puducherry லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
puducherry லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 அக்டோபர், 2015

ARINGNAR ANNA IN KURALNERI



முரசொலி மாறனோடு நான்

1973 ல் முரசொலி செல்வம் இல்லத்தில் முரசொலி மாறனோடு நான் எடுத்துக் கொண்ட படம்.திராவிட மாணவ்ர் முன்னேற்றக் கழக புதுவை மாநில அமைப்பாளராக இருந்த நான் முரசொலி மாறன் எழுதிய ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் நூலைப் படித்தது முதல் அவர் மீது தனிப்பற்று கொண்டவன்.

ஆயிரம் விளக்கில் இன்று பாரத ஸ்டேட் வங்கி உள்ள இடத்தில் முரசொலி பழைய அலுவலத்தில் சிறிய அறையில் ஏகப்பட்ட புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் மாறன் அவர்களால் அமெரிக்க நூலகத்தில் உறுப்பின்னாக சேர்த்து விடப்பட்டேன்.புத்தகம் படிக்கும் பழக்கமே அவரைப் பார்த்துத் தான் எனக்கு ஏற்பட்டது. பீட்டர்ஸ் பிரின்சிபல் என்ற புத்தகத்தை எனக்கு அவர் பரிசளித்தார்.உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் வேண்டும் என்ற உணர்வை என்னுள் மூட்டிய புத்தகம் அது.அவர் அமைச்சராக இருந்த போதும் கடிதங்களுக்கு பதில் அளித்தார்.என் 25 வயதில் அவ்ரோடு எடுத்துக்கொண்ட படத்தை 68 வயதில் வெளியிட்டு பழைய நினைவுகளை பசுமையாக பாதுகாப்பதில் மகிழ்கிறேன்.


நந்திவர்மன்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஈழத் தமிழரும் கோழைத் தமிழரும்!


ஈழத் தமிழரும் கோழைத் தமிழரும்!

(நம்நாடு வார ஏட்டில் 05.02.1978 ல் நந்திவர்மன் எழுதியது)

நீரோடை நிலங்கிழிக்க நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாக்கப் பெருவிலங்கு வேரோடி வாழ்ந்திருந்த பாழ்நிலமாம் ஈழத்தைப் பண்படுத்திப் பழனங்களாகவும் பசுமை குலுங்கிடும் சோலைகளாகவும் மாற்றிக் காட்டிய தமிழன் வாழ்நிலம் இன்றி வதைபடுகிறான், வந்தேறு குடிகளான சிங்களவரிடம் உதைபடுகிறான். பாடு பெருக்கிப் பசுமை துலக்கிய தமிழன் வீடுவாசல் மாடு மனை துறந்து வேட்டையாடும் விலங்குமனத்தினரால் விரட்டப்படுகிறான். வேற்றினத்து வீணர்களால் மிரட்டப்படுகின்றான். பொற்புடைத் தமிழினப் பூங்கொடியர் கற்பினுக்கே இழுக்கு, அழுக்கு மனத்தினரால் நேரிடுகின்றது. போரிடும் பரம்பரைப் புலிகள் பூனைகளாய் பொறுமையோடு விழிநீரைப் பெருக்கும் நிலைமை நீடிக்கின்றது. எட்டி உதைக்கப்படும் தமிழனுக்காக இங்கிருந்து குரல் கொடுத்தால் தலையில் குட்டி உட்கார் என்று கூறுவோரே கோலோச்சுகின்றார். வேல் பாய்ச்சிய இதயவடுவதனில் நெருப்பள்ளிப் போடும் நீசரே இங்கு நாடாள்கின்றார். கோடிக்குலம் படைத்துப் பல்சமயக் கூறு அமைத்து ஓடிப் பொருள் திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவே மெத்தச் சிறப்பென்று மேலான வாழ்வென்று இங்குள்ள தமிழர் சோம்பிக் கிடக்கின்றார். முத்தைத் துகள் மூடுவதாலே முத்தொளி சாம்புவவதிலலை. ஆனால் கத்துக்கடல் தாண்டி நாடுபல வென்ற தமிழர் உள்ளமோ கேடடொன்று தமிழினத்திற்கெனில் கூம்புகின்றதே ஒழிய குமுறவில்லை. கொடுமை வீழ்த்தும் கொடுவாளாய்க் கூனற்பகை மாய்க்க அடுபோர்க் களமேகும் வேகம் பிறப்பதில்லை. வீரமும் இருப்பதில்லை. நெஞ்சில் ஈரமும் இருப்பதில்லை.
மாற்றாரோடு பேரம் நடாத்தவும் மாற்றினத்தானிடம் சோரம் போகவும் தான் தமிழர்கள் இன்று தயாராக உள்ளனர்.
பொங்கு தமிழர்க்கொரு இன்னல் என்றால் வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் வெற்றித்தோளை உயர்த்தும் எண்ணம் வருவதில்லை. ‘சிங்களவன் செந்தாலும் சிந்துவேன் கண்ணீர்‘ செந்தமிழன் இறந்தாலும் சிந்துவேன் கண்ணீர் என்றிடும் வந்தேறு குடிகளேமனோகர மைனர்களாய் இம் மண்ணில் களைகளாய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். ‘சிங்களத்திலும் என் சினிமா பார்க்கும் சுவைஞர்கள் உண்டு. எனவே செந்தமிழர் இனப்பெண்டிர் கற்பிழந்து பொற்பிழ்ந்து கசக்கி எறியப்பட்டாலும் கதறிடேன்-மனம் பதறிடேன் என்றிடும் வீடணரே இங்கு அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஈடில்லாக் கற்பினுக்கு இலக்கணமாம் எந்தமிழ்க் குல மகளிரை நாடோடி மன்னன் ஒருவன்-தாசிகுலம் என்று பேசிய பின்பும் ஆட்சிபீடமேறும் காட்சியை பாழ்நிலமாம் பைந்தமிழகத்தில்தான் காணமுடியும். கணவனைத் தவிர கடவுளைக்கூடத் தொழேன் என்ற கண்ணகி வாழ்ந்த கன்னித் தமிழ் நாட்டில் கணவன் பேச்சையும் மீறி என் கண்ணசைவின் கட்டளையே ஏற்பர் என ஒரு மனிதர் கழறவும்- கழறிய மனிதர் ஏமாளித் தமிழரை ஏய்க்கும் கோமாளியாக அரசுக் கட்டிலேறவும் இங்குதான் முடிகின்றது.
இந்த நிலையிலும் தமிழரின் சொந்த மண்ணாம் தமிழகத்தில் வெந்த உள்ளத்தோடு வேற்று நாடுகளில் உதைபடுவோருக்காக- வதைபடுவோருக்காக ஆறுதல் கூற, தேறுதல் கூற - போர்க்குரல் எழுப்பிப் புவியாண்ட மரபின் வீரம் பட்டுப் போகவில்லை எனப் பாருக்கெல்லாம் பறைசாற்றிட ஒரே ஒரு அரசியல் இயக்கம் மட்டுமே உண்டு என்பதனை உலகத் தமிழர்கள் ஒப்பிவிட்டனர்-உள்ளத்தில் பதித்துக் கொண்டனர்.
அண்ணா வாழ்ந்த போதும்- அவர் நெஞ்சில் மட்டுமே வாழும் நிலை பெற்றபோதும் தி.மு. கழகம் மட்டுமே உலகத் தமிழரின் உரிமைப் போர்ப்படையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டுச்சிக்கல் இதுவென்று கூறித்தலையிடாமைக்குக் கரணியம் கூறி வருவோர் பலருண்டு. வியட்நாமில் குழப்பம் என்றால் வீட்டுச் சுவர்களிலே வாசகங்களைத் தீட்டும் கம்யூனிஸ்டுக்கள் இலங்கைத் தமிழர் கலங்கித் தவிக்கின்றார் என்றல் கேளாக்காதினராக வாளா இருந்துள்ளனர். அரபு நாட்டவர்க்கு அல்லல் என்றல் ஆதரவுக் கரம் நீட்ட இங்கே ஆளுண்டு! அன்னைத் தமிழ் நிலத்தில்-தன் இனத்தவனுக்கு தரணியில் எங்கேனும் தீங்கென்றால் - தாங்கித்தானாக வேண்டும் தமிழன்! இது உள்நாட்டுச்சிக்கல் எனக் கையை உதறிவோரே இருக்கின்றனர். அண்மையில் உலகத்ó தமிழப் பண்பாட்டு இயக்கத்தவர்க்கு விருந்தளித்த நடிகர் இராமச்சந்திரன் இலங்கைச் சிக்கல் உள்நாட்டுச் சிக்கல்-என்னால் ஏதுஞ் செய்ய இயலாது என்று கையை விரித்த காட்சியை உலகத்தமிழப் பிரதிநிதிகள் கண்டனர்! கண்டதன் பயனாய் இராமச்சந்திரனை இனங்கண்டு கொண்டனர். இராமச்சந்திரனுக்குப் பேரறிஞர் அண்ணாவின் கருத்துக்கனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
"தமிழகத்திலிருந்து சென்ற தமிழினத்தாரைச் சிங்களவர் அழித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் வஞ்சகமாக ஈடுபடும்போது அதை உள்நாட்டுச் சம்பவம் என்று விட்டுவிட முடியுமா? கணவனும் மனைவியும் வீட்டுக்குள் அமைதியாக வாழ்வு கடத்துகிறபோது - கொஞ்சிக் குலாவுகிறபோது அங்கு பக்கத்து வீட்டுக்காரனுக்கு வேலை இல்லை. ஆனல், மனைவியின் கழுத்தை அறுக்கக் கணவன் கொடுவாள் தூக்கிவிட்போது - அதைக் கண்ட மனைவி ஐயோ! ஐயோ! என்னைக் காப்பபற்ற யாருமில்லையா? என்று அலறுகிறபோது அது வீட்டு விஷயமாகாது; பக்கத்து வீட்டுக்காரன் பாய்ந்துதான் தீரவேண்டும்" என்று பேரறிஞர் அண்ணா அறிவுறுத்திச் சென்றுள்ளார்.
அணுக்கத் தொண்டர்களாய் அண்ணனோடு இருந்தவர்க்குத்தான் நுணுக்கமாக அண்ணா சொன்னதன். உட்பொருள் புரியுமே தவிர, எப்போதாவது முகத்தைக் காட்டிவிட்டுப் போகும் இராமச்சந்திரர்களுக்குப் புரிய முடியாது. அண்ணன் வழி நடப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்க்குத்தான் அண்ணன் மொழி புரியுமே தவிர-ஊரை ஏமாற்ற உறவு வேடம் போடும் பொய்யின் மைந்தர்க்குப் புரியவே புரியாது. அண்ணன் சொன்னதையே அறியாத நடிகருக்கா அருந்தமிழர் வரலாறு புரியப் போகிறது? சிங்களவரின் முதல் மகனை விஜயன் எழு நூறு வீரர்களோடு ஈழத்திரு நாட்டில் கி.மு. ஐந்து, ஆறு நூற்றண்டுகளில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால், நாகர்கள் என்றும் கூறப்பட்ட குடிகள் அங்கு குடி இருந்தனர் என்று சிலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ், பரணவிட்டண்ணா "ஆரியக் குடியேற்றங்கள்; சிங்களவர் " என்ற ஆங்கில நூலில் எழுதுகின்றார்.
"சிறீலங்கா அரசியல் 1947-73வரை " என்ற நூல் எழுதிய பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் என்பார் முதல் முதல் ஈழத்தில் குடியேறியோர் திராவிட இனத்தவரே என்று பலரும் கருதுவதாக எதியுள்ளார்.
வரலாற்றுக் காலத்திற்கு முன் பிருந்தே ஈழத்தில் திராவிடஇனத்தவரின்குடியேற்றம் நிகழ்ந்துழூ வந்தாக ‘பாஷ்யம் எனும் அறிஞர் கருதுகிறார்.
ஈழநாட்டு வரலாற்றசிரியர்களுன் முதன்மையாக இப்பகுதில் வைத்துக் குறிப்பிட்டுகவரான ஜி. மெள்னி என்பார். விஜயன் வருவதற்கு முன்பாக வட்டர்கள் என பழங்குடிகளே ஈழத்திபரந்து வாழ்த்தனர். இவர்கள் கடற்கோளால் தாயகத்தில் இருந்து இலங்கைத் தீகளாக பிரிக்கப்படுவதற்கு முன்பாகத் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைத் தீவு வந்தனர்கள் என்று திட்டவட்டமாக எழுதியுள்ளார்.
உலகின் முதல் தாய்மொழி தமிழ் என்ற பேருண்மை இன்னமும் அறிவாளர்க்கு சரியாக புலனனாமல் இருந்து வருகிறது. மொழி ஞாயிறு தவநேயப்பாவாணர் உலகம் முதல் உயர்தனிச் செம்மொழி என்ற தம் ஆங்கில நூலில் ஆணித்தரமாக நிறுவிய உண்மையை உலகம் ஒப்பும் நாள் தொலைவில் இல்லை. உலகின் முதல் மொழியைப் பேசிய முதற் குடிமகனான தமிழின ஈழத்தில் முதன்முதல் குடியேறியவன் என்பதற்குச் சான்னுதேடி அலையத் தேவை இல்லை என்றாலும் சிங்களவரும் மேனாட்டாரும் செப்பினால் தான் தமிழரில் சிலர் ஒப்புவர் என்பதால்தான் அவர்கள் மேற்கோளைத் தர நேர்ந்தது ஈழத் திருநாடு சிங்களவர்குடியேறிய பூமி! இன்பத் தமிழர்கள் வரலாற்றுக்கு முன்பே வாழ்ந்த நிலம்! சென்ற நாடு - தமிழரசர் வென்றவர் நாடுகளை-தமிழரே ஆளும் நிலை ஏற்பட்டிருந்தால் உலகத்தில் தமிழினத்தின் ஒங்குபுகமுக்கு ஒரு குறையும் நேர்ந்திருக்காது.
அன்றிருந்த மன்னர்கள் ஆதிக்க எண்ணமின்றி அடுபகைத்துடுக்கடக்கி அன்னை நிலம் மீண்டிட்டடார். நேடியோனை என்னும் பாண்டியன புறநாறூற்றில் "மூந்நீர்விழவின் நெடியோன் " என்று கூறப்படுகின்றான். கீழ்த்திசைநாடுகளை வென்று மீண்ட பின்னர் கடலிற்கு நன்றிகூறும் முகத்தான் இந்தப் பாண்டியன் விழா வெடுத்தானாம் விழா எடுத்து வீணாய்ப் போனவர்கள் தமிழர்கள். வெளி நாடுகளில் தமிழினத்தின் ஆட்சியை வேரூன்றி இருந்தாலும் இன்று அலையெல்லாம் தமிழ்பாடும் - அயல் நாடுகள் தமிழ் பேசும் - அவனியிலே தமிழொன்றே அரச மொழி என்றிருக்கும் நிலை மலர்ந்திக்கும்.. குலையெல்லாம் நடுங்கி இங்கே குள்ளநரிகள் ஒடி நிற்கும். குவலயமே தமிழ் கூறும். மலையெல்லாம் மண்ணெல்லாம்-மன்னு நதி கடல் எல்லாம் மாத்தமிழர் புகழொழிக்கும் மர்ப்புகழை இழந்து விட்டோம்.
கீழ்த்திசை நாடொன்ரை வென்று அதற்கு மையமாக கடற்கரைப் பாதைஒன்றில் தன் அடிச்சுவடுகள் பொறித்து அவற்றைக் அலைகளை கழுவிடுமாறு செய் தான் வடிவலம்ப நின்ற பாண்டியன். இன்று தமிழன் கண்ணீரால் சிங்களவனின் கால்கழுவிச் கொண்டிருக்கிறான். இங்கோ மாற்றனுக்கு மண்டியிட்டுச் கொண்டிருக்கிறான்.
இமயத்தின் வெற்பினிலே கொடி நட்டான் சேரன் குட்டுவன் என்று பெருமைப் படுகின்றோம். கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றினான் என்று களிக்கின்றோம். ஆனால் செங்குட்டுவன் மாடலன் என்னும் பிராமணனுக்கு 50 துலாம் பொன் கொடுத்ததையும் கொடுங்கோளூரில் வேள்வி நிகழ்த்திய அடிமைத்தனத்தையும் எப்படிமறத்தற்கியலாதோ அவ்வாறே வென்ற நாட்டை ஆண்டிட வழி செய்யாத பழியும் பெரும் பழியே! இத்துகு மன்னர்தம் மெத்தனத்தால் தமிழினமே அடிமைப்பட்டுவிட்டது. வேற்று நாடுகளில் இருந்து தமிழர் விரட்டப் படவும் - தமிழர் நாட்டில் வேற்றினத்தார் அரசோச்சவுமான அவலநிலை ஏற்பட்டு விட்டது.
ஈழத்தின் முதல் குடிகள் என்று சொல்லப்படும் நாகர்கள் யாரென்பதற்கு மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் நல்ல விள்ககம் நல்கியுள்ளார்.
கீழ்த்திசை நாட்டார் நாக வணக்கமும் - நாகமுத்திரையும் கொண்டிருந்தனால் நாகர் எனப்பட்டார். அவர் நாடு நாகநாடு எனப்பட்டது. அவருள் நாகரிகமும் அநாகரிகமுமாக இருசார் மாந்தரும் இருந்தனர்.
வங்கக் கடல் தோன்று, முன்னர் அங்கிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழைக்கரை நெடுகிலும் குடியேறியதனால் அவர் சேர்ந்த ஊர்கள் நாகர் கோயில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரி எனப் பெயர் பெற்றனர்" என்று தேவநேயப் பாணவார் தெளிவுரைப்பார்.
பழந்தமிழ்க்குடிகளான நாகரின் நாட்டைத்தான் வந்தேறு குடிகளான சிங்களவர் கைப்பற்றினர். அப்படிக் கைப்பற்றிய காலத்தும் ஈழத்திருநாட்டின் முழு ஆதிக்கமும் சிங்களவர் கைக்குச் சென்றிட வில்லை. தமிழர்கள் சிங்களவருடைய ஆட்சியின் கீழó அடிமைப்படுத்தப்படவில்லை.
அக்பரின் காலடி படாத நாடாக-அசோகனின் ஆட்சிபரவாத நாடாக அன்னைத் தமிழ்நாடு இருந்ததுபோன்றே சிங்களவரின் ஆளுமையின் கீழ்சிறைப்படாத நாடாகவே தமிழ்ஈழம் óஇருந்து வந்துள்ளது.
16-ம் நூற்றண்டில் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளைப் போர்ச்சுகிசியர் கைப்பற்றினர்கள். அதன்பின் டச்சுக்காரர்கள் வந்திறங்கினர். அடுத்துவந்த ஆங்கிலேயர்கள் 18-வது நூற்றண்டின் தொடக்கத்தில்தான் இலங்கைத்தீவு முழுமையும் ஓரரசின் கீழ்-ஒரு குடையின் கீழ் கொணர்ந்தார்கள்.
எப்படி இந்தியத் துணைக்கண்டம் வெள்ளையர் வருகைக்குப் பின்னரே ஒரு நாடாக உருவாயிற்றோ அவ்வாறே இலங்கைத் தீவும் வெள்ளையரால் தான் ஓரரசிற்குட்பட்ட ஒரு நாடாயிற்று.
நரிக்கொரு புதர் உண்டு. புலிக்கொரு குகை உண்டு. பாம்புக்கும் புற்று உண்டு. குருவிக்குக் கூடு உண்டு. தமிழனுக்கொரு வீடு நாடு வேண்டாமா? என்ற அடிப்படைடியில் அல்ல இலங்கைத் தமிழர் தனிநாடு கோருவது.
இருந்த நாட்டை - இழந்த நாட்டை - உரிமையோடு கேட்கிறார்களே ஒழிய வேறல்ல; இதுவும் வேறு வழியே இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னர் தான் கேட்கிறர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மாநில சுயாட்சி மறுக்கப்பட்டு, தமிழினத்தை அழித்தொழிக்கும் திட்டமிட்ட இன வெறிப்போக்கு மேலோங்கிய பின்பே விடுதலைக் கோரிக்கை வெடித்தது. மொழியுரிமை மறுக்கப் பட்டு, இரண்டாந்தர குடிமக்களாகத் தமிழர்கள் முடக்கப் பட்ட பின்னரே விடுதலை எண்ணம் துளிர்ந்தது. தொடர்ந்து இனக்கலவரம்-தமிழர் உயிர் உடமை கற்பு பறிப்பு என்பன நிகழ்ந்து வருவதால்தன் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் என்ற அளவில் தமிழ் ஈழம் கோரி வருகிறார்கள்.
பேசித் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினையை இவ்வளவு பெரிதாக முற்றவிட்டது சிங்களவரின் இனவெறியே! அறிவுடைமையோடு இனித் தொழிற்பட்டு இதனைத் தீர்ப்பதும் தீர்ககாததும்சிங்கள அரசின் கையில் இருக்கிறது. உலகாண்ட இனத்தை ஒடுக்கி அடக்கி சிங்களவன் வாழமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் தமிழன் குமுறி எழுந்திருக்க மாட்டான்.
அடுக்கடுக்காக அல்லல்களைச் சந்திக்கும் தமிழினம் இவ்வாண்டு சோதனைக்காளான நேரத்தில் "உலகத் தமிழர்களின் முதல்வர் " என ஈழக்கவிஞர் இளங்கோவால் பாராட்டப்பெற்ற தமிழினத் தலைவர் துடித்தெழுந்தார். கனக விசயர் முடித்தலை நெறித்த தமிழினத்ததார்க்கு இன்னலா என்று எழுச்சிக் குரல் கொடுத்ததார். தமிழகமாளும் துரோகிகள் கூடாது கூடாது இது உள்நாட்டுச் சிக்கல் தி.மு. கழகம் பேரணி நடத்தத் தேவையில்லை என ஊர் தோறும் கூக்குரல் எழுப்பினர்கள்.
வரலாற்றை மறந்துவிட்டவர்களே! 1961 மே 9-ம் தேதியன்று இலங்கை ஆட்சியின் மொழிக்கொள்கை குறித்தும், அதன் பயனாய்த் தமிழர் அடையும் அல்லல்கள் குறித்தும், சிங்கள வெறியர்கள் செந்தமிழர்க்கிழைத்த அட்டூழியத்தைக் கண்டித்தும் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் கட்டளையேற்றுப்பேரணி நடத்தியதை மறந்துவிட்ட மகாபாவிகளே! அண்ணாவின் பெயரால் அரசியல் அங்காடி நடத்தும் அற்பர்களே! கலைஞர் செய்வது அத்தனையையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற காழ்ப்பின் அடிப்படையில் கண்டித்த நடிகர் கட்சிக்காரர்களே! அண்ணா செய்ததை அண்ணாவின் உண்மைத் தம்பி கலைஞர் செய்தார்! நீங்கள் அலறினீர்கள். யாரென்றும் இனம் காட்டிக் கொண்டீர்கள்.
கறுப்புப் பணத்தால் மத்திய அரசின் சீற்றத்திற்கு ஆளாவோம் என்று மௌனம் சாதித்தீர்கள்! உங்கட்கு இன்னொன்றையும் நினைவூட்டுவேன். அப்போதைய இலங்கை அரசு தி.மு. கழகப் பேரணி குறித்துத் தனது எதிர்ப்பை மத்திய அரசிற்குத் தெரிவத்தபோது இந்தியப் பேரரசு என்ன பதில் சொல்லிற்று தேரியுமா?
"தி.மு. கழகம் காங்கிரசுக்கு எதிராக இயங்கும் ஒரு அரசியல் கட்சி " உண்மையில் அதன் நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது. ஒரு சுதந்திர நாட்டில் எழுத்து- பேச்சுரிமையும், எந்தத் தனி இயக்கத்தைத் தோற்றுவித்து நடாத்திவரும் உரிமையும் உள்ளதால் ஒருவர்தான் எண்ணியதை எடுத்துரைக்க முடியும்! தடுக்க முடியாது! என நேரு அரசு நவின்றதை நாடோடிகள் அறிந்திருக்க மாட்டார்கள். இப்போதுள்ள சனதா அரசும் சனநாயக - மனிதாபிமான உணர்வுகளை மதிக்ககூடியது. என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் ஏனோ வாளா இருந்தனர் தமிழினத் துரோகியர் தானாடாவிடினும் சதையாடும் என்ற மொழி இவர்கட்குப்ó பொருந்தாது. ஏனெனில் இவர்கள் இனத்துரோகிகள்!.
இத்தகு துரோகியரை உலகத் தமிழர்கள் என்றோ புரிந்து கொண்டுவிட்டார்கள். இலங்கைக் கவிஞர் இளங்கோ பாடினர் "அண்ணாவின் தம்பிகளே...... மண்ணா கேட்கிறோம்? மடி நிறைய பொன்னா கேட்கிறோம்? எமை எண்ணா திருக்காதீர் அதுவே போதும் " என்று பாடினர் அண்ணாவின் தம்பிகளாய் நடித்துக் கொண்டிருப்போரே.......உம்மை எண்ணித்தான் ஈழக்கவிஞர் இடித்துரைக்கிறரே தவிர, இலங்கைத் தமிழர்க்காகத் துடித்தெழுந்த தி.மு.கழகமாம் அண்ணாவின் உண்மைத் தம்பியர் பாசறையை அன்று.
ஈழத்தமிழர் இன்னல் போக்க இங்குள்ள கோழைத் தமிழர் வீரம் பெற்றுக் கோமாளிகளை நம்பி ஏமாளிகளாகும் மயக்கத் தினின்று விடுபட்டு உலகத் தமிழரே ஒன்று படுங்கள் என்று குரலெழுப்பும் காலம் வந்தாக வேண்டும். அத்தகு காலத்தைக் கலைஞரின் சுட்டுவிரல் காட்டும் பாதையில் தேடிப் போகும் தி.மு.கழகம் வென்றாகவேண்டும்! வரலாற்றில் நின்றாகவேண்டும்.

அண்ணா நினைவேந்தல் பொழிவு



அண்ணா நினைவேந்தல் பொழிவு

நா. நந்திவர்மன், பொதுச்செயலாளர் திராவிடப் பேரவை
புதுச்சேரிப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கிய உயராய்வு நிறுவனம் 5.10.2000 த்தில் நடத்திய தமிழக அரசு அமைத்துள்ள அறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சொற்பொழிவில் தலைமையுரை
அறிஞர் அண்ணா வாழும் காலத்தில் மட்டும் அல்ல. மறைந்த பின்னரும் சாதனைகளைச் செய்து காட்டியவர். சாகாப் புகழையீட்டியவர் அவர் மறைவுக்கு:
எண்ணா யிரங்கோடி உள்ளமும் ஆவியும் ஏக்கமுற்றும்
பண்ணா யிரங்கோடி பாடி வருந்திப் பரிதவித்தே
உண்ணா துறங்கா துழன்றதும் மாண்டதும் உண்மையென்றால்
அண்ணா துரையாம் அறிஞர் புகழ்க்கோர்அளவுமுண்டோ?
என்று பைந்தமிழ் வாழுலகின் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடினார்! அண்ணா மறைவுக்கு வாடினார்.
அறிஞர் அண்ணாவின் மறைவு உலகிலேயே பேரளவில் 15 மில்லியன் மக்கள் பங்கேற்றமைக்காக Guinness Book of World Records களில் இடம் பிடித்தது. அவர் மறைவன்று நானெழுதிய கவிதை பல்லாண்டுகள் கழித்து 1976 பிப்பவரி 3 அன்று முரசொலியில் நெருக்கடி நிலையில் வெளியாயிற்று.
"விழிநீராலே நோயினையே விரட்டுதல் முடியுமென்றால்
வேண்டுமட்டும் சொரிந்திருப்பேன், வியன்தமிழில்
கவிதைகளைப் பொழிவதனால் பிணிக்கொடுமை போமென்றால்
கோடிகோடிப் பாடல்களைக் குவித்திருப்பேன், பாசமிக்க அண்ணனையே
அழிவினின்று காத்திடவே அளித்திடுக உயிரென்றால்
அகமகிழ்ந்து அளிதிருப்பேன் அவன்நோயை எனக்களிக்கும்
வழியிருந்தால் பெற்றவனை வாழ்ந்திருக்கச் செய்திருப்பேன்.
வழியில்லை அழிந்துவிட்டான், வார்த்தையின்றி தவிக்கின்றேன்."
என்று அவர் மறைவுக்கு மொழியிழந்து விழித்தேன். விழிநீரை வடித்தேன். நாடெங்கும் அவர் சிலைகள், நாள்தோறும் அவர் பெயரில் புதிய புதிய கட்சிகள், வங்கக் கடலோரமென வருணிக்கப்படும் தங்கத்தமிழர் கடலருகில் அவர் கல்லறை! அதை கோயிலாக்கிச் சூடம் ஏற்றும் சுயமரியாதைச் சுடர்கள்.
எண்ணாயிரம் கோடித் தமிழ் உள்ளங்களில் அன்றிருந்த என் தலைவன் கொடிகளிலே படமாக அசைந்தாடுகின்றான். முச்சந்திகளிலே காக்கைகளின் எச்சில் மழையில் நனைந்து கதிரவனின் வெப்பத்தால் கருகி மெருகிழந்து நிற்கின்றான்.
ஆனால் இந்த கணினி யுகத்தில் உலகளாவிய வலைத்தளங்களில் அண்ணாவைப் பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவுகளே உள்ளன. அந்த பதிவுகளை செய்த ஒரு சிலராவது அண்ணாவை மறவாதிருப்பது மனத்துயருக்கு மருந்தாகிறது. அவரின் கொள்கைகளை குப்பையிலே வீசிவிட்டு அவரின் கருத்துக்களை கண்டும் காணாமல் சீர்குலைந்து சிறுமைப் படுத்தி தங்களை முன் நிறுத்துவதில் சிலர் வெற்றி கண்டுள்ளனர்.
அண்ணா எண்ணிய தமிழின ஒருமைப்பாட்டுணர்வு முன்னிலைப்படுத்தப் படவில்லை. அவரின் பகுத்தறிவுப் பயணத்தை திசைமாற்றியவர்கள் பக்தர்களாக வேடம் கட்டுகிறார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் அறிஞர் அண்ணாவை எண்ணி வியக்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
அந்த தமிழர்களை தமிழ்த்தேசம் என்ற உலகளாவிய வலைப்பின்னல் தொகுப்பு நமக்கு அடையாளம் காட்டுகிறது.
அண்ணாவின் பரம்பரை என்பது ஆரியமாயைக்கு அடிமையானவர்கள் அல்ல. அண்ணாவின் வழியினர் என்பது கம்பரசம் பருகி போதையில் ஆழ்ந்து புத்தியை தொலைப்பவர்கள் அல்ல! மாஜி கடவுள்களை எழுத்தால் அடையாளம் காட்டிய அண்ணாவின் பிறங்கடைகள் மூகாம்பிகைகள் முன்பு மூங்கையினர் ஆயினர். பணத்தோட்டம் தீட்டி பொருளியல் சுரண்டலைச் சாடி அண்ணா பெயரால் ஆட்சிகளில் அமர்ந்தவர்கள் பன்நநட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கினார்கள். தீ பரவட்டும் என மடமை இருளைச் சுட்டெரித்த மாமேதை பெயரால் அரசியலில் அங்காடிகள் திறந்தவர்கள் மூடப்பெருநெருப்பில் குளிர் காய்ந்து மஞ்சள் வண்ணங்களில் மங்கலம் தேடினார்கள். கறுப்பை சிகப்பை, கழகங்களின் உயிர்த்துடிப்பை, நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவரெனப் பெரியாரைப் போற்றிய பேரறிஞரின் கொள்கைப் பிடிப்பை குலைத்தார்கள். ஆனால் சப்பான் நாட்டில் வாழும் Sacho Sri Kantha தனது Anna’s Legacy மூலம் யார் அண்ணனுக்கு ஏற்ற தம்பியர் என அனைத்துலகுக்கும் அடையாளம் காட்டுகிறார். அண்ணாவின் கொள்கைகளை தமிழ்நாட்டுத் தம்பியர் மறந்தாலும் இருக்கிறார் ஈழநாட்டுப் தம்பியர் இனமானங்காக்கவென்று நம்பிக்கை ஒளியை நம்நெஞ்சில் பாய்ச்சுகிறார்.
"If Anna’s Dravidian Nationalism has to be counted as a failure, then the Gandhian, Rooseveltian and Leninist - Stalinist ideals also have met the same fate in their places of origin. However, Gandhian ideals were picked up by Martin Luther King Junioor in America and these led to advancement of civil rights for Blacks in the 1960s. The liberal - democratice ideals of Roosevelt got rooted (however imperfectly) and supplanted the existing feudalistic social arrangement in Japan. Even the Leninist - Stalinist ideals found roots in Cuba under the leadership of Fidel Castro in 1959 and is still not supplanted, despite aggressive bullying by Yankee capitalism Similarly, though Anna’s ideology of a ‘Separate state for Tamil’s became a lost cause in India, it did become a rallying cry for the younger generation of Eelam Tamils in mid 1970s. Thus, Anna’s legacy lives in Eelam."
அண்ணாவின் திராவிடத் தேசியம் தோல்வியடைந்தது என்று கணக்கிடப்பட்டால், காந்திய, ரூசுவெல்டிய, இலெனின் , இசுடாலினிய கொள்கைகளும் தோன்றிய மண்ணில் தோல்வியையே தழுவியுள்ளன. ஆனால் காந்தியக் கொள்கைகள் மார்டின் லூதர் கிங்கால் அமெரிக்க நாட்டில் கைக்கொள்ளப்பெற்று 1960 களில் கறுப்பரின மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கப் பயன்பட்டன. ரூஸ்வெல்ட் அவர்களின் தாராள மக்களாட்சிக் கோட்பாடுகள், சப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவச் சமுதாய ஏற்பாட்டை பெயர்த்தெடுத்து அதற்குப் பதில் நிலை பெற்றன. இலெனினிய இசுடாலினிய கொள்கைகள் 1959 அளவில் பிடல் காசுடிரோ தலைமையில் கியூபாவில் வேரூன்றின. அமெரிக்க முதலாளியம் அதிதீவிர நெருக்குதல் தந்தும் இன்றளவும் அப்புறப்படுத்தப்படாமல் கியூபாவில் நிலைபெற்றுள்ளன. அதே போல் தமிழர்களுக்கென்று தனித்தாயகம் வேண்டும் என்ற அண்ணாவின் வேணவா இந்தியாவில் நிறைவேறாமல் போயிருப்பினும் 1970 களில் ஈ£த்தமிழரின் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைக்கும் மையமாக மலர்ந்தது! இவ்வாறே அண்ணாவின் பாரம்பரியம் ஈழத்தில் வாழ்கிறது." என்கிறார் அக்கட்டுரையாளர்! 20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழரை இனங்காட்ட உருவான வலைத்தொகுப்பின் உட்பிரிவு இக்கட்டுரையை தாங்கி வெளிவந்துள்ளது.
10.9.2000 அன்று கணினி வழியே கவின் தமிழை வளர்க்க ஆற்றத்தகு கடமைகள் பற்றிய கருத்தரங்கில் மூவாயிரம் பக்கங்களை கொண்ட தமிழ் வலைத்தொகுப்பில் அறிஞர் அண்ணாவிற்கு தனியாக வலைத்தளம் இல்லை என நான் வருந்தி இருந்தேன். இதனை தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பு tamilnation.org என்ற முகவரியில் Tamil and Digital Revolution உட்பிரிவில் முழுமையாக வெளியிட்டுள்ளனர்.
உலகளாவிய வலைப்பக்கங்களில் அண்ணாவை எந்த ஒரு தேடுபொறி மூலம் தேடினாலும் தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையே கண்முன் தோன்றுகிறது. அதிலே சப்பான் நாட்டு தமிழ் அறிஞர் கட்டுரையை தவிர்த்து அறிஞர் அண்ணாவைப் பற்றி இன்னும் ஒரு கட்டுரை உள்ளது. அதை எழுதியவர் இன்று அண்ணா பெயரால் அரசியல் அங்காடிகளை வெற்றிகரமாக நடத்துவர் வரிசையில் இடம்பெற்றவர் அல்ல. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்கு திரு. ஏ.பி. சனார்த்தனம் எம்பி. 1981 இல் எழுதிய கட்டுரை அது.
அண்ணாவை இழந்து பெருஞ்சித்திரனார் பாடியவாறு எண்ணாயிரம் கோடி உள்ளம் அழுததே, அவர்களில் அண்ணாவின் புகழை வலைத்தளங்களில் நிலைநிறுத்த தொலைக்காட்சிகளில் அண்ணாவின் கொள்கைகளுக்கு குரல் கொடுக்க, ஆட்கள் அருகிவிட்டனர் என்பது வெள்ளிடமலை.
தொலைக் காட்சிகளை அறிவியல் தமிழ்க்குப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சமுதாயத்தை சினிமா நடத்தப்பெறுகிறது. அதில் சி.என். அண்ணாத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாறும் இலக்கிய படைப்புகளும் என்ற வலைப்பக்கங்களின் என்ன கூறப்பட்டுள்ளது?
வாழ்க்கை வரலாறு 1909 செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் திரு. நடராசன் பங்காரம்மாளுக்கு மகனாக ஒரு நடத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். "சென்னை கோவிந்தப்பன் பள்ளியில் இருந்த போதே அரசியல் ஈடுபாடு." ஈ.வே. இரா. (இராமசாமிப்பெரியார்) பற்றாளராகி நீதிக்கட்சியில் சேர்ந்தார். (இது 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது). குடியரசு ஏட்டியில் துணையாசிரியராக பணியாற்றினார். 1942 திராவிட நாடு தமிழ் வார ஏட்டை துவக்கினார். 1949 தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் 15 இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது. அண்ணா எதிர்கட்சி தலைவர் ஆனார். 1959 உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.கழகம் அதிக இடங்களை வென்றது. 1962 மாநில சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 138 இடங்களை வென்று மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்றது. அண்ணா முதலமைச்சர் ஆனார். 1968 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 3பிப்ரவரி 1969 புற்றுநோயால் இறந்தார்.
பெருவாழ்வு வாழ்ந்த அந்த பேரறிஞர் பற்றிய வாழ்க்கை பதிவு இவ்வளவுதான் அதற்காக வருத்தப்படுவதா? இல்லை அண்ணாபெயரை தினம் சொல்லும் ஆளும், எதிர்க்கட்சிகளும் செய்யாத ஒரு வரலாற்றுப் பதிவை இந்த மட்டுமாவது செய்தனரே என தமிழ் மின்னியல் நூலகத்தாரை பாராட்டுவது தெரியவில்லை. அடுத்தபடியாக சில வரிகளே சொல்லப்பட்டுள்ளன. அந்த வரிகளை மேற்கோள்காட்டக்கூட நம்மால் முடியாது. படிஉரிமைச் சட்டப்படி இன்தாம்காம் ஒப்புதல் பெறாமல் ஒரு வரிகூட நாம் எடுத்தாள முடியாது.
அண்ணாவை உரிய முறையில் பதிவு செய்ய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல நான் பொதுச் செயலாளர் ஆக உள்ள திராவிடப் பேரவையும் தவறிழைத்து தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டு இருக்கிறோம்.
வலைத்தளங்களில் அண்ணாவின் நூல்கள், பாராளுமன்ற சட்டமன்ற பேச்சுக்கள் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும். அண்ணாவைப்பற்றிய ஆய்வுகள் தொகுப்படவேண்டும். அரசே அண்ணாவின் முழுத்தொகுதிகளை வெளியிடவேண்டும் இல்லையேல் பல்கலைக்கழகங்களாவது இதை பதிப்பிக்க வேண்டும் வலைத்தளங்களில் ஏற்றவேண்டும். முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வோர் வலைதளங்களில் அண்ணா உள்ளிட்ட தமிழ் அறிஞர் மற்றும் தமிழ் இலக்கியப் பதிவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகங்களில் ஆற்றிய பேருரைகள் இன்றும் தமிழர் நினைவு கூறத்தக்கவை. நிலையும் நிணைப்பும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா அந்நாளில் பேசியதில் சில "தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்கள் தமிழர்களை பார்த்து என்ன எண்ணியிருப்பார்கள் பச்சைப் புற்றரைக்கும பஞ்சமான நாட்டில் இருந்து வந்தவர்களின் மனதிலே தமிழ் நாட்டிலே உள்ள மாந்தோப்புகளும். மண்டபங்களும், சாலைகளும், சோலைகளும், குன்றுகளும், கோபுரங்களும், வாவிகளும் வயல்களும், எத்தகைய எண்ணங்களை தந்திருக்கும்? நிச்சயம் தமிழர்களைப் பார்த்து கேட்டு இருப்பார்கள் மெல்லிய அடையணிந்து இருக்கிறீர்களே அது ஏது என்று? தமிழர்கள் அது எங்கள் கைத்திறமை இந்திரன் தந்த வரப்பிரசாதம் இல்லை என்ற கூறியிருப்பார்கள். இமையம் வரை சென்று உங்களது இலச்சினையை பொருத்திருக்கிறீர்களே அது எப்படி என்று கேட்டு இருப்பார்கள். அதற்கு தமிழர்கள்அது கருவாழ்வார் கபாட்சத்தால் அல்ல! எங்கள் தோள் வலிமையினால் என்று கூறியிருப்பார்கள். இன்றும் உங்களது இசையின்பமாக இருக்கிறதே அது எப்படி என்ற ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து கேட்டிருப்பார்கள். அதற்கு தமிழர்கள் நாரதர் மீட்டிடும் தேவகானம் அல்ல! நாங்கள் கண்டு பிடித்த யாழின் தன்மையது என்று கூறியிருப்பார்கள். மீண்டும் அந்த யாழ் ஏது? என்று கேட்டிருப்பார்கள். அது திருப்பாற்கடலில் கடைந்தெடுத்தது அல்ல என்று கூறியிருப்பார்கள். ஆரியர்கள் முத்தைப்பார்த்து அது என்ன என்று கேட்டிருப்பார்கள் அது தேவலோகச் சரக்கல்ல! எங்கள் தீரர்கள் கடலில் மூழ்கி கண்டெடுத்த முத்து என்று கூறி இருப்பார்கள். தமிழர்களின் அந்தக் காலநிலை அவர்களுக்கு அத்தகைய நினைப்பைத்தான் தரும் என்று பழங்காலத் தமிழகத்தை ஏக்கத்தோடு படம் பிடித்தார் அண்ணா.
இக்காலத் தமிழகத்தை அண்ணா படம் பிடிக்கிறார்.
"விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்று இருக்காது. நான் இதோ பேசுகிறேன், என் முன் ஒலிப்பெருக்கி இருக்கிறது. அது நான் பேசுவதை பெரிதாக்கி நாலா பக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும் படி செய்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்று கூறியிருப்பார்கள். மேட்டூர் அணையை எப்படி கட்டிருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். கப்பல் கனமாக இருந்தும் அது எப்படி கடலில் மிதக்கிறது என்று கூறிபாருங்கள். ஏரோப்பிளேன் எப்படி பறக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். அல்லது ஒரு விஞ்ஞான சாதனத்தைப் பற்றி கூறி பாருங்கள். ஆச்சரியமாக கேட்கமாட்டார்கள்! அவைகளில் அதிசயம் இருப்பதாக அவர்களுக்கு தோன்றாது! அப்படி கொஞ்ச நேரம் கேட்டாலும் மறுகணம் அதை மறந்து விடுவார்கள்!
அற்புத சக்தியிடம் உள்ள அபாரநம்பிக்கையும் மதிப்பும் அவைகளிடம் இருக்காது. விஞ்ஞானத்திடம் அவர்களுக்கு மதிப்பும் இருப்பதில்லை. காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டு கண்டு பிடிக்கவில்லை. பென்சிலினை கண்டுபிடித்தவர் எங்கள் தாத்தா, மின்சாரத்தை கண்டுபிடித்தவர் எங்கள் மூதாதையர் என்று இருந்தால் அதன் அருமை தெரியும். எவ்வளவு சிந்தனை, எத்தனை இரவுகள் விழித்து எதிர்ப்பை பார்க்காமல் கேலி கண்டனங்களை பொருட்படுத்தாமல், ஆபத்துக்கு அஞ்சாமல மூளை குழம்புமே, கண் குருடாகுமே, கால் முடமாகுமே என்று யோசிக்காமல் கஷ்டப்பட்டு விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் மேல் நாட்டார்கள். எனவேதான் அவர்கள் விஞ்ஞானத்தைப் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அதன் அருமை தெரிகிறது. அதனிடம் அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கவும் கஷ்டப்படவில்லை. கஷ்டப்பாடாமல் சுகம் எப்படித்தெரியும்? ஆதலால்தான் இவர்களுடைய நாக்கில் ஏரோபிளேன் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நர்த்தனமாடுவதில்லை. ரயில் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நெஞ்சில் நடமாடுவதில்லை. விஞ்ஞானம் இந்த நாட்டில் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிகட்டிபோல், குருடனிடம் காட்டிய முத்துமாலையைப் போல, செவிடன் கேட்ட சங்கீதம்போல விஞ்ஞானம் மதிப்பற்றிருக்கிறது.
மதிப்புற்றிருக்கவேண்டிய பொருள் மதிப்பற்றிருப்பது நல்லது அல்ல! விஞ்ஞானம் மதிப்புபெற மாணவர்கள் உழைக்க வேண்டும்! மாணவர்கள் மக்களிடத்தில் சென்று அவர்கள் மனதில் உள்ள மாசை நீக்க வேண்டும். மனதில் உள்ள மாசை நீக்கி பகுத்தறிவைப் பரப்பிவிட்டு பிறகு விஞ்ஞானத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யவேண்டும் அப்போது தான் மக்கள் மனது தௌ¤வடைவர் அறிவை போற்றுவார்கள்! அஞ்ஞானத்தை கைவிடுவார்கள். உண்மையை நம்புவார்கள் பொய்யை நம்ப மாட்டார்கள்!
அண்ணா மாணவர்களுக்கு கூறி மாணவர் அணிதிரட்டி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்தி, அவர் மறைந்த போனபிறகு நெருக்கடிக்காலத்தில் பகுத்தறிவுப் பணி முடக்கப்பட்டதை நினைவூட்டி மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டி 3.10.76 கழகக்குரல் வார ஏட்டில் நான் எழுதியதில் இருந்து சில வரிகள்.
இந்த நிலையில் ஓர் ஏக்கம் இன்னமும் அரைத்த மாலையே அரைப்பது போல காதலையும், மோதலையும் கருப்பொருளாக்கிக் கதைவாணர்கள் தமிழில் எழுதிவரும் நிலைக்கண்டு எழும் நெஞ்சின் வேதனையில் வடிக்கப்பட்ட ஒரு சொல்! விஞ்ஞானக்கதைகள் கற்பனைகள் தமிழ் மொழீயில் இல்லையே என்ற குறை இன்னமும் நீடிக்கலாகாது. தி.மு.கழகத்தின் எழுத்தாளர் பட்டாளம் எதிர்காலத்திற்கு செய்யக்கூடிய சிறப்பான சேவை இந்த குறிக்கோளை செயல் ஆக்குவது தான்"
எவரும் அந்த குறிக்கோளை நிறைவேற்றவில்லை நானும் செய்ய தவறினேன்.
"விஞ்ஞான கற்பனையை எழுத்தாளர்கள் மேலைநாடுகளில் விற்பனை செய்து வருகின்றார்கள் இது, விஞ்ஞானியர் முயற்சி வெற்றி எய்தத் துணையாக தூண்டுகோலாக அமைகிறது.
இங்கோ கடவுளரின் காமக்களியாட்டங்களைக் காசாக்கிக் காவியமாக்கிய காலம் போய் இன்று கடை காட்டி இடை காட்டிக் கச்சிறுகும் புன்மார்பின் பிதுக்கம் காட்டி கணிகையர்கள் ஆடுதலைக் கலையென்று காட்டி அவர் உடை நீக்கி உறுப்பெலாம் காட்டுதலை எழுத்தாக்கிப் பிழைப்பதையே தொழிலாக்கி எழுத்தின் தரத்தை இழித்திடுவார் செழித்திடுவார்செந்தமிழ மண்ணில்!
காலைக் கதிரழகைக் கண் விழித்தும் பாராமல் மேலைச் செழுவானின் மாணழகை நோக்காமல் இயற்கையின் அசைவுகள் ஒவ்வொன்றிலும் இலங்கிடும் எழிலை எண்ணாமல், விரிவானை, விண்வெளியை, மண்ணிற் புதைந்திருக்கும் கனிச் செல்வத்தை அதனைப் பெற்று இந்தப் பாரெய்த வேண்டிய மேம்பாட்டை, பண்பாட்டை நினைக்காமல், மங்கை முகத்தழகு மட்டுமே நினைப்பதும், பெண் பின் ஓடுவதிலேயே பொழுதினைப் போக்கவதுமாக ஒரு வேலையற்ற வீணர் கூட்டத்தை இன்று எழுத்துலகும் சேர்ந்து உருவாக்கி விட்டது! நேர்ந்த தவற்றை நிவர்த்தி செய்து, நல்வழியைக் காட்டக் குறிக்கோளோடும் கொள்கையோடும் எழுத்தாளர் முனைய வேண்டும்.
தமிழ்நாட்டை மொழி வழி மாநிலமாக பிரித்த பிறகும் மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே காங்கிரஸ் ஆட்சியிலே அழைத்து வந்தார்கள். விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 78 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தபோதும் காங்கிரசார் கற்பாறைப் போல் நின்றார்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டால் தமிழ் தேசியம் வென்று விடும் இந்திய ஒன்றியம் உடைந்து விடும் என்று வீணான அச்சம் பச்சைத் தமிழரை வாட்டிவதைத்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பூபேசு குப்தா அவர்களை தமிழர்கள் என்றென்றும் போற்றுவார்கள். ஏனெனில் அவர்தான் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட அரசியல் சட்டத்தின்முதல் அட்டவணையில் உள்ள ஏழாவது பதிவை திருத்தம் செய்யவேண்டும் என்று 1961 இல் பாராளமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்தவர் ஆவார்கள். பாராளுமன்றத்தில் அந்த தீர்மானத்தின் மீது அறிஞர் அண்ணா அவர்கள் மே 1963 இல் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்க தக்கது. அண்ணா பேசுகையில் குறுக்கிட்டு பேசிய நா. மகாலிங்கம் இந்த பெயர் மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் விளைய போகிறது-? என்று கேட்டார். அதற்க பதில் அளித்த அண்ணா பாராளுமன்றத்தை லோக்சபா என்று அழைத்தபோதும், மாநிலங்கள் அவையை ராஜ்யசபா என்று அழைத்தபோதும் நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள் அதே பயனை மதலாஸ் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றப் பெறும்போது அடையும் என்றார்.
அந்த தீர்மானம் காங்கிரசு பெரும்பான்மை பெற்றிருந்த பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் மொழி உணர்ச்சியால், மூண்டெழுத்த சினத்தீயில் காங்கிரசை சுட்டெரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றப் பிறகுதான் தமிழ்நாடு தமிழநாடாக பெயர் மாற்றம் பெற்றது! பல்வேறு மாநிலகளின் ஒன்றியமான இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் தனக்குரிய பெயரை சூட்டிக்கொள்ள எவ்வளவு ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது! தமிழ் தேசியம் உலகின் மூத்த மொழி குடும்பத்தின் பண்பாட்டு மீட்சிப் போரை உள்ளடக்கியதாகும். அப்போருக்குரிய மறவர்களாக அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விலைவாசிப் போராட்டத்தின் போது பெரும அளவ கைதியானாலும் மன்னிப்பு கோரி பிணையில் வெளிவந்தனர். அந்த பின்னணியில் தான் சீன போரின் போது திராவிட நாடு கோரிக்கையை அண்ணா அவர்கள் கைவிட்டார்கள்! அது கோழைத்தனம் அன்று. கையில் கிடைத்த திராவிட முன்னேற்றக் கழகமாம் கருவியை கொண்டு இயன்றவரை தமிழ்ப் பண்பாட்டு மீட்சிப் போரை முன்னெடுத்து செல்ல நாணலை போல் வளைந்து கொடுத்தார் அண்ணா.
அண்ணா தமிழர்களை பண்படுத்த தமிழ் வென்றெடுக்க கூடிய வீரர்களாக தமிழர்களை உருவாக்க கால அவகாசம் தேவை என்று கருதியே வளைந்து நௌ¤ந்து கொடுத்தார். அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழிந்து பிறகு அறிவு மயக்கும் அகற்றும் அறிவியக்கம் என்ற தலைப்பில் நம் நாடு இதழியல் 12.2.78 அன்று எழுதியதை மீண்டும் உங்கள் முன் நினைவூட்டுகிறேன். இருபத்திரெண்டு ஆண்டுகளுக்க முன்பு நான் எழுதிய கட்டுரை. அன்று கலைஞர் ஆட்சியில் இல்லை. இன்று கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்! அவருக்கு பின்னால் அண்ணாவின் எழுத்தை உள்வாங்கி நான் எழுதினேன்! அண்ணா நம்மை எல்லாம் எதற்காக உருவாக்கினார் என்பதை நினைவூட்டினேன். ஆனால் கலைஞரோ, கழகமோ தமிழக அரசோ, தமிழகத்தை ஆண்ட ஏனைய திராவிடக் கட்சிகளோ எதுவும் செய்யவில்லை தமிழகம் அப்படியே இருக்கிறது. இதை அண்ணாவின் மொழியில் சொல்வதானால். ஏ! தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழ்நாடே! தன்னை மறந்த தமிழ்நாடே தன்மானம் அற்ற தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கலையின் இலட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ்நாடே! ஏ சோர்வுற்ற தமிழ்நாடே!
வீறுகொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று ! புரட்சிக் கவிகளைப் போற்று! புத்துலக சிற்பிகளைப் போற்ற என்று மாணவரிடத்திலே அண்ணா மன்றாடினார். அவர் உள்ளே விடுதலை நெருப்பு அனையாமல் எரிந்தவண்ணம் இருந்தது. அந்த விடுதலைக் கனவை பிரிவினை தடைச் சட்டம் வந்த பிறகு அரசியல் தந்திரங்களுக்காக பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு அது பற்றி தம்பிகளுக்கு விளக்க அவர் எழுதிய இன்பஒளி நாடகத்தில் இப்படி சொல்கிறார்.
விடுதலை என்ற பேச்சு அளித்திடும் இன்பத்துக்கு ஈடாக வேறு ஏதும் இருந்திட முடியாது. பெற்றோம் விடுதலை என்று கூறிடும் போது மகிழ்ச்சி மட்டும் அல்ல, எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்பதனை நினைவில் கொண்டிடவும் அதன் பயனாக எழுச்சி மிக கொண்டிடவும் முடிகிறது. எழுச்சியுடன் நிற்பது இல்லை. பெற்றோம் வாழ்வு என்ற நம்பிக்கையையும் கருதுகிறது. எனவே எதிர்காலம் தெரிகிறது. எழில் தெரிகிறது ஏற்றம் தெரிகிறது. மங்கிய கண்கள் ஒளிவிடவும் வாடிய முகம் எல்லாம் மலர்ந்திடவும். என்றார் அண்ணா.
அண்ணாவை நினைத்து அவர் கனவை நிறைவேற்ற சூளுரை ஏற்போம்.

உலகினுக்கே வழிகாட்டும் ஒளி விளக்கு!


உலகினுக்கே வழிகாட்டும் ஒளி விளக்கு!

(கழகக்குரல் வார ஏட்டில் 03.10.1976ல் நந்திவர்மன் எழுதியது)


புதைச் சேற்றில் அகப்பட்ட மூங்கையெனத் தவித்த புகழார்ந்த தமிழ்க் குலத்தின் நிலை கண்டு கலுழ்ந்த அண்ணா,

கொள்கை - குறிக்கோள் இன்மையே

இன்றுள்ள நிலைமைக்குக் காரணம்

என்றார்.

கற்றுத் தேர்ந்த வித்தகர் பலரைக் காசினிக்கு அளித்த தமிழ் நிலத்தில் மட்டுமல்ல - உலகெங்குமே நிலவும் குழப்பத்திற்கும், அமைதியின்மைக்கும் கொள்கையின்மையே காரணமாக அமைந்துவிட்ட சூழலில் - சுழலில் நம் தலைமுறை சிக்கிக் கிடக்கிறது!

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகள், "காரல் மார்க்சின் கம்யூனிசமா? மேலை நாட்டு முதலாளித்துவமா?' என்ற கேள்விக்கிடையே வளரத் தொடங்கின.

"தென் கிழக்காசிய அரசியலில், அரசியல் கட்சிகளும் - அவற்றின் தலைவர்களும் மக்களைச் சரிவர இயக்க முடியாமல் போனமைக்குக் கொள்கை அடிப்படை இன்மையே காரணம்" என அரசியல் வித்தகர்கள் கூறுகின்றனர்.

"தனி நபர் விருப்பு - வெறுப்புக்கேற்ப ஏற்படும் கட்சிகளின் ஆயுள், குறுகிய காலத்தினதே" என்பதற்கு எடுத்துக் காட்டுக்கள் கிடைக்கின்றன. அரசியல் வரலாற்றில்!

நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் கட்சி இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.

ஆப்பிரிக்க நாடுகளிலும் இதே நிலைமை தான், "கவர்ச்சிகரமான சொல்லடுக்குகள், வலுவான அரசியல் பொருளியற் கொள்கைகளாக ஆகிவிடா என்பதற்கு அங்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் அகப்படுகின்றன.

அண்ணாவே சொல்லி இருக்கின்றார்- "கொக்கோ உற்பத்தியைப் பெருக்குவோம்" என்று முழங்கிய நிக்ரூமா, அதற்கு ஏற்ற சந்தைகளை உருவாக்கத் தவறியது பற்றியும், அதனால் உற்பத்தி பெருகியும் 'கானா' நாட்டுப் பொருளாதாரம் சீர்குலைத்தது பற்றியும்.

கொள்கை இல்லாமல் சீர்குலையும் நாடுகள், கிழக்கு அல்லது மேற்கு என்ற இரு வல்லரசு முகாம்களில் விழுகின்றன -- வீழ்ச்சியுறுகின்றன. 'இரவல்' பொருளாதார அரசியல் கொள்கைகளில் சிக்குகின்றன.

கருத்துக்கள் பிறப்பதற்குக் கருத்தடை ஏதுமில்லை.

கருவானவை உருவாவதும் உண்டு -- கருவிலேயே கருகிப் போவதும் உண்டு.

கருத்துக்களும் அவ்வாறே காலங் கடந்தும் காசினியில் நிலைப்பதும் உண்டு -- கண்முன்பே காற்றாகிப் போவதும் உண்டு.

காலம் உள்ளளவும் ஞாலம் உள்ளளவும், ஒரே கருத்தே ஏற்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. காலச் சுழற்சிக்கேற்பக் கருத்து வளர்ச்சியும்-மலர்ச்சியும் ஏற்கப்பட்டாகல் வேண்டும். இது, "தீது" என்றோ, "புதுக் கருத்து" உதயமாவது பேதைமை என்றோ அறிவுடையார் கூறார்.

அறிவு, தேங்கிய குட்டை நீரன்று -- தெளிந்த ஆற்று நீரோட்டம், ஊற்று நீரின் புதுப்புனலோட்டம்.

பிரெஞ்சுப் புரட்சி வெடித்ததன் பயனாய் அகிலம் அறிந்த அரசியல் நெறிகள் -- இரஷ்யப் புரட்சி உருவானதன் காரணமாக உலகம் உணர்ந்த உயரிய கருத்துக்கள் -- இவைகளோடு மனிதகுலம் பூண்டற்றுப் போக வேண்டுமா?

இன்னொரு புரட்சியோ -- புதுக் கருத்தோ -- பழைமைக்கு எதிரான அறிவின் பகுத்தறிவு ஒளியோ பிறக்காது என்று எவர்தான் பேசிட முடியும்?

"கொள்கை" அடிப்படையை "இரவல் சரக்கு" களாலே அமைக்க விரும்பாமல் கானா நாட்டு நிக்ரூமா, பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, புதியதொரு விஞ்ஞான சோஷலிசத்தை -- பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டில்லாமல், ஒழுக்க முதல் வாதத்தை அளவுகோலாக்கிச் சமூகப் பாகுபாடுகள் செய்யப் போவதாக -- உருவாக்கப் போவதாக உலகினுக்கு அறிவித்தார்.

கனவு கனவாகவே முடிந்திருக்கலாம், ஆனால், அந்த உந்துதலின் பின்னுள்ள உணர்வு, 'கொள்கை அடிப்படையை' வலுவாக்க வேண்டும் என்பதேயல்லாமல், 'கொள்கையே தேவையில்லை' எனக் கோமாளி அரசியல் நடத்தும் இங்குள்ள சிலரைப் போன்றதல்ல.

இந்த நிலைமைகள் எல்லாம் இல்லாமல், இன்பத் தமிழகத்திற்கு ஏற்றமளிக்கும் அரசியல், பொருளியல் கொள்கைகளை அதன் அடிப்படையில் அமைந்த அரசியலை பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கி விட்டார்.

அண்ணா உலகத் தலவைராக வேண்டியவர் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால்.

அத்தகு உயரிய இலக்கினை -- அண்ணா மலைப் பல்கலைப் கழகப் பேருரையில் பேரறிஞர் அண்ணா எத்துணை அழகுறத் தெரிவிக்கின்றார் தெரியுமா?

கையேந்தி இரந்து நிற்கும் இரவலனே இல்லாத கஞ்ச நெஞ்சனின் இதயமில்லாக் கடும் பார்வை விழாத தேவைகளே இல்லாத குற்றங்களே இல்லாத பொய்மையே இல்லாத பழிப்புரையே கேளாத உலகம்.

உடலாலும், உள்ளத்தாலும் பிணி வயப்படாத இனம் எங்கே வாணாள் நீடிக்குமோ எங்கே அச்சம் மடியுமோ எங்கே இன்பம் சுரக்குமோ எங்கே அன்பு ஆழமாகுமோ அத்தகு புன்னகை பூத்த நிலம் நோக்கிக் குடிசையிலே வாழுகின்ற மனிதனை இட்டுச் செல்லத் துடித்தாரே அண்ணா.

குவலயமே கொள்ளத்தக்க கொள்கை குறிக்கோள் அல்லவா இது.

இத்தகு கொள்கையை ஏந்திய தி.மு. கழகம், அத்தகு வலிவும் பொலிவும் வையத்திற்கே தேவைப்படும் தத்துவமும் கொண்டது என்பதனை அரசியல் வரலாற்றாசிரியர்கள் எழுதும் நாள் தொலைவில் இல்லை.





புதன், 23 செப்டம்பர், 2015

தமிழர் வரலாற்று மறு கட்டமைப்புக்கு நான் உழைக்க. முடியும்.

 புதுவையில் விளையாட்டாக நானும் இருக்கிறேன் அரசியல் மிருகங்களே என்னை இருட்டடிக்க முடியாது. இந்தியன்  எக்ஸ்ப்ரஸில் 52 வாரங்கள் இலக்கியம், வரலாறு, தொல்லியல், இசை, நடனம், ஓவியம், புவி அறிவியல், தமிழரின் உலகப் பரவல், பன்னாட்டு தொல்குடிகளிடம் தமிழ் வேர்கள் பற்றி எழுதி வந்தேன் 2004 முதல் 2005 வரை., அதை நிறுத்தி மகிழ்ந்தீர்கள். 2014 ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 10 கட்டுரைகள் எழுதிய போதும் கத்திரிக் கோல் போட்டீர்கள். தேர்தல் சூதாட்டத்தில் நான் பங்கேற்பது இல்லை இருந்தும் ஒரு அரசியல்வாதி எழுதலாமா ? இந்த பொறாமையால் தமிழரின் வரலாற்றுப் பதிவுக்கு நீங்கள் எல்லாம் இருள் திரை போட்ட போது எ. ஜே.கே தொலைக்காட்சி உரிமையாளர் ஜோன்குமார் எனக்கு வாய்ப்பு அளித்தால் 140 வாரங்கள் அறிவியல் அறிவோம் அறிவால் உயர்வோம்  என்ற தலைப்பிலும் வெளியே தெரியாத வரலாறு தலைப்பிலும் பேசினேன். இந்த கை எழுத்துப் படிகளை தொகுப்பாசிரியர் என்று போட்டு நூல்களாக வெளியிட ஒரு பேராசிரியைக்கு அனுமதி அளித்துள்ளேன். இந்த பேச்சுகள் மேலும் ஆராய தூண்டும்  நோக்கில் அமைந்தவை. ஆய்வு அரங்கங்களில் பல பல்கலைக்கழகங்களில் முன்பு எல்லாம் புதுவை பல்கலைக்கழகத்தில் என்னை பேசச் செய்து மகிழ்ந்த எஸ்.வி.நாராயணன், அ.அறிவுநம்பி ,எஸ்.ஆரோக்கியநாதன் , பேராசிரியர் சம்பந்தன் போன்றோர்   உலகின் எந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஏடு அளிக்க சொன்னாலும் ஓரளவு தமிழர் வரலாற்று மறு கட்டமைப்புக்கு நான் உழைக்க. முடியும்.

சனி, 28 ஏப்ரல், 2012

அகுச்தீன் பெனுவா விடும் அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்


கல்லூரியில் படித்த காலத்துக்கு பிறகு 43 வருடங்கள் புதுவை வந்தால் என்னைச் சந்தித்ததே இல்லை அகுச்தீன் பெனுவா, மார்ச் 2012 இல் சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் இருவரும் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றிப் பேசினோம்.

1967 ல் தமிழகத்தில் அறிஞர் அண்ணா முதல் அமைச்சரானார். 1968 இல் தாகூர் கலைக் கல்லூரி மாணவர் மன்றம் தொடங்க தமிழக கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் வந்தார். அப்போது மாணவர் தலைவர் அகுச்தீன் பெனுவா.

2012 மார்ச்சில் என்னிடம் கதை விட்டார் தனித் தமிழ்நாடு கிடைத்தால் நீ தான் பிரான்சுக்கு தமிழ் நாட்டின் தூதுவர் என அண்ணா இவரிடம் சொன்னதாக முதல் புளுகு மூட்டையை என்னிடம் அவிழ்த்தார்.

 தி.மு.க கேட்டது திராவிட நாடு .அதுவும் சீனா இந்தியாவை ஆக்கிரமித்த போது 1962 ல் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் வீடு இருந்தால் தான் ஓடு மற்ற முடியும், நாடு இருந்தால் தான் தனி நாடு கேட்க முடியும்,எனவே தி.மு.க பிரிவினைக் கோரிக்கையை கைவிடுகிறது என அண்ணா பேசினார்.

 தி.மு.க வை ஒடுக்க பிரிவினைத் தடைச் சட்டத்தை நேரு அரசு கொண்டு வந்ததும் அப்போதுதான். சி.பா.ஆதித்தனார் தான் தனித் தமிழ் நாடு கேட்டவர்.

அண்ணா கேட்காத தமிழ் நாடு பற்றி அண்ணா 1968இல் அண்ணாவையே சந்திக்காத பெனுவாவிடம் கூறினாராம். இந்த வரலாற்றுப் பொய்களுக்கு நான் தலை ஆட்டத்தால் எங்கள் நட்பில் முதல் விரிசல் ஏற்பட்டது. வி.எம்.சி. ராஜா எங்களோடு இருந்தவர். நாவலரை அழைக்க உடன் சென்றவர். அவரும் நானும் சாட்சி, நடக்காத ஒன்றை இட்டுக் கட்டி பீற்றிக் கொள்ளும் இந்த குணம் பெனுவாவின் இன்றைய சரிவுக்கு முதல் காரணம் .


என வரலாறு திறந்த புத்தகம். எனக்கு விருது கொடுக்க சென்னை வரச் சொல்லிவிட்டு நான் ஒரு ஒசி காரில் சென்னை போனால் அந்தக் காரில் இவருக்கு வேண்டிய அம்மையாரை அழைத்து வரவில்லை என்பதையே பெரிய கொலைக் குற்றம் போல ஊரில் பேசிப் பேசி என் நட்பு நானே முறித்துக் கொள்ளும் நிலைமை உருவாக்கியவர்.

எம்.ஜி ஆரையே என சுயமரியாதை பெரிதென்பதால் துச்சமென நினைத்தவன். அண்ணா தி.மு.க தோற்றமும் நந்திவர்மன் வெளியேற்றமும் என்றத் தலைப்பில் என இணைய தளத்தில் அந்தக் காலப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளே சாட்சி.


அவரே தவறு உணர்ந்து எஸ்.டி. சோமசுந்தரத்தை என்னிடம் அனுப்பி மீண்டும் வருக என் எம். ஜி. ஆர் கேட்டதற்கு வாழ நாள் முழுதும் அவர் வீட்டு படியை மிதிக்க மாட்டேன் என்றவன் நான்.

பணக்காரனின் ரகசிய வாழ்க்கைக்கு எடுபிடியாக இருக்கும் அவசியம் எனக்கு எந்த வயதிலும் ஏற்பட்டதில்லை. ஏற்படாது.

பெனுவா பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் புளுகு மூட்டைகள் தேர்தலில் விவாதிக்கப்படும் ஆங்கிலத்தில், பிரெஞ்சில், தமிழில்.

நந்திவர்மன்















திங்கள், 27 ஜூன், 2011

புதுவையில் உதயமான அண்ணா திமுகழகம்

புதுவையில் ஏன் வளரவில்லை? 


 1972ல்தோன்றிய அ.இ.அ.தி.மு.க துவையில் மட்டும் வளராமல் இருப்ப தன் காரணம் என்ன? திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் பழைய வரலாற்றை நினைவூட்டினார்.

அண்ணா தி.மு.கழகம் உதயமானபோது செயலலிதா அதில் இல்லை. அண்ணா தி.மு.கழகம் புதுச்சேரியில் தான் உதயமானது என்ற வரலாறும் அவருக்குத் தெரியாது.1969ல் பரூக் மரக்காயர் தலைமையில் தி.மு.கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைச்சரவை நடத்தின. காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.கழக முதல்வராக இருப்பதா? என பழைய தி.மு.கவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வரான பிறகு 1969ல் புதுவையில் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுக்கப்பட்டது. அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏ. கோவிந்தசாமி அடிக்கடி புதுவை வருவார். அவரது உறவினர்கள் நேருவீதி – காந்தி வீதி சந்திப்பு அருகில் இன்றும் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வீடு அம்பலத்தாடுமய்யர் மடத்து வீதியில் இருக்கிறது. புதுவை வரும் தமிழக அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவரது உறவினரான கிருஷ்ணராஜ் மூலமும் பழைய தி.மு.கழகத்தவரும் பின்பு அமைச்சராக இருந்தவருமான பெருமாள்ராஜா மூலமும் காங்கிரசிலிருந்த எதுவார்குபேர் அவர்களை தி.மு.கழகத்துக்குள் கொண்டு வந்தனர். பட்டுக்கோட்டை குமாரசாமி நவமணி நாளிதழ் ஆசிரியர். அவர் மூலமும் சென்னை மேயராக இருந்த மைனர் மோசசு மூலமும் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்துக்குள் சேர்ந்தார். அவரை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினராக்க எம்.ஏ.சண்முகம் வட்டச் செயலாளராக இருந்த வட்டக் கழகம் ஒப்புக்கொள்ளவில்லை. புதுவை வட்ட தி;.மு.க தென்னாற்க்காடு மாவட்டச் செயலாளர் குறிஞ்சிப்பாடி இரா. சாம்பசிவத்தின் கீழ் வட்டக் கழகமாக இருந்தது.

காரைக்கால் வட்டக் கழகம் முன்னாள் முதல்வர் எஸ். ராமசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தஞ்சை மாவட்டச் செயலாளராக மன்னை நாராயணசாமி இருந்தார். புதுவையில் உறுப்பினராகாத ஒருவர் திமுக அரசின் முதல் அமைச்சர். அப்போது மத்திய அரசு சம்பள விகிதம் புதுச்சேரியில் அமுலானது. தமிழ் ஆசிரியர்களை விட இந்தி ஆசிரியர்க்கு கூடுதல் சம்பளம். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் பேரணியில் பங்கேற்று நான் இதை கண்டித்தேன். மாநில சுயாட்சிக்கும் புதுவைக்கும் சம்மந்தமில்லை என சட்டமன்றத்திலேயே பேசி பரூக் மரக்காயர் கண்டனத்துக்கு ஆளானார். புதுவை பல்கலைக்கழகத்துக்கு அரவிந்தர் பெயர் சு10ட்ட முனைந்தும் எதிர்ப்பை சம்பாதித்தார். உள்துறை அமைச்சராக இருந்த இராமசாமியின் இலாக்கா பறித்தும் எதிர்ப்புக்கு ஆளானார். எம்.ஏ.சண்முகம் தலைமையில் மாவட்ட திமுக கழகமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது கட்சி! கட்சி ஆட்சியை கடுமையாக விமரிசித்தது. இதனால் மாவட்டக் கழகத்தை கலைத்து பரூக் மரக்காயரை மாநில அமைப்பாளராக்கினார்கள். அந்தச் சு10ழ்நிலையில் தமிழ்நாட்டில் திமுகழகம் உடையப்போகிறதுää அண்ணா பெயரில் கட்சி உருவாகும் என மாணவர் தி.மு.க செயலாளரான என்னிடம் முன்கூட்டியே கூறியவர் எங்கள் குடும்ப நண்பர் துணை நிலை ஆளுநர் பி.டி.ஜாட்டி ஆவார். எனவே எம்ஜிஆருக்கும் முன்பாக புதுவையில் அண்ணா பெயரில் கட்சி தொடங்குவது பற்றி புதுவைக் கடற்கரையில் கலைக்கப்பட்ட மாவட்டக் கழகப் பிரதிநிதிகள்ää சிவலிங்கம்ää செல்வம்ää இந்து நடராசன்ää அலைஓசை வைத்தியநாதன்ää முத்தையன்ää துரை அரிராமன் உள்ளிட்டோருடன் மாணவர் தி.மு.கழக மாநிலச் செயலாளர் ஆகிய நானும் விவாதித்தோம் 17 நாட்கள் இந்த விவாதம் நடந்தது. 42 கிளைக்கழகச் செயலாளர்களை நாங்கள் அணுகினோம்.

புதுவைப் பதிப்பு நாள் ஏடுகள் இல்லாத காலம். தந்தி மூலமே இந்து நடராசனும் சுதேசமித்திரன் விசயபாரதியும் நவமணி இராசமாணிக்கமும் செய்தியை அனுப்பிய காலம். அண்ணாயிஸ்ட் தி.மு.கழகம் என்ற புதுக்கட்சி துவக்க அறிவிப்பை நானும் (நந்திவர்மனும்) சிவலிங்கமும் செல்வமும் வெளியிட்டோம். தமிழ்நாட்டில் அனகாபுத்தூர் இராமலிங்கம் அண்ணா திமுகழகப் பெயரை இரண்டு நாள் கழித்துச் சொன்னார். ஆக செப்18-1972ல் தினமணி முதல்பக்கச் செய்தியாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர் தமிழகம் புதுவையில் கட்சி அமைப்பு என ஒரே செய்தியாக வெளிவந்தது. அப்போது அகில இந்திய வானொலி 7.15 இரவு டில்லியில் இருந்து வெளியான செய்தி அறிக்கையில் 42 தி.மு.கழகக் கிளைகள் உடனடியாக அண்ணா திமுகவில் இணைந்த செய்தியை ஆல் இன்டியா ரேடியோவில் பணியாற்றிய ராசாவும் குழந்தைவேலும் ஒலிபரப்பச் செய்தார்கள். திமுகழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரில் உள்துறை அமைச்சர் இராமசாமிää பொதுப்பணி அமைச்சர் தெ. இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் அண்ணா திமுகவுக்கு துவங்கிய உடனே இணையத் தயாராக இருந்தார்கள். ராமசாமியின் நெருங்கிய நண்பனான நான் முன்கூட்டியே அண்ணா திமுகவுக்கு அனுப்பப்பட்டேன். திமுகழக மாவட்டப் பிரதிநிதி சிவலிங்கத்தை மாநில அமைப்பாளராக்கிவிட்டு அண்ணா திமுகழக தமிழ்நாடு புதுவை மாணவரணியை ஏற்பது என் திட்டமாக இருந்து எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக நா. மணிமாறன் இருந்தார். பேரொளி பத்திரிகையும் நடத்தினார். காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.க அமைச்சரவைக்கு தலைமையா? என்ற கோபத்தில் பிறந்த அண்ணா தி.மு.கழகம் புதுவை முதல்வர் மீது அடுக்கடுக்காய் புகார்களைக் கூறியது. துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டியிடமும் சேத்திலாலிடமும் ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டது.

காமராசர் சந்திப்பு

பரூக் அமைச்சரவை மீது விசாரணைக் கமிஷன் அமைக்க ஒரு நாள் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் நாடினேன். பழைய காங்கிரஸ் தலைவராக இருந்த ஜீவரத்தின உடையார்” காமராசர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்” நாங்கள் முழு அடைப்பில் பங்கேற்கிறோம் என்று சொன்னார் சென்னை சென்று புதுடெல்லியில் இருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் செய்தியாளர் வி.எஸ்.மணியத்தை அழைத்துக்கொண்டு திருமலைப்பிள்ளை சாலை-திநகரில் உள்ள காமராசர் இல்லத்தில் 11.11.1972 அன்று காமராசரை சந்தித்துப் பேசினேன். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் புதுவை அண்ணா தி.மு.கழக தலைவர் காமராசரை சந்தித்தார் என்று 12.11.1972 ல் செய்தியாக வெளிவந்தது. அன்று மாலையே காமராசரை சந்திக்க நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என அதிமுக நாளேடான தென்னகத்தில் அறிக்கை தலைமையால் வெளியிடப்பட்டது. தலைமைக் கழக அவசர அழைப்பினை ஏற்று சென்னை சென்று லாயிட்சு சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை சந்தித்தேன். காமராசரை கடுமையாக விமர்சித்த எம்.ஜி.ஆர் தன்னைச் சுட எம்.ஆர்.ராதாவை ஏவிய ஒருவரை நீ போய் பார்ப்பதா? என்று என்னை திட்டினார். புதுவை மாநில அதிமுகழக நிலைமையை மாநில அமைப்பாளரான நான் சொல்லாவிட்டால் வேறு எப்படி அண்ணே கீழ்மட்ட நிலை தெரியும் என நான் சொன்னதற்கு “என்னிடம் குறுக்கு கேள்வி கேட்கும் வக்கீல்கள் எனக்குத் தேவையில்லை என்று சாடினார். நான் மௌனமாக தலை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். கோபம் தணிந்த எம்.ஜி.ஆர் சரி! சரி தலைமை அனுமதி இன்றி காமராசரை சந்தித்தற்கு வருத்தம் தெரிவித்து எழுதி தருமாறு சொன்னார். அவ்வாறே செய்தேன். ஏடுகளில் காமராசர் சந்திப்பு பற்றி மட்டுமே செய்தி வந்திருந்தது. மகாத்மாகாந்தி மகனுக்கும் இராஜாஜி மகளுக்கும் பிறந்த நண்பர் இராஜ்மோகன் காந்தி மூலம் ராஜாஜியை நான் சந்தித்திருந்தேன். புதுவை பரூக் அரசுக்கு எதிரான ஆதரவை திரட்டவே இந்தச் சந்திப்புகள்.

எம்.ஜி.ஆர் இருந்த அறையை விட்டு வெளியே வந்த என்னை வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஜேப்பியார்ää வழக்கறிஞர் பி.டி.சரசுவதிää ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் ஆறுதல் கூறினர். நீங்கள் அண்ணன் எதிரே உட்கார்ந்திருக்கக் கூடாது! வளரவேண்டிய இளைஞர் என்பதால் என் அறிவுரை என்றார் ஆலந்தூர் மோகனரங்கன். புதுவையில் குபேர் வீட்டுச் சோபாவில் நமக்க இணையாக ரிக்ஷா ஓட்டுபவரும் உட்காhந்திருக்கும் பிரெஞ்சு சமத்துவம் நினைவுக்கு வந்தது. எம்.ஜி.ஆர்க்கு என்மீது கசப்பு ஏற்பட இந்தச் சம்பவம் காரணமாயிற்று.

பெரியவர் நெடுங்காடு ப.சண்முகம் அப்போது எதிர்க்கட்சித்தலைவர். காங்கிரசில் 10 உறுப்பினர்கள் இருந்தார்கள். திமுகவில் இருந்து இராமசாமி - இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வெளிவந்தால் ஆட்சி கவிழும். 6 பேர்கள் வெளியே வருவார்கள் அவர்கள் பெயர் அறிவிக்கப்படும் என தினமணியில் பேட்டி அளித்த நான் ஆளுநரைச் சந்தித்தேன். சுபாநாயகர் செல்வராசை சந்தித்து சட்டமன்றத்தை கூட்டுமாறு கேட்டிருந்தேன்.

தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி புதுவை திமுக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தது. மக்கள் தலைவர் வ. சுப்பையா அமைச்சர். டாக்டர் என்.ரங்கநாதனும் குருசாமியும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் பரூக் அரசை விட்டு வெளியேறி இருந்தால் எம்.ஜி.ஆர் கட்சி துவக்கியவுடனே புதுவையில் ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் புதுவையில் அண்ணா தி.மு.கழக ஆட்சி வர முடியாமல் போனதற்கு கல்யாணசுந்தரம் காரணம். மக்கள் தலைவர் வ. சுப்பையா எந்தையார் மீதும் என் மீதும் மிகுந்த அன்புடையவர் ஆவர். மாஸ்கோ மருத்துவமனையில் இருந்த போது நீங்கள் மட்டும் திராவிடக் கம்யூனிஸ்ட் கட்சி என்று கட்சி நடத்தி இருந்தால் உங்கள் தலைமை ஏற்றுச் செயல்பட்டிருப்பேன் என நான் மடல் எழுதியதும் பழங்கதை. திமுககழக – கம்யூனிஸ்ட் கூட்டணி அமைச்சரவையில் வ. சுப்பையா இருந்தார். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் முழுநேர ஆலோசகர்களாக கலியாணசுந்தரமும் பாலதண்டாயுதமும் இருந்தார்கள். சுப்பையா இல்லத்தில் என் தலைமையில் சிவலிங்கம் செல்வம் துரை. அரிராமன்ää புலவர் கந்தக் கண்ணன் எம்ஜிஆர் மன்றச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலியாணசுந்தரத்தைச் சந்தித்து தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் கூட்டு புதுவையில் திமுகவுடன் கூட்டணி என்று இரட்டை நிலைப்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுப்பது சரி அல்ல என வாதாடினோம். சுப்பையாவின் தனிச் செயலாளரான ஜிம்மிராபர்ட்ஸ் இந்தச் சந்திப்புக்கு சாட்சியாவார். 3 உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் புதுவையில் திமுகழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் திமுகவில் இருந்து அண்ணா திமுகவுக்கு வரத் தயாராக இருந்த ராமசாமிää ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் ப. சண்முகம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அவர் கிழிருந்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் கூடி கூட்டணி அமைச்சரவை உருவாகி இருக்கும். அண்ணா திமுகழகம் துவங்கிய இரண்டே மாதத்தில் புதுவையில் ஆட்சியை பிடித்து இருக்கும். ஆனால் தி இந்து நாளேடு வழியாக கம்யூனிஸ்ட் தலைவர் கலியாணசுந்தரம் சொன்னார் : “தமிழகமும் புதுவையும் வேறு வேறு மாநிலங்கள். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் உள்ளோம். புதுவையில் திமுகவுடன் இருக்கிறோம் இதில் தவறில்லை என்றார்.

அண்ணா திமுகழக அமைப்பாளரான நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வாயிலாக பதில் அளித்தேன். புதுவையில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அந்தஸ்தே கொண்டது. மாநில தகுதி இல்லாதது. எனவே தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் ஒரு மாவட்டமாக உள்ள புதுவை அண்ணா திமுக அணிக்கே வர வேண்டுமென அறிக்கை விட்டேன்.

கம்யூனிஸ்டுகளுக்கு கோபம் கொப்பளித்தது. அப்போதைய எம்எல்ஏ டாக்டர். ரங்கநாதன் நானும் (நந்திவர்மனும்) சில வெள்ளைக்காரர்களும் இருக்கும் படத்தை எம்ஜிஆரிடம் காட்டி நந்திவர்மன் ஒரு அமெரிக்க உளவாளி என வத்தி வைத்தார். இதை நம்பிய எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து 3 மாதத்துக்குள் நந்திவர்மனை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து சொந்த அலுவல் காரணமாக சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை 26.12.1972 அன்று வெளியிட்டார்.

நந்திவர்மன் ஆகிய நான் காமராசரை சந்தித்து இருந்ததால் பழைய காங்கிரஸ் நாளேடு இந்த சஸ்பெண்டை கண்டித்து தலையங்கம் எழுதியது. திமுகழகத்தின் வார ஏடான மாலைமணி கண்டித்தது. பம்பாயிலிருந்து வெளிவந்த கரண்ட வார ஏடும் புதுடெல்லியில் இருந்து வெளிவந்த ஸ்டேட்ஸ்மென் நாளேடும் இது பற்றி கட்டுரைகளை வெளியிட்டன.

மகாத்மா காந்தியின் மகனுக்கும் இராஜாஜியின் மகளுக்கும் பிறந்த ராஜ்மோகன் காந்தி நடத்தி வந்த மாரல் ரீ-ஆர்மமெண்ட் அமைப்புக்கு புதுவை மேயர் குபேர் மூலம் மாநகராட்சி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வரவேற்பில் கலந்து கொண்ட அயல்நாட்டவருடன் நான் (நந்திவர்மன்) இருக்கும் படத்தை காட்டி அமெரிக்க உளவாளி முத்திரை குத்தினார்கள்.

கோவலனை விசாரிக்காமல் கொலைக்களத்துக்கு அனுப்பிய பாண்டிய நெடுங்செழியன் போல விசாரிக்காமலே அண்ணா திமுக ஆட்சி அமைக்க பாடுபட்ட நான் தண்டிக்கப்பட்டேன். இலாயிட்சு சாலையில் நான் நடந்து வந்ததும் அவ்வழியாக வந்த முரசொலிமாறன் என்னை அழைத்துச் சென்று கலைஞரிடம் விட்டதும்ää மீண்டும் கழகம் வர கலைஞர் அழைப்பு விட்டதும் புதுவை அண்ணா திமுகழகம் - திமுகழகத்தின் இணைந்த செய்தியை முரசொலி வெளியிட்டதும் பழங்கதை.

என்னை நீக்கிய பிறகு எம்ஜிஆர் ஏடுகளில் எதிர்கொண்ட விமர்சனங்களால் புதுவையை சேர்ந்த யாரையும் அமைப்பாளராக்காமல் சினிமா டைரக்டர் கோபாலகிருஷ்ணனை ஆறுமாதமும் அனகாபுத்தூர் ராமலிங்கத்தை ஆறுமாதமும் டெபுடேஷனில் புதுவைக்கு அனுப்பி அமைப்பாளராக செயல்படவிட்டது 1974 தேர்தலுக்கு முன் நடந்த நிகழ்வுகள்.

முதற்கோணல் முற்றும் கோணல் ஆனது!  அண்ணா திமுக தோள் மீதேறி கம்யூனிஸ்ட் முதல்வராகலாம் என கணக்குப் போட்டு என்னை வெளியேற்றினார்கள். அன்று தவறிழைத்த அதிமுக தலைமை புதுவையில் தகுதி வாய்ந்த முதல் அமைச்சர் வேட்பாளரை இன்றுவர உருவாக்காததால் அண்ணா திமுகவை ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியாகவே மக்கள் கருதவில்லை.  

அண்ணா திமுக பெயர் அறிவித்து கொள்கை அறிவித்து சட்டதிட்டம் வகுத்துக் கொடுத்த என்மீது அமெரிக்க உளவாளி என அபாண்டம் சுமத்திய கட்சித் தலைவிக்கு கட்சி துவக்கும் போது உடனிருந்தால்தானே பழைய வரலாறு தெரியும். இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.

சனி, 29 மே, 2010

மொரீசியஸ் தீவும் புதுச்சேரி அடிமைகளும்

நந்திவர்மன்…

நீக்ரோக்களுக்கு அடிமைத் தளையில் இருந்து விடுதலை கிடைத்தது. அதுவரை அவர்கள் செய்த வேலைகளைச் செய்ய இந்தியாவில் இருந்தே அடிமைகள் கொண்டு செல்லப்பட்டனர்.

கல்கத்தா துறைமுகம் 1838 பிப்ரவரியில் ஒரு கப்பல் புறப்பட்டது. சோட்டா நாக்பூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 420 மலைவாழ் பழங்குடிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பல் 5 மே 1838 ல் கயானாவை அடைந்தது. இதில் 50 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவர். 5 வருட ஒப்பந்தக் கூலிகளாக இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பயணத்தின் போதே நோய் வாய்ப்பட்டு பலர் இறந்தார்கள். வேலைப்பளு அவர்களை நசுக்கிச் சாகடிக்கும் என உணராமல் வெளிநாட்டில் வேலை! நல்ல காலம் பொறக்குது என நம்பிச் சென்றார்கள். உடல் நலமில்லாமல் ஏழு நாட்களுக்கு அவர்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றால் 24 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த 24 டாலர்கள் அவர்கள் 6 மாதம் பெற வேண்டிய கூலிக்கு ஈடாகும். இப்படிப் போனவர்கள் மதுவுக்கு அடிமையானார்கள். பெண்கள் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் பல ஆண்களுக்கு ஒருத்தி மனைவியாகும் நிர்பந்தம் நேரிட்டது. இப்படி 172 ஆண்டுகளுக்கு முன்னால் சென்ற இந்தியக் கூலிகளின் அவல நிலையை படம் பிடிக்கும் குறும்படம் “ஜகாஜி பாய்”. உருது மொழித் தலைப்புக்கு கப்பல் சகோதரர்கள் என்று பொருள்படும. சுரேஷ்குமார் பிள்ளை இயக்கித் தயாரித்த இந்தப்படம் 2003 ல் இந்தியாவிலும் கரீபியன் கடல் நாடுகளிலும் திரையிடப்பட்டது. 103 வயது முதியவர் இந்தியாவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்டதை படத்தில் விவரிக்கிறார். “கயானா உறுமுகிறது” இயக்கத்தின் தலைவர் ரவி தேவ் பேட்டியும் படத்தில் நம் கூலித்தொழிலாளர் பட்ட துன்பங்களை பதிவு செய்கிறது.

பிரெஞ்சு இந்தியா

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து அடிமைகளை கொண்டு வருவதை மனச்சாட்சியுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கவே அது நின்றது. பிரெஞ்சிந்தியா வசமிருந்த புதுச்சேரிää காரைக்கால்ää மாகே. சந்திரநாகூரில் இருந்து 1854 க்கும் 1920க்கு மிடையே 50000 இந்தியர்கள் கூலிகளாக கெடிலோப்புக்கும் மர்த்தினிக் தீவுகளுக்கும் இட்டுச் செல்லப்பட்டனர். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கொண்டு செல்லப்பட்ட இவர்கள் பட்ட வேதனைகளை சொல்லும் குறும்படம் சாங்ஸ் ஆப் மலபாரிஸ் ஆகும். நெதர்லாந்து நாட்டின் ஓஎச்எம் மீடியா நெட்ஒர்க் தயாரித்து நெதர்லாந்து தேசிய தொலைக்காட்சியில் சு10ன் 2004 ல் இப்படம் ஒளிபரப்பானது. இதனை இயக்கியவரும் சுரேஷ்குமார் பிள்ளை ஆவார்.

பிரிட்டிஷ் சாம்ராஜியமெங்கும் 1807 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் இந்தியாவிலிருந்து மில்லியனுக்கும் மேற்பட்ட கூலிகளை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வந்த கொடுமைகளை பிபிசி தொலைக்காட்சியே கூட படம் பிடித்துக் காட்டியது. 2005 ல் இது வெளியாயிற்று.

ஆனால் எந்தத் தகவல் தொடர்பு வசதிகளோ இன்றுள்ளது போல் இல்லாத அந்தக் காலத்திலேயே உலகப் பார்வை கொண்ட மகாகவி பாரதியார் ஒருவரே கரும்புத்தோட்டத்திலே இந்திய அடிமைகள் பட்ட கொடுமைகளை பதிவு செய்தவராவர்.

புதுச்சேரியில் பிறந்து பிரான்சில் ஸ்டாரஸ்பர்க் நகரில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா 2007 ல் வெளியிட்ட நீலக்கடல் நாவலில் வரலாற்றுச் செய்திகள் தேதிக் குறிப்புகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து மொரீஷியஸ் தீவுகளுக்கு அடிமைகள் கடத்தப்பட்டதைக் கூறும் இந்நாவல் 2007ல் புலம்பெயர் தமிழிலக்கியப் படைப்புகளில் சிறந்த படைப்புக்கான தமிழக அரசின் விருதை பெற்ற நாவலாகும்.

மொரீஷியஸ் தீவுக்கு பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே தமிழர்கள் வந்து போன அடையாளங்கள் அகழ்வாராய்ச்சியில் அகப்படுகின்றன. இதை மொரீஷியஸ் தமிழர்கள் என்ற பிரெஞ்சு நூலில் ராமு சு10னியமூர்த்தி பதிவு செய்துள்ளார். பதினேழாம் நூற்றாண்டில் புதுச்சேரித் தமிழர்கள் எப்போது சென்றனர்? 1686 ல் அங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அங்கிருந்த 269 நபர்களில் இந்தியரும் இருந்துள்ளனர். பிரெஞ்சுத் தீவு என்று அப்போது அழைக்கப்பட்ட மொரீஷியஸ் தீவின் கவர்னராக 1727 ல் இருந்த துய்மா 1728 ல் புதுச்சேரி சென்றார். அங்கிருந்து 95 கொத்தனார்களையும் நூற்றுக்கணக்கில் சிறுவர் சிறுமியரையும் பிடித்துக்கொண்டு வந்தார் என்பதை பிரெஞ்சிந்தியர்கள் என்ற தலைப்பில் மொரீஷியஸ் தலைநகரான போர்ட் லூயியில் 1965 ல் வெளிவந்த நூல் பதிந்துள்ளது. 1735 ல் பெட்ராண் பிரான்சுவா மாகே தெ லபோர்தொன்னே கவர்னரானபோது துறைமுகம் விரிவாக்கம் செய்யவும் பிரெஞ்சிந்திய கம்பெனிக்கு தானியசேமிப்புக்கிடங்கு கட்டவும் கப்பல் கட்டும் தொழிலாளர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் கொத்தனார்களையும் புதுச்சேரியில் இருந்து அழைத்து வந்தார். ஒப்பந்தத் தொழிலாளர்களாக குறைந்த கூலிகளுக்காக இவர்கள் சென்றனர். இதனால் ஏற்கனவே அங்கிருந்த பூர்வீகக்குடிகளான மல்காஷ்ää கனாரிகள்ää கிறேயோல் மக்களின் வாழ்வு பின்னடைந்தது. இவர்களை அவர்கள் எதிரிகளாகப் பார்க்கலாயினர். அப்படியென்ன சொகுசு வாழ்வு புதுச்சேரித் தமிழர்களுக்கு கிடைத்தது? மக்காட்ச்சோளமும் மரவள்ளிக்கிழங்குமே உணவு. ஏஜமானர்களின் பிரம்படிக்கு இவர்கள் ஆட்படவேண்டும்.

ஒழுங்கற்ற சாலைகளில் இந்தியத் தமிழர்களுக்கென உருவாக்கப்பட்ட “கபான்” கள் என்ற குடியிருப்புகள். மரப்பலகையால் உருவான அக்குடியிருப்புகளுக்கு கூரைகள் இல்லை. இலை தழை போட்டு மூடப்பட்ட வீடுகள் நமது ஊர் குடிசைகளை விட மோசமானவை. பண்ணையில் அடிமை வேலை தாக்குபிடிக்க முடியாமல் தப்பிக்க முயற்சிப்பவர்களுக்கு கறுப்பர் சட்டத்தின் கீழ் கடும் தண்டனைகள் காத்திருந்தன. முதல் முறையாக தப்பி ஓடினால் இரண்டு காதுகள் மட்டும் அறுத்து எறியப்படும். இரண்டாவது முறை தப்பினால் மரணதண்டனைதான்!

அடிமைகள்-விடுவிக்கப்பட்டவர்கள்-ஒப்பந்ததொழிலாளர்கள் மொரிசியஷில் அனுபவித்த வேதனைகளை ரிச்சர்டு பி. ஆலன் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி தமிழர்களை அடிமைகளாக்கிய பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரம் எப்படி நடந்தது? இனி தெரிந்து கொள்வோம்! “லே பொந்திச்சேரி” என்ற வர்த்தக கப்பல். 40 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் நிறைய பாய் மரங்களும் கொண்ட 1200 டன் பொருட்கள் ஏற்றக்கூடிய பிரெஞ்ச்;கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான கப்பல். இந்தக் கப்பல் மொரிசியஸ்; துறைமுகமான போர்ட் லூயியில் இருந்து புறப்பட்டது. அதில் இந்திய வியாபாரிகளுக்கென சுத்தமான தங்கமும் வெள்ளியும் போக புதுச்சேரி கவர்னருக்கும் அவரை சார்ந்தவர்கள் மற்றும் கம்பெனி ஊழியர்களுக்காக இரண்டாயிரம் பாட்டில் பொர்த்தோ சிகப்பு ஒயின்ää சாராயம்ää கோதுமை மாவுää பதப்படுத்தப்பட்ட பால்கட்டிää பன்றி – மாடு இறைச்சிää இரும்புத்தகடுகள்ää துப்பாக்கிகள் அவைகளுக்கான ரவைகள் கொண்டு வரப்பட்டன.

பிரான்சின் சேன் மாலோ பகுதியை சார்ந்த தரகர்கள் ஸ்பெயினின் காலனி நாடுகளில் பெறப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்கம்ää வெள்ளி இவற்றை இந்தியாவில் இறக்கி விட்டுவிட்டு பதிலாக இந்தியாவில் இருந்து பட்டு தணிகளையும் வாசைன திரவியங்களையும் கொள்ளை இலாபத்திற்கு கொண்டு செல்வார்கள்.

பிரான்சின் ஓரியண்ட் துறைமுகம் கடும் குளிரில் கப்பல் புறப்பட்டு அட்லாண்டிக் கடலில் பாய் விரித்து கஸ்கோஜன் வளைகுடாவில் மெல்ல ஊர்ந்து ஆப்ரிக்காவின் கொரே துறைமுகத்துக்கு வருவர். இங்கு சில நாட்கள் ஓய்வு. பிறகு போதிய காற்று இல்லாமையால் ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையை கடக்க நான்கு மாதமாகும். நான்கு மாதம் கடலில் இருந்து விட்டு தரை இறங்குபவர்களுக்கு மொரிஷியஸ் ஒரு சொர்க்கம் போல தோன்றியது.

இப்படி இந்தியா வர நடுவில் தங்கி இளைப்பாறும் தீவை ஆண்ட பிரெஞ்சு கவர்னர் லபூர் தொனே சம்பாதித்ததை பார்ப்போம். “கணக்கெழுதும் உதவியாளரை வரவழைத்து சொந்த வியாபாரத்தின் வரவு செலவுகளை எழுதி வைத்திருந்த பேரேடுகளை கொண்டு வர சொன்னார். மூன்று இலட்சம் பவுனில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகள் பதினோரு இலட்சத்தை தொட்டுள்ளது. பாரிஸை சார்ந்த ழான் கொத்தான் என்ற வங்கி அதிகாரி மூலம் வடக்கு ஐரோப்பிய வணிகத்தில் செய்திருந்த முதலீடு மட்டும் இந்த வருடத்தில் 46000 பவுன் சேர்ந்துள்ளது.” என்று படித்தவர் மகிழ்ந்ததாக ஒரு நூலில் பதிவுள்ளது.

இப்படி இவர்கள் சம்பாதிக்க அடிமை வியாபாரமும் புதுச்சேரியில் நடந்தது. ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின்படி “ கடந்த சில வருடங்களாகவே ஆடுää கோழி களவு போவதை போலவே மனிதர்களும் களவு போனார்கள். தங்கள் சொந்த பந்தங்களை தொலைத்துவிட்டு கஷ்ட ஜீவனம் செய்யும் மக்கள் பொழுது சாய்ந்தால் அழுவதும் விடிந்தால் விதியை நொந்துகொண்டு வயிற்று பாட்டுக்கு அலைவதுமாய் இருந்தவர்கள் வயிற்றில் பால் வார்த்தது போல அந்த செய்தி வந்தது. வெகு நாட்களாக ஆட்களை கடத்தும் கூட்டத்தை நேற்று கம்பெனி கூண்டோடு பிடித்துப் போட்டது. சு10தே என்ற பரங்கியன் புதுச்சேரி தெருக்களில் சுற்றி வர ஆட்களை அமர்த்தி சிலரை விலைக்கு வாங்கியும்ää சுண்ணாம்பிலே மருந்து கொடுத்து சிலருக்கு மை சிமிழ் வைத்து கூட்டிப் போவார்கள். பிறகு இரவு வேளையில் ஆற்றின் வழியாக அரியாங்குப்பத்தில் இருக்கும் வளைவு ஒன்றில் இறக்கி விடப்படுவார்கள். அங்கு மொட்டை அடித்து கறுப்பு உடைகளை கொடுத்து ஒரு காலிலே விலங்கு வளையம் போட்டு சு10தன் வீட்டில் அடைத்து வைப்பார்கள் கப்பல் போரச்சே ஏற்றி அனுப்புகிறார்கள் என்கிறார் ஆனந்தரங்கப்பிள்ளை.

1735 ல் மொரியஷில் இருந்த 835 குடியிருப்புகளில் 648 அடிமைகள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் 2981 குடியிருப்புகளில் 2612 அடிமைகள் இருந்தனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு கம்பெனி அடிமைகள். மற்றவர்கள் அங்கிருந்த பண்ணை முதலாளிகளுக்கு விற்கப்பட்ட அடிமைகள். இந்த வியாபரிகள் எப்படி வியாபாரம் நடத்தினார்கள் என்பதை நீலக்கடல் நாவல் விவரிக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே துய்ப்ளேää கம்பெனியின் ஆலோசகராக நியமிக்கப்ட்டு முதன் முறையாகப் புதுச்சேரிக்கு வந்திருந்த நேரம். ஒரு முறை பூர்போன் தீவு வரைப் போகவேண்டியிருந்தது. அங்கே பழைய கவர்னரான துலிவியேவைச் சந்தித்திருக்கிறார். இளைஞன் துய்ப்பேளிக்ஸின் புத்திசாலித்தனத்தால் கவரப்பட்டு அவர் 400 வராகன்கள் கொடுத்திருக்கிறார். புதுச்சேரி திரும்பிவந்த துய்ப்பேளிக்ஸ் அவரை விட வயது மூத்த ழாக் வேன்சான் என்பவரின் நண்பரானார். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்ய முடிவெடுத்தார்கள். துலிவியே கொடுத்த பணத்தில் துய்ப்பேளிக்ஸ் 300 வராகன்கள் அவரது பங்காக முதலீடு செய்தார். வங்காளத்தில் இருந்து பட்டும் பிரெஞ்சு தீவிலும் பூர்போன் தீவிலும் நிலபுலங்களும் வாங்குவது என இருவரும் தீர்மானித்தார்கள்.

இந்த வியாபாரத்தில் இருந்து ழாக் வேன்சான் விலகிக்கொள்ள அவரது இடத்தில் அவரின் இளம் மனைவி சேர்ந்து கொள்கிறார். அந்தக் கூட்டணியில் அந்த சமயம் லெ பொந்திஷெரி கேப்டனாக இருந்த லாபூர்தொனே சேர்ந்துகொள்ள பணத்திலும் பதவியிலும் மோகம் கொண்டிருந்த இந்த மூவர் கூட்டணி எல்லா தில்லுமுல்லுகளும் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். துய்ப்ளே மீது பிரான்ஸ் கம்பெனி தலைமையகத்துக்கு புகார் போனது. புகாரை நிராகரித்த மேலிடம் அவரை சந்திரநாகூர் கவர்னராக 1731 ல் நியமனம் செய்தது. இதனால் 2 ஆண்டுகள் இந்த வியாபார கூட்டணி பிரிந்திருந்தது. ஒரு நாள் அந்த பெண்மணி வயதான தன் கணவனை அழைத்துக்கொண்டு சந்திரநாகூர் போய் சேர்ந்தார். என்ன நடந்ததோ ஒரு நாள் அந்த பெண்மணியின் கணவர் இறந்து போனார் அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பெண்மணியும் துய்ப்ளேவும் திருமணம் செய்து கொள்கிறார்கள. பின்னர் புதுச்சேரி நிர்வாக சபை அதிபதியாகவும் கம்பெனியின் பிரதான தளபதியாகவும் நியமிக்கப்பட்டு துய்ப்ளேக்ஸ் ஏற்கனவே 11 பிள்ளைகள் பெற்றவளின் கணவனாக புதுச்சேரி வந்து இறங்கினார். இது அவர்கள் வாழ்க்கைப்பதிவு.

மோரிசியஷில் தமிழ் அடிமைப்பெண்கள்

இந்த வெள்ளையர்கள் தமிழ் பெண்களை மொரிஷியஸில் எப்படி நடத்தினார்கள் என்பதை ஒரு கற்பனை பாத்திரம் மூலம் நீலக்கடல் நாவலாசிரியர் விவரிக்கிறார். “அடிமைப்பெண்கள்ää மெழுகு திரியின் வெளிச்சத்தில்ää கருங்கற்சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். அழைத்து வந்த அடிமையை அவ்விடம் விட்டு நீங்குமாறு சைகை செய்கிறார்ää பணிவாய்க் குனிந்து வெளியேறுகிறான்.”

“ துரையைப் பார்த்தமாத்திரத்தில்ää பகல் முழுக்க உழைத்திருந்த களைப்பில் சோர்ந்திருந்த பெண்களிருவரும்ää அனிச்சையாய்த் தங்கள் ஆடைகளைக் களைந்துää நிர்வாணமாக நின்றார்கள். அப்பெண்களிடம் இவர் எதிர்பார்க்கின்ற கிளர்ச்சியூட்டும் வாடை. அவ் வாடை தந்த மயக்கத்தில்ää அருகிலிருந்த பெண்ணை நெருங்கினார். சு10ளையில் சுட்டெடுத்த கரும்பானையை ஒத்துää மின்னிய கன்னங்களும் புடைத்திருந்த முலைகளும் இவரது உடலைச் சங்கடப்படுத்தின. கறுப்பு வண்ணத்தின் மீதான கசப்பு ஒளிந்து கொண்டது. அவளை இழுத்து அணைத்துக்கொண்டார். அப்பெண்ணிடமிருந்துää ஆழமாக வெளிப்பட்ட பெருமூச்சு இவர் மார்பில் அனலாகப் பரவியது. அம்மூச்சிலிருந்த தாகத்தை உணர்ந்தவராய்ää அவளது தடித்த உதடுகளில்ää சாராய மூச்சுடனான தனது பற்களைப் பதித்தார். வலி பொறுக்கமாட்டாமல் விலகிக்கொண்டாள். இமைகளை மூடியிருந்தாள்ää மென்மையாக முனகல்களை வெளிப்படுத்தினாள். இப்பணிக்கு கிடைக்கவுள்ள கூடுதல் மரவள்ளி கிழங்குää தன் பிள்ளைகளும்ää புருஷனும் வயிறாற ஓரிரு தினங்கள் உண்ண உதவும் என்று நினைத்து துரைக்கு ஒத்தாசை செய்தாள். இவர் நீட்டும் சுட்டுவிரல் அசைவைப் புரிந்தவளாய்ää இன்னொருத்தி தற்காலிகமாகக் கிடைத்த தகுதியை நழுவவிடாமல் அவசரமாய்க் கட்டிலில் ஏறி கால்களைப் பரப்பி தன் முறைக்காக காத்திருக்கிறாள்.” இந்தவொரு காட்சியே நம் பெண்கள் அங்கு பட்ட அடிமை வாழ்வை சுட்டிக்காட்டும்.

டச்சு காலனியான சு10ரியநாமுக்கும் இந்திய கூலிகள் கொண்டு செல்லப்பட்டனர். பிரிட்டிஷ் காலனியான டிரினிடாட்டுக்கும் கயானாவுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு ஓரளவுக்கு மத மொழி வழிபாடு மற்றும் பண்பாட்டு சுதந்திரம் இருந்தது. பிரென்ஞ்சு காலனிகளில் அது இல்லை. இன்று பார்ப்பதற்கு அவர்கள் தமிழர்கள் போல் இருந்தாலும் சிவனை கும்பிட்டாலும் பிள்ளையாரை வழிபட்டாலும் தமிழ் பேச தெரியாது. கிரெயோல் மொழி பேசுபவர்களாக தமிழை தொலைத்து விட்டவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களை பற்றி இந்த நாவலை ஏன் எழுதினேன் என்பதை முன்னுரையில் நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா பதிவு செய்கிறார். “ உலக வரலாறு கடல் சார்ந்தது. கடல் சரித்திரங்களை மாற்றி எழுதியுள்ளது. ஐரோப்பாவின் துண்டு நிலங்களில் கிடந்த ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகின் கலாச்சாரத்தை தனதாக்கிக் கொள்வதற்கு மூலம் வேறென்ன? சோழர்கள்ää பாண்டியர்களுக்கு கூட கடல் உதவத்தான் செய்தது. தங்கள் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து அக்கறை காட்டியிருக்கலாம்…. இருக்கலாம்….. வேறென்ன சொல்ல முடியும். இங்கே நடந்தது எல்லாம் குழாயடி சண்டைகள். வேலிகளுக்குள் சண்டை என்பதால் காத்திருந்தவர்கள் சுலபமாக மேய முடிந்தது. மேய்ந்தார்கள். வரலாறு மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அவர்கள் ஆண்டார்கள். நாம் அடிமையானோம்.