வெள்ளி, 2 அக்டோபர், 2015

கயானா நாட்டின் பிரதமராக ஒரு கொடிவழி தமிழர்



Ancient Tamil Civilization
மோசசு வீராசாமி நாகமுத்து
கயானா (தென் அமெரிக்க) நாட்டின் பிரதமராக ஒரு கொடிவழி தமிழர்
பிரதமர் பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோசசு வீராசாமி நாகமுத்து. அவருடைய பூர்வீகம் சென்னை.
தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு கொடிவழி தமிழர் ஆவார்.
சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து.
இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.
அமைச்சராக தமிழர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.
இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக நாம் பெருமைப்படலாம்.
அவருடைய தேர்தல் பிரச்சார படங்கள்
https://www.facebook.com/pages/Moses-Nagamootoo/234109576648233?sk=photos_stream

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக