புதன், 25 ஏப்ரல், 2012

இதழ் தொடங்க நினைத்தேன்





அன்புள்ள நண்பர்களுக்கு

சிங்கை வாழ் தமிழர்கள் தேவநேயப் பாவாணர் நூல்களை இணையதளத்தில் ஏற்றிய செய்தியை http://www.devaneyam.net/ சில திங்கள் முன் புதுவை வந்த நண்பர் கவி சொல்லி மகிழ்வித்தார்.
ஆபிரகாம் பண்டிதர் நூலையும் இணையத்தில் ஏற்ற வேண்டும். முனைவர் மதிவாணனின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியையும் இணையத்தில் ஏற்றி ஆக வேண்டும். பெருஞ்சித்ரனார் மருமகனும் புதுவைக்கே பெருமை தேடித் தந்தவருமான ப.அருளியின் அறிவியல் கலைச் சொல் அகரமுதலியையும் ஏற்றியாக வேண்டும்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் உருப்படியான தமிழ்ப் பணிகளையும் பதிவு செய்தாக வேண்டும். இணையத்தில் http://www.tamilnation.org/ இருந்த இடத்தை நிரப்பி அதன் பணிகளை தொடர்ந்தாக வேண்டும்.

இதற்காகவே இணைய இதழ் தொடங்க நினைத்தேன். இணையத்தில் பதிவு செய்யும் நண்பர் நினைத்தால் வருவார், காணாமல் போவார், இதுவே இதழ் தொடங்கும் முன் குறித்த நேரத்தில் இதழ் வெளிவருமா என்ற கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பழங்காலச் சித்த மருத்துவர்கள் செய்முறைகளை அடுத்த தலைமுறைக்கு சொல்லாமல் மறைத்தது போல இணைய வழி எழுதத் தெரிந்த சிலர் பரந்த மனம் இல்லாமல் அவர்களை பற்றிய பதிவுகளுக்கே வழி தேடுகிறார்கள்.

எழுதத் தெரிந்த இணையத்தை பயன்படுத்த தெரியாத பாவாணரும் மதிவாணனும் சாத்தூர் சேகரனும் இன்னும் பல அறிஞர்களும் உலகுக்கு தெரியக் கூடாது என நினைக்கும் தன்னல நினைப்பினர் தவிர யார் வேண்டுமானாலும் வடமொழிக்கு வால் பிடிக்காத தமிழை சாதியால் கூறு போட்டு வட்டாரத்தால் பிளந்து நவீனப் போர்வையில் மரபு இலக்கியங்களை அழிக்க தந்திரமாக காரியமாற்றுவோர் தவிர்த்து, உண்மைத் தமிழறிஞர் பதிவுகளுக்கு இடமளிக்கும் இதழாக வருதல் வேண்டும். கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விருபா குமரேசனோ வேறு நண்பர்களோ இணைய இதழில் பதிவுகளை ஏற்றித் தர அணியமானால் விரைவில் எதோ ஒரு பெயரில் இதழ் வெளி வரும்.


நந்திவர்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக