புதன், 25 ஏப்ரல், 2012

செம்பியனின் ஈழாயணம்



அன்புள்ள நண்பர்களுக்கு



காலையில் உங்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பிய சில மணித்துளிகளில் தொலைபேசியில் விருபா இணையதளத்தில் தமிழ் நூற்களை பதிவு செய்யும் அரும்பணி ஆற்றும் குமரேசன் தொடர்பு கொண்டார். நன்றி. அவர் புதுவை வரும் போது என் இல்லத்தில் ஒரு கலந்துரையாடல் நடக்க உள்ளது. முன்கூட்டிய தெரிவிப்பேன்.

பாவலர் செம்பியன் காவியம் படைத்தாக வேண்டும்.தமிழுக்காக அவர் இப்பணி மேற்கொள்ள சில ஆண்டு முன்பு சொன்ன யோசனையை செயல் வடிவத்தில் கொண்டு வந்தாக வேண்டும். மீண்டும் மீண்டும் மகாபாரதப் போரும் இராமயணப் போரும் தான் தமிழ்க் காவியத்தின் கதைகளா ? கருப்பொருளாக ஈழப் போர் அமைதல் வேண்டும். பிரபாகரன் வீழ்ச்சியும் இனப்படு கொலையும் காவியமாக கம்பரின் யாப்பு போல பிசிறு தட்டாமல் இலக்கியம் யாக்கவல்ல பாவலர் செமபியனால் பாடப் பட வேண்டும். இதற்கான கருப்பொருள் வரலாற்றுச் செய்திகளை மறவன் புலவு அவர்களும் ஆவரங்கால் அவர்களும் காசி ஆனந்தனும் இன்னும் பிற ஈழப் புலவர்களும் தருதல் வேண்டும். இணைய இதழ் புதுவையிலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டால் திங்கள் தோறும் செம்பியனின் ஈழாயணம் அதில் இடம் பெறுதல் வேண்டும்.

நிதி திரட்டவோ கேட்கவோ போவதில்லை. தனித்தமிழ் நாளேடு தொடங்க மறைந்த இலக்கணச் சுடர் திருமுருகன் திரட்டிய நிதி செல்வந்தரிடம் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து அறக்கட்டளை அமைத்து பொருளாளரிடம் அளித்தர்ர். பொருளாளர் இயற்கை எய்தி விட்டார். நிதி அம்போ , அந்த தவறு நேரக் கூடாது என்பதால் நிதி திரட்ட போவதில்லை. அவ்வப்போது ஆகும் செலவு அவ்வப்போது உள்ளவர்களால் சொந்தப் பணத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப் படும்.

அறிஞர் அண்ணா சொன்னது போல என் உயரம் நான் அறிவேன்.தங்கப்பா எனும் நிறைகுடமே அடக்கமுடன் தன்னைப் பற்றி பாட்டு எழுதிள்ள நிலையில் தருக்கும் செருக்கும் கொள்ளாதோர் கூடுவோம். ஊர் கூடி தேர் இழுப்பது போல , அடுத்தவர் முதுகில் ஏறி தன்னை முன்னிலைப் படுத்தாமல் தமிழை முன்னிலைபடுத்த சிந்திப்போம்.

சைவ சிந்தாந்தங்கள் பால் ஈழ நாட்டு புலவர்க்கு ஈடுபாடு மிகுதி. புதுவையில் பிரஞ்சு அரசு ஆற்றிய பணியை இணையத்தில் தொடர்வோம்.

 நான் நாத்திகன். ஆயின் என் கொள்கையை பிறர் மீது திணிக்கதவன்.

கருத்துப் பரிமாற்றம் நிகழவும் கூடும் போது கூடுதலாக உங்கள் யோசனைகள் அமையவும் என் அறுவை தொடர்கிறது.

நந்திவர்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக