வியாழன், 15 அக்டோபர், 2015

மீண்டும் அரசியலில் 1994 ல் தள்ளிய கூட்டமாகும்.



1978 ல் ஆமதாபாத் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் மறைந்த செந்தமிழ்ச் செல்வனின் அழைப்பில் அங்கு சென்று இலக்கியக் கூட்டங்களிலும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவிலும் பேசி விட்டு இனி அரசியலே வேண்டாம் என்று துறவு பூண்டு கரும்பளிங்கு /வண்ணப் பளிங்கு ஏற்றுமதியில் ஆறு கூட்டு -இரண்டு தனிஉரிமை நிறுவனங்கள் நடத்தி இழப்புகள் ஏற்பட்டு எந்தையார் இறப்புக்கு மீண்டும் புதுவை வந்து ஒதுங்கி இருந்த என்னை நியூ டைம்ஸ் ஒப்செர்வர் எம்.பி.ஜான் அவரது ஆங்கில வார ஏட்டுக்கு இணையசிரியனாக பொறுப்பு அளித்த போது தமிழக முன்னாள் அமைச்சர்கள் ஜி. .விசுவநாதன் , அழகு திருநாவுக்கரசு , எஸ்.ஆர்.இராதா ஆகியோர் எம்.ஜி.ஆர் மன்றங்களின் கூட்டமைப்பு துவக்கி அண்ணா தி.மு.கழகத்தை  துவக்கிய என்னை தஞ்சாவூரில் ஆளுநர் சென்னா  ரெட்டி, மூப்பனார் கலந்து கொண்ட விழாவுக்கு  பேச அழைத்து மீண்டும் அரசியல் சாக்கடையில் இறக்கி விட்டனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மன்றங்களின் கூட்டமைப்புக்கு கூட்டம் நடத்த    தடைகள் இருந்ததால் புதுவையில் நடத்தும் பொறுப்பு என்னிடம் தந்தனர் . புதுவை கம்பன் கலை அரங்கத்தில் 1994 மே அன்று நடந்த கூட்டத்தில் நான் பேசுகிறேன். என் இருக்கையில் என் தங்கை பத்மாவதி தேவகுமாரனின் மகள்கள் கனிமொழி-கயல்விழி உள்ளனர். நடிகர் பெயரிலான மன்றப் பொறுப்பு வேண்டாம் என்றதால் எனக்காக திராவிட இளைஞர் பேரவை என்று உருவாக்கி என்னை அமைப்பாளனாக  அறிமுகம் செய்தனர். இக்கூட்டமே 1978 முதல் எந்த அரசியலும் வேண்டாம் என்று துறவு பூண்டு இருந்த என்னை மீண்டும் அரசியலில் 1994 ல் தள்ளிய கூட்டமாகும். 

புதன், 14 அக்டோபர், 2015

மொழிகளும் மதங்களும் மனிதகுலமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தவையே

பிரித்தானிய ஒலிபரப்புச் சேவை (பிபிசி) அறிவியல் | இயற்கை பகுதியில் 14.8.2002 ல் ஒரு செய்திவெளியாயிற்று �முதன்மொழி மரபணு கண்டுபிடிக்கப்பட்டது� என்று அந்தச் செய்தி அறிவித்தது. மாந்தன் பேசும் திறன் பெறக் கரணியான பல மரபு அணுக்களில் முதன்மயான மரபணுவை கண்டுபிடிதது் விட்டதாக அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
இந்த மரபணு இல்லாவிட்டால் மொழியும் மாந்தகுலப் பண்பாடும் மலர்ந்திருக்க முடியாது. ஈறிலக்கம் ஆண்டுகள் கடந்து மனிதன் கண்டு வரும் ( பரிணாம) கூர்தலற வளர்ச்சியின் உந்தாற்றலாக இம்மரபணுவில் தோன்றும் தலையாய மாறுதல்கள் கரணியமாகின்றன. மாந்தன் பேசும் மொழியோடு உறுதியாகத் தொடர்புடைய அந்த மரபணுவுக்கு �Fox P 2� என்று குறியீட்டுப் பெயர் சூட்டியுள்ளனர்.
�பலமொழி மரபணுக்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னோட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மயான மரபணு� என வால்ப் காங்கு ஈனார்டு கூறுகிறார். செருமனியில் உள்ள இலீப்ழிக் நகரில் உள்ள Max Planck Institute for Evolutionary Anrthropology� எனும் நிறுவனப் பேராசிரியர் அவர். 10 முதல் 1000 வரை இது போன்ற மரபணுக்கள் இருக்கலாம் என்கிறார் அவர்.
உலகெங்கும் மரபணு பற்றி பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. அதில் சுவையான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. மனிதனும் எலியும் ஒன்றுவிட்ட சகோதரர்களாம். டனோசரசு என்ற விலங்கினம் உலகினினின்று அழிந்த இறுதிக் கட்டத்தில் ஒரு சிறிய உயிரியிலிருந்து மனிதனும் எலியும் வேறு வேறாகப் பிரிந்தனவாம். இரண்டும் பிரிந்து தனித்தனி உயிர்களாகி 75 மில்லியன் ஆண்டுகளாகி விட்டன. எலிக்குள்ள 30000 மரபணுக்களில் சுமார் 1% விழுக்காடு அதாவது சுமார் 300 மரபணுக்கள் மனிதனிடம் இல்லை.
அரிசியின் மரபணுக்களை படமாக்குதல் என்று ஒரு அனைதது்லகத்திட்டம் உண்டு. ஒவ்வொரு Molecule அரிசியினுள்ளும் 12 இணை Chromosome உள்ளன. இவைகள் கட்டமைக்கப்படுவதற்கு காரணமான குறியீட்டு மொழிகள கண்டறிய 400 மில்லியன் கட்டளை எழுத்க்களை படமாக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். International Rice Genome Project II முடித்து II வது கட்ட ஆய்வுக்கு இந்தியா முற்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் உடலில் 30,000 முதல் 40,000 மரபணுக்கள் இருந்தால் இந்திகா அரிசியில் 45,000 முதல் 56,000 வரை மரபணுக்கள் உள்ளன. சப்பானியர் அரிசியில் 63,000 மரபணுக்கள் மனிதனைக் காட்டிலும் அரிசியில் கூடுதலாக உள்ளன. அரிசியில் உள்ள மரபணுக்கள் வேறு சில செடி கொடிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. அறிவியல் பல புதிர்களுக்கு இவ்வாறு விடைதேடிய வண்ணமுள்ளது. முடிவு உடனே கட்டத் தேவையில்லை, இத் தேடல்களுக்கு முழு உண்மை புலப்படும் வரை! ஆனால் கடவுளை கற்பித்து அந்தக் கற்பனையை வைத்துப் பிழைக்க மதங்களை உருவாக்கிக் கொண்டவர்கள் உண்மைகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்று அஞ்சுகின்றனர். உண்மைகள் வெளி வந்தால் தங்கள் பிழைப்பு பறி போய்விடும் என்று அஞ்சுகின்றனர். உலக முதன் மாந்தன் – உலக முதன்மொழி உலக முதல் வழிபாடு உலகின் முதல் பண்பாடு என்று உலகில் உண்மையான வரலாறு கட்டமைக்க ஓயாமல் உழத்தாக வேண்டும் உண்மைகள் ஊர்வலம் வரும் வரை!
நம் ஊர் அறிஞர்களையே முழுமையாக அறிந்து கொள்ளாதவர்கள் நாம். நம்நாட்டு பல மாநிலங்களையே நன்கறியாதவர்கள் நாம். நம நாட்டை ஒட்டியுள்ள அண்டை நாடுகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் நாம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாதவர்களுக்கு உலகில் பல்துறை அறிஞர்கள் ஈடுபட்டுள்ள தேடல் தெரியவா போகிறது.
ஜேம்சு ஏ. மதிசாப் மொழியியல் அறிஞர். திபேத்திய பர்மிய மொழி பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளவர். 1968ல் சீன-திபேத்திய மொழிகளுக்கான அனைத்துலக மாநாட்டை முன்னின்று நடத்தியவருள் ஒருவர். சீன-திபேத்திய மொழிகளின் சொற்பிறப்பியல் அகர முதலி மற்றும் நிகண்டு தொடர்பான பணிகளில் 1987 முதல் உழைப்பவர். அவர மின்னஞ்சல் முகவரி matisoff@socrates.berkeley.edu. தமிழ் உலக முதன்மொழி என நிறுவ தமிழுக்கும் சீன-திபேத்திய மொழிகளுக்குமுள்ள உறவை ஆய்வு செய்ய சீன-திபேத்திய சொற்பிறப்பியல் அகராதி உதவக்கூடும். அந்த அறிஞருடன் தமிழ்ச் சொற்பிறப்பியல் ஆய்வில் தோய்ந்த அறிஞர்கள் இணைந்தால் இருதரப்பு ஆய்வும் மேம்பாடடையும். உலக மக்கட் தொகயில் கால்பங்கினர் சீன-திபேத்திய மொழிக்குடும்ப மொழிகறைப் பேசுகின்றனர். சுமார் 250 முதல் 300 மொழிகள் இம்மொழிக்குடும்பத்தச் சார்ந்தவையாக உள்ளன. சீனம், திபேத்தியம், பர்மியம் தவிர்த்த ஏனைய மொழிகள் இந்நூற்றாண்டு வரை எழுதப்படாத மொழிகள்.
மொழியியல் அறிஞர் சோசப் கிரீன்பர்கு ஆப்ரிக்காவின் பன்னூறு மொழிகளை ஆய்வு செய்தார். ஆப்ரோ-ஏசியாடிக், நகர்-காங்கோ, கோசான் என்ற மூன்று பகுப்புகளாக ஆப்ரிக்க மொழிகளைப் பிரிப்பார்கள். சோசப் கிரீன்பர்கு நரோ-சகாரன் என்பதைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு ஆப்ரிக்க மொழிகளை ஒவ்வொன்றுக்குமுள்ள உறவு, மக்கள் பரவல் பற்றிய புதிய உண்மைகள் கண்டறியப்பட்டன. ஆப்ரிக்காவுக்கும் குமரிக்கண்டத்துக்கும் நிலவியல் தொடர்புகள் இருந்தன எனக்கூறி வருகிறோம். உலகின் முதல் மனிதன் கறுப்பிரினத்தவன் (நீக்கிராய்டு) என்றும் ஆய்வுகள் கூறிவருகின்றன. நாமும் நீக்கிராய்டுகளே! நம் மொழிகளுக்கும் ஆப்ரிக்க மொழிகளுக்கு முள்ள உறவு பற்றி ஆய சோசப் கிரின்பர்கின் ஆய்வுகள் பெரிதும் துணைபுரியக்கூடும்.
அண்னையில் மறைந்த இவ்வறிஞரே அமெரிக்காவின் பழங்குடிகள் பேசும் பன்னூறு மொழிகளையும் முப்பதாண்டுகள் ஆய்ந்து மூன்றே குடும்பங்களாகப் பிரித்தார். ஏசுகிமோ (Eskimo-Aleut) நா-தெனே (Na-dane) அமரிந்து (Amerind) என்று பிரித்தார். இந்த ஆய்வுகள் தமிழாய்வுகளுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டும். ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பிரான்சில் ஒரு கிராமப்புறம், சரக் என்ற கிராமம். அங்கே ஒரு புதிர் உள்ளது. அக்கிராம மக்கள் பேசும் பாசக்கு (Basque) மொழியே அப்புதிராகும். பிரான்சுக்கும் இசுபெயின் நாட்டு எல்லைக்கருகில் உள்ள பாசக்கு மக்கள் பேசும் யுசுகரா மொழி (Euskara) அதன் தனித் தன்மையை காத்துவந்துள்ளது. அயலவர் படையெடுப்பை உறுதியுடன் அம்மக்கள் எதிர்த்து வந்துள்ளனர். அண்மையில் இருக்கும் பிரெஞ்சு மொழியோ ஸ்பானிசு மொழியோ யுசுகரா மொழியில் ஊடுருவாமல் தங்கள் மொழியைக் காத்து நிற்கும் அம்மக்களுக்கு தமிழர்கள் பாராட்டு கூறுதல் வேண்டும். அவர்களால் இயன்ற சாதனை நாம் நிகழ்த்தத் தவறியது ஏன் என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் பாறை ஓவியங்கள் ஈராயிரமாண்டு பழமை வாய்ந்தவை என்கின்றனர் அறிஞர்கள். அவர்களின் பாறை ஓவியங்களைப் படித்தறிந்து நம் தமிழ்நாட்டு பாறை ஓவியங்களுடன் ஒப்பாய்வு செய்ய முன்னாள் பிரெஞ்சுப் பகுதியான புச்சேரியின் மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் முயலலாம்.
ஒரு பழம்பெரும் மொழிக்குடும்பத்திலிருந்தே இன்றைய உலக மொழிகள் இணைந்தன என்பது நாசுதிராதிக் கோட்பாடு. அதில் நம்பிக்கை வைத்தவர் வித்தாலி செடிவோரோசுசின் Vitalg shvoroshkm� ஆறாயிரமாண்டு பழமை வாய்ந்த மொழிகளை கட்டமைத்து முந்து-நாசுதிராவிக்கு மொழியை கண்டுபிடிக்கலாம் என விளாதிசுலாங் இலியிச் சுவிச்சு நம்புகிறார்.
உலகின் பழமையான அகர முதலிகளையும் இலக்கணங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு முந்து-நாசுதிராதிக்கு மொழியைக் கண்டறிய அகரோன் தொல்கோபோலுசுகி (Ahrarom Dolgoplsky) ஈடுபட்டுள்ளார்.
மொழிக் கட்டமைப்பு வரலாறு பத்தாயிரமாண்டு பழமையானது என பெரும்பான்மை மொழியியலறிஞர்கள் நம்புகிறார்கள். ஆயின் பத்திலக்கம் ஆண்டுகள் தாண்டுமளவு பழமை வாய்ந்தது. மாந்த இனம் என்று மொழி தோன்றியது என்று இதனிடையே கண்டுபிடிக்க எவ்வளவு இடர்பட நேரும் என்று நீங்கள் உணர முடியும். நாற்பதாயிரமாண்டு முன்பே மாந்தன் மொழி பேசும் திறன் பெற்றிருந்தான் என கிரிசு இசுடிரிங்கர் கருகிறார். பூம்புகார் 9500 ஆண்டு பழமையானது எனக் கடலடி ஆய்வு கூறுவதால் தமிழரின் சங்க நூல் உள்ளிட்ட நூற்களுக்கு இதுகாறும் கூறிவந்த காலவரையறை மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாக வேண்டும். ஆய்வுக்கு ஓய்வில்ல. அறிஞர்கள் அறிவாராக!
மொழிகள மட்டுமல்ல நதிகளையும் அறிஞர்கள் ஆய்வு செய்கிறார்கள். நதிக்கரையில் மலர்ந்த நாகரிகங்களையும் ஆய்வு செய்கிறார்கள். காவிரியாற்றை ஆய்ந்த அறிஞர்கள் தற்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டினம் என்ற இடத்தில் முன்னொரு காலத்தில் காவிரி நதி இல்லை என்கிறார்கள். �காவிரி நதி முன் காலத்தில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியை அடுத்து நேர் கிழக்காக காவிரிப்பட்டினம் வாணியம்பாடி வேலூர் வழியாக சென்னைக்கு வடக்காக வங்கக் கடலில் சங்கமம் ஆனதற்கான அதிகாரப்பூர்வ எடுத்க்காட்டுகள் கிடைக்கின்றன. கால ஓட்டத்தில் ஆற்று ஒட்டத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன என்பதற்குத் தமிழிலக்கியங்களும் சான்றாக உள்ளன. அப்பர் காலத்தில் காவிரி நடுவிலிருந்த திருத்துருத்தி சுந்தரர் காலத்தில் காவிரிக்கரையிலிருக்கும் கோவில் ஆயிற்று. பாடல் பெற்ற பழைய திருக்கழிப்பாலைக் கோயிலை கொள்ளிட வெள்ளம் கொண்டு போய்விட்டது. வடமுல்லை வாயிலுக்கு அருகில் பெரிய மணல்வெளி காணப்படுகிறது. பழங்காலத்தில் பாலாற்றின் கிளை ஒன்று இவ்வழியே சென்று வறண்டது. சுந்தரர் காலத்தில் துறையூர் பெண்ணையாற்றின் வடக்கிலிருந்தது. இப்போது பெண்ணை ஆறு துறையூர்க்கு வடக்காக ஓடுகின்றது. எனவே தற்போதைய பாலாறு பண்டைக் காலத்தில் காவிரி ஆறாக ஓடியது என்ற உண்மையை தளிவாக உணர முடிகின்றது. காவிரி சென்னைக்கு வடக்கில்தான் கடலில் சங்கமம் ஆயிற்று� என அய்தராபத்தில் உள்ள தேசிய தொலை உணர்வு நிறுவன விஞ்ஞானி செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் கொண்டு ஆய்ந்து சொல்லியுள்ளனர்.
கடவுள்களும் கடவுட் கதைகளும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி வந்தன என ஒப்புநோக்குவோர் எல்லாமதமும் ஒன்றே! எல்லா தொன்மங்களும் ஒன்றே! நாடுவிட்டு நாடு நம்பிக்கைகள் ஒரே அடிப்படையில் உருவாகியுள்ளன எனவும் அறிவார்கள்.
ஆப்ரிக்கத் தொன்மங்களில் நிலமும் வானமும் நெடுங்கால முன்பிருந்தே நிலவி வந்ள்ளன என நம்புகிறார்கள். நிலம் மிருதுவாகவும் நீரற்று வறண்டு கிடந்ததாம். யாரோ ஒரு கிழவி நீரைத் திருடிப் பதுக்கி வைத்து விட்டதாக ஒரு கதை உள்ளது. வேறொரு கதை விலங்கு ஒன்று நீரைத் திருடி மறைத்து வைத்தாக உள்ளது இரண்டு கதைகளிலும் மக்கள் தலைவன் (அ) தொன்மத்தலைவன் நீரைத் திருடியவரிடமிருந்து மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளித்தாகச் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட காவிரியை காகம் ஒன்று விடுவித்த நம் கதையுடன் இணைத்துப்பாருங்கள்.
வட ஆசியாவின் சபீரியாவ எடுத்துக் கொள்ளுங்கள் கிறித்துவமும் இசுலாமியம் புத்த மதமும் அங்கு நுழையுமுன் பதினாறுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்குமிடையே சபீரிய மக்களின் மதம் Shamanism ஆகும். Shaman என்ற சொல் துங்குசிக் மொழியில் தீவிர உணர்ச்சி பெருக்கெடுத்து ஆடும் ஒருவனைக் குறிப்பதாகும். உருசியி மொழியிலிருந்து சபீரியா முழுக்க பரவியது. மேற்கு ஐரோப்பிய மொழிகளில் பரவி இன்று வெறியாட்டுக்கு உலகளாவிய அறிவியல் சொல்லாக மாறிவிட்டது. ஆவிகள் பிடித்துக் கொண்ட மனிதன் வெறியாட்டாடி மக்களை மருளச் செய்தான். ஆம் நம் நாட்டு சாமி வந்து ஆடுதலுக்குச் சற்றொப்ப இணையான சபீரிய மதம். சாமி ஆடுபவன் சபீரியாவில் மட்டுமா? இங்கும் போதயில் ஆடுபவனும் சாமியாக வழிபடப்படுவதில் இருந்து உலகெங்கும் மக்கள் நம்பிக்கைகள் ஒரே தன்மையாக உள்ளதை உணரலாம்.
தீ வழிபாடும் சபீரிய மக்களிடம் நிலவியது. அடுப்பை கடவுளாக வழிபட்டனர். சபீரியர்கள். தீயை முதியபெண் வடிவிலும் வழிபட்டார்கள். தீ கிலக்கி என்ற வழிபடு தெய்வமாயிற்று. நெருப்பின் தாய் நானானியன்ச என அழைக்கப்பட்டாள். தீயின் பாட்டி எவென்கி எனப்பட்டாள். எரியும் தீயில் உணவுப்பொருட்களை தூக்கி எறிந்து இதை தீயே நீ உண்டு எமக்கு நல்ல விலங்குகள் வேட்டையில் சிக்கி உணவாக வாழ்த்துவாயாக என சபீரியர்கள் கோருவாராம். தீ வழிபாடு தமிழரிடயே உண்டு என்பதற்கு தமிழில் உள்ள தெய்வம் என்ற சொல்லே சாட்சியாகும். தீயை மூட்டக்கூடிய மரத்தாலான ஞெலிபுகோல் தமிழரிடமிருந்த தொன்முது கருவிகளில் ஒன்று. அதன் திரிபே கல்லால் வடிக்கப்பட்ட சிவலிங்கமாகும். தீயின் நிறம் பற்றியே சிவந்த வடிவினன் எனச் சிவன் உருவகிக்கப்பட்டான். சிவன் படைக்கப்பட்டபோதே தமிழனுக்கு சிகப்புத் தோல் மீது இருந்த மயக்கம் வெளிப்பட்டது. சிவன் முதல் சினிமா நடிகைகள் வரை கருநிறத் தமிழன் சிகப்பு நிறத்திடம் மயங்கி நிற்பது மாறவில்லை. சபீரிய இனக்குழுக்களான சூக்சி, கொரயாக் ஆகியவர்களும் நம ஞெலிபுகோல் போல் மரத்தாலான தீ கட கோலை வைத்து வழிபட்டனர்.
கௌகாசசு பகுதிகளிலும் வீட்டில் உள்ள அடுப்பு கடவுளாக வழிபடப்பட்டது. மலை வாழ் மக்களான இங்குசசு, ஓசசட்டுசு, சியார்சியன்கள் நெருப்பையும் சாம்பலையும் வழிபட்டனர். தீய ஆராதனை காட்டுவதும் சாம்பலை திருநீறெனப் பூசுவதும் நம்மவர் கையாளும் பழக்க வழக்கம். கௌகாசசு பகுதியிலும் அதேபழக்கவழக்கம்! இவை மனித மனம் ஒரே தன்மையில் சிந்தித் வந்துள்ளதை உங்களுக்கு உணர்த்த வில்லயா?
வேளாண்மை தொடர்புடைய வழிபாடுகள், முன்னோர் தொடர்புடைய வழிபாடுகள் என்றுதான் உலகின் பல சமுதாய மக்கள் கடைபிடித்தொழுகியுள்ளனர். வோல்கா பகுதியிலும் மேற்கு ஊரல் பகுதிகளிலும்வசந்த கால விடுமுறைகள் நிலத்தில் உழுவதற்கு தொடங்குவதையும் விதை தூவுவதை ஒட்டியுமே அமைந்தன. சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டு மண்ணுக்கு படையலிட்டு அம்மக்கள் உண்டுள்ளார். தமிழர் கொண்டாடும் பொங்கலும் உழவர் திருநாளே! வோல்கா பகுதி மக்கள் ரஷ்யாவில் கொண்டாடியதும் உழவர் திருநாளே! உலக சமுதாயங்கள் பலவற்றில் உழவர் திருநாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
ஸ்லாவ் மக்களும் வேளாண் பணி துவங்கும்போதும் முடிவுறும் போதும் விழாக் கொண்டாடி வந்துள்ளனர். கதிரவனை வழிபட்டுள்ளனர். உதயசூரியன் வழிபாடு உலகெங்கும் காணக்கிடப்பதாகும். பல்வேறு சமுதாயங்களும் உதயசூரியன் எங்கள் இதய சூரியனே என்று வழிபட்டு வந்துள்ளனர். Svarog, Dazhdbog, Khors ஆகிய மூவரும் சூரியக்கடவுளரே! பெருண் என்ற இடிக்கடவுளும் ஆடுமாடுகளைப் பாதுகாக்கும் கடவுளாக Veles (volos) இருந்தார். வேலசு வேலவனாகியதா? வேலவன் வேலசு ஆகியதா? முருகனை வழிபடுவோர் மூளையை பிய்த்துக் கொள்ளட்டும்.
ஸ்காண்டிநேவியப் பகுதிகளில் மக்கள் வழிபாட்டுமுறை பற்றி அறிய யயயய என்ற பாடல் தொகுப்பு நமக்குப் பயன்படுகிறது. 11(அ) 12ம் நூற்றாண்டில் Saemund Sigfussion என்பவரால் தொகுக்கப்பெற்ற பாத்தொகுப்பு நூல்மூலம் பல செய்திகளை நாமறியலாம். கடவுள்கள் உலகை ஆளம் முன்பு இயற்கைக்கு மாறான சக்திகள் மண்ணுலக ஆண்டதாக நம்பினர். Jotnars எனப்படும் அத்தகு மனித ஆற்றலிலும்மேம்பட்ட சக்திகளை கடவுள்கள் கொன்றனராம். YMIR என்ற பூதத்தைக் கொன்று வானத்தையும் பூமியையும் கடவுள் படைத்தாராம். மரங்களில் இருந்து மனிதர்களை கடவுள் படைத்தாராம்.
இயற்கையின் ஆற்றல் ஒவ்வொன்றையும் பேரழிவு ஒவ்வொன்றையும் கடவுள்களாக உருவகித்து மெக்சிகோவில் வழிபட்டனர். முக்கியமாக மூன்று கடவுள்களில் ஒன்று Quetzalcoatl. பச்சைத்தோலுடைய பாம்பே மெக்சிகோவில் வழிபட்ட கடவுள். பாம்பு வணக்கம் பாரெங்கும் பரவி இருந்தது. திராவிடர்கள தஸ்யூக்கள் என்றார்கள் ஆரியர்கள். நாகர்கள் எனவும் திராவிடர்கள் குறிப்பிடப்பட்டனர். நாகவழிபாடு இங்கு நிலவி வந்துள்ளதற்ககு நாக்பூர், நாகப்பட்டினம் முதலிய ஊர்ப்பெயர்களோடு ஒவ்வொரு பாம்புப்புற்றுக்கும் துணிசுற்றி மஞ்சள்நீர் தெளித்து வழிபட்டு வருவதே உணர்த்தும். கடவுள்கள் பலவாக இருந்து கடவுள்களை ஒருங்கிணைக்க முற்பட்ட போது சிவன் கழுத்தில் பாம்பும் தலைமுடியில் பிறையும் ஏறிக்கொண்டன. காளை மீது சிவன் ஏறிக்கொண்டார். நாகமும் திங்களும் தீயும், தீ வடிவினனான சிவனும், காளமாடும் தனித்தனிக் கடவுளாக இருந்து ஒருங்கிணக்கப்பட்டவர்கள். கதிரவன் வழிபாடு போன்றே திங்கள் வழிபாடும் இருந்ள்ளது. இதில் வியப்புக்குரிய ஒற்றுமை சிவன் தலைமீதுள்ள பிறைக்கும் பிறை தொழும் இசுலாமிய மரபுக்கும் இடை நிலவும் ஒற்றுமைக் கூறுகளே ஆகும்.
சீனாவில் Sheng-Nong எனும் பெரிய தெய்வீக உழவனை வழிபட்டனர். முதல் உழவுப் பணி தொடங்கும் போது அக்கடவுள் வழிபடப் பட்டது நமது பொங்கல் திருநாளுடன் ஒப்புக் நோக்கத்தக்க.
ரஷ்ய அறிஞர் Sergei Tokarov மதங்களின் வரலாறு பற்றி எழுதுகையில் வந்தேறு குடிகளாம் ஆரியர்கள குறிப்பிட்டு ஈரானிய மேட்டு நிலப்பகுதிகளிலிருந் இந்தியாவுக்கு வந்தவர்கள் என்கிறார். மொகஞ்சரரோ நாகரிகத்தை உருவாக்கிய இந்தியாவின் பூர்வீகக் குடிகளுடன் பண்பாட்டு தொடர்பு அற்றவர்கள் என்கிறார். அவர் ஆரியர்கள் முதலில் சிந்துச் சமவெளியையும் வடமேற்கு இந்தியாவையும் கைப்பற்றியபின் கங்கைப் பாசனப்பகுதிகளையும் கைப்பற்றினார்கள் என்கிறார். 33 கடவுள்களை ஆரியர்கள் வழிபட்டதாகச் சொல்லும் அந்த ரஷ்ய அறிஞர் இருக்கு வேதத்தில் 3399 கடவுள்கள் ஓரிடத்தில் சொல்லப்படுவதயும் சுட்டிக் காட்டியுள்ளார். எழுத்தில் வடிக்காத வாய்மொழியாக மட்டுமே பேசப்பட்ட மொழியை கொண்டிருந்த ஆரியர்களிடம் தோற்ற திராவிடர்களில் அறிஞர்கள் தம்மொழியின் மாண்ப என்றென்றும் நிலைநாட்ட எண்ணங் கொண்டு தமிழ் எழுத்க்கள் 33 ஐ ஆரியக் கடவுளாக்கி அமைதியான முறையில் பழி தீர்த்க் கொண்டதாக எம். சுந்தரராசு எனும் அறிஞர் அழகுற ஆய்ந்து எழுதியுள்ளார். 12 உயிர், 18 மெய், 1 குற்றியலுகரம், 1 குற்றியலிகரம் என்னும் 33 தமிழ் எழுத்க்களை ஆரிய வந்தேறிகள் தலைமீது கடவுளாக ஏற்றிச் சுமக்கச் செய்த பெயர் தெரியாத அந்தத் திராவிடவியல் அறிஞர்கள தமிழுலகம் நினைத்து நினைத்து போற்ற வேண்டும்.
நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா

பன்னீராயிரம் ஆண்டு முன்பு கடலில் மூழ்கிய பூம்புகார்


PONDICHERRY LAND GRABBING IN MEDIA




TELUGU IS A DRAVIDIAN LANGUAGE



WHY UNICODE FOR EVERY TAMIL ALPHABET IS STILL EVADING...


நேதாஜி வரலாற்றை நேருவின் இருள்திரைக் கிழித்து உலகறியச் செய்க

















மறக்கடிக்கப்பட்ட வரலாறுகளும் மரத்துப் போன தமிழர்களும்





இமயம் அளந்தவன் தமிழன் சீனம் சென்றவன் தமிழன்



ARINGNAR ANNA IN KURALNERI



இந்தியாவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்டதை .........



நீக்ரோக்களுக்கு அடிமைத் தளையில் இருந்து விடுதலை கிடைத்தது. அதுவரை அவாகள் செய்த வேலைகளைச் செய்ய இந்தியாவில் இருந்தே அடிமைகள் கொண்டு செல்லப்பட்டனா;.

கல்கத்தா துறைமுகம் 1838 பிப்ரவாpயில் ஒரு கப்பல் புறப்பட்டது. சோட்டா நாக்பு+h; பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 420 மலைவாழ் பழங்குடிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பல் 5 மே 1838 ல் கயானாவை அடைந்தது. இதில் 50 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவா;. 5 வருட ஒப்பந்தக் கூலிகளாக இவா;கள் அழைத்துச் செல்லப்பட்டாh;கள். பயணத்தின் போதே நோய் வாய்ப்பட்டு பலா; இறந்தாh;கள். வேலைப்பளு அவா;களை நசுக்கிச் சாகடிக்கும் என உணராமல் வெளிநாட்டில் வேலை! நல்ல காலம் பொறக்குது என நம்பிச் சென்றாh;கள். உடல் நலமில்லாமல் ஏழு நாட்களுக்கு அவா;கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றால் 24 டாலா;கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த 24 டாலா;கள் அவா;கள் 6 மாதம் பெற வேண்டிய கூலிக்கு ஈடாகும். இப்படிப் போனவா;கள் மதுவுக்கு அடிமையானாh;கள். பெண்கள் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் பல ஆண்களுக்கு ஒருத்தி மனைவியாகும் நிh;பந்தம் நோpட்டது. இப்படி 172 ஆண்டுகளுக்கு முன்னால் சென்ற இந்தியக் கூலிகளின் அவல நிலையை படம் பிடிக்கும் குறும்படம் “ஜகாஜி பாய்”. உருது மொழித் தலைப்புக்கு கப்பல் சகோதரா;கள் என்று பொருள்படும. சுரேஷ்குமாh; பிள்ளை இயக்கித் தயாhpத்த இந்தப்படம் 2003 ல் இந்தியாவிலும் காPபியன் கடல் நாடுகளிலும் திரையிடப்பட்டது. 103 வயது முதியவா; இந்தியாவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்டதை படத்தில் விவாpக்கிறாh;. “கயானா உறுமுகிறது” இயக்கத்தின் தலைவா; ரவி தேவ் பேட்டியும் படத்தில் நம் கூலித்தொழிலாளா; பட்ட துன்பங்களை பதிவு செய்கிறது.





பிரெஞ்சு இந்தியா

பிhpட்டிஷ் இந்தியாவில் இருந்து அடிமைகளை கொண்டு வருவதை மனச்சாட்சியுள்ள பிhpட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினா;கள் கடுமையாக எதிh;க்கவே அது நின்றது. பிரெஞ்சிந்தியா வசமிருந்த புதுச்சோp, காரைக்கால், மாகே. சந்திரநாகூhpல் இருந்து 1854 க்கும் 1920க்கு மிடையே 50000 இந்தியா;கள் கூலிகளாக கெடிலோப்புக்கும் மா;த்தினிக் தீவுகளுக்கும் இட்டுச் செல்லப்பட்டனா;. கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கொண்டு செல்லப்பட்ட இவா;கள் பட்ட வேதனைகளை சொல்லும் குறும்படம் சாங்ஸ் ஆப் மலபாhpஸ் ஆகும். நெதா;லாந்து நாட்டின் ஓஎச்எம் மீடியா நெட்ஒh;க் தயாhpத்து நெதா;லாந்து தேசிய தொலைக்காட்சியில் சு+ன் 2004 ல் இப்படம் ஒளிபரப்பானது. இதனை இயக்கியவரும் சுரேஷ்குமாh; பிள்ளை ஆவாh;.

பிhpட்டிஷ் சாம்ராஜியமெங்கும் 1807 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் இந்தியாவிலிருந்து மில்லியனுக்கும் மேற்பட்ட கூலிகளை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வந்த கொடுமைகளை பிபிசி தொலைக்காட்சியே கூட படம் பிடித்துக் காட்டியது. 2005 ல் இது வெளியாயிற்று.

ஆனால் எந்தத் தகவல் தொடா;பு வசதிகளோ இன்றுள்ளது போல் இல்லாத அந்தக் காலத்திலேயே உலகப் பாh;வை கொண்ட மகாகவி பாரதியாh; ஒருவரே கரும்புத்தோட்டத்திலே இந்திய அடிமைகள் பட்ட கொடுமைகளை பதிவு செய்தவராவா;.

புதுச்சோpயில் பிறந்து பிரான்சில் ஸ்டாரஸ்பா;க் நகாpல் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா 2007 ல் வெளியிட்ட நீலக்கடல் நாவலில் வரலாற்றுச் செய்திகள் தேதிக் குறிப்புகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சோpயில் இருந்து மொhPஷியஸ் தீவுகளுக்கு அடிமைகள் கடத்தப்பட்டதைக் கூறும் இந்நாவல் 2007ல் புலம்பெயா; தமிழிலக்கியப் படைப்புகளில் சிறந்த படைப்புக்கான தமிழக அரசின் விருதை பெற்ற நாவலாகும்.

மொhPஷியஸ் தீவுக்கு பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே தமிழா;கள் வந்து போன அடையாளங்கள் அகழ்வாராய்ச்சியில் அகப்படுகின்றன. இதை மொhPஷியஸ் தமிழா;கள் என்ற பிரெஞ்சு நூலில் ராமு சு+னியமூh;த்தி பதிவு செய்துள்ளாh;. பதினேழாம் நூற்றாண்டில் புதுச்சோpத் தமிழா;கள் எப்போது சென்றனா;? 1686 ல் அங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அங்கிருந்த 269 நபா;களில் இந்தியரும் இருந்துள்ளனா;. பிரெஞ்சுத் தீவு என்று அப்போது அழைக்கப்பட்ட மொhPஷியஸ் தீவின் கவா;னராக 1727 ல் இருந்த துய்மா 1728 ல் புதுச்சோp சென்றாh;. அங்கிருந்து 95 கொத்தனாh;களையும் நூற்றுக்கணக்கில் சிறுவா; சிறுமியரையும் பிடித்துக்கொண்டு வந்தாh; என்பதை பிரெஞ்சிந்தியா;கள் என்ற தலைப்பில் மொhPஷியஸ் தலைநகரான போh;ட் லூயியில் 1965 ல் வெளிவந்த நூல் பதிந்துள்ளது. 1735 ல் பெட்ராண் பிரான்சுவா மாகே தெ லபோh;தொன்னே கவா;னரானபோது துறைமுகம் விhpவாக்கம் செய்யவும் பிரெஞ்சிந்திய கம்பெனிக்கு தானியசேமிப்புக்கிடங்கு கட்டவும் கப்பல் கட்டும் தொழிலாளா;களையும் தச்சா;களையும் கொல்லா;களையும் கொத்தனாh;களையும் புதுச்சோpயில் இருந்து அழைத்து வந்தாh;. ஒப்பந்தத் தொழிலாளா;களாக குறைந்த கூலிகளுக்காக இவா;கள் சென்றனா;. இதனால் ஏற்கனவே அங்கிருந்த பு+h;வீகக்குடிகளான மல்காஷ், கனாhpகள், கிறேயோல் மக்களின் வாழ்வு பின்னடைந்தது. இவா;களை அவா;கள் எதிhpகளாகப் பாh;க்கலாயினா;. அப்படியென்ன சொகுசு வாழ்வு புதுச்சோpத் தமிழா;களுக்கு கிடைத்தது? மக்காட்ச்சோளமும் மரவள்ளிக்கிழங்குமே உணவு. ஏஜமானா;களின் பிரம்படிக்கு இவா;கள் ஆட்படவேண்டும்.

ஒழுங்கற்ற சாலைகளில் இந்தியத் தமிழா;களுக்கென உருவாக்கப்பட்ட “கபான்” கள் என்ற குடியிருப்புகள். மரப்பலகையால் உருவான அக்குடியிருப்புகளுக்கு கூரைகள் இல்லை. இலை தழை போட்டு மூடப்பட்ட வீடுகள் நமது ஊh; குடிசைகளை விட மோசமானவை. பண்ணையில் அடிமை வேலை தாக்குபிடிக்க முடியாமல் தப்பிக்க முயற்சிப்பவா;களுக்கு கறுப்பா; சட்டத்தின் கீழ் கடும் தண்டனைகள் காத்திருந்தன. முதல் முறையாக தப்பி ஓடினால் இரண்டு காதுகள் மட்டும் அறுத்து எறியப்படும். இரண்டாவது முறை தப்பினால் மரணதண்டனைதான்!

அடிமைகள்-விடுவிக்கப்பட்டவா;கள்-ஒப்பந்ததொழிலாளா;கள் மொhpசியஷில் அனுபவித்த வேதனைகளை hpச்சா;டு பி. ஆலன் தன் நூலில் பதிவு செய்துள்ளாh;.

புதுச்சோp தமிழா;களை அடிமைகளாக்கிய பிரெஞ்சுக்காரா;களின் வியாபாரம் எப்படி நடந்தது? இனி தொpந்து கொள்வோம்! “லே பொந்திச்சோp” என்ற வா;த்தக கப்பல். 40 மீட்டா; நீளமும் 12 மீட்டா; அகலமும் நிறைய பாய் மரங்களும் கொண்ட 1200 டன் பொருட்கள் ஏற்றக்கூடிய பிரெஞ்ச்;கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான கப்பல். இந்தக் கப்பல் மொhpசியஸ்; துறைமுகமான போh;ட் லூயியில் இருந்து புறப்பட்டது. அதில் இந்திய வியாபாhpகளுக்கென சுத்தமான தங்கமும் வௌ;ளியும் போக புதுச்சோp கவா;னருக்கும் அவரை சாh;ந்தவா;கள் மற்றும் கம்பெனி ஊழியா;களுக்காக இரண்டாயிரம் பாட்டில் பொh;த்தோ சிகப்பு ஒயின், சாராயம், கோதுமை மாவு, பதப்படுத்தப்பட்ட பால்கட்டி, பன்றி - மாடு இறைச்சி, இரும்புத்தகடுகள், துப்பாக்கிகள் அவைகளுக்கான ரவைகள் கொண்டு வரப்பட்டன.

பிரான்சின் சேன் மாலோ பகுதியை சாh;ந்த தரகா;கள் ஸ்பெயினின் காலனி நாடுகளில் பெறப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்கம், வௌ;ளி இவற்றை இந்தியாவில் இறக்கி விட்டுவிட்டு பதிலாக இந்தியாவில் இருந்து பட்டு தணிகளையும் வாசைன திரவியங்களையும் கொள்ளை இலாபத்திற்கு கொண்டு செல்வாh;கள்.

பிரான்சின் ஓhpயண்ட் துறைமுகம் கடும் குளிhpல் கப்பல் புறப்பட்டு அட்லாண்டிக் கடலில் பாய் விhpத்து கஸ்கோஜன் வளைகுடாவில் மெல்ல ஊh;ந்து ஆப்hpக்காவின் கொரே துறைமுகத்துக்கு வருவா;. இங்கு சில நாட்கள் ஓய்வு. பிறகு போதிய காற்று இல்லாமையால் ஆப்hpக்காவின் நன்னம்பிக்கை முனையை கடக்க நான்கு மாதமாகும். நான்கு மாதம் கடலில் இருந்து விட்டு தரை இறங்குபவா;களுக்கு மொhpஷியஸ் ஒரு சொh;க்கம் போல தோன்றியது.

இப்படி இந்தியா வர நடுவில் தங்கி இளைப்பாறும் தீவை ஆண்ட பிரெஞ்சு கவா;னா; லபு+h; தொனே சம்பாதித்ததை பாh;ப்போம். “கணக்கெழுதும் உதவியாளரை வரவழைத்து சொந்த வியாபாரத்தின் வரவு செலவுகளை எழுதி வைத்திருந்த பேரேடுகளை கொண்டு வர சொன்னாh;. மூன்று இலட்சம் பவுனில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகள் பதினோரு இலட்சத்தை தொட்டுள்ளது. பாhpஸை சாh;ந்த ழான் கொத்தான் என்ற வங்கி அதிகாhp மூலம் வடக்கு ஐரோப்பிய வணிகத்தில் செய்திருந்த முதலீடு மட்டும் இந்த வருடத்தில் 46000 பவுன் சோ;ந்துள்ளது.” என்று படித்தவா; மகிழ்ந்ததாக ஒரு நூலில் பதிவுள்ளது.

இப்படி இவா;கள் சம்பாதிக்க அடிமை வியாபாரமும் புதுச்சோpயில் நடந்தது. ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின்படி “ கடந்த சில வருடங்களாகவே ஆடு, கோழி களவு போவதை போலவே மனிதா;களும் களவு போனாh;கள். தங்கள் சொந்த பந்தங்களை தொலைத்துவிட்டு கஷ்ட ஜீவனம் செய்யும் மக்கள் பொழுது சாய்ந்தால் அழுவதும் விடிந்தால் விதியை நொந்துகொண்டு வயிற்று பாட்டுக்கு அலைவதுமாய் இருந்தவா;கள் வயிற்றில் பால் வாh;த்தது போல அந்த செய்தி வந்தது. வெகு நாட்களாக ஆட்களை கடத்தும் கூட்டத்தை நேற்று கம்பெனி கூண்டோடு பிடித்துப் போட்டது. சு+தே என்ற பரங்கியன் புதுச்சோp

தெருக்களில் சுற்றி வர ஆட்களை அமா;த்தி சிலரை விலைக்கு வாங்கியும், சுண்ணாம்பிலே மருந்து கொடுத்து சிலருக்கு மை சிமிழ் வைத்து கூட்டிப் போவாh;கள். பிறகு இரவு வேளையில் ஆற்றின் வழியாக அhpயாங்குப்பத்தில் இருக்கும் வளைவு ஒன்றில் இறக்கி விடப்படுவாh;கள். அங்கு மொட்டை அடித்து கறுப்பு உடைகளை கொடுத்து ஒரு காலிலே விலங்கு வளையம் போட்டு சு+தன் வீட்டில் அடைத்து வைப்பாh;கள் கப்பல் போரச்சே ஏற்றி அனுப்புகிறாh;கள் என்கிறாh; ஆனந்தரங்கப்பிள்ளை.

1735 ல் மொhpயஷில் இருந்த 835 குடியிருப்புகளில் 648 அடிமைகள் இருந்தனா;. அடுத்த 5 ஆண்டுகளில் 2981 குடியிருப்புகளில் 2612 அடிமைகள் இருந்தனா;. இவா;களில் மூன்றில் ஒரு பங்கு கம்பெனி அடிமைகள். மற்றவா;கள் அங்கிருந்த பண்ணை முதலாளிகளுக்கு விற்கப்பட்ட அடிமைகள். இந்த வியாபாpகள் எப்படி வியாபாரம் நடத்தினாh;கள் என்பதை நீலக்கடல் நாவல் விவாpக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே துய்ப்ளே, கம்பெனியின் ஆலோசகராக நியமிக்கப்ட்டு முதன் முறையாகப் புதுச்சோpக்கு வந்திருந்த நேரம். ஒரு முறை பு+h;போன் தீவு வரைப் போகவேண்டியிருந்தது. அங்கே பழைய கவா;னரான துலிவியேவைச் சந்தித்திருக்கிறாh;. இளைஞன் துய்ப்பேளிக்ஸின் புத்திசாலித்தனத்தால் கவரப்பட்டு அவா; 400 வராகன்கள் கொடுத்திருக்கிறாh;. புதுச்சோp திரும்பிவந்த துய்ப்பேளிக்ஸ் அவரை விட வயது மூத்த ழாக் வேன்சான் என்பவாpன் நண்பரானாh;. இருவரும் சோ;ந்து வியாபாரம் செய்ய முடிவெடுத்தாh;கள். துலிவியே கொடுத்த பணத்தில் துய்ப்பேளிக்ஸ் 300 வராகன்கள் அவரது பங்காக முதலீடு செய்தாh;. வங்காளத்தில் இருந்து பட்டும் பிரெஞ்சு தீவிலும் பு+h;போன் தீவிலும் நிலபுலங்களும் வாங்குவது என இருவரும் தீh;மானித்தாh;கள்.

இந்த வியாபாரத்தில் இருந்து ழாக் வேன்சான் விலகிக்கொள்ள அவரது இடத்தில் அவாpன் இளம் மனைவி சோ;ந்து கொள்கிறாh;. அந்தக் கூட்டணியில் அந்த சமயம் லெ பொந்திஷொp கேப்டனாக இருந்த லாபு+h;தொனே சோ;ந்துகொள்ள பணத்திலும் பதவியிலும் மோகம் கொண்டிருந்த இந்த மூவா; கூட்டணி எல்லா தில்லுமுல்லுகளும் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தாh;கள். துய்ப்ளே மீது பிரான்ஸ் கம்பெனி தலைமையகத்துக்கு புகாh; போனது. புகாரை நிராகாpத்த மேலிடம் அவரை சந்திரநாகூh; கவா;னராக 1731 ல் நியமனம் செய்தது. இதனால் 2 ஆண்டுகள் இந்த வியாபார கூட்டணி பிhpந்திருந்தது. ஒரு நாள் அந்த பெண்மணி வயதான தன் கணவனை அழைத்துக்கொண்டு சந்திரநாகூh; போய் சோ;ந்தாh;. என்ன நடந்ததோ ஒரு நாள் அந்த பெண்மணியின் கணவா; இறந்து போனாh; அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பெண்மணியும் துய்ப்ளேவும் திருமணம் செய்து கொள்கிறாh;கள. பின்னா; புதுச்சோp நிh;வாக சபை அதிபதியாகவும் கம்பெனியின் பிரதான தளபதியாகவும் நியமிக்கப்பட்டு துய்ப்ளேக்ஸ் ஏற்கனவே 11 பிள்ளைகள் பெற்றவளின் கணவனாக புதுச்சோp வந்து இறங்கினாh;. இது அவா;கள் வாழ்க்கைப்பதிவு.



மோhpசியஷில் தமிழ் அடிமைப்பெண்கள்

இந்த வௌ;ளையா;கள் தமிழ் பெண்களை மொhpஷியஸில் எப்படி நடத்தினாh;கள் என்பதை ஒரு கற்பனை பாத்திரம் மூலம் நீலக்கடல் நாவலாசிhpயா; விவாpக்கிறாh;. “அடிமைப்பெண்கள், மெழுகு திhpயின் வெளிச்சத்தில், கருங்கற்சிலைகளாக நின்று கொண்டிருக்கிறாh;கள். அழைத்து வந்த அடிமையை அவ்விடம் விட்டு நீங்குமாறு சைகை செய்கிறாh;, பணிவாய்க் குனிந்து வெளியேறுகிறான்.”

“ துரையைப் பார;த்தமாத்திரத்தில், பகல் முழுக்க உழைத்திருந்த களைப்பில் சோh;ந்திருந்த பெண்களிருவரும், அனிச்சையாய்த் தங்கள் ஆடைகளைக் களைந்து, நிh;வாணமாக நின்றாh;கள். அப்பெண்களிடம் இவா; எதிh;பாh;க்கின்ற கிளா;ச்சியு+ட்டும் வாடை. அவ் வாடை தந்த மயக்கத்தில், அருகிலிருந்த பெண்ணை நெருங்கினாh;. சு+ளையில் சுட்டெடுத்த கரும்பானையை ஒத்து, மின்னிய கன்னங்களும் புடைத்திருந்த முலைகளும் இவரது உடலைச் சங்கடப்படுத்தின. கறுப்பு வண்ணத்தின் மீதான கசப்பு ஒளிந்து கொண்டது. அவளை இழுத்து அணைத்துக்கொண்டாh;. அப்பெண்ணிடமிருந்து, ஆழமாக வெளிப்பட்ட பெருமூச்சு இவா; மாh;பில் அனலாகப் பரவியது. அம்மூச்சிலிருந்த தாகத்தை உணா;ந்தவராய், அவளது தடித்த உதடுகளில், சாராய மூச்சுடனான தனது பற்களைப் பதித்தாh;. வலி பொறுக்கமாட்டாமல் விலகிக்கொண்டாள். இமைகளை மூடியிருந்தாள், மென்மையாக முனகல்களை வெளிப்படுத்தினாள். இப்பணிக்கு கிடைக்கவுள்ள கூடுதல் மரவள்ளி கிழங்கு, தன் பிள்ளைகளும், புருஷனும் வயிறாற ஓhpரு தினங்கள் உண்ண உதவும் என்று நினைத்து துரைக்கு ஒத்தாசை செய்தாள். இவா; நீட்டும் சுட்டுவிரல் அசைவைப் புhpந்தவளாய், இன்னொருத்தி தற்காலிகமாகக் கிடைத்த தகுதியை நழுவவிடாமல் அவசரமாய்க் கட்டிலில் ஏறி கால்களைப் பரப்பி தன் முறைக்காக காத்திருக்கிறாள்.” இந்தவொரு காட்சியே நம் பெண்கள் அங்கு பட்ட அடிமை வாழ்வை சுட்டிக்காட்டும்.

டச்சு காலனியான சு+hpயநாமுக்கும் இந்திய கூலிகள் கொண்டு செல்லப்பட்டனா;. பிhpட்டிஷ் காலனியான டிhpனிடாட்டுக்கும் கயானாவுக்கும் கொண்டு செல்லப்பட்டனா;. அவா;களுக்கு ஓரளவுக்கு மத மொழி வழிபாடு மற்றும் பண்பாட்டு சுதந்திரம் இருந்தது. பிரென்ஞ்சு காலனிகளில் அது இல்லை. இன்று பாh;ப்பதற்கு அவா;கள் தமிழா;கள் போல் இருந்தாலும் சிவனை கும்பிட்டாலும் பிள்ளையாரை வழிபட்டாலும் தமிழ் பேச தொpயாது. கிரெயோல் மொழி பேசுபவா;களாக தமிழை தொலைத்து விட்டவா;களாக இருக்கிறாh;கள்.

இவா;களை பற்றி இந்த நாவலை ஏன் எழுதினேன் என்பதை முன்னுரையில் நாவலாசிhpயா; நாகரத்தினம் கிருஷ்ணா பதிவு செய்கிறாh;. “ உலக வரலாறு கடல் சாh;ந்தது. கடல் சாpத்திரங்களை மாற்றி எழுதியுள்ளது. ஐரோப்பாவின் துண்டு நிலங்களில் கிடந்த ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகின் கலாச்சாரத்தை தனதாக்கிக் கொள்வதற்கு மூலம் வேறென்ன? சோழா;கள், பாண்டியா;களுக்கு கூட கடல் உதவத்தான் செய்தது. தங்கள் முயற்சியில் அவா;கள் தொடா;ந்து அக்கறை காட்டியிருக்கலாம்…. இருக்கலாம்….. வேறென்ன சொல்ல முடியும். இங்கே நடந்தது எல்லாம் குழாயடி சண்டைகள். வேலிகளுக்குள் சண்டை என்பதால் காத்திருந்தவா;கள் சுலபமாக மேய முடிந்தது. மேய்ந்தாh;கள். வரலாறு மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அவா;கள் ஆண்டாh;கள். நாம் அடிமையானோம்.

முரசொலி மாறனோடு நான்

1973 ல் முரசொலி செல்வம் இல்லத்தில் முரசொலி மாறனோடு நான் எடுத்துக் கொண்ட படம்.திராவிட மாணவ்ர் முன்னேற்றக் கழக புதுவை மாநில அமைப்பாளராக இருந்த நான் முரசொலி மாறன் எழுதிய ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் நூலைப் படித்தது முதல் அவர் மீது தனிப்பற்று கொண்டவன்.

ஆயிரம் விளக்கில் இன்று பாரத ஸ்டேட் வங்கி உள்ள இடத்தில் முரசொலி பழைய அலுவலத்தில் சிறிய அறையில் ஏகப்பட்ட புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் மாறன் அவர்களால் அமெரிக்க நூலகத்தில் உறுப்பின்னாக சேர்த்து விடப்பட்டேன்.புத்தகம் படிக்கும் பழக்கமே அவரைப் பார்த்துத் தான் எனக்கு ஏற்பட்டது. பீட்டர்ஸ் பிரின்சிபல் என்ற புத்தகத்தை எனக்கு அவர் பரிசளித்தார்.உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் வேண்டும் என்ற உணர்வை என்னுள் மூட்டிய புத்தகம் அது.அவர் அமைச்சராக இருந்த போதும் கடிதங்களுக்கு பதில் அளித்தார்.என் 25 வயதில் அவ்ரோடு எடுத்துக்கொண்ட படத்தை 68 வயதில் வெளியிட்டு பழைய நினைவுகளை பசுமையாக பாதுகாப்பதில் மகிழ்கிறேன்.


நந்திவர்மன்

TAMIL SPREAD IN NET WORLD


வெள்ளி, 2 அக்டோபர், 2015

கயானா நாட்டின் பிரதமராக ஒரு கொடிவழி தமிழர்



Ancient Tamil Civilization
மோசசு வீராசாமி நாகமுத்து
கயானா (தென் அமெரிக்க) நாட்டின் பிரதமராக ஒரு கொடிவழி தமிழர்
பிரதமர் பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோசசு வீராசாமி நாகமுத்து. அவருடைய பூர்வீகம் சென்னை.
தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு கொடிவழி தமிழர் ஆவார்.
சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து.
இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.
அமைச்சராக தமிழர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.
இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக நாம் பெருமைப்படலாம்.
அவருடைய தேர்தல் பிரச்சார படங்கள்
https://www.facebook.com/pages/Moses-Nagamootoo/234109576648233?sk=photos_stream

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஈழத் தமிழரும் கோழைத் தமிழரும்!


ஈழத் தமிழரும் கோழைத் தமிழரும்!

(நம்நாடு வார ஏட்டில் 05.02.1978 ல் நந்திவர்மன் எழுதியது)

நீரோடை நிலங்கிழிக்க நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாக்கப் பெருவிலங்கு வேரோடி வாழ்ந்திருந்த பாழ்நிலமாம் ஈழத்தைப் பண்படுத்திப் பழனங்களாகவும் பசுமை குலுங்கிடும் சோலைகளாகவும் மாற்றிக் காட்டிய தமிழன் வாழ்நிலம் இன்றி வதைபடுகிறான், வந்தேறு குடிகளான சிங்களவரிடம் உதைபடுகிறான். பாடு பெருக்கிப் பசுமை துலக்கிய தமிழன் வீடுவாசல் மாடு மனை துறந்து வேட்டையாடும் விலங்குமனத்தினரால் விரட்டப்படுகிறான். வேற்றினத்து வீணர்களால் மிரட்டப்படுகின்றான். பொற்புடைத் தமிழினப் பூங்கொடியர் கற்பினுக்கே இழுக்கு, அழுக்கு மனத்தினரால் நேரிடுகின்றது. போரிடும் பரம்பரைப் புலிகள் பூனைகளாய் பொறுமையோடு விழிநீரைப் பெருக்கும் நிலைமை நீடிக்கின்றது. எட்டி உதைக்கப்படும் தமிழனுக்காக இங்கிருந்து குரல் கொடுத்தால் தலையில் குட்டி உட்கார் என்று கூறுவோரே கோலோச்சுகின்றார். வேல் பாய்ச்சிய இதயவடுவதனில் நெருப்பள்ளிப் போடும் நீசரே இங்கு நாடாள்கின்றார். கோடிக்குலம் படைத்துப் பல்சமயக் கூறு அமைத்து ஓடிப் பொருள் திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவே மெத்தச் சிறப்பென்று மேலான வாழ்வென்று இங்குள்ள தமிழர் சோம்பிக் கிடக்கின்றார். முத்தைத் துகள் மூடுவதாலே முத்தொளி சாம்புவவதிலலை. ஆனால் கத்துக்கடல் தாண்டி நாடுபல வென்ற தமிழர் உள்ளமோ கேடடொன்று தமிழினத்திற்கெனில் கூம்புகின்றதே ஒழிய குமுறவில்லை. கொடுமை வீழ்த்தும் கொடுவாளாய்க் கூனற்பகை மாய்க்க அடுபோர்க் களமேகும் வேகம் பிறப்பதில்லை. வீரமும் இருப்பதில்லை. நெஞ்சில் ஈரமும் இருப்பதில்லை.
மாற்றாரோடு பேரம் நடாத்தவும் மாற்றினத்தானிடம் சோரம் போகவும் தான் தமிழர்கள் இன்று தயாராக உள்ளனர்.
பொங்கு தமிழர்க்கொரு இன்னல் என்றால் வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் வெற்றித்தோளை உயர்த்தும் எண்ணம் வருவதில்லை. ‘சிங்களவன் செந்தாலும் சிந்துவேன் கண்ணீர்‘ செந்தமிழன் இறந்தாலும் சிந்துவேன் கண்ணீர் என்றிடும் வந்தேறு குடிகளேமனோகர மைனர்களாய் இம் மண்ணில் களைகளாய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். ‘சிங்களத்திலும் என் சினிமா பார்க்கும் சுவைஞர்கள் உண்டு. எனவே செந்தமிழர் இனப்பெண்டிர் கற்பிழந்து பொற்பிழ்ந்து கசக்கி எறியப்பட்டாலும் கதறிடேன்-மனம் பதறிடேன் என்றிடும் வீடணரே இங்கு அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஈடில்லாக் கற்பினுக்கு இலக்கணமாம் எந்தமிழ்க் குல மகளிரை நாடோடி மன்னன் ஒருவன்-தாசிகுலம் என்று பேசிய பின்பும் ஆட்சிபீடமேறும் காட்சியை பாழ்நிலமாம் பைந்தமிழகத்தில்தான் காணமுடியும். கணவனைத் தவிர கடவுளைக்கூடத் தொழேன் என்ற கண்ணகி வாழ்ந்த கன்னித் தமிழ் நாட்டில் கணவன் பேச்சையும் மீறி என் கண்ணசைவின் கட்டளையே ஏற்பர் என ஒரு மனிதர் கழறவும்- கழறிய மனிதர் ஏமாளித் தமிழரை ஏய்க்கும் கோமாளியாக அரசுக் கட்டிலேறவும் இங்குதான் முடிகின்றது.
இந்த நிலையிலும் தமிழரின் சொந்த மண்ணாம் தமிழகத்தில் வெந்த உள்ளத்தோடு வேற்று நாடுகளில் உதைபடுவோருக்காக- வதைபடுவோருக்காக ஆறுதல் கூற, தேறுதல் கூற - போர்க்குரல் எழுப்பிப் புவியாண்ட மரபின் வீரம் பட்டுப் போகவில்லை எனப் பாருக்கெல்லாம் பறைசாற்றிட ஒரே ஒரு அரசியல் இயக்கம் மட்டுமே உண்டு என்பதனை உலகத் தமிழர்கள் ஒப்பிவிட்டனர்-உள்ளத்தில் பதித்துக் கொண்டனர்.
அண்ணா வாழ்ந்த போதும்- அவர் நெஞ்சில் மட்டுமே வாழும் நிலை பெற்றபோதும் தி.மு. கழகம் மட்டுமே உலகத் தமிழரின் உரிமைப் போர்ப்படையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டுச்சிக்கல் இதுவென்று கூறித்தலையிடாமைக்குக் கரணியம் கூறி வருவோர் பலருண்டு. வியட்நாமில் குழப்பம் என்றால் வீட்டுச் சுவர்களிலே வாசகங்களைத் தீட்டும் கம்யூனிஸ்டுக்கள் இலங்கைத் தமிழர் கலங்கித் தவிக்கின்றார் என்றல் கேளாக்காதினராக வாளா இருந்துள்ளனர். அரபு நாட்டவர்க்கு அல்லல் என்றல் ஆதரவுக் கரம் நீட்ட இங்கே ஆளுண்டு! அன்னைத் தமிழ் நிலத்தில்-தன் இனத்தவனுக்கு தரணியில் எங்கேனும் தீங்கென்றால் - தாங்கித்தானாக வேண்டும் தமிழன்! இது உள்நாட்டுச்சிக்கல் எனக் கையை உதறிவோரே இருக்கின்றனர். அண்மையில் உலகத்ó தமிழப் பண்பாட்டு இயக்கத்தவர்க்கு விருந்தளித்த நடிகர் இராமச்சந்திரன் இலங்கைச் சிக்கல் உள்நாட்டுச் சிக்கல்-என்னால் ஏதுஞ் செய்ய இயலாது என்று கையை விரித்த காட்சியை உலகத்தமிழப் பிரதிநிதிகள் கண்டனர்! கண்டதன் பயனாய் இராமச்சந்திரனை இனங்கண்டு கொண்டனர். இராமச்சந்திரனுக்குப் பேரறிஞர் அண்ணாவின் கருத்துக்கனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
"தமிழகத்திலிருந்து சென்ற தமிழினத்தாரைச் சிங்களவர் அழித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் வஞ்சகமாக ஈடுபடும்போது அதை உள்நாட்டுச் சம்பவம் என்று விட்டுவிட முடியுமா? கணவனும் மனைவியும் வீட்டுக்குள் அமைதியாக வாழ்வு கடத்துகிறபோது - கொஞ்சிக் குலாவுகிறபோது அங்கு பக்கத்து வீட்டுக்காரனுக்கு வேலை இல்லை. ஆனல், மனைவியின் கழுத்தை அறுக்கக் கணவன் கொடுவாள் தூக்கிவிட்போது - அதைக் கண்ட மனைவி ஐயோ! ஐயோ! என்னைக் காப்பபற்ற யாருமில்லையா? என்று அலறுகிறபோது அது வீட்டு விஷயமாகாது; பக்கத்து வீட்டுக்காரன் பாய்ந்துதான் தீரவேண்டும்" என்று பேரறிஞர் அண்ணா அறிவுறுத்திச் சென்றுள்ளார்.
அணுக்கத் தொண்டர்களாய் அண்ணனோடு இருந்தவர்க்குத்தான் நுணுக்கமாக அண்ணா சொன்னதன். உட்பொருள் புரியுமே தவிர, எப்போதாவது முகத்தைக் காட்டிவிட்டுப் போகும் இராமச்சந்திரர்களுக்குப் புரிய முடியாது. அண்ணன் வழி நடப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்க்குத்தான் அண்ணன் மொழி புரியுமே தவிர-ஊரை ஏமாற்ற உறவு வேடம் போடும் பொய்யின் மைந்தர்க்குப் புரியவே புரியாது. அண்ணன் சொன்னதையே அறியாத நடிகருக்கா அருந்தமிழர் வரலாறு புரியப் போகிறது? சிங்களவரின் முதல் மகனை விஜயன் எழு நூறு வீரர்களோடு ஈழத்திரு நாட்டில் கி.மு. ஐந்து, ஆறு நூற்றண்டுகளில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால், நாகர்கள் என்றும் கூறப்பட்ட குடிகள் அங்கு குடி இருந்தனர் என்று சிலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ், பரணவிட்டண்ணா "ஆரியக் குடியேற்றங்கள்; சிங்களவர் " என்ற ஆங்கில நூலில் எழுதுகின்றார்.
"சிறீலங்கா அரசியல் 1947-73வரை " என்ற நூல் எழுதிய பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் என்பார் முதல் முதல் ஈழத்தில் குடியேறியோர் திராவிட இனத்தவரே என்று பலரும் கருதுவதாக எதியுள்ளார்.
வரலாற்றுக் காலத்திற்கு முன் பிருந்தே ஈழத்தில் திராவிடஇனத்தவரின்குடியேற்றம் நிகழ்ந்துழூ வந்தாக ‘பாஷ்யம் எனும் அறிஞர் கருதுகிறார்.
ஈழநாட்டு வரலாற்றசிரியர்களுன் முதன்மையாக இப்பகுதில் வைத்துக் குறிப்பிட்டுகவரான ஜி. மெள்னி என்பார். விஜயன் வருவதற்கு முன்பாக வட்டர்கள் என பழங்குடிகளே ஈழத்திபரந்து வாழ்த்தனர். இவர்கள் கடற்கோளால் தாயகத்தில் இருந்து இலங்கைத் தீகளாக பிரிக்கப்படுவதற்கு முன்பாகத் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைத் தீவு வந்தனர்கள் என்று திட்டவட்டமாக எழுதியுள்ளார்.
உலகின் முதல் தாய்மொழி தமிழ் என்ற பேருண்மை இன்னமும் அறிவாளர்க்கு சரியாக புலனனாமல் இருந்து வருகிறது. மொழி ஞாயிறு தவநேயப்பாவாணர் உலகம் முதல் உயர்தனிச் செம்மொழி என்ற தம் ஆங்கில நூலில் ஆணித்தரமாக நிறுவிய உண்மையை உலகம் ஒப்பும் நாள் தொலைவில் இல்லை. உலகின் முதல் மொழியைப் பேசிய முதற் குடிமகனான தமிழின ஈழத்தில் முதன்முதல் குடியேறியவன் என்பதற்குச் சான்னுதேடி அலையத் தேவை இல்லை என்றாலும் சிங்களவரும் மேனாட்டாரும் செப்பினால் தான் தமிழரில் சிலர் ஒப்புவர் என்பதால்தான் அவர்கள் மேற்கோளைத் தர நேர்ந்தது ஈழத் திருநாடு சிங்களவர்குடியேறிய பூமி! இன்பத் தமிழர்கள் வரலாற்றுக்கு முன்பே வாழ்ந்த நிலம்! சென்ற நாடு - தமிழரசர் வென்றவர் நாடுகளை-தமிழரே ஆளும் நிலை ஏற்பட்டிருந்தால் உலகத்தில் தமிழினத்தின் ஒங்குபுகமுக்கு ஒரு குறையும் நேர்ந்திருக்காது.
அன்றிருந்த மன்னர்கள் ஆதிக்க எண்ணமின்றி அடுபகைத்துடுக்கடக்கி அன்னை நிலம் மீண்டிட்டடார். நேடியோனை என்னும் பாண்டியன புறநாறூற்றில் "மூந்நீர்விழவின் நெடியோன் " என்று கூறப்படுகின்றான். கீழ்த்திசைநாடுகளை வென்று மீண்ட பின்னர் கடலிற்கு நன்றிகூறும் முகத்தான் இந்தப் பாண்டியன் விழா வெடுத்தானாம் விழா எடுத்து வீணாய்ப் போனவர்கள் தமிழர்கள். வெளி நாடுகளில் தமிழினத்தின் ஆட்சியை வேரூன்றி இருந்தாலும் இன்று அலையெல்லாம் தமிழ்பாடும் - அயல் நாடுகள் தமிழ் பேசும் - அவனியிலே தமிழொன்றே அரச மொழி என்றிருக்கும் நிலை மலர்ந்திக்கும்.. குலையெல்லாம் நடுங்கி இங்கே குள்ளநரிகள் ஒடி நிற்கும். குவலயமே தமிழ் கூறும். மலையெல்லாம் மண்ணெல்லாம்-மன்னு நதி கடல் எல்லாம் மாத்தமிழர் புகழொழிக்கும் மர்ப்புகழை இழந்து விட்டோம்.
கீழ்த்திசை நாடொன்ரை வென்று அதற்கு மையமாக கடற்கரைப் பாதைஒன்றில் தன் அடிச்சுவடுகள் பொறித்து அவற்றைக் அலைகளை கழுவிடுமாறு செய் தான் வடிவலம்ப நின்ற பாண்டியன். இன்று தமிழன் கண்ணீரால் சிங்களவனின் கால்கழுவிச் கொண்டிருக்கிறான். இங்கோ மாற்றனுக்கு மண்டியிட்டுச் கொண்டிருக்கிறான்.
இமயத்தின் வெற்பினிலே கொடி நட்டான் சேரன் குட்டுவன் என்று பெருமைப் படுகின்றோம். கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றினான் என்று களிக்கின்றோம். ஆனால் செங்குட்டுவன் மாடலன் என்னும் பிராமணனுக்கு 50 துலாம் பொன் கொடுத்ததையும் கொடுங்கோளூரில் வேள்வி நிகழ்த்திய அடிமைத்தனத்தையும் எப்படிமறத்தற்கியலாதோ அவ்வாறே வென்ற நாட்டை ஆண்டிட வழி செய்யாத பழியும் பெரும் பழியே! இத்துகு மன்னர்தம் மெத்தனத்தால் தமிழினமே அடிமைப்பட்டுவிட்டது. வேற்று நாடுகளில் இருந்து தமிழர் விரட்டப் படவும் - தமிழர் நாட்டில் வேற்றினத்தார் அரசோச்சவுமான அவலநிலை ஏற்பட்டு விட்டது.
ஈழத்தின் முதல் குடிகள் என்று சொல்லப்படும் நாகர்கள் யாரென்பதற்கு மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் நல்ல விள்ககம் நல்கியுள்ளார்.
கீழ்த்திசை நாட்டார் நாக வணக்கமும் - நாகமுத்திரையும் கொண்டிருந்தனால் நாகர் எனப்பட்டார். அவர் நாடு நாகநாடு எனப்பட்டது. அவருள் நாகரிகமும் அநாகரிகமுமாக இருசார் மாந்தரும் இருந்தனர்.
வங்கக் கடல் தோன்று, முன்னர் அங்கிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழைக்கரை நெடுகிலும் குடியேறியதனால் அவர் சேர்ந்த ஊர்கள் நாகர் கோயில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரி எனப் பெயர் பெற்றனர்" என்று தேவநேயப் பாணவார் தெளிவுரைப்பார்.
பழந்தமிழ்க்குடிகளான நாகரின் நாட்டைத்தான் வந்தேறு குடிகளான சிங்களவர் கைப்பற்றினர். அப்படிக் கைப்பற்றிய காலத்தும் ஈழத்திருநாட்டின் முழு ஆதிக்கமும் சிங்களவர் கைக்குச் சென்றிட வில்லை. தமிழர்கள் சிங்களவருடைய ஆட்சியின் கீழó அடிமைப்படுத்தப்படவில்லை.
அக்பரின் காலடி படாத நாடாக-அசோகனின் ஆட்சிபரவாத நாடாக அன்னைத் தமிழ்நாடு இருந்ததுபோன்றே சிங்களவரின் ஆளுமையின் கீழ்சிறைப்படாத நாடாகவே தமிழ்ஈழம் óஇருந்து வந்துள்ளது.
16-ம் நூற்றண்டில் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளைப் போர்ச்சுகிசியர் கைப்பற்றினர்கள். அதன்பின் டச்சுக்காரர்கள் வந்திறங்கினர். அடுத்துவந்த ஆங்கிலேயர்கள் 18-வது நூற்றண்டின் தொடக்கத்தில்தான் இலங்கைத்தீவு முழுமையும் ஓரரசின் கீழ்-ஒரு குடையின் கீழ் கொணர்ந்தார்கள்.
எப்படி இந்தியத் துணைக்கண்டம் வெள்ளையர் வருகைக்குப் பின்னரே ஒரு நாடாக உருவாயிற்றோ அவ்வாறே இலங்கைத் தீவும் வெள்ளையரால் தான் ஓரரசிற்குட்பட்ட ஒரு நாடாயிற்று.
நரிக்கொரு புதர் உண்டு. புலிக்கொரு குகை உண்டு. பாம்புக்கும் புற்று உண்டு. குருவிக்குக் கூடு உண்டு. தமிழனுக்கொரு வீடு நாடு வேண்டாமா? என்ற அடிப்படைடியில் அல்ல இலங்கைத் தமிழர் தனிநாடு கோருவது.
இருந்த நாட்டை - இழந்த நாட்டை - உரிமையோடு கேட்கிறார்களே ஒழிய வேறல்ல; இதுவும் வேறு வழியே இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னர் தான் கேட்கிறர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மாநில சுயாட்சி மறுக்கப்பட்டு, தமிழினத்தை அழித்தொழிக்கும் திட்டமிட்ட இன வெறிப்போக்கு மேலோங்கிய பின்பே விடுதலைக் கோரிக்கை வெடித்தது. மொழியுரிமை மறுக்கப் பட்டு, இரண்டாந்தர குடிமக்களாகத் தமிழர்கள் முடக்கப் பட்ட பின்னரே விடுதலை எண்ணம் துளிர்ந்தது. தொடர்ந்து இனக்கலவரம்-தமிழர் உயிர் உடமை கற்பு பறிப்பு என்பன நிகழ்ந்து வருவதால்தன் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் என்ற அளவில் தமிழ் ஈழம் கோரி வருகிறார்கள்.
பேசித் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினையை இவ்வளவு பெரிதாக முற்றவிட்டது சிங்களவரின் இனவெறியே! அறிவுடைமையோடு இனித் தொழிற்பட்டு இதனைத் தீர்ப்பதும் தீர்ககாததும்சிங்கள அரசின் கையில் இருக்கிறது. உலகாண்ட இனத்தை ஒடுக்கி அடக்கி சிங்களவன் வாழமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் தமிழன் குமுறி எழுந்திருக்க மாட்டான்.
அடுக்கடுக்காக அல்லல்களைச் சந்திக்கும் தமிழினம் இவ்வாண்டு சோதனைக்காளான நேரத்தில் "உலகத் தமிழர்களின் முதல்வர் " என ஈழக்கவிஞர் இளங்கோவால் பாராட்டப்பெற்ற தமிழினத் தலைவர் துடித்தெழுந்தார். கனக விசயர் முடித்தலை நெறித்த தமிழினத்ததார்க்கு இன்னலா என்று எழுச்சிக் குரல் கொடுத்ததார். தமிழகமாளும் துரோகிகள் கூடாது கூடாது இது உள்நாட்டுச் சிக்கல் தி.மு. கழகம் பேரணி நடத்தத் தேவையில்லை என ஊர் தோறும் கூக்குரல் எழுப்பினர்கள்.
வரலாற்றை மறந்துவிட்டவர்களே! 1961 மே 9-ம் தேதியன்று இலங்கை ஆட்சியின் மொழிக்கொள்கை குறித்தும், அதன் பயனாய்த் தமிழர் அடையும் அல்லல்கள் குறித்தும், சிங்கள வெறியர்கள் செந்தமிழர்க்கிழைத்த அட்டூழியத்தைக் கண்டித்தும் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் கட்டளையேற்றுப்பேரணி நடத்தியதை மறந்துவிட்ட மகாபாவிகளே! அண்ணாவின் பெயரால் அரசியல் அங்காடி நடத்தும் அற்பர்களே! கலைஞர் செய்வது அத்தனையையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற காழ்ப்பின் அடிப்படையில் கண்டித்த நடிகர் கட்சிக்காரர்களே! அண்ணா செய்ததை அண்ணாவின் உண்மைத் தம்பி கலைஞர் செய்தார்! நீங்கள் அலறினீர்கள். யாரென்றும் இனம் காட்டிக் கொண்டீர்கள்.
கறுப்புப் பணத்தால் மத்திய அரசின் சீற்றத்திற்கு ஆளாவோம் என்று மௌனம் சாதித்தீர்கள்! உங்கட்கு இன்னொன்றையும் நினைவூட்டுவேன். அப்போதைய இலங்கை அரசு தி.மு. கழகப் பேரணி குறித்துத் தனது எதிர்ப்பை மத்திய அரசிற்குத் தெரிவத்தபோது இந்தியப் பேரரசு என்ன பதில் சொல்லிற்று தேரியுமா?
"தி.மு. கழகம் காங்கிரசுக்கு எதிராக இயங்கும் ஒரு அரசியல் கட்சி " உண்மையில் அதன் நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது. ஒரு சுதந்திர நாட்டில் எழுத்து- பேச்சுரிமையும், எந்தத் தனி இயக்கத்தைத் தோற்றுவித்து நடாத்திவரும் உரிமையும் உள்ளதால் ஒருவர்தான் எண்ணியதை எடுத்துரைக்க முடியும்! தடுக்க முடியாது! என நேரு அரசு நவின்றதை நாடோடிகள் அறிந்திருக்க மாட்டார்கள். இப்போதுள்ள சனதா அரசும் சனநாயக - மனிதாபிமான உணர்வுகளை மதிக்ககூடியது. என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் ஏனோ வாளா இருந்தனர் தமிழினத் துரோகியர் தானாடாவிடினும் சதையாடும் என்ற மொழி இவர்கட்குப்ó பொருந்தாது. ஏனெனில் இவர்கள் இனத்துரோகிகள்!.
இத்தகு துரோகியரை உலகத் தமிழர்கள் என்றோ புரிந்து கொண்டுவிட்டார்கள். இலங்கைக் கவிஞர் இளங்கோ பாடினர் "அண்ணாவின் தம்பிகளே...... மண்ணா கேட்கிறோம்? மடி நிறைய பொன்னா கேட்கிறோம்? எமை எண்ணா திருக்காதீர் அதுவே போதும் " என்று பாடினர் அண்ணாவின் தம்பிகளாய் நடித்துக் கொண்டிருப்போரே.......உம்மை எண்ணித்தான் ஈழக்கவிஞர் இடித்துரைக்கிறரே தவிர, இலங்கைத் தமிழர்க்காகத் துடித்தெழுந்த தி.மு.கழகமாம் அண்ணாவின் உண்மைத் தம்பியர் பாசறையை அன்று.
ஈழத்தமிழர் இன்னல் போக்க இங்குள்ள கோழைத் தமிழர் வீரம் பெற்றுக் கோமாளிகளை நம்பி ஏமாளிகளாகும் மயக்கத் தினின்று விடுபட்டு உலகத் தமிழரே ஒன்று படுங்கள் என்று குரலெழுப்பும் காலம் வந்தாக வேண்டும். அத்தகு காலத்தைக் கலைஞரின் சுட்டுவிரல் காட்டும் பாதையில் தேடிப் போகும் தி.மு.கழகம் வென்றாகவேண்டும்! வரலாற்றில் நின்றாகவேண்டும்.