்.

“கடலடியில் நம் பாரம்பரியம் உள்ளதென்று பெருமை கொள்கிறோம்! 4000 ஆண்டுகளில் மூழ்கிய நகரங்களும் கப்பல்களும் நாம் கண்டெடுப்போம் என்று காத்துள்ளன. சிந்து வெளி நாகரிக காலந்தொட்டு 7000 கிலோ மீட்டர் தூரம் நீண்ட இந்தியக் கடற்கரையை ஒட்டிய கடலடியில் பெரும் புதையல் காத்துக் கொண்டுள்ளது. அங்கு தேடினால் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடிக்கலாம். 1980 முதல்தான் இந்தியாவில் கடலடியில் அகழ்வாய்வு சு10டு பிடிக்கத் தொடங்கியது. கோவாவில் உள்ள நே~னல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓசியோனோகிராபி கடலடியில் கப்பல்களை தேடப்போய் குஜராத் அருகே துவாரகா நகரத்தையும் பூம்புகாரையும் கண்டுபிடித்தார்கள் என இந்திய அரசு தொல்லியல் துறையின் கடலடி அகழ்வாய்வு பிரிவு தலைவர் அலோஜ் திரிபாதி கூறியுள்ளார்.

கிரகாம் ஹான்காக் நூல் எழுதியுள்ளார். நம் சேர சோழ பாண்டியரின் நாடுகள் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றை இந்நூலில் தேடிப் பார்க்க வேண்டாமா? செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசே குமரிக்கண்டம் பற்றி கடலாய்வு செய்து நூலாக்கி உலகின் பிற பேரழிவுகளுடன் தமிழினமும் அழிந்தது என்று நம் நாகரிகத்தை நிலை நாட்ட வேண்டும்.


நாம் குமரிக்கண்டம் என்பதை கோண்டுவானா பெருங்கண்டம் என மற்றவர்கள் அழைக்கிறார்கள். கோண்டுகள் மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிகள். அந்தப்பகுதியின் பாறைகளுக்கும் பிற கண்டங்களின் பாறைகளுக்குமான ஒப்பீடு காரணமாக கோண்டுவானா என்ற சொல் உருவாயிற்று. அந்தக் கோண்டுவானா பற்றி நூலெழுதியவர் டொனால்டு பிளான். அந்த ஆய்வேட்டில் கோண்டுவானா பெருங்கண்டமாகத் திகழ்ந்தது. இன்று தென்பசிபிக் கடல் உள்ள பகுதியில் அக்கண்டம் அமர்ந்திருந்தது. பூமத்திய ரேகை வரையும் அதையும் தாண்டி தென்துருவமும் வரையும் பரவி இருந்தது. புது கண்டங்கள் உடைந்து சிதறிய துகள்களையும் குப்பைகளையும் இன்று பசிபிக் பெருங்கடல் என்று சொல்லப்படும் பகுதியில் துடைத்து எறிந்து விட்டு அங்கு வீற்றிருந்தது கோண்டுவானாப் பெருங்கண்டம் என்று கூறுகிறார்.

பூமத்திய ரேகைக்கு எதிர்த்திசையில் லாராசியா என்ற சிறிய கண்டம் ஒன்றிருந்தது. அந்நிலப்பரப்பே இன்று பெரிதாக வளர்ந்து பெரிதாகி வடஅமெரிக்கா ஆயிற்று. கிழக்கில் எவ்வளவு தூரத்தில் என்று வரையறுத்துச் சொல்ல முடியா தூரத்தில் பால்டிகா என இன்னொரு சிறிய கண்டமிருந்தது. அக்கண்டமே இன்றைய ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி நின்றது.

ஆங்காங்கே எங்கிருந்தன எனச் சொல்லவியலாத இடத்தில் சிறுசிறு கண்டங்கள் இருந்தன. அவை ஆசியாவுடன் பின்னாளில் இணைந்தன.

500 மில்லியன் ஆண்டுகள் முன்பு லாரன்சியாவும் பால்டிகாவும் மோதிக் கொண்டன. இவை நிகழ்ந்த போது தென் துருவப் பகுதியில் நகர்ந்து இன்றுள்ள தென் அட்லாண்டிக் நோக்கி கோண்டுவானா நகர்ந்தது. கோண்டுவானா என்ற பெரும்கண்டம் ஆப்ரிக்காவை தென்னமெரிக்காவைää இந்தியாவை அண்டார்டிகாவை ஆசுதிரேலியாவை நியுஇனியாவை நியுசிலாந்தை உள்ளடக்கியதாக இருந்தது. இன்று வேறு கண்டங்களுடன் ஒட்டியுள்ள பல பகுதிகள் அப்பெருங்கண்டத்திலிருந்து பிரிந்தவையே! மத்திய ஐய்ரோப்பா இத்தாலி பால்கன் தீபகற்பம் துருக்கி மத்திய கிழக்கு ஈரான் ஆகிய அனைத்தும் கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் பகுதிகளாக இருந்தன. ஆக இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய கோண்டுவானா உடைந்து சிதறி இன்று ஏற்பட்டுள்ள பூமியின் கண்டங்கள் மட்டுமே நம் வரலாற்றை சொல்லிடாது! சிந்து வெளி அதழ்வாய்வை எத்தனைக் காலத்துக்குப் பேசிக் கொண்டிருப்போம்! சுதந்திர இந்தியாவில் நாம் என்ன கண்டுபிடித்தோம்? மேனாட்டார் தான் இன்னமும் நமக்கு ஆய்வு செய்யக் கற்றுத் தர வேண்டுமா?

2009ல் நாம் இருக்கிறோம்! அமெரிக்காவில் 1909 லேயே கடலடி அகழ்வாய்வு நடந்துவிட்டது. 1909 ஏப்ரல் 5 அரிசோனா மாகாண அரசிதழின் பதிப்பில் (அரிசோன கெசட்)  கட்டுரை வெளியாயிற்று. அரிசோனா மாகாணத்தை ஒட்டி கடலடியில் பெரும் பள்ளத்தாக்கு உள்ளது. இது 8799 அடி ஆழமுடையது.

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்று சொல்லி வந்தார்கள். ஆனால் புதிதாக வேறோர் பள்ளத்தாக்கு திபெத்தில் இதற்கு போட்டியாக வந்தது. அமெரிக்காவின் ஜியாகிரபி கமிட்டியும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும் கூட்டாக 1994 ல் சீன வசமுள்ள திபேத்தில் உற்பத்தியாகும் யார்லங் திசாங்போ நதியில் உள்ள பள்ளத்தாக்கு 17657 அடி ஆழமுள்ளதால் அதுவே உலகின் மிகப் பெரிய பள்ளத்தாக்கு என்று கூறிவிட்டார். இப்படி உலக அதிசயங்களுள் ஒன்று என்று இன்று தகுதி இழந்து விட்டது. அரிசோனா கடலடியில் உள்ள பள்ளத்தாக்கு! அனால் இதே பள்ளத்தாக்கில் 1909 ல் கல்லில் மனிதனால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் எகிப்திய கடவுட் பதுமைகளின் சிலைகள்ää பதப்படுத்தப்பட்ட “மம்மிக்கள்” கண்டெடுக்கப்பட்டன. நூறு ஆண்டு முன் அமெரிக்காவில் நடந்தது 100 ஆண்டு கடந்தும் இந்தியாவில் நடக்கவில்லை.

பூம்புகார் தொடர்பாக மிகச் சில நாட்களே நடந்த ஆய்வையே இன்னமும் நான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நம் வங்காள விரிகுடாக்கடல் 2ää172ää000 கி.மீட்டர் பரப்புடைய கடலாகும். கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின்படி இந்தியாவையும் ஆசுதிரேலியாவையும் உள்ளடக்கிய பெருந்தட்டு வங்காள விரிகுடாக் கடல் தரைக்கு கீழே உள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டு இந்தியத் தட்டு வடக்கு நோக்கி மௌ;ள நகர்கிறது. சுந்தா பள்ளம் என்று சொல்லப்படும் கடற்பள்ளம் உள்ள இடத்தில் இந்தியத்தட்டும் மயன்மார் அமர்ந்துள்ள தட்டும் சந்திக்கின்றன. ஒரே தட்டு மீது உட்கார்ந்திருந்த இந்தியாவும் ஆசுதிரேலியாவும் - கன்னியாகுமரிக்கு தெற்கே 960 கி.மீட்டர் தூரத்தில் தட்டு உடைந்து ஆசுதிரேலியா கழன்று செல்கின்றது. இந்தியா வடக்கு நோக்கி நகர்கிறது. அந்தப்பிளவில் ஒரு காலத்தில் மூழ்கிய தமிழ்நாட்டின் ஒரு பகுதி மீண்டும் மேலெழுப்பலாம்!

இந்தியா- மயன்மார் பிளவு பெரிய பிளவின் பக்க விளைவு. அந்தமான் நிகோபார் அருகில் உள்ள சுந்தா பள்ளம் அருகே இந்தியத் தட்டும் மயன்மார் தட்டும் மோதிக் கொள்கின்றன. அப்போது இந்தியத் தட்டு தாழ்ந்து அதன்மேல் மயன்மார் தட்டு ஏறி அமர்ந்து கொள்கிறது. மயன்மார் தட்டு மேலே ஏறி உட்கார்வதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்தியத் தட்டு கீழே போகிறது. இந்த உரசல்களால் சுநாமி உருவாகி வருகிறது. கடற்பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாகின்றன. இந்தியத் தட்டு வடக்கு நோக்கி நகர்வதால் கடற்கரை மாறுகிறது. கடலரிப்பு நேருகிறது. கடலில் கண்முன்னே பல பகுதிகள் மறைந்து விடுகின்றன. காலங்காலமாக நம் ஆறுகள் கொண்டு வந்து கொட்டும் வண்டல் மண் நம் பழம் நகரங்களையம் நாகரிகத்தையும் மூடுகின்றன.

மூடிய இடங்களில் புதையுண்ட வரலாற்றை சென்னையில் உள்ள கடற்சார் பல்கலைக்கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும் கூட்டாக இணைந்து தேடிக் கண்டெடுத்து செம்மொழி மாநாட்டுக்கு முன் சில புதிய செய்திகளையாவது வெளிக் கொணர வேண்டும்.

வங்கக்கடலில் உள்ள கடற் பள்ளத்தாக்குகளில் வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பற்றி இந்திய அறிவியல் கழகம் 2008 ல் வெளியிட்ட நூலில் வீ. சுப்பிரமணியன்ää கே.எஸ்.கிரு~;ணாää எம்.வி.ரமணாää கே.எஸ்.ஆர்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக எழுதிய கட்டுரையில் “வடக்கு வங்கக்கடலில் வடகிழக்கு – தெற்கு தென்கிழக்கு திசையில் 300 மீட்டர் ஆழமும் 18 கிலோ மீட்டர் விரிவும் கொண்டு படிப்படியாக சரிவுகளுடன் பள்ளத்தாக்கு உள்ளதைச் சொல்கின்றனர். கடல் தரையின் ஆழம் சில இடங்களில் 900 மீட்டரில் இருந்து 1459 மீட்டர்களாக உள்ளது. கடற் பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 – 150 மீட்டர் கனமுள்ள இயற்கைக் கழிவுகளும் தாதுக்களும் மூடியுள்ளன. 10 முதல் 20 மீட்டர் வரை கொப்புளம் போல கடலின் தரை மேலெழும்புவதால் இவ்வாறு பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை எதுவோ மூடியுள்ளது!! ஆக அறிஞர்கள் வங்கக்கடலில் பள்ளத்தாக்குகள் பற்றி சொல்லி விட்டார்கள். அதற்குள் நம் வரலாற்றை நாம் தேடியாக வேண்டும். நம் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கடலின் நிறம் நீலமாக தெரிந்து பிறகு கருமேகம் சு10ழ்ந்தது போல காட்டப்படுவது கடற்பள்ளத்தாக்கு ஆகும். புதுச்சேரி கடற்கரையில் இருந்து 40 கி.மீ தூரத்தில் கடலடியில் எரிமலை வெடித்து 1857 ல் பள்ளத்தாக்கு உருவாகிவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி அகழ்வாய்வு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்! அடுத்தடுத்த சான்றுகளை அகழ்வாய்ந்து தர இன்றுள்ள இந்திய நிலப்பரப்பில் தேடிக் களைத்து விட்டோம்! கடலில் அல்லவா ஒளிந்து கொண்டுள்ளது நம் வரலாற்றுப் புதையல்! கடலடியில் தேட வேண்டிய கடமை நமக்கல்லவா உள்ளது. பூம்புகார் படத்தில் அனல்கக்கும் வசனங்கள் எழுதிய தமிழக முதல்வர் கடல் அடியில் மூழ்கிய பூம்புகாரை நினைவூட்டி சில சின்னங்களை எழுப்பினார். ஆனால் அறிவுலகம் ஏற்கும் சான்றுகள் இன்றும் ஆழத்தில் இன்னமும் தொலைவில் அகப்படும் என்று முதல் அடி எடுத்து வைத்த கிரகாம் ஹான்காக்கை  செம்மொழி மாநாட்டுக்கு வரவழைத்து சிறப்பிப்போம்! அவர் துணையோடோ நாமோ அவர் தொட்ட பணியை தொடருவோம்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது குமரிக்கண்டம் பற்றிய குறும்படம் தயாரானது. அது இருக்குமிடம் தெரியவில்லை. மீண்டும் படமல்ல தேவை! வரலாற்று புதையலை தோண்டி உண்மைகளை முத்தாரம் போலத் தொகுத்து உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல ஆவணப்படம் எடுக்க வேண்டும்.

பேசியது போதும்! செயலில் காட்டுவோம் செந்தமிழ் நாகரிகத்தின் சிறப்பை! செம்மொழி தமிழன் 10000 ஆண்டு வரலாற்றை!

மொரீசியஸ் தீவும் புதுச்சேரி அடிமைகளும்

நந்திவர்மன்…

நீக்ரோக்களுக்கு அடிமைத் தளையில் இருந்து விடுதலை கிடைத்தது. அதுவரை அவர்கள் செய்த வேலைகளைச் செய்ய இந்தியாவில் இருந்தே அடிமைகள் கொண்டு செல்லப்பட்டனர்.

கல்கத்தா துறைமுகம் 1838 பிப்ரவரியில் ஒரு கப்பல் புறப்பட்டது. சோட்டா நாக்பூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 420 மலைவாழ் பழங்குடிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பல் 5 மே 1838 ல் கயானாவை அடைந்தது. இதில் 50 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவர். 5 வருட ஒப்பந்தக் கூலிகளாக இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பயணத்தின் போதே நோய் வாய்ப்பட்டு பலர் இறந்தார்கள். வேலைப்பளு அவர்களை நசுக்கிச் சாகடிக்கும் என உணராமல் வெளிநாட்டில் வேலை! நல்ல காலம் பொறக்குது என நம்பிச் சென்றார்கள். உடல் நலமில்லாமல் ஏழு நாட்களுக்கு அவர்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றால் 24 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த 24 டாலர்கள் அவர்கள் 6 மாதம் பெற வேண்டிய கூலிக்கு ஈடாகும். இப்படிப் போனவர்கள் மதுவுக்கு அடிமையானார்கள். பெண்கள் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் பல ஆண்களுக்கு ஒருத்தி மனைவியாகும் நிர்பந்தம் நேரிட்டது. இப்படி 172 ஆண்டுகளுக்கு முன்னால் சென்ற இந்தியக் கூலிகளின் அவல நிலையை படம் பிடிக்கும் குறும்படம் “ஜகாஜி பாய்”. உருது மொழித் தலைப்புக்கு கப்பல் சகோதரர்கள் என்று பொருள்படும. சுரேஷ்குமார் பிள்ளை இயக்கித் தயாரித்த இந்தப்படம் 2003 ல் இந்தியாவிலும் கரீபியன் கடல் நாடுகளிலும் திரையிடப்பட்டது. 103 வயது முதியவர் இந்தியாவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்டதை படத்தில் விவரிக்கிறார். “கயானா உறுமுகிறது” இயக்கத்தின் தலைவர் ரவி தேவ் பேட்டியும் படத்தில் நம் கூலித்தொழிலாளர் பட்ட துன்பங்களை பதிவு செய்கிறது.

பிரெஞ்சு இந்தியா

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து அடிமைகளை கொண்டு வருவதை மனச்சாட்சியுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கவே அது நின்றது. பிரெஞ்சிந்தியா வசமிருந்த புதுச்சேரிää காரைக்கால்ää மாகே. சந்திரநாகூரில் இருந்து 1854 க்கும் 1920க்கு மிடையே 50000 இந்தியர்கள் கூலிகளாக கெடிலோப்புக்கும் மர்த்தினிக் தீவுகளுக்கும் இட்டுச் செல்லப்பட்டனர். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கொண்டு செல்லப்பட்ட இவர்கள் பட்ட வேதனைகளை சொல்லும் குறும்படம் சாங்ஸ் ஆப் மலபாரிஸ் ஆகும். நெதர்லாந்து நாட்டின் ஓஎச்எம் மீடியா நெட்ஒர்க் தயாரித்து நெதர்லாந்து தேசிய தொலைக்காட்சியில் சு10ன் 2004 ல் இப்படம் ஒளிபரப்பானது. இதனை இயக்கியவரும் சுரேஷ்குமார் பிள்ளை ஆவார்.

பிரிட்டிஷ் சாம்ராஜியமெங்கும் 1807 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் இந்தியாவிலிருந்து மில்லியனுக்கும் மேற்பட்ட கூலிகளை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வந்த கொடுமைகளை பிபிசி தொலைக்காட்சியே கூட படம் பிடித்துக் காட்டியது. 2005 ல் இது வெளியாயிற்று.

ஆனால் எந்தத் தகவல் தொடர்பு வசதிகளோ இன்றுள்ளது போல் இல்லாத அந்தக் காலத்திலேயே உலகப் பார்வை கொண்ட மகாகவி பாரதியார் ஒருவரே கரும்புத்தோட்டத்திலே இந்திய அடிமைகள் பட்ட கொடுமைகளை பதிவு செய்தவராவர்.

புதுச்சேரியில் பிறந்து பிரான்சில் ஸ்டாரஸ்பர்க் நகரில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா 2007 ல் வெளியிட்ட நீலக்கடல் நாவலில் வரலாற்றுச் செய்திகள் தேதிக் குறிப்புகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து மொரீஷியஸ் தீவுகளுக்கு அடிமைகள் கடத்தப்பட்டதைக் கூறும் இந்நாவல் 2007ல் புலம்பெயர் தமிழிலக்கியப் படைப்புகளில் சிறந்த படைப்புக்கான தமிழக அரசின் விருதை பெற்ற நாவலாகும்.

மொரீஷியஸ் தீவுக்கு பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே தமிழர்கள் வந்து போன அடையாளங்கள் அகழ்வாராய்ச்சியில் அகப்படுகின்றன. இதை மொரீஷியஸ் தமிழர்கள் என்ற பிரெஞ்சு நூலில் ராமு சு10னியமூர்த்தி பதிவு செய்துள்ளார். பதினேழாம் நூற்றாண்டில் புதுச்சேரித் தமிழர்கள் எப்போது சென்றனர்? 1686 ல் அங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அங்கிருந்த 269 நபர்களில் இந்தியரும் இருந்துள்ளனர். பிரெஞ்சுத் தீவு என்று அப்போது அழைக்கப்பட்ட மொரீஷியஸ் தீவின் கவர்னராக 1727 ல் இருந்த துய்மா 1728 ல் புதுச்சேரி சென்றார். அங்கிருந்து 95 கொத்தனார்களையும் நூற்றுக்கணக்கில் சிறுவர் சிறுமியரையும் பிடித்துக்கொண்டு வந்தார் என்பதை பிரெஞ்சிந்தியர்கள் என்ற தலைப்பில் மொரீஷியஸ் தலைநகரான போர்ட் லூயியில் 1965 ல் வெளிவந்த நூல் பதிந்துள்ளது. 1735 ல் பெட்ராண் பிரான்சுவா மாகே தெ லபோர்தொன்னே கவர்னரானபோது துறைமுகம் விரிவாக்கம் செய்யவும் பிரெஞ்சிந்திய கம்பெனிக்கு தானியசேமிப்புக்கிடங்கு கட்டவும் கப்பல் கட்டும் தொழிலாளர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் கொத்தனார்களையும் புதுச்சேரியில் இருந்து அழைத்து வந்தார். ஒப்பந்தத் தொழிலாளர்களாக குறைந்த கூலிகளுக்காக இவர்கள் சென்றனர். இதனால் ஏற்கனவே அங்கிருந்த பூர்வீகக்குடிகளான மல்காஷ்ää கனாரிகள்ää கிறேயோல் மக்களின் வாழ்வு பின்னடைந்தது. இவர்களை அவர்கள் எதிரிகளாகப் பார்க்கலாயினர். அப்படியென்ன சொகுசு வாழ்வு புதுச்சேரித் தமிழர்களுக்கு கிடைத்தது? மக்காட்ச்சோளமும் மரவள்ளிக்கிழங்குமே உணவு. ஏஜமானர்களின் பிரம்படிக்கு இவர்கள் ஆட்படவேண்டும்.

ஒழுங்கற்ற சாலைகளில் இந்தியத் தமிழர்களுக்கென உருவாக்கப்பட்ட “கபான்” கள் என்ற குடியிருப்புகள். மரப்பலகையால் உருவான அக்குடியிருப்புகளுக்கு கூரைகள் இல்லை. இலை தழை போட்டு மூடப்பட்ட வீடுகள் நமது ஊர் குடிசைகளை விட மோசமானவை. பண்ணையில் அடிமை வேலை தாக்குபிடிக்க முடியாமல் தப்பிக்க முயற்சிப்பவர்களுக்கு கறுப்பர் சட்டத்தின் கீழ் கடும் தண்டனைகள் காத்திருந்தன. முதல் முறையாக தப்பி ஓடினால் இரண்டு காதுகள் மட்டும் அறுத்து எறியப்படும். இரண்டாவது முறை தப்பினால் மரணதண்டனைதான்!

அடிமைகள்-விடுவிக்கப்பட்டவர்கள்-ஒப்பந்ததொழிலாளர்கள் மொரிசியஷில் அனுபவித்த வேதனைகளை ரிச்சர்டு பி. ஆலன் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி தமிழர்களை அடிமைகளாக்கிய பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரம் எப்படி நடந்தது? இனி தெரிந்து கொள்வோம்! “லே பொந்திச்சேரி” என்ற வர்த்தக கப்பல். 40 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் நிறைய பாய் மரங்களும் கொண்ட 1200 டன் பொருட்கள் ஏற்றக்கூடிய பிரெஞ்ச்;கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான கப்பல். இந்தக் கப்பல் மொரிசியஸ்; துறைமுகமான போர்ட் லூயியில் இருந்து புறப்பட்டது. அதில் இந்திய வியாபாரிகளுக்கென சுத்தமான தங்கமும் வெள்ளியும் போக புதுச்சேரி கவர்னருக்கும் அவரை சார்ந்தவர்கள் மற்றும் கம்பெனி ஊழியர்களுக்காக இரண்டாயிரம் பாட்டில் பொர்த்தோ சிகப்பு ஒயின்ää சாராயம்ää கோதுமை மாவுää பதப்படுத்தப்பட்ட பால்கட்டிää பன்றி – மாடு இறைச்சிää இரும்புத்தகடுகள்ää துப்பாக்கிகள் அவைகளுக்கான ரவைகள் கொண்டு வரப்பட்டன.

பிரான்சின் சேன் மாலோ பகுதியை சார்ந்த தரகர்கள் ஸ்பெயினின் காலனி நாடுகளில் பெறப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்கம்ää வெள்ளி இவற்றை இந்தியாவில் இறக்கி விட்டுவிட்டு பதிலாக இந்தியாவில் இருந்து பட்டு தணிகளையும் வாசைன திரவியங்களையும் கொள்ளை இலாபத்திற்கு கொண்டு செல்வார்கள்.

பிரான்சின் ஓரியண்ட் துறைமுகம் கடும் குளிரில் கப்பல் புறப்பட்டு அட்லாண்டிக் கடலில் பாய் விரித்து கஸ்கோஜன் வளைகுடாவில் மெல்ல ஊர்ந்து ஆப்ரிக்காவின் கொரே துறைமுகத்துக்கு வருவர். இங்கு சில நாட்கள் ஓய்வு. பிறகு போதிய காற்று இல்லாமையால் ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையை கடக்க நான்கு மாதமாகும். நான்கு மாதம் கடலில் இருந்து விட்டு தரை இறங்குபவர்களுக்கு மொரிஷியஸ் ஒரு சொர்க்கம் போல தோன்றியது.

இப்படி இந்தியா வர நடுவில் தங்கி இளைப்பாறும் தீவை ஆண்ட பிரெஞ்சு கவர்னர் லபூர் தொனே சம்பாதித்ததை பார்ப்போம். “கணக்கெழுதும் உதவியாளரை வரவழைத்து சொந்த வியாபாரத்தின் வரவு செலவுகளை எழுதி வைத்திருந்த பேரேடுகளை கொண்டு வர சொன்னார். மூன்று இலட்சம் பவுனில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகள் பதினோரு இலட்சத்தை தொட்டுள்ளது. பாரிஸை சார்ந்த ழான் கொத்தான் என்ற வங்கி அதிகாரி மூலம் வடக்கு ஐரோப்பிய வணிகத்தில் செய்திருந்த முதலீடு மட்டும் இந்த வருடத்தில் 46000 பவுன் சேர்ந்துள்ளது.” என்று படித்தவர் மகிழ்ந்ததாக ஒரு நூலில் பதிவுள்ளது.

இப்படி இவர்கள் சம்பாதிக்க அடிமை வியாபாரமும் புதுச்சேரியில் நடந்தது. ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின்படி “ கடந்த சில வருடங்களாகவே ஆடுää கோழி களவு போவதை போலவே மனிதர்களும் களவு போனார்கள். தங்கள் சொந்த பந்தங்களை தொலைத்துவிட்டு கஷ்ட ஜீவனம் செய்யும் மக்கள் பொழுது சாய்ந்தால் அழுவதும் விடிந்தால் விதியை நொந்துகொண்டு வயிற்று பாட்டுக்கு அலைவதுமாய் இருந்தவர்கள் வயிற்றில் பால் வார்த்தது போல அந்த செய்தி வந்தது. வெகு நாட்களாக ஆட்களை கடத்தும் கூட்டத்தை நேற்று கம்பெனி கூண்டோடு பிடித்துப் போட்டது. சு10தே என்ற பரங்கியன் புதுச்சேரி தெருக்களில் சுற்றி வர ஆட்களை அமர்த்தி சிலரை விலைக்கு வாங்கியும்ää சுண்ணாம்பிலே மருந்து கொடுத்து சிலருக்கு மை சிமிழ் வைத்து கூட்டிப் போவார்கள். பிறகு இரவு வேளையில் ஆற்றின் வழியாக அரியாங்குப்பத்தில் இருக்கும் வளைவு ஒன்றில் இறக்கி விடப்படுவார்கள். அங்கு மொட்டை அடித்து கறுப்பு உடைகளை கொடுத்து ஒரு காலிலே விலங்கு வளையம் போட்டு சு10தன் வீட்டில் அடைத்து வைப்பார்கள் கப்பல் போரச்சே ஏற்றி அனுப்புகிறார்கள் என்கிறார் ஆனந்தரங்கப்பிள்ளை.

1735 ல் மொரியஷில் இருந்த 835 குடியிருப்புகளில் 648 அடிமைகள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் 2981 குடியிருப்புகளில் 2612 அடிமைகள் இருந்தனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு கம்பெனி அடிமைகள். மற்றவர்கள் அங்கிருந்த பண்ணை முதலாளிகளுக்கு விற்கப்பட்ட அடிமைகள். இந்த வியாபரிகள் எப்படி வியாபாரம் நடத்தினார்கள் என்பதை நீலக்கடல் நாவல் விவரிக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே துய்ப்ளேää கம்பெனியின் ஆலோசகராக நியமிக்கப்ட்டு முதன் முறையாகப் புதுச்சேரிக்கு வந்திருந்த நேரம். ஒரு முறை பூர்போன் தீவு வரைப் போகவேண்டியிருந்தது. அங்கே பழைய கவர்னரான துலிவியேவைச் சந்தித்திருக்கிறார். இளைஞன் துய்ப்பேளிக்ஸின் புத்திசாலித்தனத்தால் கவரப்பட்டு அவர் 400 வராகன்கள் கொடுத்திருக்கிறார். புதுச்சேரி திரும்பிவந்த துய்ப்பேளிக்ஸ் அவரை விட வயது மூத்த ழாக் வேன்சான் என்பவரின் நண்பரானார். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்ய முடிவெடுத்தார்கள். துலிவியே கொடுத்த பணத்தில் துய்ப்பேளிக்ஸ் 300 வராகன்கள் அவரது பங்காக முதலீடு செய்தார். வங்காளத்தில் இருந்து பட்டும் பிரெஞ்சு தீவிலும் பூர்போன் தீவிலும் நிலபுலங்களும் வாங்குவது என இருவரும் தீர்மானித்தார்கள்.

இந்த வியாபாரத்தில் இருந்து ழாக் வேன்சான் விலகிக்கொள்ள அவரது இடத்தில் அவரின் இளம் மனைவி சேர்ந்து கொள்கிறார். அந்தக் கூட்டணியில் அந்த சமயம் லெ பொந்திஷெரி கேப்டனாக இருந்த லாபூர்தொனே சேர்ந்துகொள்ள பணத்திலும் பதவியிலும் மோகம் கொண்டிருந்த இந்த மூவர் கூட்டணி எல்லா தில்லுமுல்லுகளும் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். துய்ப்ளே மீது பிரான்ஸ் கம்பெனி தலைமையகத்துக்கு புகார் போனது. புகாரை நிராகரித்த மேலிடம் அவரை சந்திரநாகூர் கவர்னராக 1731 ல் நியமனம் செய்தது. இதனால் 2 ஆண்டுகள் இந்த வியாபார கூட்டணி பிரிந்திருந்தது. ஒரு நாள் அந்த பெண்மணி வயதான தன் கணவனை அழைத்துக்கொண்டு சந்திரநாகூர் போய் சேர்ந்தார். என்ன நடந்ததோ ஒரு நாள் அந்த பெண்மணியின் கணவர் இறந்து போனார் அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பெண்மணியும் துய்ப்ளேவும் திருமணம் செய்து கொள்கிறார்கள. பின்னர் புதுச்சேரி நிர்வாக சபை அதிபதியாகவும் கம்பெனியின் பிரதான தளபதியாகவும் நியமிக்கப்பட்டு துய்ப்ளேக்ஸ் ஏற்கனவே 11 பிள்ளைகள் பெற்றவளின் கணவனாக புதுச்சேரி வந்து இறங்கினார். இது அவர்கள் வாழ்க்கைப்பதிவு.

மோரிசியஷில் தமிழ் அடிமைப்பெண்கள்

இந்த வெள்ளையர்கள் தமிழ் பெண்களை மொரிஷியஸில் எப்படி நடத்தினார்கள் என்பதை ஒரு கற்பனை பாத்திரம் மூலம் நீலக்கடல் நாவலாசிரியர் விவரிக்கிறார். “அடிமைப்பெண்கள்ää மெழுகு திரியின் வெளிச்சத்தில்ää கருங்கற்சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். அழைத்து வந்த அடிமையை அவ்விடம் விட்டு நீங்குமாறு சைகை செய்கிறார்ää பணிவாய்க் குனிந்து வெளியேறுகிறான்.”

“ துரையைப் பார்த்தமாத்திரத்தில்ää பகல் முழுக்க உழைத்திருந்த களைப்பில் சோர்ந்திருந்த பெண்களிருவரும்ää அனிச்சையாய்த் தங்கள் ஆடைகளைக் களைந்துää நிர்வாணமாக நின்றார்கள். அப்பெண்களிடம் இவர் எதிர்பார்க்கின்ற கிளர்ச்சியூட்டும் வாடை. அவ் வாடை தந்த மயக்கத்தில்ää அருகிலிருந்த பெண்ணை நெருங்கினார். சு10ளையில் சுட்டெடுத்த கரும்பானையை ஒத்துää மின்னிய கன்னங்களும் புடைத்திருந்த முலைகளும் இவரது உடலைச் சங்கடப்படுத்தின. கறுப்பு வண்ணத்தின் மீதான கசப்பு ஒளிந்து கொண்டது. அவளை இழுத்து அணைத்துக்கொண்டார். அப்பெண்ணிடமிருந்துää ஆழமாக வெளிப்பட்ட பெருமூச்சு இவர் மார்பில் அனலாகப் பரவியது. அம்மூச்சிலிருந்த தாகத்தை உணர்ந்தவராய்ää அவளது தடித்த உதடுகளில்ää சாராய மூச்சுடனான தனது பற்களைப் பதித்தார். வலி பொறுக்கமாட்டாமல் விலகிக்கொண்டாள். இமைகளை மூடியிருந்தாள்ää மென்மையாக முனகல்களை வெளிப்படுத்தினாள். இப்பணிக்கு கிடைக்கவுள்ள கூடுதல் மரவள்ளி கிழங்குää தன் பிள்ளைகளும்ää புருஷனும் வயிறாற ஓரிரு தினங்கள் உண்ண உதவும் என்று நினைத்து துரைக்கு ஒத்தாசை செய்தாள். இவர் நீட்டும் சுட்டுவிரல் அசைவைப் புரிந்தவளாய்ää இன்னொருத்தி தற்காலிகமாகக் கிடைத்த தகுதியை நழுவவிடாமல் அவசரமாய்க் கட்டிலில் ஏறி கால்களைப் பரப்பி தன் முறைக்காக காத்திருக்கிறாள்.” இந்தவொரு காட்சியே நம் பெண்கள் அங்கு பட்ட அடிமை வாழ்வை சுட்டிக்காட்டும்.

டச்சு காலனியான சு10ரியநாமுக்கும் இந்திய கூலிகள் கொண்டு செல்லப்பட்டனர். பிரிட்டிஷ் காலனியான டிரினிடாட்டுக்கும் கயானாவுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு ஓரளவுக்கு மத மொழி வழிபாடு மற்றும் பண்பாட்டு சுதந்திரம் இருந்தது. பிரென்ஞ்சு காலனிகளில் அது இல்லை. இன்று பார்ப்பதற்கு அவர்கள் தமிழர்கள் போல் இருந்தாலும் சிவனை கும்பிட்டாலும் பிள்ளையாரை வழிபட்டாலும் தமிழ் பேச தெரியாது. கிரெயோல் மொழி பேசுபவர்களாக தமிழை தொலைத்து விட்டவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களை பற்றி இந்த நாவலை ஏன் எழுதினேன் என்பதை முன்னுரையில் நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா பதிவு செய்கிறார். “ உலக வரலாறு கடல் சார்ந்தது. கடல் சரித்திரங்களை மாற்றி எழுதியுள்ளது. ஐரோப்பாவின் துண்டு நிலங்களில் கிடந்த ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகின் கலாச்சாரத்தை தனதாக்கிக் கொள்வதற்கு மூலம் வேறென்ன? சோழர்கள்ää பாண்டியர்களுக்கு கூட கடல் உதவத்தான் செய்தது. தங்கள் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து அக்கறை காட்டியிருக்கலாம்…. இருக்கலாம்….. வேறென்ன சொல்ல முடியும். இங்கே நடந்தது எல்லாம் குழாயடி சண்டைகள். வேலிகளுக்குள் சண்டை என்பதால் காத்திருந்தவர்கள் சுலபமாக மேய முடிந்தது. மேய்ந்தார்கள். வரலாறு மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அவர்கள் ஆண்டார்கள். நாம் அடிமையானோம்.

அண்ணா நினைவேந்தல் பொழிவு

நா. நந்திவர்மன், பொதுச்செயலாளர் திராவிடப் பேரவை

புதுச்சேரிப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கிய உயராய்வு நிறுவனம் 5.10.2000 த்தில் நடத்திய தமிழக அரசு அமைத்துள்ள அறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சொற்பொழிவில் தலைமையுரை

அறிஞர் அண்ணா வாழும் காலத்தில் மட்டும் அல்ல. மறைந்த பின்னரும் சாதனைகளைச் செய்து காட்டியவர். சாகாப் புகழையீட்டியவர் அவர் மறைவுக்கு:

எண்ணா யிரங்கோடி உள்ளமும் ஆவியும் ஏக்கமுற்றும்

பண்ணா யிரங்கோடி பாடி வருந்திப் பரிதவித்தே

உண்ணா துறங்கா துழன்றதும் மாண்டதும் உண்மையென்றால்

அண்ணா துரையாம் அறிஞர் புகழ்க்கோர்அளவுமுண்டோ?

என்று பைந்தமிழ் வாழுலகின் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடினார்! அண்ணா மறைவுக்கு வாடினார்.

அறிஞர் அண்ணாவின் மறைவு உலகிலேயே பேரளவில் 15 மில்லியன் மக்கள் பங்கேற்றமைக்காக Guinness Book of World Records களில் இடம் பிடித்தது. அவர் மறைவன்று நானெழுதிய கவிதை பல்லாண்டுகள் கழித்து 1976 பிப்பவரி 3 அன்று முரசொலியில் நெருக்கடி நிலையில் வெளியாயிற்று.

"விழிநீராலே நோயினையே விரட்டுதல் முடியுமென்றால்

வேண்டுமட்டும் சொரிந்திருப்பேன், வியன்தமிழில்

கவிதைகளைப் பொழிவதனால் பிணிக்கொடுமை போமென்றால்

கோடிகோடிப் பாடல்களைக் குவித்திருப்பேன், பாசமிக்க அண்ணனையே

அழிவினின்று காத்திடவே அளித்திடுக உயிரென்றால்

அகமகிழ்ந்து அளிதிருப்பேன் அவன்நோயை எனக்களிக்கும்

வழியிருந்தால் பெற்றவனை வாழ்ந்திருக்கச் செய்திருப்பேன்.

வழியில்லை அழிந்துவிட்டான், வார்த்தையின்றி தவிக்கின்றேன்."

என்று அவர் மறைவுக்கு மொழியிழந்து விழித்தேன். விழிநீரை வடித்தேன். நாடெங்கும் அவர் சிலைகள், நாள்தோறும் அவர் பெயரில் புதிய புதிய கட்சிகள், வங்கக் கடலோரமென வருணிக்கப்படும் தங்கத்தமிழர் கடலருகில் அவர் கல்லறை! அதை கோயிலாக்கிச் சூடம் ஏற்றும் சுயமரியாதைச் சுடர்கள்.

எண்ணாயிரம் கோடித் தமிழ் உள்ளங்களில் அன்றிருந்த என் தலைவன் கொடிகளிலே படமாக அசைந்தாடுகின்றான். முச்சந்திகளிலே காக்கைகளின் எச்சில் மழையில் நனைந்து கதிரவனின் வெப்பத்தால் கருகி மெருகிழந்து நிற்கின்றான்.

ஆனால் இந்த கணினி யுகத்தில் உலகளாவிய வலைத்தளங்களில் அண்ணாவைப் பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவுகளே உள்ளன. அந்த பதிவுகளை செய்த ஒரு சிலராவது அண்ணாவை மறவாதிருப்பது மனத்துயருக்கு மருந்தாகிறது. அவரின் கொள்கைகளை குப்பையிலே வீசிவிட்டு அவரின் கருத்துக்களை கண்டும் காணாமல் சீர்குலைந்து சிறுமைப் படுத்தி தங்களை முன் நிறுத்துவதில் சிலர் வெற்றி கண்டுள்ளனர்.

அண்ணா எண்ணிய தமிழின ஒருமைப்பாட்டுணர்வு முன்னிலைப்படுத்தப் படவில்லை. அவரின் பகுத்தறிவுப் பயணத்தை திசைமாற்றியவர்கள் பக்தர்களாக வேடம் கட்டுகிறார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் அறிஞர் அண்ணாவை எண்ணி வியக்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

அந்த தமிழர்களை தமிழ்த்தேசம் என்ற உலகளாவிய வலைப்பின்னல் தொகுப்பு நமக்கு அடையாளம் காட்டுகிறது.

அண்ணாவின் பரம்பரை என்பது ஆரியமாயைக்கு அடிமையானவர்கள் அல்ல. அண்ணாவின் வழியினர் என்பது கம்பரசம் பருகி போதையில் ஆழ்ந்து புத்தியை தொலைப்பவர்கள் அல்ல! மாஜி கடவுள்களை எழுத்தால் அடையாளம் காட்டிய அண்ணாவின் பிறங்கடைகள் மூகாம்பிகைகள் முன்பு மூங்கையினர் ஆயினர். பணத்தோட்டம் தீட்டி பொருளியல் சுரண்டலைச் சாடி அண்ணா பெயரால் ஆட்சிகளில் அமர்ந்தவர்கள் பன்நநட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கினார்கள். தீ பரவட்டும் என மடமை இருளைச் சுட்டெரித்த மாமேதை பெயரால் அரசியலில் அங்காடிகள் திறந்தவர்கள் மூடப்பெருநெருப்பில் குளிர் காய்ந்து மஞ்சள் வண்ணங்களில் மங்கலம் தேடினார்கள். கறுப்பை சிகப்பை, கழகங்களின் உயிர்த்துடிப்பை, நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவரெனப் பெரியாரைப் போற்றிய பேரறிஞரின் கொள்கைப் பிடிப்பை குலைத்தார்கள். ஆனால் சப்பான் நாட்டில் வாழும் Sacho Sri Kantha தனது Anna’s Legacy மூலம் யார் அண்ணனுக்கு ஏற்ற தம்பியர் என அனைத்துலகுக்கும் அடையாளம் காட்டுகிறார். அண்ணாவின் கொள்கைகளை தமிழ்நாட்டுத் தம்பியர் மறந்தாலும் இருக்கிறார் ஈழநாட்டுப் தம்பியர் இனமானங்காக்கவென்று நம்பிக்கை ஒளியை நம்நெஞ்சில் பாய்ச்சுகிறார்.

"If Anna’s Dravidian Nationalism has to be counted as a failure, then the Gandhian, Rooseveltian and Leninist - Stalinist ideals also have met the same fate in their places of origin. However, Gandhian ideals were picked up by Martin Luther King Junioor in America and these led to advancement of civil rights for Blacks in the 1960s. The liberal - democratice ideals of Roosevelt got rooted (however imperfectly) and supplanted the existing feudalistic social arrangement in Japan. Even the Leninist - Stalinist ideals found roots in Cuba under the leadership of Fidel Castro in 1959 and is still not supplanted, despite aggressive bullying by Yankee capitalism Similarly, though Anna’s ideology of a ‘Separate state for Tamil’s became a lost cause in India, it did become a rallying cry for the younger generation of Eelam Tamils in mid 1970s. Thus, Anna’s legacy lives in Eelam."

அண்ணாவின் திராவிடத் தேசியம் தோல்வியடைந்தது என்று கணக்கிடப்பட்டால், காந்திய, ரூசுவெல்டிய, இலெனின் , இசுடாலினிய கொள்கைகளும் தோன்றிய மண்ணில் தோல்வியையே தழுவியுள்ளன. ஆனால் காந்தியக் கொள்கைகள் மார்டின் லூதர் கிங்கால் அமெரிக்க நாட்டில் கைக்கொள்ளப்பெற்று 1960 களில் கறுப்பரின மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கப் பயன்பட்டன. ரூஸ்வெல்ட் அவர்களின் தாராள மக்களாட்சிக் கோட்பாடுகள், சப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவச் சமுதாய ஏற்பாட்டை பெயர்த்தெடுத்து அதற்குப் பதில் நிலை பெற்றன. இலெனினிய இசுடாலினிய கொள்கைகள் 1959 அளவில் பிடல் காசுடிரோ தலைமையில் கியூபாவில் வேரூன்றின. அமெரிக்க முதலாளியம் அதிதீவிர நெருக்குதல் தந்தும் இன்றளவும் அப்புறப்படுத்தப்படாமல் கியூபாவில் நிலைபெற்றுள்ளன. அதே போல் தமிழர்களுக்கென்று தனித்தாயகம் வேண்டும் என்ற அண்ணாவின் வேணவா இந்தியாவில் நிறைவேறாமல் போயிருப்பினும் 1970 களில் ஈ£த்தமிழரின் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைக்கும் மையமாக மலர்ந்தது! இவ்வாறே அண்ணாவின் பாரம்பரியம் ஈழத்தில் வாழ்கிறது." என்கிறார் அக்கட்டுரையாளர்! 20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழரை இனங்காட்ட உருவான வலைத்தொகுப்பின் உட்பிரிவு இக்கட்டுரையை தாங்கி வெளிவந்துள்ளது.

10.9.2000 அன்று கணினி வழியே கவின் தமிழை வளர்க்க ஆற்றத்தகு கடமைகள் பற்றிய கருத்தரங்கில் மூவாயிரம் பக்கங்களை கொண்ட தமிழ் வலைத்தொகுப்பில் அறிஞர் அண்ணாவிற்கு தனியாக வலைத்தளம் இல்லை என நான் வருந்தி இருந்தேன். இதனை தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பு tamilnation.org என்ற முகவரியில் Tamil and Digital Revolution உட்பிரிவில் முழுமையாக வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய வலைப்பக்கங்களில் அண்ணாவை எந்த ஒரு தேடுபொறி மூலம் தேடினாலும் தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையே கண்முன் தோன்றுகிறது. அதிலே சப்பான் நாட்டு தமிழ் அறிஞர் கட்டுரையை தவிர்த்து அறிஞர் அண்ணாவைப் பற்றி இன்னும் ஒரு கட்டுரை உள்ளது. அதை எழுதியவர் இன்று அண்ணா பெயரால் அரசியல் அங்காடிகளை வெற்றிகரமாக நடத்துவர் வரிசையில் இடம்பெற்றவர் அல்ல. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்கு திரு. ஏ.பி. சனார்த்தனம் எம்பி. 1981 இல் எழுதிய கட்டுரை அது.

அண்ணாவை இழந்து பெருஞ்சித்திரனார் பாடியவாறு எண்ணாயிரம் கோடி உள்ளம் அழுததே, அவர்களில் அண்ணாவின் புகழை வலைத்தளங்களில் நிலைநிறுத்த தொலைக்காட்சிகளில் அண்ணாவின் கொள்கைகளுக்கு குரல் கொடுக்க, ஆட்கள் அருகிவிட்டனர் என்பது வெள்ளிடமலை.

தொலைக் காட்சிகளை அறிவியல் தமிழ்க்குப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சமுதாயத்தை சினிமா நடத்தப்பெறுகிறது. அதில் சி.என். அண்ணாத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாறும் இலக்கிய படைப்புகளும் என்ற வலைப்பக்கங்களின் என்ன கூறப்பட்டுள்ளது?

வாழ்க்கை வரலாறு 1909 செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் திரு. நடராசன் பங்காரம்மாளுக்கு மகனாக ஒரு நடத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். "சென்னை கோவிந்தப்பன் பள்ளியில் இருந்த போதே அரசியல் ஈடுபாடு." ஈ.வே. இரா. (இராமசாமிப்பெரியார்) பற்றாளராகி நீதிக்கட்சியில் சேர்ந்தார். (இது 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது). குடியரசு ஏட்டியில் துணையாசிரியராக பணியாற்றினார். 1942 திராவிட நாடு தமிழ் வார ஏட்டை துவக்கினார். 1949 தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் 15 இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது. அண்ணா எதிர்கட்சி தலைவர் ஆனார். 1959 உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.கழகம் அதிக இடங்களை வென்றது. 1962 மாநில சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 138 இடங்களை வென்று மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்றது. அண்ணா முதலமைச்சர் ஆனார். 1968 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 3பிப்ரவரி 1969 புற்றுநோயால் இறந்தார்.

பெருவாழ்வு வாழ்ந்த அந்த பேரறிஞர் பற்றிய வாழ்க்கை பதிவு இவ்வளவுதான் அதற்காக வருத்தப்படுவதா? இல்லை அண்ணாபெயரை தினம் சொல்லும் ஆளும், எதிர்க்கட்சிகளும் செய்யாத ஒரு வரலாற்றுப் பதிவை இந்த மட்டுமாவது செய்தனரே என தமிழ் மின்னியல் நூலகத்தாரை பாராட்டுவது தெரியவில்லை. அடுத்தபடியாக சில வரிகளே சொல்லப்பட்டுள்ளன. அந்த வரிகளை மேற்கோள்காட்டக்கூட நம்மால் முடியாது. படிஉரிமைச் சட்டப்படி இன்தாம்காம் ஒப்புதல் பெறாமல் ஒரு வரிகூட நாம் எடுத்தாள முடியாது.

அண்ணாவை உரிய முறையில் பதிவு செய்ய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல நான் பொதுச் செயலாளர் ஆக உள்ள திராவிடப் பேரவையும் தவறிழைத்து தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டு இருக்கிறோம்.

வலைத்தளங்களில் அண்ணாவின் நூல்கள், பாராளுமன்ற சட்டமன்ற பேச்சுக்கள் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும். அண்ணாவைப்பற்றிய ஆய்வுகள் தொகுப்படவேண்டும். அரசே அண்ணாவின் முழுத்தொகுதிகளை வெளியிடவேண்டும் இல்லையேல் பல்கலைக்கழகங்களாவது இதை பதிப்பிக்க வேண்டும் வலைத்தளங்களில் ஏற்றவேண்டும். முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வோர் வலைதளங்களில் அண்ணா உள்ளிட்ட தமிழ் அறிஞர் மற்றும் தமிழ் இலக்கியப் பதிவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகங்களில் ஆற்றிய பேருரைகள் இன்றும் தமிழர் நினைவு கூறத்தக்கவை. நிலையும் நிணைப்பும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா அந்நாளில் பேசியதில் சில "தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்கள் தமிழர்களை பார்த்து என்ன எண்ணியிருப்பார்கள் பச்சைப் புற்றரைக்கும பஞ்சமான நாட்டில் இருந்து வந்தவர்களின் மனதிலே தமிழ் நாட்டிலே உள்ள மாந்தோப்புகளும். மண்டபங்களும், சாலைகளும், சோலைகளும், குன்றுகளும், கோபுரங்களும், வாவிகளும் வயல்களும், எத்தகைய எண்ணங்களை தந்திருக்கும்? நிச்சயம் தமிழர்களைப் பார்த்து கேட்டு இருப்பார்கள் மெல்லிய அடையணிந்து இருக்கிறீர்களே அது ஏது என்று? தமிழர்கள் அது எங்கள் கைத்திறமை இந்திரன் தந்த வரப்பிரசாதம் இல்லை என்ற கூறியிருப்பார்கள். இமையம் வரை சென்று உங்களது இலச்சினையை பொருத்திருக்கிறீர்களே அது எப்படி என்று கேட்டு இருப்பார்கள். அதற்கு தமிழர்கள்அது கருவாழ்வார் கபாட்சத்தால் அல்ல! எங்கள் தோள் வலிமையினால் என்று கூறியிருப்பார்கள். இன்றும் உங்களது இசையின்பமாக இருக்கிறதே அது எப்படி என்ற ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து கேட்டிருப்பார்கள். அதற்கு தமிழர்கள் நாரதர் மீட்டிடும் தேவகானம் அல்ல! நாங்கள் கண்டு பிடித்த யாழின் தன்மையது என்று கூறியிருப்பார்கள். மீண்டும் அந்த யாழ் ஏது? என்று கேட்டிருப்பார்கள். அது திருப்பாற்கடலில் கடைந்தெடுத்தது அல்ல என்று கூறியிருப்பார்கள். ஆரியர்கள் முத்தைப்பார்த்து அது என்ன என்று கேட்டிருப்பார்கள் அது தேவலோகச் சரக்கல்ல! எங்கள் தீரர்கள் கடலில் மூழ்கி கண்டெடுத்த முத்து என்று கூறி இருப்பார்கள். தமிழர்களின் அந்தக் காலநிலை அவர்களுக்கு அத்தகைய நினைப்பைத்தான் தரும் என்று பழங்காலத் தமிழகத்தை ஏக்கத்தோடு படம் பிடித்தார் அண்ணா.

இக்காலத் தமிழகத்தை அண்ணா படம் பிடிக்கிறார்.

"விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்று இருக்காது. நான் இதோ பேசுகிறேன், என் முன் ஒலிப்பெருக்கி இருக்கிறது. அது நான் பேசுவதை பெரிதாக்கி நாலா பக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும் படி செய்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்று கூறியிருப்பார்கள். மேட்டூர் அணையை எப்படி கட்டிருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். கப்பல் கனமாக இருந்தும் அது எப்படி கடலில் மிதக்கிறது என்று கூறிபாருங்கள். ஏரோப்பிளேன் எப்படி பறக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். அல்லது ஒரு விஞ்ஞான சாதனத்தைப் பற்றி கூறி பாருங்கள். ஆச்சரியமாக கேட்கமாட்டார்கள்! அவைகளில் அதிசயம் இருப்பதாக அவர்களுக்கு தோன்றாது! அப்படி கொஞ்ச நேரம் கேட்டாலும் மறுகணம் அதை மறந்து விடுவார்கள்!

அற்புத சக்தியிடம் உள்ள அபாரநம்பிக்கையும் மதிப்பும் அவைகளிடம் இருக்காது. விஞ்ஞானத்திடம் அவர்களுக்கு மதிப்பும் இருப்பதில்லை. காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டு கண்டு பிடிக்கவில்லை. பென்சிலினை கண்டுபிடித்தவர் எங்கள் தாத்தா, மின்சாரத்தை கண்டுபிடித்தவர் எங்கள் மூதாதையர் என்று இருந்தால் அதன் அருமை தெரியும். எவ்வளவு சிந்தனை, எத்தனை இரவுகள் விழித்து எதிர்ப்பை பார்க்காமல் கேலி கண்டனங்களை பொருட்படுத்தாமல், ஆபத்துக்கு அஞ்சாமல மூளை குழம்புமே, கண் குருடாகுமே, கால் முடமாகுமே என்று யோசிக்காமல் கஷ்டப்பட்டு விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் மேல் நாட்டார்கள். எனவேதான் அவர்கள் விஞ்ஞானத்தைப் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அதன் அருமை தெரிகிறது. அதனிடம் அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கவும் கஷ்டப்படவில்லை. கஷ்டப்பாடாமல் சுகம் எப்படித்தெரியும்? ஆதலால்தான் இவர்களுடைய நாக்கில் ஏரோபிளேன் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நர்த்தனமாடுவதில்லை. ரயில் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நெஞ்சில் நடமாடுவதில்லை. விஞ்ஞானம் இந்த நாட்டில் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிகட்டிபோல், குருடனிடம் காட்டிய முத்துமாலையைப் போல, செவிடன் கேட்ட சங்கீதம்போல விஞ்ஞானம் மதிப்பற்றிருக்கிறது.

மதிப்புற்றிருக்கவேண்டிய பொருள் மதிப்பற்றிருப்பது நல்லது அல்ல! விஞ்ஞானம் மதிப்புபெற மாணவர்கள் உழைக்க வேண்டும்! மாணவர்கள் மக்களிடத்தில் சென்று அவர்கள் மனதில் உள்ள மாசை நீக்க வேண்டும். மனதில் உள்ள மாசை நீக்கி பகுத்தறிவைப் பரப்பிவிட்டு பிறகு விஞ்ஞானத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யவேண்டும் அப்போது தான் மக்கள் மனது தௌ¤வடைவர் அறிவை போற்றுவார்கள்! அஞ்ஞானத்தை கைவிடுவார்கள். உண்மையை நம்புவார்கள் பொய்யை நம்ப மாட்டார்கள்!

அண்ணா மாணவர்களுக்கு கூறி மாணவர் அணிதிரட்டி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்தி, அவர் மறைந்த போனபிறகு நெருக்கடிக்காலத்தில் பகுத்தறிவுப் பணி முடக்கப்பட்டதை நினைவூட்டி மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டி 3.10.76 கழகக்குரல் வார ஏட்டில் நான் எழுதியதில் இருந்து சில வரிகள்.

இந்த நிலையில் ஓர் ஏக்கம் இன்னமும் அரைத்த மாலையே அரைப்பது போல காதலையும், மோதலையும் கருப்பொருளாக்கிக் கதைவாணர்கள் தமிழில் எழுதிவரும் நிலைக்கண்டு எழும் நெஞ்சின் வேதனையில் வடிக்கப்பட்ட ஒரு சொல்! விஞ்ஞானக்கதைகள் கற்பனைகள் தமிழ் மொழீயில் இல்லையே என்ற குறை இன்னமும் நீடிக்கலாகாது. தி.மு.கழகத்தின் எழுத்தாளர் பட்டாளம் எதிர்காலத்திற்கு செய்யக்கூடிய சிறப்பான சேவை இந்த குறிக்கோளை செயல் ஆக்குவது தான்"

எவரும் அந்த குறிக்கோளை நிறைவேற்றவில்லை நானும் செய்ய தவறினேன்.

"விஞ்ஞான கற்பனையை எழுத்தாளர்கள் மேலைநாடுகளில் விற்பனை செய்து வருகின்றார்கள் இது, விஞ்ஞானியர் முயற்சி வெற்றி எய்தத் துணையாக தூண்டுகோலாக அமைகிறது.

இங்கோ கடவுளரின் காமக்களியாட்டங்களைக் காசாக்கிக் காவியமாக்கிய காலம் போய் இன்று கடை காட்டி இடை காட்டிக் கச்சிறுகும் புன்மார்பின் பிதுக்கம் காட்டி கணிகையர்கள் ஆடுதலைக் கலையென்று காட்டி அவர் உடை நீக்கி உறுப்பெலாம் காட்டுதலை எழுத்தாக்கிப் பிழைப்பதையே தொழிலாக்கி எழுத்தின் தரத்தை இழித்திடுவார் செழித்திடுவார்செந்தமிழ மண்ணில்!

காலைக் கதிரழகைக் கண் விழித்தும் பாராமல் மேலைச் செழுவானின் மாணழகை நோக்காமல் இயற்கையின் அசைவுகள் ஒவ்வொன்றிலும் இலங்கிடும் எழிலை எண்ணாமல், விரிவானை, விண்வெளியை, மண்ணிற் புதைந்திருக்கும் கனிச் செல்வத்தை அதனைப் பெற்று இந்தப் பாரெய்த வேண்டிய மேம்பாட்டை, பண்பாட்டை நினைக்காமல், மங்கை முகத்தழகு மட்டுமே நினைப்பதும், பெண் பின் ஓடுவதிலேயே பொழுதினைப் போக்கவதுமாக ஒரு வேலையற்ற வீணர் கூட்டத்தை இன்று எழுத்துலகும் சேர்ந்து உருவாக்கி விட்டது! நேர்ந்த தவற்றை நிவர்த்தி செய்து, நல்வழியைக் காட்டக் குறிக்கோளோடும் கொள்கையோடும் எழுத்தாளர் முனைய வேண்டும்.

தமிழ்நாட்டை மொழி வழி மாநிலமாக பிரித்த பிறகும் மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே காங்கிரஸ் ஆட்சியிலே அழைத்து வந்தார்கள். விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 78 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தபோதும் காங்கிரசார் கற்பாறைப் போல் நின்றார்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டால் தமிழ் தேசியம் வென்று விடும் இந்திய ஒன்றியம் உடைந்து விடும் என்று வீணான அச்சம் பச்சைத் தமிழரை வாட்டிவதைத்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பூபேசு குப்தா அவர்களை தமிழர்கள் என்றென்றும் போற்றுவார்கள். ஏனெனில் அவர்தான் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட அரசியல் சட்டத்தின்முதல் அட்டவணையில் உள்ள ஏழாவது பதிவை திருத்தம் செய்யவேண்டும் என்று 1961 இல் பாராளமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்தவர் ஆவார்கள். பாராளுமன்றத்தில் அந்த தீர்மானத்தின் மீது அறிஞர் அண்ணா அவர்கள் மே 1963 இல் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்க தக்கது. அண்ணா பேசுகையில் குறுக்கிட்டு பேசிய நா. மகாலிங்கம் இந்த பெயர் மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் விளைய போகிறது-? என்று கேட்டார். அதற்க பதில் அளித்த அண்ணா பாராளுமன்றத்தை லோக்சபா என்று அழைத்தபோதும், மாநிலங்கள் அவையை ராஜ்யசபா என்று அழைத்தபோதும் நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள் அதே பயனை மதலாஸ் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றப் பெறும்போது அடையும் என்றார்.

அந்த தீர்மானம் காங்கிரசு பெரும்பான்மை பெற்றிருந்த பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் மொழி உணர்ச்சியால், மூண்டெழுத்த சினத்தீயில் காங்கிரசை சுட்டெரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றப் பிறகுதான் தமிழ்நாடு தமிழநாடாக பெயர் மாற்றம் பெற்றது! பல்வேறு மாநிலகளின் ஒன்றியமான இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் தனக்குரிய பெயரை சூட்டிக்கொள்ள எவ்வளவு ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது! தமிழ் தேசியம் உலகின் மூத்த மொழி குடும்பத்தின் பண்பாட்டு மீட்சிப் போரை உள்ளடக்கியதாகும். அப்போருக்குரிய மறவர்களாக அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விலைவாசிப் போராட்டத்தின் போது பெரும அளவ கைதியானாலும் மன்னிப்பு கோரி பிணையில் வெளிவந்தனர். அந்த பின்னணியில் தான் சீன போரின் போது திராவிட நாடு கோரிக்கையை அண்ணா அவர்கள் கைவிட்டார்கள்! அது கோழைத்தனம் அன்று. கையில் கிடைத்த திராவிட முன்னேற்றக் கழகமாம் கருவியை கொண்டு இயன்றவரை தமிழ்ப் பண்பாட்டு மீட்சிப் போரை முன்னெடுத்து செல்ல நாணலை போல் வளைந்து கொடுத்தார் அண்ணா.

அண்ணா தமிழர்களை பண்படுத்த தமிழ் வென்றெடுக்க கூடிய வீரர்களாக தமிழர்களை உருவாக்க கால அவகாசம் தேவை என்று கருதியே வளைந்து நௌ¤ந்து கொடுத்தார். அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழிந்து பிறகு அறிவு மயக்கும் அகற்றும் அறிவியக்கம் என்ற தலைப்பில் நம் நாடு இதழியல் 12.2.78 அன்று எழுதியதை மீண்டும் உங்கள் முன் நினைவூட்டுகிறேன். இருபத்திரெண்டு ஆண்டுகளுக்க முன்பு நான் எழுதிய கட்டுரை. அன்று கலைஞர் ஆட்சியில் இல்லை. இன்று கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்! அவருக்கு பின்னால் அண்ணாவின் எழுத்தை உள்வாங்கி நான் எழுதினேன்! அண்ணா நம்மை எல்லாம் எதற்காக உருவாக்கினார் என்பதை நினைவூட்டினேன். ஆனால் கலைஞரோ, கழகமோ தமிழக அரசோ, தமிழகத்தை ஆண்ட ஏனைய திராவிடக் கட்சிகளோ எதுவும் செய்யவில்லை தமிழகம் அப்படியே இருக்கிறது. இதை அண்ணாவின் மொழியில் சொல்வதானால். ஏ! தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழ்நாடே! தன்னை மறந்த தமிழ்நாடே தன்மானம் அற்ற தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கலையின் இலட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ்நாடே! ஏ சோர்வுற்ற தமிழ்நாடே!

வீறுகொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று ! புரட்சிக் கவிகளைப் போற்று! புத்துலக சிற்பிகளைப் போற்ற என்று மாணவரிடத்திலே அண்ணா மன்றாடினார். அவர் உள்ளே விடுதலை நெருப்பு அனையாமல் எரிந்தவண்ணம் இருந்தது. அந்த விடுதலைக் கனவை பிரிவினை தடைச் சட்டம் வந்த பிறகு அரசியல் தந்திரங்களுக்காக பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு அது பற்றி தம்பிகளுக்கு விளக்க அவர் எழுதிய இன்பஒளி நாடகத்தில் இப்படி சொல்கிறார்.

விடுதலை என்ற பேச்சு அளித்திடும் இன்பத்துக்கு ஈடாக வேறு ஏதும் இருந்திட முடியாது. பெற்றோம் விடுதலை என்று கூறிடும் போது மகிழ்ச்சி மட்டும் அல்ல, எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்பதனை நினைவில் கொண்டிடவும் அதன் பயனாக எழுச்சி மிக கொண்டிடவும் முடிகிறது. எழுச்சியுடன் நிற்பது இல்லை. பெற்றோம் வாழ்வு என்ற நம்பிக்கையையும் கருதுகிறது. எனவே எதிர்காலம் தெரிகிறது. எழில் தெரிகிறது ஏற்றம் தெரிகிறது. மங்கிய கண்கள் ஒளிவிடவும் வாடிய முகம் எல்லாம் மலர்ந்திடவும். என்றார் அண்ணா.

அண்ணாவை நினைத்து அவர் கனவை நிறைவேற்ற சூளுரை ஏற்போம்.