புதுவையில் விளையாட்டாக நானும் இருக்கிறேன் அரசியல் மிருகங்களே என்னை இருட்டடிக்க முடியாது. இந்தியன் எக்ஸ்ப்ரஸில் 52 வாரங்கள் இலக்கியம், வரலாறு, தொல்லியல், இசை, நடனம், ஓவியம், புவி அறிவியல், தமிழரின் உலகப் பரவல், பன்னாட்டு தொல்குடிகளிடம் தமிழ் வேர்கள் பற்றி எழுதி வந்தேன் 2004 முதல் 2005 வரை., அதை நிறுத்தி மகிழ்ந்தீர்கள். 2014 ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 10 கட்டுரைகள் எழுதிய போதும் கத்திரிக் கோல் போட்டீர்கள். தேர்தல் சூதாட்டத்தில் நான் பங்கேற்பது இல்லை இருந்தும் ஒரு அரசியல்வாதி எழுதலாமா ? இந்த பொறாமையால் தமிழரின் வரலாற்றுப் பதிவுக்கு நீங்கள் எல்லாம் இருள் திரை போட்ட போது எ. ஜே.கே தொலைக்காட்சி உரிமையாளர் ஜோன்குமார் எனக்கு வாய்ப்பு அளித்தால் 140 வாரங்கள் அறிவியல் அறிவோம் அறிவால் உயர்வோம் என்ற தலைப்பிலும் வெளியே தெரியாத வரலாறு தலைப்பிலும் பேசினேன். இந்த கை எழுத்துப் படிகளை தொகுப்பாசிரியர் என்று போட்டு நூல்களாக வெளியிட ஒரு பேராசிரியைக்கு அனுமதி அளித்துள்ளேன். இந்த பேச்சுகள் மேலும் ஆராய தூண்டும் நோக்கில் அமைந்தவை. ஆய்வு அரங்கங்களில் பல பல்கலைக்கழகங்களில் முன்பு எல்லாம் புதுவை பல்கலைக்கழகத்தில் என்னை பேசச் செய்து மகிழ்ந்த எஸ்.வி.நாராயணன், அ.அறிவுநம்பி ,எஸ்.ஆரோக்கியநாதன் , பேராசிரியர் சம்பந்தன் போன்றோர் உலகின் எந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஏடு அளிக்க சொன்னாலும் ஓரளவு தமிழர் வரலாற்று மறு கட்டமைப்புக்கு நான் உழைக்க. முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக