திங்கள், 27 ஜூன், 2011

புதுவையில் உதயமான அண்ணா திமுகழகம்

புதுவையில் ஏன் வளரவில்லை? 


 1972ல்தோன்றிய அ.இ.அ.தி.மு.க துவையில் மட்டும் வளராமல் இருப்ப தன் காரணம் என்ன? திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் பழைய வரலாற்றை நினைவூட்டினார்.

அண்ணா தி.மு.கழகம் உதயமானபோது செயலலிதா அதில் இல்லை. அண்ணா தி.மு.கழகம் புதுச்சேரியில் தான் உதயமானது என்ற வரலாறும் அவருக்குத் தெரியாது.1969ல் பரூக் மரக்காயர் தலைமையில் தி.மு.கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைச்சரவை நடத்தின. காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.கழக முதல்வராக இருப்பதா? என பழைய தி.மு.கவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வரான பிறகு 1969ல் புதுவையில் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுக்கப்பட்டது. அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏ. கோவிந்தசாமி அடிக்கடி புதுவை வருவார். அவரது உறவினர்கள் நேருவீதி – காந்தி வீதி சந்திப்பு அருகில் இன்றும் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வீடு அம்பலத்தாடுமய்யர் மடத்து வீதியில் இருக்கிறது. புதுவை வரும் தமிழக அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவரது உறவினரான கிருஷ்ணராஜ் மூலமும் பழைய தி.மு.கழகத்தவரும் பின்பு அமைச்சராக இருந்தவருமான பெருமாள்ராஜா மூலமும் காங்கிரசிலிருந்த எதுவார்குபேர் அவர்களை தி.மு.கழகத்துக்குள் கொண்டு வந்தனர். பட்டுக்கோட்டை குமாரசாமி நவமணி நாளிதழ் ஆசிரியர். அவர் மூலமும் சென்னை மேயராக இருந்த மைனர் மோசசு மூலமும் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்துக்குள் சேர்ந்தார். அவரை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினராக்க எம்.ஏ.சண்முகம் வட்டச் செயலாளராக இருந்த வட்டக் கழகம் ஒப்புக்கொள்ளவில்லை. புதுவை வட்ட தி;.மு.க தென்னாற்க்காடு மாவட்டச் செயலாளர் குறிஞ்சிப்பாடி இரா. சாம்பசிவத்தின் கீழ் வட்டக் கழகமாக இருந்தது.

காரைக்கால் வட்டக் கழகம் முன்னாள் முதல்வர் எஸ். ராமசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தஞ்சை மாவட்டச் செயலாளராக மன்னை நாராயணசாமி இருந்தார். புதுவையில் உறுப்பினராகாத ஒருவர் திமுக அரசின் முதல் அமைச்சர். அப்போது மத்திய அரசு சம்பள விகிதம் புதுச்சேரியில் அமுலானது. தமிழ் ஆசிரியர்களை விட இந்தி ஆசிரியர்க்கு கூடுதல் சம்பளம். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் பேரணியில் பங்கேற்று நான் இதை கண்டித்தேன். மாநில சுயாட்சிக்கும் புதுவைக்கும் சம்மந்தமில்லை என சட்டமன்றத்திலேயே பேசி பரூக் மரக்காயர் கண்டனத்துக்கு ஆளானார். புதுவை பல்கலைக்கழகத்துக்கு அரவிந்தர் பெயர் சு10ட்ட முனைந்தும் எதிர்ப்பை சம்பாதித்தார். உள்துறை அமைச்சராக இருந்த இராமசாமியின் இலாக்கா பறித்தும் எதிர்ப்புக்கு ஆளானார். எம்.ஏ.சண்முகம் தலைமையில் மாவட்ட திமுக கழகமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது கட்சி! கட்சி ஆட்சியை கடுமையாக விமரிசித்தது. இதனால் மாவட்டக் கழகத்தை கலைத்து பரூக் மரக்காயரை மாநில அமைப்பாளராக்கினார்கள். அந்தச் சு10ழ்நிலையில் தமிழ்நாட்டில் திமுகழகம் உடையப்போகிறதுää அண்ணா பெயரில் கட்சி உருவாகும் என மாணவர் தி.மு.க செயலாளரான என்னிடம் முன்கூட்டியே கூறியவர் எங்கள் குடும்ப நண்பர் துணை நிலை ஆளுநர் பி.டி.ஜாட்டி ஆவார். எனவே எம்ஜிஆருக்கும் முன்பாக புதுவையில் அண்ணா பெயரில் கட்சி தொடங்குவது பற்றி புதுவைக் கடற்கரையில் கலைக்கப்பட்ட மாவட்டக் கழகப் பிரதிநிதிகள்ää சிவலிங்கம்ää செல்வம்ää இந்து நடராசன்ää அலைஓசை வைத்தியநாதன்ää முத்தையன்ää துரை அரிராமன் உள்ளிட்டோருடன் மாணவர் தி.மு.கழக மாநிலச் செயலாளர் ஆகிய நானும் விவாதித்தோம் 17 நாட்கள் இந்த விவாதம் நடந்தது. 42 கிளைக்கழகச் செயலாளர்களை நாங்கள் அணுகினோம்.

புதுவைப் பதிப்பு நாள் ஏடுகள் இல்லாத காலம். தந்தி மூலமே இந்து நடராசனும் சுதேசமித்திரன் விசயபாரதியும் நவமணி இராசமாணிக்கமும் செய்தியை அனுப்பிய காலம். அண்ணாயிஸ்ட் தி.மு.கழகம் என்ற புதுக்கட்சி துவக்க அறிவிப்பை நானும் (நந்திவர்மனும்) சிவலிங்கமும் செல்வமும் வெளியிட்டோம். தமிழ்நாட்டில் அனகாபுத்தூர் இராமலிங்கம் அண்ணா திமுகழகப் பெயரை இரண்டு நாள் கழித்துச் சொன்னார். ஆக செப்18-1972ல் தினமணி முதல்பக்கச் செய்தியாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர் தமிழகம் புதுவையில் கட்சி அமைப்பு என ஒரே செய்தியாக வெளிவந்தது. அப்போது அகில இந்திய வானொலி 7.15 இரவு டில்லியில் இருந்து வெளியான செய்தி அறிக்கையில் 42 தி.மு.கழகக் கிளைகள் உடனடியாக அண்ணா திமுகவில் இணைந்த செய்தியை ஆல் இன்டியா ரேடியோவில் பணியாற்றிய ராசாவும் குழந்தைவேலும் ஒலிபரப்பச் செய்தார்கள். திமுகழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரில் உள்துறை அமைச்சர் இராமசாமிää பொதுப்பணி அமைச்சர் தெ. இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் அண்ணா திமுகவுக்கு துவங்கிய உடனே இணையத் தயாராக இருந்தார்கள். ராமசாமியின் நெருங்கிய நண்பனான நான் முன்கூட்டியே அண்ணா திமுகவுக்கு அனுப்பப்பட்டேன். திமுகழக மாவட்டப் பிரதிநிதி சிவலிங்கத்தை மாநில அமைப்பாளராக்கிவிட்டு அண்ணா திமுகழக தமிழ்நாடு புதுவை மாணவரணியை ஏற்பது என் திட்டமாக இருந்து எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக நா. மணிமாறன் இருந்தார். பேரொளி பத்திரிகையும் நடத்தினார். காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.க அமைச்சரவைக்கு தலைமையா? என்ற கோபத்தில் பிறந்த அண்ணா தி.மு.கழகம் புதுவை முதல்வர் மீது அடுக்கடுக்காய் புகார்களைக் கூறியது. துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டியிடமும் சேத்திலாலிடமும் ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டது.

காமராசர் சந்திப்பு

பரூக் அமைச்சரவை மீது விசாரணைக் கமிஷன் அமைக்க ஒரு நாள் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் நாடினேன். பழைய காங்கிரஸ் தலைவராக இருந்த ஜீவரத்தின உடையார்” காமராசர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்” நாங்கள் முழு அடைப்பில் பங்கேற்கிறோம் என்று சொன்னார் சென்னை சென்று புதுடெல்லியில் இருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் செய்தியாளர் வி.எஸ்.மணியத்தை அழைத்துக்கொண்டு திருமலைப்பிள்ளை சாலை-திநகரில் உள்ள காமராசர் இல்லத்தில் 11.11.1972 அன்று காமராசரை சந்தித்துப் பேசினேன். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் புதுவை அண்ணா தி.மு.கழக தலைவர் காமராசரை சந்தித்தார் என்று 12.11.1972 ல் செய்தியாக வெளிவந்தது. அன்று மாலையே காமராசரை சந்திக்க நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என அதிமுக நாளேடான தென்னகத்தில் அறிக்கை தலைமையால் வெளியிடப்பட்டது. தலைமைக் கழக அவசர அழைப்பினை ஏற்று சென்னை சென்று லாயிட்சு சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை சந்தித்தேன். காமராசரை கடுமையாக விமர்சித்த எம்.ஜி.ஆர் தன்னைச் சுட எம்.ஆர்.ராதாவை ஏவிய ஒருவரை நீ போய் பார்ப்பதா? என்று என்னை திட்டினார். புதுவை மாநில அதிமுகழக நிலைமையை மாநில அமைப்பாளரான நான் சொல்லாவிட்டால் வேறு எப்படி அண்ணே கீழ்மட்ட நிலை தெரியும் என நான் சொன்னதற்கு “என்னிடம் குறுக்கு கேள்வி கேட்கும் வக்கீல்கள் எனக்குத் தேவையில்லை என்று சாடினார். நான் மௌனமாக தலை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். கோபம் தணிந்த எம்.ஜி.ஆர் சரி! சரி தலைமை அனுமதி இன்றி காமராசரை சந்தித்தற்கு வருத்தம் தெரிவித்து எழுதி தருமாறு சொன்னார். அவ்வாறே செய்தேன். ஏடுகளில் காமராசர் சந்திப்பு பற்றி மட்டுமே செய்தி வந்திருந்தது. மகாத்மாகாந்தி மகனுக்கும் இராஜாஜி மகளுக்கும் பிறந்த நண்பர் இராஜ்மோகன் காந்தி மூலம் ராஜாஜியை நான் சந்தித்திருந்தேன். புதுவை பரூக் அரசுக்கு எதிரான ஆதரவை திரட்டவே இந்தச் சந்திப்புகள்.

எம்.ஜி.ஆர் இருந்த அறையை விட்டு வெளியே வந்த என்னை வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஜேப்பியார்ää வழக்கறிஞர் பி.டி.சரசுவதிää ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் ஆறுதல் கூறினர். நீங்கள் அண்ணன் எதிரே உட்கார்ந்திருக்கக் கூடாது! வளரவேண்டிய இளைஞர் என்பதால் என் அறிவுரை என்றார் ஆலந்தூர் மோகனரங்கன். புதுவையில் குபேர் வீட்டுச் சோபாவில் நமக்க இணையாக ரிக்ஷா ஓட்டுபவரும் உட்காhந்திருக்கும் பிரெஞ்சு சமத்துவம் நினைவுக்கு வந்தது. எம்.ஜி.ஆர்க்கு என்மீது கசப்பு ஏற்பட இந்தச் சம்பவம் காரணமாயிற்று.

பெரியவர் நெடுங்காடு ப.சண்முகம் அப்போது எதிர்க்கட்சித்தலைவர். காங்கிரசில் 10 உறுப்பினர்கள் இருந்தார்கள். திமுகவில் இருந்து இராமசாமி - இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வெளிவந்தால் ஆட்சி கவிழும். 6 பேர்கள் வெளியே வருவார்கள் அவர்கள் பெயர் அறிவிக்கப்படும் என தினமணியில் பேட்டி அளித்த நான் ஆளுநரைச் சந்தித்தேன். சுபாநாயகர் செல்வராசை சந்தித்து சட்டமன்றத்தை கூட்டுமாறு கேட்டிருந்தேன்.

தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி புதுவை திமுக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தது. மக்கள் தலைவர் வ. சுப்பையா அமைச்சர். டாக்டர் என்.ரங்கநாதனும் குருசாமியும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் பரூக் அரசை விட்டு வெளியேறி இருந்தால் எம்.ஜி.ஆர் கட்சி துவக்கியவுடனே புதுவையில் ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் புதுவையில் அண்ணா தி.மு.கழக ஆட்சி வர முடியாமல் போனதற்கு கல்யாணசுந்தரம் காரணம். மக்கள் தலைவர் வ. சுப்பையா எந்தையார் மீதும் என் மீதும் மிகுந்த அன்புடையவர் ஆவர். மாஸ்கோ மருத்துவமனையில் இருந்த போது நீங்கள் மட்டும் திராவிடக் கம்யூனிஸ்ட் கட்சி என்று கட்சி நடத்தி இருந்தால் உங்கள் தலைமை ஏற்றுச் செயல்பட்டிருப்பேன் என நான் மடல் எழுதியதும் பழங்கதை. திமுககழக – கம்யூனிஸ்ட் கூட்டணி அமைச்சரவையில் வ. சுப்பையா இருந்தார். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் முழுநேர ஆலோசகர்களாக கலியாணசுந்தரமும் பாலதண்டாயுதமும் இருந்தார்கள். சுப்பையா இல்லத்தில் என் தலைமையில் சிவலிங்கம் செல்வம் துரை. அரிராமன்ää புலவர் கந்தக் கண்ணன் எம்ஜிஆர் மன்றச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலியாணசுந்தரத்தைச் சந்தித்து தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் கூட்டு புதுவையில் திமுகவுடன் கூட்டணி என்று இரட்டை நிலைப்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுப்பது சரி அல்ல என வாதாடினோம். சுப்பையாவின் தனிச் செயலாளரான ஜிம்மிராபர்ட்ஸ் இந்தச் சந்திப்புக்கு சாட்சியாவார். 3 உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் புதுவையில் திமுகழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் திமுகவில் இருந்து அண்ணா திமுகவுக்கு வரத் தயாராக இருந்த ராமசாமிää ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் ப. சண்முகம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அவர் கிழிருந்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் கூடி கூட்டணி அமைச்சரவை உருவாகி இருக்கும். அண்ணா திமுகழகம் துவங்கிய இரண்டே மாதத்தில் புதுவையில் ஆட்சியை பிடித்து இருக்கும். ஆனால் தி இந்து நாளேடு வழியாக கம்யூனிஸ்ட் தலைவர் கலியாணசுந்தரம் சொன்னார் : “தமிழகமும் புதுவையும் வேறு வேறு மாநிலங்கள். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் உள்ளோம். புதுவையில் திமுகவுடன் இருக்கிறோம் இதில் தவறில்லை என்றார்.

அண்ணா திமுகழக அமைப்பாளரான நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வாயிலாக பதில் அளித்தேன். புதுவையில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அந்தஸ்தே கொண்டது. மாநில தகுதி இல்லாதது. எனவே தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் ஒரு மாவட்டமாக உள்ள புதுவை அண்ணா திமுக அணிக்கே வர வேண்டுமென அறிக்கை விட்டேன்.

கம்யூனிஸ்டுகளுக்கு கோபம் கொப்பளித்தது. அப்போதைய எம்எல்ஏ டாக்டர். ரங்கநாதன் நானும் (நந்திவர்மனும்) சில வெள்ளைக்காரர்களும் இருக்கும் படத்தை எம்ஜிஆரிடம் காட்டி நந்திவர்மன் ஒரு அமெரிக்க உளவாளி என வத்தி வைத்தார். இதை நம்பிய எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து 3 மாதத்துக்குள் நந்திவர்மனை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து சொந்த அலுவல் காரணமாக சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை 26.12.1972 அன்று வெளியிட்டார்.

நந்திவர்மன் ஆகிய நான் காமராசரை சந்தித்து இருந்ததால் பழைய காங்கிரஸ் நாளேடு இந்த சஸ்பெண்டை கண்டித்து தலையங்கம் எழுதியது. திமுகழகத்தின் வார ஏடான மாலைமணி கண்டித்தது. பம்பாயிலிருந்து வெளிவந்த கரண்ட வார ஏடும் புதுடெல்லியில் இருந்து வெளிவந்த ஸ்டேட்ஸ்மென் நாளேடும் இது பற்றி கட்டுரைகளை வெளியிட்டன.

மகாத்மா காந்தியின் மகனுக்கும் இராஜாஜியின் மகளுக்கும் பிறந்த ராஜ்மோகன் காந்தி நடத்தி வந்த மாரல் ரீ-ஆர்மமெண்ட் அமைப்புக்கு புதுவை மேயர் குபேர் மூலம் மாநகராட்சி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வரவேற்பில் கலந்து கொண்ட அயல்நாட்டவருடன் நான் (நந்திவர்மன்) இருக்கும் படத்தை காட்டி அமெரிக்க உளவாளி முத்திரை குத்தினார்கள்.

கோவலனை விசாரிக்காமல் கொலைக்களத்துக்கு அனுப்பிய பாண்டிய நெடுங்செழியன் போல விசாரிக்காமலே அண்ணா திமுக ஆட்சி அமைக்க பாடுபட்ட நான் தண்டிக்கப்பட்டேன். இலாயிட்சு சாலையில் நான் நடந்து வந்ததும் அவ்வழியாக வந்த முரசொலிமாறன் என்னை அழைத்துச் சென்று கலைஞரிடம் விட்டதும்ää மீண்டும் கழகம் வர கலைஞர் அழைப்பு விட்டதும் புதுவை அண்ணா திமுகழகம் - திமுகழகத்தின் இணைந்த செய்தியை முரசொலி வெளியிட்டதும் பழங்கதை.

என்னை நீக்கிய பிறகு எம்ஜிஆர் ஏடுகளில் எதிர்கொண்ட விமர்சனங்களால் புதுவையை சேர்ந்த யாரையும் அமைப்பாளராக்காமல் சினிமா டைரக்டர் கோபாலகிருஷ்ணனை ஆறுமாதமும் அனகாபுத்தூர் ராமலிங்கத்தை ஆறுமாதமும் டெபுடேஷனில் புதுவைக்கு அனுப்பி அமைப்பாளராக செயல்படவிட்டது 1974 தேர்தலுக்கு முன் நடந்த நிகழ்வுகள்.

முதற்கோணல் முற்றும் கோணல் ஆனது!  அண்ணா திமுக தோள் மீதேறி கம்யூனிஸ்ட் முதல்வராகலாம் என கணக்குப் போட்டு என்னை வெளியேற்றினார்கள். அன்று தவறிழைத்த அதிமுக தலைமை புதுவையில் தகுதி வாய்ந்த முதல் அமைச்சர் வேட்பாளரை இன்றுவர உருவாக்காததால் அண்ணா திமுகவை ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியாகவே மக்கள் கருதவில்லை.  

அண்ணா திமுக பெயர் அறிவித்து கொள்கை அறிவித்து சட்டதிட்டம் வகுத்துக் கொடுத்த என்மீது அமெரிக்க உளவாளி என அபாண்டம் சுமத்திய கட்சித் தலைவிக்கு கட்சி துவக்கும் போது உடனிருந்தால்தானே பழைய வரலாறு தெரியும். இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.

திங்கள், 13 ஜூன், 2011

மொழிவழியாக மனித வரலாற்றில் பின்னோக்கிப் பயணம் செய்கிறோம்’’

பனிரெண்டாயிரம் பக்கங்கள். சுமார் ஐந்து லட்சம் தமிழ்ச்சொற்கள். 31 தொகுதிகள்... 37 ஆண்டுகளாக நடந்துவந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) இப்போது முழுமை எய்தியுள்ளது. பாவாணர் தொடங்கிய இத்திட்டமானது பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது. மூத்த தமிழறிஞரான மதிவாணன் என்.அசோகனுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
இந்த சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்?

ஒரு சொல்லின் வேரை ஆராய்வதற்கு பலமொழி அறிவு தேவை. எனவே சேலம் கல்லூரியில் பணிபுரிந்த எனக்கு பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் பாவாணர் அவர்களிடம் இத்திட்டத் தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. இன்று 37 ஆண்டுகள் இப்பணியில் கழித்தும் உள்ளேன். வட இந்திய மொழிகளில் உள்ள பல வினைச்சொற்களின் மூலம் தமிழாக உள்ளது. தமிழ்தான் வேர். இந்தியில் நாளை வா என்பதை ‘கல் ஆவோ’ என்கிறார்கள். கல் என்றால் நாளை. இந்தச் சொல் சமஸ்கிருதம், பெர்சியனில் இல்லை. குஜராத்தியில் இதை கால் ஆவோ என்கிறார்கள். ஒரியாவில் காலி ஆவோ என்கிறார்கள். தமிழில் காலையில் வா என்கிறார்கள். ஆக, இந்த காலைதான் இப்போது கல் ஆகியிருக்கிறது. எனவே வட இந்தியா முழுக்க ஒரு காலத்தில் தமிழ் பேசுகிறவர்கள்தான் இருந்தனர் என்றும் காலப்போக்கில் அது பிராகிருதமாகவும் பாலியாகவும் திரிந்தபோது சொற்கள் திரிந்துபோய்விட்டன என்று கூறலாம். அந்தச் சொற்களுக்கு வேர்மூலம் காணவேண்டுமென்றால் இந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் காணலாம்.

இதன் பயன் என்ன? இன்று இருக்கும் பல மொழிகள், சொற்கள் எங்கிருந்து பிரிந்து வந்தன? இந்தி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகள் எங்கிருந்து உருவாயின?

இந்த மொழிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தன என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.

 சொற்களை காலத்தால் மீட்டுக் கொண்டுபோனால் இவையெல்லாம் ஒரே மூல மொழியில் இருந்து பிரிந்தன என்பது தெரிகிறது.அந்த மூல மொழிக்கு தமிழ்மொழி  மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாறும் வெளிக்கொணரப்படுகிறது. இதனால் ஒருவர் மற்றொரு மொழியிடம் பற்றுகொள்ளவும் அதைப் பேசுவோரிடம் உறவுகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள்? சவால்கள்?

பொதுவாக சில சொற்களைப் பற்றி ஆராயும்போது, அவை பிறமொழி அகராதிகளிலும் கிடைக்காது. அவற்றுக்காக மலைவாழ் மக்கள் பேசும்மொழி, சிறு திராவிட மொழிகள், நாட்டுப்புற மொழி ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். கேழ்வரகைக் குறிக்கும் இச்சொல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும்? தமிழில் ‘ரா’ மொழியின் முதலில் வராது. இது படுகர்களின் மொழியில் உள்ளது. அவர்கள் இதை எரகி என்கிறார்கள். நான்கு இறகுகளாக கதிர் உடைவதால், அதற்கு இறகி என்று பெயர் வைத்திருக்கவேண்டும். அதுதான் ராகி ஆனது. சகோதரன் என்ற சொல் வடமொழியில் இருந்து நமக்கு வந்தது. ஆனால் அது வருவதற்கு முன்னால் தமிழர்களுக்கு சகோதரனைக் குறிக்கும் சொல் இல்லையா? தஞ்சாவூர் பகுதியில் சீர்காழியை அடுத்த ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் சகோதரர்களைக் குறிக்க வேறு சொல் கையாளுகிறார்கள். எனக்கு பிறவன்மார் மூணு பேர் என்பார்கள். பிறவிமார் மூணு பேர் என்பார்கள். பிறவன் என்பது ஆண் சகோதரனையும் பிறவி என்பது பெண் சகோதரியையும் குறிக்கிறது. தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு. பிராகிருத மொழியில் உரா என்றால் வீடு. பஞ்சாபியில் உரா என்றால் வீடு.

எப்படி இச்சொல் அங்கே போனது? ஸ்பெயினில் பாஸ்க் மொழியில் உரா என்றால் மனைவி. வீட்டைக் குறிப்பது மனைவியைக் குறிக்குமல்லவா? உறை என்று பேசுபவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் பிரிந்துபோனவர்களிடம் எஞ்சியிருக்கும் சொல்லாக அச்சொல் இருக்கலாம்.

இதுபோல ஏராளமான சொற்கள் உள்ளன. இதையெல்லாம் இந்த அகரமுதலியில் தந்துள்ளோம்.

கல்வெட்டு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி போன்றவை எப்படி உங்களுக்கு உதவி செய்துள்ளன? நிறைய என்று சொல்லலாம். நான் சிந்துவெளி முத்திரைகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஐராவதம் மகாதேவனும் அஸ்கா பர்போலாவும் ஒரு முத்திரையைக் கூட படிக்க இயலவில்லை. அவர்கள் முகமதியர்கள்போல வலமிருந்து அந்த முத்திரைகளைப் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர். சிந்துவெளி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில் 75 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளன. அப்படி இருப்பின் இந்திய மொழிகள் அனைத்தும் அரபியைப் போல வலமிருந்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும்? அப்படியா உள்ளன? இடமிருந்துதானே எழுதுகிறோம்? சிந்துவெளி முத்திரைகள் இடமிருந்துதான் எழுதப்பட்டவை என்று நான் ஐயாயிரம் முத்திரைகளைப் படித்துக் காட்டியுள்ளேன்.

ஆனால் நீங்கள் படித்தவற்றுக்கு அங்கீகாரம் இல்லையே? ஏன்?

வலமிருந்து படிக்கவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை. சரி. அப்படி முடிவெடுத்தவர்களை ஒரு முத்திரையையாவது அவர்களைப் படித்துக்காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். லைக் என்று ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லை எகில் என்று வலமிருந்து படிக்கமுடியுமா? முடியாது. அதுபோல்தான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஸ்கோ பர்போலாவாலும் ஐராவதம் மகாதேவனாலும் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க இயலாது. அப்புறம் இவர்கள் அதை அசை எழுத்து(syllabic) என்று சொல்லிவிட்டு படமாகப் (pictographic) படிக்கிறார்கள். ஒரு மீன் படம் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஆறு கோடுகள் இருக்கின்றன. இதை அறுமீன் என்று படிக்கிறார் கள். வணிகர்கள் பயன்படுத்திய முத்திரைகளில் அவர்கள் பெயர் தானே இருக்கவேண்டும்? நான் படித்ததில் சாத்தன் என்றொரு பெயர் உள்ளது. பல பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக உள்ளன. கூத்தழகன் சாத்தன் என்றே வருகிறது. ‘ழ’கரமே நன்றாக உள்ளது.

சிந்துவெளி முத்திரைகளில் சிவனின் பெயர் கோ அவ்வன் என்று உள்ளது. யோக நிலையில் உள்ள சிவன். ஆரிய திராவிட நாகரிகங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உண்டு. யாகம் செய்தது ஆரிய நாகரிகம். யோகம் அதாவது தவம் செய்தது திராவிட நாகரிகம். இப்போது யோகத்தை அவர்களும் யாகத்தை இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில் யோக நிலையில் சிவன் இருப்பதால் அது தமிழர்கள் நாகரிகமாக இருக்கவேண்டும். சிந்துவெளியில் அந்த சிவன் மீது கோ அவ்வன் என்று உள்ளது. கோ என்றால் மலை. மலையப்பன், கொண்டப்பன், கட்டப்பா என்கிறோம் அல்லவா? சிந்துவெளி நாகரிகத் தமிழில் அவ்வன் என்றால் அப்பன்; அவ்வை என்றால் தாய் என்று நான் சொன்னேன். ஆனால் இலக்கியத்தில் எங்குமே இதற்குச் சான்று இல்லையே என மறுத்தார்கள்.

இலக்கியத்தைவிட 2000 மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளி. அந்த சொல் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சொல் சங்ககாலம் வரை இருந்திருக்கிறது என்பது இப்போது புலப்படுகிறது. புதுச்சேரி பல்கலைப் பேராசிரியர் ராஜன், புலிமான் கோம்பை என்ற ஓர் இடத்தில் செய்த ஆய்வில் ஒருநடு கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களைப் படித்தார். அதில் அவ்வன் பதவன் என்று ஒரு பெயர் உள்ளது. ஆக, சங்ககாலத்திலேயே அவ்வன் என்ற பெயர் இருந்திருக்கிறது. எனவே சிந்துவெளியில் நான் படித்ததும் சரியே என்ற முடிவுக்கு வந்தேன்.

மேலை நாட்டு மொழியியல் ஆய்வுக்கும் உங்கள் ஆய்வுக்கும் என்ன தொடர்பு? அந்த கொள்கைகளை எப்படிப் பயன்படுத்திக்கொண்டீர்கள்?

அவர்கள் உலக மொழிகளுக்கு ஒரு பொது அளவுகோல் வைத்து ஆய்ந்தார்கள். ஆனால் வேர்மூலம் காண்பதில் தவறான பாதையில் சென்றுகொண்டுள்ளனர். சொற்களால் சொற்களை மீட்டமைக்கிறார்கள். ஆனால் அதற்குப் பொருள் இருக்கும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. காரணம் கருதித்தான் பொருட்களுக்குப் பெயர் வைத்துள்ளனர். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் தொல்காப்பியர். இந்த அடிப்படையில்தான் பாவாணர் அணுகுமுறையும் மேனாட்டவர் அணுகுமுறையும் வேறுபடுகின்றன. சொல் மூலம் மட்டும் காட்டினால் போதும் என்கிறார்கள் அவர்கள். நாங்களோ சொல் மூலத்துடன் பொருள் மூலமும் காண்பிக்கிறோம். நிழல் என்பது பழங்காலத்தில் நீழல் என்று இருந்தது. நீள்வதால் நீழல் என்று பெயர்வைத்தான் என்று நான் சொல்கிறேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம் நிழல் என்று பெயர்வைத்துவிட்டான் என்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்; காரணம் வேண்டாம் என்பது மேலைநாட்டு அணுகுமுறை. உங்கள் மொழியில் தெரியவில்லை. நீங்கள் சொல்ல இயலாது. ஆனால் எங்கள் மொழியில் தெரிகிறது. நாங்கள் சொல்கிறோம். எங்களு டைய சொற்பிறப்பியல் அகராதி, உலகில் வந்துள்ள பிற சொற் பிறப்பியல் அகராதிகளைவிட வேறு பட்ட அமைப்பு கொண்டது. மிகவும் விஞ்ஞானரீதியிலானது. சொல்லை ஆராயும்போது அதன் பொருளுக்கு முதலிடம் கொடுக்கிறோம்.

பாவாணருக்குப் பின்னால் இப்பதவியில் நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு பெருஞ்சித்திரனார் எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டதே...

பாவாணருக்கும் பெருஞ்சித்திரனாருக்கும் கடைசி காலத்தில் வேறுபாடுகள் வந்துவிட்டன. பாவாணரை, அவர் தன் வீட்டைக் கட்டுவதில்தான் கவனமாக உள்ளார். அகரமுதலியை மறந்து விட்டார் என்று விமர்சனம் செய்தார். இடையில் நானும் சிக்கிக் கொண்டேன். ஆனால் பின்னால் மதிவாணன் தக்கவர்தான் என்று என்னைக் குறிப்பிட்டு எழுதினார். இத்திட்டம் உருவானபோது தமிழோடு பிற மொழிகளும் தெரிந்த தமிழாசிரியர்கள் வேண்டும் என்று பாவாணர் தேடியபோது, அவரிடம் சொல்லி சேலத்தில் பணிபுரிந்த எனக்கு இவ்வாய்ப்பை பெருஞ்சித்திரனார்தான் அளித்தார். இன்றைக்கு அவர் இருந்திருந்தால் இப்பணி முடிந்திருப்பது கண்டு பெருமகிழ்வு கொண்டிருப்பார்.



ஞாயிறு, 12 ஜூன், 2011

ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில்




கனடா நாட்டு பாராளுமன்றத்துக்கு 30 மே 2011 அன்று தேர்வு பெற்ற தமிழ்ப்பெண் ராதிகா சித்சபை ஈசன் கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய செயல் உலகத் தமிழர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 23 திசம்பர் 1981ல் பிறந்து 5 வயதில் கனடாவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் பணியிடத்தில் விபத்து காரணமாக ஊனமுற்றார்.நர்சிங் கல்வியை இதனால் பாதியில் நிறுத்திய இவரது தாய் கொடவுன் ஒன்றில் கடும் வேலைகளை செய்து இவரை படிக்க வைத்தார்.

டொரண்டோ பல்கலையில் முதலில் படித்தார்.அங்கு தமிழ் மாணவர் மன்றத் துணைத் தலைவியாக இருந்தார்.கார்லெடன் பல்கலையில் பி.காம் படித்து குயின்ஸ் பல்கலையில் தொழில் உறவுகளில் முதுகலை பட்டம் பெற்று 2004 ஆம் ஆண்டில் புதிய குடியரசுக்கட்சியில் உறுப்பினராகி ஸ்கார்ப்ர்ரோ-ரப் ரிவர் தொகுதியில் இருந்து 40 சதவிகித வாக்கு பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வு பெற்ற ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில் நிகழ்த்தியதற்கு திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் தமிழ்மாமணி நந்திவர்மன் பாராட்டுகளை மடல் மூலம் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம் அழிய விடமாட்டோம்



அறிஞர் அண்ணா உருவாக்கிய கழகக்குடும்பத்தினை இன்று நடத்தும்
தலைமையின் மீதான கோபத்தில் ஒருவரது குடும்பச் சொத்து என்பது
சரி அன்று.

தேக்குமரத் தேகத்தை தீக்கிரையாக்கிய தீரர்களும் இந்த இயக்கத்துக்காக திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் முழு நேரமும் உழைப்பவர்களும் பொளத்தம் போல, சமணம் போல, சித்தர் இயக்கம் போல, நீதிக்கட்சி போல இவ்வியக்கம் அழிய விடமாட்டோம் என உறுதி பூண்டவர்களும் இன்றும் வாழ்கிறோம். வட எழுத்து நீக்கித் தமிழ் எழுதுக என தொல்காப்பியர் நூற்பா எழுதியபோது உருவான திராவிட இயக்கத்தை அழிப்பவர் மகிழ புலவர் பிரபஞ்சனா சாடுவது ?



நந்திவர்மன்

வெள்ளி, 3 ஜூன், 2011

அகவை 88 காணும் ஆலமரம் : தமிழருக்கு நிழல் தர நீடு வாழ்க


1974 புதுவை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இலாசுப்பேட்டையில் முடிந்த பின் அந்தத தேர்தலுக்காக பிரச்சாரச் செயலாளராக இரூந்த நந்திவர்மன் இல்லத்தில் விருந்துக்கு தலைவர் கலைஞர் வந்தபோது எடுத்த படத்தில் நந்திவர்மன், அவரது சித்தப்பா மகள்கள் மறைந்த அலமேலுமைதிலி,சுந்தரவல்லி ஆகியோர் உள்ளனர்.அந்த விருந்தில் சிட்டிபாபு, பண்ருட்டி இராமச்சந்திரன்,தென் ஆற்காடுமாவட்டச் செயலாளர் தியகதுர்கம் இராமகிருட்டினன், திண்டிவனம் தங்கவேலு எம்.எல்.சி,பரூக் மரைக்காயர் அவர் தம்பி இக்பால், பேராசிரியர் இராசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தலில் தி.மு.கழகம் தோற்றது. இலாசுப்பேட்டையில் பரூக் மரைக்காயரும் திருநள்ளாறில் சொளந்தரரங்கன் மட்டுமே வென்றனர்.21 நாளில் இராமசாமி தலைமையில் அமைந்த அதிமுக ஆட்சி கவிழ்ந்தது
21 நாள் அதிமுக ஆட்சி மீது அலைஒசை ஏட்டில் ஆற்காடு வீராசாமி 21 ஊழல் புகார்களை கூறினார். உடனே அதிமுக வின் 21 நாள் ஆட்சி முதல் அமைச்சர் இதை சொல்ல புதுவை தி.மு.கவில் ஆள் இல்லையா என சவால் விட்டார்.21 நாள் அதிமுக ஆட்சி மீது 21 ஊழல் புகார்களை புதுவை தி.மு.க பிரச்சாரச் செயலாள்ர் நந்திவர்மன் அப்போதைய துணைநிலை ஆளுனர் சேத்திலாலிடம் தந்தார் என்பது வரலாறு