சிறிலங்காவின் பெயரை ஈழம்
என்று மாற்றக் கோரிக்கை
அக்காலத்தில் இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் எலு வென்று இக்காலத்தில் பிழைபட வழங்கும் ஈழு என்ற நிறைவற்ற பாஷையே பேசி வந்தார்கள்.அதனால் இலங்கைக்கு ஈழம் என்றும் ஈழமண்டிலம் என்றும் பெயர் உண்டானது.
ஈழம், சீழம் என மருவிச் சிஹழம் சிங்களம் என மாறிற்று. சீழம் என்னும் பெயரில் இருந்தே சீழம்தீப் சேரன்டீப் என்னும் அராபிய நாமங்களும் சிலாங், சிலோன் என்னும் மேலைத்தேயததவரிட்ட பெயர்களும் வந்தன்.
சிஹ வென்னும் பாலி மொழிச்சொல் சிங்கம் என்னும் பொருள் உடையதானபடியால் சிஹழம் சிங்களமாக மருவிற்று. இத்தகவல் திரு.சி.இராசநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் நூலின் பக்கம் 12ல் உள்ளது
எனவே ஒருலட்சம் தமிழரை கொன்று குவித்து ஒன்றுபட்ட இலங்கைகுள் வாழச் சொல்லும் சிஙகள அரசு வரலாற்றுப்பிழையை திருத்தி சிறிலங்கா என்ற பெயரை எந்த மூலச்சொல்லில் இருந்து அந்தச் சொல் பிறந்த்தோ அந்த மூலச்சொல் ஆன ஈழம் என்ற பெய்ரையே சூட்ட வேண்டும் என திராவிடப் பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் ஒன்றுபட்ட நாடு வேண்டுமானால் சிறிலங்காவின் பெயரை ஈழம் என்ற பழைய பெயரையே சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்