திங்கள், 14 நவம்பர், 2011

காங்கிரஸ் ஆரம்பிக்க வைத்த அண்ணா தி.மு.கழகம்

அம்மா தி.மு.க அறியாத எம்.ஜி.ஆரை பகடைக்காயாக்கி


எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி அல்ல அண்ணா தி.மு.கழகம். முன்பு காங்கிரஸ் ஈ.வெ.கி.சம்பத்தை முன்னிறுத்தி உடைத்தது போலவே, மீண்டும் தி.மு.கழகத்தை பிளக்க சதித்திட்டம் தீட்டிய காங்கிரஸ் எம்.ஜி.ஆரை கருவியாக்கி தி.மு.கழகத்தை உடைத்தது. புதுவை துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டி காங்கிரஸ்காரரான் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்தில் ஊடுருவி முதலமைசரானதால் கொந்தளித்த என்னிடம் அண்ணா பெயரில் கட்சித் தொடங்கச் சொன்னார். அக்டோபர் 16 1972 ல் அறிவித்தேன்.அனகாபுதூர் ராமலிங்கம் சென்னையில் அறிவிக்க இரண்டும் அக்டோபர் 18- 1972ல் தினமணிச் செய்தி ஆனது.

கட்சி துவக்கிய என்னை பாண்டிய நெடுஞ்செழியன் ஆராயாமல் கோவலனை கொலைக்களம் அனுப்பியது போல அமெரிக்க உளவாளி என் அபாண்டம் சுமத்தி நீக்கியபோது நவசக்தி நாளேடு இரண்டு தலையங்கங்கள் தீட்டியது. அதில் ஒன்று மேலே. முழு வரலாறும் செய்திகளும் கீழுள்ள சங்கிலியை சொடுக்கினால் அறியலாம்.



நந்திவர்மன்



சனி, 12 நவம்பர், 2011

வியாழன், 3 நவம்பர், 2011

அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா

அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றாமல் இவ்வளவு பெரிய நூலகம் முன் சின்னஞ் சிறிய அண்ணா சிலை வைத்து அண்ணாவுக்கு அவமரியாதை செய்தார் கலைஞர் எனவே அவர் பெயர் பொறித்த கல்வெட்டுக்களை நீக்கிவிட்டு வானுயர்ந்த சிலையை அண்ணாவுக்கு அமைத்து அவர் பெயரை போட்டுக் கொள்ளுமாறு சசிகலாவாவது அறிவுரை சொல்லக் கூடாதா .....

அண்ணா தி.மு.க பெயரையும் அண்ணாயிசத்தையும் நாட்டுக்கு முதலில் அறிவித்த நந்திவர்மன் வேண்டுகோள்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அடக்கம்: அன்பு: பண்பு: எளிமை: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வெற்றிக்கு வித்திட்டன: -


18 ஆண்டுகள் அரசியலை துறந்து கிரானைட் ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தியபோது ஆந்திரமாநிலம் வாரங்கலில் இருந்த சமயத்தில் லோக்தள் கட்சித் தலைவராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசுடன் நந்திவர்மனுக்கு நட்பு ஏற்பட்டது. அது பல ஆண்டுகள் கடிதத் தொடர்பாகவும் நேரடிச் சந்திப்பாகவும் இருந்து வந்தது. 1996 அக்டோபர் 26ல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் திராவிடப்பேரவை அரசியல் கட்சியாக பதிவு பெற்ற பிறகு புதுவைக்கு ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் பங்கேற்க ஜார்ஜ் பெர்னாண்டஸ் வந்தார். நந்திவர்மன் இல்லம் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் திராவிடப்பேரவையும் சமதாக் கட்சியும் இணைந்து ரெவேசொசியல் அரங்கில் நடத்திய பஞ்சாலை தொலாளர் மாநாட்டிலும் பங்கேற்றார். நந்திவர்மன் தங்கை மகள்கள் கனிமொழி – கயல்விழி மீது பாசம் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் எப்போதும் மடல் எழுதினாலும் முதலில் அவர்கள் பெயர்களை எழுதிவிட்டுத் தான் நந்திவர்மன் பெயரை எழுதுவார். 1998 திசம்பரில் டில்லியில் கூடிய சமதாக் கட்சியின் தேசியக் செயற்குழுவில் நந்திவர்மனின் திராவிடப்பேரவையும் நாகாலாந்து முதல்வர் வமூசோவின் நாகாலாந்து மக்கள் கட்சியும் மிஜோராம் முதல்வர் பிரிகேடியர் சைலோவின் மிஜோராம் மக்கள் மாநாட்டுக் கட்சியும் தோழமைக் கட்சிகளாகவும் இந்த மூவரும் சமதா செயற்குழு – பொதுக்குழுக்களுக்கு நிரந்தர சிறப்பு அழைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.

அப்போதுதான் புதுடில்லியில் தற்போதைய பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாருடன் நந்திவர்மனுக்கு நட்பு ஏற்பட்டது. சமதாக் கட்சியின் செயற்குழுவில் 66 பேர் இருந்தாலும் சுமார் பத்துபேர் தான் விவாதங்களில் ஈடுபடுவார்கள். அந்த 10 பேரில் ஒருவனாக நந்திவர்மன் பேசுவதுண்டு.  நிதிஷ்குமாருக்கு முன் வரிசையில் உட்காரவோ மேடையில் உட்காரவோ பிடிக்காது. கடைசிவரிசையில் அமர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நகைச்சுவையாகப் பேசுவார். மேடைக்கு அழைப்பட்டால் யார் மனமும் புண்படாமல் மென்மையாக பேசுவார். நந்திவர்மன் கொண்டு வரும் நூல்களைää திராவிட இயக்கம் பற்றிய குறிப்புகளை ஆவலுடன் பெற்றுக் கொள்வார் எப்போது தேர்தலில் நந்திவர்மன் போட்டியிட்டாலும் முழுச்செலவை பீகார் சமதா செய்யும் என்பார்.

ஜார்ஜ் பெர்னாண்டசே அவருக்கு எல்லாம். அவர் பேச்சை மீறமாட்டார். மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பீகாரில் முழுப்புரட்சி இயக்கம் தொடங்கினார். கட்சிகளற்ற ஜனநாயகம் வேண்டும் என்றார். அப்போது இளைஞர்களாக இருந்த லாலுபிரசாத்தும் நிதிஷ்குமாரும் அதில் ஈடுபட்டார்கள். ஜனதாதளத்தில் சேர்ந்தனர். அப்போதே நதிஷ்குமாருக்கு சாணக்கியர் என்ற பட்டம் கொடுத்து பேசுவார்கள் கட்சிக்காரர்கள். லாலு பிரசாத் ஜனதாதளத்தை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி துவக்கினார். ஜனதாதளத் தலைவராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். அவர் வழியில் நின்றார் நிதிஷ்குமார். குருவை மிஞ்சாத சீடர். நிதிஷ்குமாரால் தான் கொங்கணி மொழியை தாய்மொழியாகக் கொண்டு கன்னடத்தில் இதழ் ஆசிரியராகத் தொடங்கி மும்பையில் தொழிங்சங்க வாதியாக விளங்கி பாராளுமன்றத்தில் நுழைந்த ஜார்ஜட்பெர்னாண்டஸ் பீகார் அரசியல்வாதி ஆனார். அங்கிருந்து தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு தேர்வு பெற்றார்.

மத்தியில் தேசிய ஜனநாயக முன்னணி அமைந்தபோது அதன் அமைப்பாளர் ஆனார் ஜார்ஜ்பெர்னாண்டஸ். தேர்தல் அறிக்கையை ஜார்ஜ்பெர்னாண்டஸ் தயாரித்தார். அவர் எழுதினால் எவரும் திருத்தம் சொல்லமாட்டார்கள். திமுகழக தேர்தல் அறிக்கைகளும் முரசொலிமாறனால் மட்டுமே தயாரிக்கப்படும். தேசிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புத் திட்டத்தையும் சேது சமுத்திரத் திட்டத்தையும் சேர்க்கச் செய்தார் நந்திவர்மன்.

6.1.1999ல் தூத்துக்குடியில் சோசலிஸ்ட் மாநாடு. பார்வையாளராகச் சென்ற நந்திவர்மனை மேடைக்கு அழைத்து மொழிபெயர்க்கச் செய்து பேச்சின் இறுதியில் 5 நிமிடம் நந்திவர்மன் பற்றி பாராட்டிப் பேசினார் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ். சேது சமுத்திரத் திட்டம் துவக்கப்படும் என அப்போது அறிவித்தார். அந்தச் சமயத்தில் தரைவழி – கப்பல்போக்குவரத்து அமைச்சராக நிதிஷ்குமார் இருந்தார். புதுவைக்கு பிரதமர் வாஜ்பாய் வந்த நாளில் அவரது ஹெலிகாப்டர் உப்பளத்தில் இறங்கும் ஓசை கேட்ட சமயத்தில் பாதுகாப்பு அமைச்சார் ஜார்ஜ்பெர்னாண்டஸ் நந்திவர்மனுடன் பேசி தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக்கழக அறங்காவலராக போடப்போகிறேன் என்றார். நிதிஷ்குமார் அதற்கான ஆணை பிறப்பித்தார். 18 ஆண்டுகளாக தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் 1856 சுமை தூக்கும் தொழிலாளர்கள் தனியார் வசம் இருந்தனர். அவர்களை அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய மத்திய அமைச்சர் நிதிஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். அதற்குள் அவர் இலாகா மாற்றப்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் அமைச்சரானார். ஆனாலும் 1.1.2000 அன்று 1856 தொழிலாளர்களும் 64 பணியாளரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

பிரிக்க முடியாத குரு ஜார்ஜ்பெர்னாண்டசுக்கும் சீடர் நிதிஷ்குமாருக்கும் பிளவை தன் சுயநலத்திற்காக ஏற்படுத்தியவர் ஜெயா ஜெட்லி. ஜார்ஜ்பெர்னாண்டஸ் மொரார்ஜி தேசாய அரசில் அமைச்சராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த ஜெட்லியை மணந்துகொண்ட மலையாள பெண்மணி ஜெயா ஜெட்லி. அவர் கைவிணை பொருட்கள் ஏற்றுமதி செய்பவர். ஜார்ஜ்பெர்னாண்டசுக்கு பணம் தேவைபடும்போதெல்லாம் கடன் தருபவர். இதனால் கட்சிக்குள் மூக்கை நுழைப்பார் அந்த பெண்மணி. தேசிய ஜனநாயக முன்னணி ஒரு ராஜ்ய சபா சீட்டை சமதாக் கட்சி பீகாரில் ஒதுக்கியது. அதை பீகாரைச் சேர்ந்தவருக்கு தர நிதிஷ்குமார் விரும்பினார். ஆனால் ஜெயா தனக்கே வேண்டும். தான் இல்லாவிட்டால் எவருக்கும் கிடைக்கக்கூடாது என சீட்டை சரண்டர் செய்ய வைத்தார். ஜார்ஜ்பெர்னாண்டஸ் நிதிஷ்குமார் நட்பில் விரிசல் ஏற்பட இப்படி ஜெயா காரணமானார்.

குஜராத்தில் பாஜகட்சி – சமதாக் கட்சி கூட்டணி உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்த போது தனது எம்.பி கனவுக்காக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை முறித்து ராஜ்கோட் நகரில் கூடிய செயற்குழுவில் தனித்து போட்டியிட சமதாவை களம் இறக்கி எல்லாம் தொகுதிகளிலும் தோற்க ஜெயா காரணமானார். இதனால் 2004 ஏப்ரல் 11ல் பாட்னாவில் கூடிய செயற்குழுவில் ஜார்ஜ்பெர்னாண்டஸை தலைவர் பதவி தேர்தலில் தோற்குமாறு செய்து சரத்யாதவை கொண்டுவரும் நிர்பந்தம் நிதிஷ்குமாருக்கு எற்பட்டது. அப்போது ஐக்கிய ஜனதாதளத்தை உடைக்க பாட்னாவில் ரிபப்ளிக்கன் ஓட்டலில் கூட்டம் கூட்டினார் ஜெயா ஜெட்லி. கௌரவம் பார்க்காமல் போட்டி கூட்டம் நடந்த இடத்துக்கே வந்தார் நிதிஷ்குமார். ஜார்ஜ்பெர்னாண்டசுடன் இருந்த நந்திவர்மனை என் நண்பனான நீயுமா இங்கு வந்துவிட்டாய் என வேதனையுடன் கேட்டார். ஜார்ஜ்பெர்னாண்டஸ் தங்கியிருந்த அறைக்கே சரத்யாதவை அழைத்துவந்து அவருக்க இனிப்பு தந்து புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு ஆதரவு கேட்டார் சரத் யாதவ். அப்பொழுது அந்த அறையில் நந்திவர்மனும் இலட்சத்தீவு எம்.பி பூக்குன்னிகோயாவும் இருந்தனர். அப்பொழுது பிளவு தவிர்க்கப்பட்டது. ஏப்ரல் 14 2004 ல் டில்லியில் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இல்லத்தில் சுமார் 10 தலைவர்கள் கூடி தனிக்கட்சி பற்றி ஆலோசித்தபோது குறுக்கிட்ட நந்திவர்மன் இனி பீகாரில் விஷ்ப்பரிட்சை வேண்டாம். டில்லியில் ஜார்ஜ்பெர்னாண்டஸ் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவரும் சோஷலிஸ்ட்டுமான முலாயம்சிங் யாதவுடன் உத்திரபிரதேசத்தில் கைகோர்த்து அரசியல் நடத்துவதே இனி புத்திசாலித்தனம் என நந்திவர்மன் சொன்ன யோசனை ஜெயா ஜெட்லிக்கு பிடிக்கவில்லை.

வீம்புக்காக ஜார்ஜ்பெர்னாண்டஸ் - நிதிஷ்குமார் நட்பை முறித்த ஜெயா ஜெட்லி கடந்த தேர்தலில் பீகாரில் ஜார்ஜ்பெர்னாண்டஸையும் அவரது நண்பர்களையும் சுயேட்சைகளாக போட்டியிட வைத்தார். வாழ்நாளில் மிக அவமானகரமான தோல்வி ஜார்ஜ்பெர்னாண்ட ஸ்க்கு ஏற்பட்டது. முன்னாள் மகாராஜாவும் எப்பொழுதுமே வெற்றி பெற்று வந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த திக்விஜய்சிங்கும் தோற்றார். ஆனால் பண்பில் இமயமாக விளங்கி நிற்கும் நிதிஷ்குமார் உடல் நலிவுற்று பதவியேற்பு உறுதிமொழியைக்கூட சிவானந்ததிவாரி உதவியில்லாமல் படிக்கமுடியாத நிலையில் இருந்த தன் குருநாதர் ஜார்ஜ்பெர்னாண்டஸை மாநிலங்களவை உறுப்பினராக்கி தன் பெருந்தன்மையை உலகுக்கு வெளிகாட்டினார்.

ர்pக்ஷாவில் பயணித்து ஏழையும் இல்லம் வந்தால் இன்முகத்துடன் வரவேற்று குறை கேட்கும் நிதிஷ்குமார் காலத்தில்தான் கிராம புற மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் கொடுக்கப்பட்டது. பாட்னா நகரம் சென்னை நகரம் போல மேம்பாலங்கள் நிறைந்த நகரமாக மாறியது. பனைமரங்களின் நிழல்களில் கள் அருந்தி வீட்டுச்சுவர்களில் சாணியால் வரட்டி தட்டி ஆடுமாடுகளை செல்வமாகக் கொண்டு அரிசி உணவை விரும்பி உண்ணும் வட திராவிடராகிய பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் ஒரு உண்மையான தலைவர்.அவரது மைத்துனி ரேணுகுமாரி எம்.பியாக இருந்து வீராவேசமாக இந்தியில் பேசக்கூடியவர்.
 
 எனினும் அவர் அனைத்து நண்பர்களையும் குடும்பமாக கருதி அவர்களையே அரசியலில் முன்னிருத்துவார் என திராவிட பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.

திங்கள், 27 ஜூன், 2011

புதுவையில் உதயமான அண்ணா திமுகழகம்

புதுவையில் ஏன் வளரவில்லை? 


 1972ல்தோன்றிய அ.இ.அ.தி.மு.க துவையில் மட்டும் வளராமல் இருப்ப தன் காரணம் என்ன? திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் பழைய வரலாற்றை நினைவூட்டினார்.

அண்ணா தி.மு.கழகம் உதயமானபோது செயலலிதா அதில் இல்லை. அண்ணா தி.மு.கழகம் புதுச்சேரியில் தான் உதயமானது என்ற வரலாறும் அவருக்குத் தெரியாது.1969ல் பரூக் மரக்காயர் தலைமையில் தி.மு.கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைச்சரவை நடத்தின. காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.கழக முதல்வராக இருப்பதா? என பழைய தி.மு.கவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வரான பிறகு 1969ல் புதுவையில் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுக்கப்பட்டது. அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏ. கோவிந்தசாமி அடிக்கடி புதுவை வருவார். அவரது உறவினர்கள் நேருவீதி – காந்தி வீதி சந்திப்பு அருகில் இன்றும் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வீடு அம்பலத்தாடுமய்யர் மடத்து வீதியில் இருக்கிறது. புதுவை வரும் தமிழக அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவரது உறவினரான கிருஷ்ணராஜ் மூலமும் பழைய தி.மு.கழகத்தவரும் பின்பு அமைச்சராக இருந்தவருமான பெருமாள்ராஜா மூலமும் காங்கிரசிலிருந்த எதுவார்குபேர் அவர்களை தி.மு.கழகத்துக்குள் கொண்டு வந்தனர். பட்டுக்கோட்டை குமாரசாமி நவமணி நாளிதழ் ஆசிரியர். அவர் மூலமும் சென்னை மேயராக இருந்த மைனர் மோசசு மூலமும் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்துக்குள் சேர்ந்தார். அவரை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினராக்க எம்.ஏ.சண்முகம் வட்டச் செயலாளராக இருந்த வட்டக் கழகம் ஒப்புக்கொள்ளவில்லை. புதுவை வட்ட தி;.மு.க தென்னாற்க்காடு மாவட்டச் செயலாளர் குறிஞ்சிப்பாடி இரா. சாம்பசிவத்தின் கீழ் வட்டக் கழகமாக இருந்தது.

காரைக்கால் வட்டக் கழகம் முன்னாள் முதல்வர் எஸ். ராமசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தஞ்சை மாவட்டச் செயலாளராக மன்னை நாராயணசாமி இருந்தார். புதுவையில் உறுப்பினராகாத ஒருவர் திமுக அரசின் முதல் அமைச்சர். அப்போது மத்திய அரசு சம்பள விகிதம் புதுச்சேரியில் அமுலானது. தமிழ் ஆசிரியர்களை விட இந்தி ஆசிரியர்க்கு கூடுதல் சம்பளம். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் பேரணியில் பங்கேற்று நான் இதை கண்டித்தேன். மாநில சுயாட்சிக்கும் புதுவைக்கும் சம்மந்தமில்லை என சட்டமன்றத்திலேயே பேசி பரூக் மரக்காயர் கண்டனத்துக்கு ஆளானார். புதுவை பல்கலைக்கழகத்துக்கு அரவிந்தர் பெயர் சு10ட்ட முனைந்தும் எதிர்ப்பை சம்பாதித்தார். உள்துறை அமைச்சராக இருந்த இராமசாமியின் இலாக்கா பறித்தும் எதிர்ப்புக்கு ஆளானார். எம்.ஏ.சண்முகம் தலைமையில் மாவட்ட திமுக கழகமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது கட்சி! கட்சி ஆட்சியை கடுமையாக விமரிசித்தது. இதனால் மாவட்டக் கழகத்தை கலைத்து பரூக் மரக்காயரை மாநில அமைப்பாளராக்கினார்கள். அந்தச் சு10ழ்நிலையில் தமிழ்நாட்டில் திமுகழகம் உடையப்போகிறதுää அண்ணா பெயரில் கட்சி உருவாகும் என மாணவர் தி.மு.க செயலாளரான என்னிடம் முன்கூட்டியே கூறியவர் எங்கள் குடும்ப நண்பர் துணை நிலை ஆளுநர் பி.டி.ஜாட்டி ஆவார். எனவே எம்ஜிஆருக்கும் முன்பாக புதுவையில் அண்ணா பெயரில் கட்சி தொடங்குவது பற்றி புதுவைக் கடற்கரையில் கலைக்கப்பட்ட மாவட்டக் கழகப் பிரதிநிதிகள்ää சிவலிங்கம்ää செல்வம்ää இந்து நடராசன்ää அலைஓசை வைத்தியநாதன்ää முத்தையன்ää துரை அரிராமன் உள்ளிட்டோருடன் மாணவர் தி.மு.கழக மாநிலச் செயலாளர் ஆகிய நானும் விவாதித்தோம் 17 நாட்கள் இந்த விவாதம் நடந்தது. 42 கிளைக்கழகச் செயலாளர்களை நாங்கள் அணுகினோம்.

புதுவைப் பதிப்பு நாள் ஏடுகள் இல்லாத காலம். தந்தி மூலமே இந்து நடராசனும் சுதேசமித்திரன் விசயபாரதியும் நவமணி இராசமாணிக்கமும் செய்தியை அனுப்பிய காலம். அண்ணாயிஸ்ட் தி.மு.கழகம் என்ற புதுக்கட்சி துவக்க அறிவிப்பை நானும் (நந்திவர்மனும்) சிவலிங்கமும் செல்வமும் வெளியிட்டோம். தமிழ்நாட்டில் அனகாபுத்தூர் இராமலிங்கம் அண்ணா திமுகழகப் பெயரை இரண்டு நாள் கழித்துச் சொன்னார். ஆக செப்18-1972ல் தினமணி முதல்பக்கச் செய்தியாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர் தமிழகம் புதுவையில் கட்சி அமைப்பு என ஒரே செய்தியாக வெளிவந்தது. அப்போது அகில இந்திய வானொலி 7.15 இரவு டில்லியில் இருந்து வெளியான செய்தி அறிக்கையில் 42 தி.மு.கழகக் கிளைகள் உடனடியாக அண்ணா திமுகவில் இணைந்த செய்தியை ஆல் இன்டியா ரேடியோவில் பணியாற்றிய ராசாவும் குழந்தைவேலும் ஒலிபரப்பச் செய்தார்கள். திமுகழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரில் உள்துறை அமைச்சர் இராமசாமிää பொதுப்பணி அமைச்சர் தெ. இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் அண்ணா திமுகவுக்கு துவங்கிய உடனே இணையத் தயாராக இருந்தார்கள். ராமசாமியின் நெருங்கிய நண்பனான நான் முன்கூட்டியே அண்ணா திமுகவுக்கு அனுப்பப்பட்டேன். திமுகழக மாவட்டப் பிரதிநிதி சிவலிங்கத்தை மாநில அமைப்பாளராக்கிவிட்டு அண்ணா திமுகழக தமிழ்நாடு புதுவை மாணவரணியை ஏற்பது என் திட்டமாக இருந்து எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக நா. மணிமாறன் இருந்தார். பேரொளி பத்திரிகையும் நடத்தினார். காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.க அமைச்சரவைக்கு தலைமையா? என்ற கோபத்தில் பிறந்த அண்ணா தி.மு.கழகம் புதுவை முதல்வர் மீது அடுக்கடுக்காய் புகார்களைக் கூறியது. துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டியிடமும் சேத்திலாலிடமும் ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டது.

காமராசர் சந்திப்பு

பரூக் அமைச்சரவை மீது விசாரணைக் கமிஷன் அமைக்க ஒரு நாள் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் நாடினேன். பழைய காங்கிரஸ் தலைவராக இருந்த ஜீவரத்தின உடையார்” காமராசர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்” நாங்கள் முழு அடைப்பில் பங்கேற்கிறோம் என்று சொன்னார் சென்னை சென்று புதுடெல்லியில் இருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் செய்தியாளர் வி.எஸ்.மணியத்தை அழைத்துக்கொண்டு திருமலைப்பிள்ளை சாலை-திநகரில் உள்ள காமராசர் இல்லத்தில் 11.11.1972 அன்று காமராசரை சந்தித்துப் பேசினேன். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் புதுவை அண்ணா தி.மு.கழக தலைவர் காமராசரை சந்தித்தார் என்று 12.11.1972 ல் செய்தியாக வெளிவந்தது. அன்று மாலையே காமராசரை சந்திக்க நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என அதிமுக நாளேடான தென்னகத்தில் அறிக்கை தலைமையால் வெளியிடப்பட்டது. தலைமைக் கழக அவசர அழைப்பினை ஏற்று சென்னை சென்று லாயிட்சு சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை சந்தித்தேன். காமராசரை கடுமையாக விமர்சித்த எம்.ஜி.ஆர் தன்னைச் சுட எம்.ஆர்.ராதாவை ஏவிய ஒருவரை நீ போய் பார்ப்பதா? என்று என்னை திட்டினார். புதுவை மாநில அதிமுகழக நிலைமையை மாநில அமைப்பாளரான நான் சொல்லாவிட்டால் வேறு எப்படி அண்ணே கீழ்மட்ட நிலை தெரியும் என நான் சொன்னதற்கு “என்னிடம் குறுக்கு கேள்வி கேட்கும் வக்கீல்கள் எனக்குத் தேவையில்லை என்று சாடினார். நான் மௌனமாக தலை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். கோபம் தணிந்த எம்.ஜி.ஆர் சரி! சரி தலைமை அனுமதி இன்றி காமராசரை சந்தித்தற்கு வருத்தம் தெரிவித்து எழுதி தருமாறு சொன்னார். அவ்வாறே செய்தேன். ஏடுகளில் காமராசர் சந்திப்பு பற்றி மட்டுமே செய்தி வந்திருந்தது. மகாத்மாகாந்தி மகனுக்கும் இராஜாஜி மகளுக்கும் பிறந்த நண்பர் இராஜ்மோகன் காந்தி மூலம் ராஜாஜியை நான் சந்தித்திருந்தேன். புதுவை பரூக் அரசுக்கு எதிரான ஆதரவை திரட்டவே இந்தச் சந்திப்புகள்.

எம்.ஜி.ஆர் இருந்த அறையை விட்டு வெளியே வந்த என்னை வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஜேப்பியார்ää வழக்கறிஞர் பி.டி.சரசுவதிää ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் ஆறுதல் கூறினர். நீங்கள் அண்ணன் எதிரே உட்கார்ந்திருக்கக் கூடாது! வளரவேண்டிய இளைஞர் என்பதால் என் அறிவுரை என்றார் ஆலந்தூர் மோகனரங்கன். புதுவையில் குபேர் வீட்டுச் சோபாவில் நமக்க இணையாக ரிக்ஷா ஓட்டுபவரும் உட்காhந்திருக்கும் பிரெஞ்சு சமத்துவம் நினைவுக்கு வந்தது. எம்.ஜி.ஆர்க்கு என்மீது கசப்பு ஏற்பட இந்தச் சம்பவம் காரணமாயிற்று.

பெரியவர் நெடுங்காடு ப.சண்முகம் அப்போது எதிர்க்கட்சித்தலைவர். காங்கிரசில் 10 உறுப்பினர்கள் இருந்தார்கள். திமுகவில் இருந்து இராமசாமி - இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வெளிவந்தால் ஆட்சி கவிழும். 6 பேர்கள் வெளியே வருவார்கள் அவர்கள் பெயர் அறிவிக்கப்படும் என தினமணியில் பேட்டி அளித்த நான் ஆளுநரைச் சந்தித்தேன். சுபாநாயகர் செல்வராசை சந்தித்து சட்டமன்றத்தை கூட்டுமாறு கேட்டிருந்தேன்.

தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி புதுவை திமுக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தது. மக்கள் தலைவர் வ. சுப்பையா அமைச்சர். டாக்டர் என்.ரங்கநாதனும் குருசாமியும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் பரூக் அரசை விட்டு வெளியேறி இருந்தால் எம்.ஜி.ஆர் கட்சி துவக்கியவுடனே புதுவையில் ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் புதுவையில் அண்ணா தி.மு.கழக ஆட்சி வர முடியாமல் போனதற்கு கல்யாணசுந்தரம் காரணம். மக்கள் தலைவர் வ. சுப்பையா எந்தையார் மீதும் என் மீதும் மிகுந்த அன்புடையவர் ஆவர். மாஸ்கோ மருத்துவமனையில் இருந்த போது நீங்கள் மட்டும் திராவிடக் கம்யூனிஸ்ட் கட்சி என்று கட்சி நடத்தி இருந்தால் உங்கள் தலைமை ஏற்றுச் செயல்பட்டிருப்பேன் என நான் மடல் எழுதியதும் பழங்கதை. திமுககழக – கம்யூனிஸ்ட் கூட்டணி அமைச்சரவையில் வ. சுப்பையா இருந்தார். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் முழுநேர ஆலோசகர்களாக கலியாணசுந்தரமும் பாலதண்டாயுதமும் இருந்தார்கள். சுப்பையா இல்லத்தில் என் தலைமையில் சிவலிங்கம் செல்வம் துரை. அரிராமன்ää புலவர் கந்தக் கண்ணன் எம்ஜிஆர் மன்றச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலியாணசுந்தரத்தைச் சந்தித்து தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் கூட்டு புதுவையில் திமுகவுடன் கூட்டணி என்று இரட்டை நிலைப்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுப்பது சரி அல்ல என வாதாடினோம். சுப்பையாவின் தனிச் செயலாளரான ஜிம்மிராபர்ட்ஸ் இந்தச் சந்திப்புக்கு சாட்சியாவார். 3 உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் புதுவையில் திமுகழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் திமுகவில் இருந்து அண்ணா திமுகவுக்கு வரத் தயாராக இருந்த ராமசாமிää ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் ப. சண்முகம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அவர் கிழிருந்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் கூடி கூட்டணி அமைச்சரவை உருவாகி இருக்கும். அண்ணா திமுகழகம் துவங்கிய இரண்டே மாதத்தில் புதுவையில் ஆட்சியை பிடித்து இருக்கும். ஆனால் தி இந்து நாளேடு வழியாக கம்யூனிஸ்ட் தலைவர் கலியாணசுந்தரம் சொன்னார் : “தமிழகமும் புதுவையும் வேறு வேறு மாநிலங்கள். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் உள்ளோம். புதுவையில் திமுகவுடன் இருக்கிறோம் இதில் தவறில்லை என்றார்.

அண்ணா திமுகழக அமைப்பாளரான நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வாயிலாக பதில் அளித்தேன். புதுவையில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அந்தஸ்தே கொண்டது. மாநில தகுதி இல்லாதது. எனவே தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் ஒரு மாவட்டமாக உள்ள புதுவை அண்ணா திமுக அணிக்கே வர வேண்டுமென அறிக்கை விட்டேன்.

கம்யூனிஸ்டுகளுக்கு கோபம் கொப்பளித்தது. அப்போதைய எம்எல்ஏ டாக்டர். ரங்கநாதன் நானும் (நந்திவர்மனும்) சில வெள்ளைக்காரர்களும் இருக்கும் படத்தை எம்ஜிஆரிடம் காட்டி நந்திவர்மன் ஒரு அமெரிக்க உளவாளி என வத்தி வைத்தார். இதை நம்பிய எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து 3 மாதத்துக்குள் நந்திவர்மனை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து சொந்த அலுவல் காரணமாக சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை 26.12.1972 அன்று வெளியிட்டார்.

நந்திவர்மன் ஆகிய நான் காமராசரை சந்தித்து இருந்ததால் பழைய காங்கிரஸ் நாளேடு இந்த சஸ்பெண்டை கண்டித்து தலையங்கம் எழுதியது. திமுகழகத்தின் வார ஏடான மாலைமணி கண்டித்தது. பம்பாயிலிருந்து வெளிவந்த கரண்ட வார ஏடும் புதுடெல்லியில் இருந்து வெளிவந்த ஸ்டேட்ஸ்மென் நாளேடும் இது பற்றி கட்டுரைகளை வெளியிட்டன.

மகாத்மா காந்தியின் மகனுக்கும் இராஜாஜியின் மகளுக்கும் பிறந்த ராஜ்மோகன் காந்தி நடத்தி வந்த மாரல் ரீ-ஆர்மமெண்ட் அமைப்புக்கு புதுவை மேயர் குபேர் மூலம் மாநகராட்சி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வரவேற்பில் கலந்து கொண்ட அயல்நாட்டவருடன் நான் (நந்திவர்மன்) இருக்கும் படத்தை காட்டி அமெரிக்க உளவாளி முத்திரை குத்தினார்கள்.

கோவலனை விசாரிக்காமல் கொலைக்களத்துக்கு அனுப்பிய பாண்டிய நெடுங்செழியன் போல விசாரிக்காமலே அண்ணா திமுக ஆட்சி அமைக்க பாடுபட்ட நான் தண்டிக்கப்பட்டேன். இலாயிட்சு சாலையில் நான் நடந்து வந்ததும் அவ்வழியாக வந்த முரசொலிமாறன் என்னை அழைத்துச் சென்று கலைஞரிடம் விட்டதும்ää மீண்டும் கழகம் வர கலைஞர் அழைப்பு விட்டதும் புதுவை அண்ணா திமுகழகம் - திமுகழகத்தின் இணைந்த செய்தியை முரசொலி வெளியிட்டதும் பழங்கதை.

என்னை நீக்கிய பிறகு எம்ஜிஆர் ஏடுகளில் எதிர்கொண்ட விமர்சனங்களால் புதுவையை சேர்ந்த யாரையும் அமைப்பாளராக்காமல் சினிமா டைரக்டர் கோபாலகிருஷ்ணனை ஆறுமாதமும் அனகாபுத்தூர் ராமலிங்கத்தை ஆறுமாதமும் டெபுடேஷனில் புதுவைக்கு அனுப்பி அமைப்பாளராக செயல்படவிட்டது 1974 தேர்தலுக்கு முன் நடந்த நிகழ்வுகள்.

முதற்கோணல் முற்றும் கோணல் ஆனது!  அண்ணா திமுக தோள் மீதேறி கம்யூனிஸ்ட் முதல்வராகலாம் என கணக்குப் போட்டு என்னை வெளியேற்றினார்கள். அன்று தவறிழைத்த அதிமுக தலைமை புதுவையில் தகுதி வாய்ந்த முதல் அமைச்சர் வேட்பாளரை இன்றுவர உருவாக்காததால் அண்ணா திமுகவை ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியாகவே மக்கள் கருதவில்லை.  

அண்ணா திமுக பெயர் அறிவித்து கொள்கை அறிவித்து சட்டதிட்டம் வகுத்துக் கொடுத்த என்மீது அமெரிக்க உளவாளி என அபாண்டம் சுமத்திய கட்சித் தலைவிக்கு கட்சி துவக்கும் போது உடனிருந்தால்தானே பழைய வரலாறு தெரியும். இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.

திங்கள், 13 ஜூன், 2011

மொழிவழியாக மனித வரலாற்றில் பின்னோக்கிப் பயணம் செய்கிறோம்’’

பனிரெண்டாயிரம் பக்கங்கள். சுமார் ஐந்து லட்சம் தமிழ்ச்சொற்கள். 31 தொகுதிகள்... 37 ஆண்டுகளாக நடந்துவந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) இப்போது முழுமை எய்தியுள்ளது. பாவாணர் தொடங்கிய இத்திட்டமானது பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது. மூத்த தமிழறிஞரான மதிவாணன் என்.அசோகனுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
இந்த சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்?

ஒரு சொல்லின் வேரை ஆராய்வதற்கு பலமொழி அறிவு தேவை. எனவே சேலம் கல்லூரியில் பணிபுரிந்த எனக்கு பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் பாவாணர் அவர்களிடம் இத்திட்டத் தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. இன்று 37 ஆண்டுகள் இப்பணியில் கழித்தும் உள்ளேன். வட இந்திய மொழிகளில் உள்ள பல வினைச்சொற்களின் மூலம் தமிழாக உள்ளது. தமிழ்தான் வேர். இந்தியில் நாளை வா என்பதை ‘கல் ஆவோ’ என்கிறார்கள். கல் என்றால் நாளை. இந்தச் சொல் சமஸ்கிருதம், பெர்சியனில் இல்லை. குஜராத்தியில் இதை கால் ஆவோ என்கிறார்கள். ஒரியாவில் காலி ஆவோ என்கிறார்கள். தமிழில் காலையில் வா என்கிறார்கள். ஆக, இந்த காலைதான் இப்போது கல் ஆகியிருக்கிறது. எனவே வட இந்தியா முழுக்க ஒரு காலத்தில் தமிழ் பேசுகிறவர்கள்தான் இருந்தனர் என்றும் காலப்போக்கில் அது பிராகிருதமாகவும் பாலியாகவும் திரிந்தபோது சொற்கள் திரிந்துபோய்விட்டன என்று கூறலாம். அந்தச் சொற்களுக்கு வேர்மூலம் காணவேண்டுமென்றால் இந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் காணலாம்.

இதன் பயன் என்ன? இன்று இருக்கும் பல மொழிகள், சொற்கள் எங்கிருந்து பிரிந்து வந்தன? இந்தி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகள் எங்கிருந்து உருவாயின?

இந்த மொழிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தன என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.

 சொற்களை காலத்தால் மீட்டுக் கொண்டுபோனால் இவையெல்லாம் ஒரே மூல மொழியில் இருந்து பிரிந்தன என்பது தெரிகிறது.அந்த மூல மொழிக்கு தமிழ்மொழி  மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாறும் வெளிக்கொணரப்படுகிறது. இதனால் ஒருவர் மற்றொரு மொழியிடம் பற்றுகொள்ளவும் அதைப் பேசுவோரிடம் உறவுகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள்? சவால்கள்?

பொதுவாக சில சொற்களைப் பற்றி ஆராயும்போது, அவை பிறமொழி அகராதிகளிலும் கிடைக்காது. அவற்றுக்காக மலைவாழ் மக்கள் பேசும்மொழி, சிறு திராவிட மொழிகள், நாட்டுப்புற மொழி ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். கேழ்வரகைக் குறிக்கும் இச்சொல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும்? தமிழில் ‘ரா’ மொழியின் முதலில் வராது. இது படுகர்களின் மொழியில் உள்ளது. அவர்கள் இதை எரகி என்கிறார்கள். நான்கு இறகுகளாக கதிர் உடைவதால், அதற்கு இறகி என்று பெயர் வைத்திருக்கவேண்டும். அதுதான் ராகி ஆனது. சகோதரன் என்ற சொல் வடமொழியில் இருந்து நமக்கு வந்தது. ஆனால் அது வருவதற்கு முன்னால் தமிழர்களுக்கு சகோதரனைக் குறிக்கும் சொல் இல்லையா? தஞ்சாவூர் பகுதியில் சீர்காழியை அடுத்த ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் சகோதரர்களைக் குறிக்க வேறு சொல் கையாளுகிறார்கள். எனக்கு பிறவன்மார் மூணு பேர் என்பார்கள். பிறவிமார் மூணு பேர் என்பார்கள். பிறவன் என்பது ஆண் சகோதரனையும் பிறவி என்பது பெண் சகோதரியையும் குறிக்கிறது. தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு. பிராகிருத மொழியில் உரா என்றால் வீடு. பஞ்சாபியில் உரா என்றால் வீடு.

எப்படி இச்சொல் அங்கே போனது? ஸ்பெயினில் பாஸ்க் மொழியில் உரா என்றால் மனைவி. வீட்டைக் குறிப்பது மனைவியைக் குறிக்குமல்லவா? உறை என்று பேசுபவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் பிரிந்துபோனவர்களிடம் எஞ்சியிருக்கும் சொல்லாக அச்சொல் இருக்கலாம்.

இதுபோல ஏராளமான சொற்கள் உள்ளன. இதையெல்லாம் இந்த அகரமுதலியில் தந்துள்ளோம்.

கல்வெட்டு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி போன்றவை எப்படி உங்களுக்கு உதவி செய்துள்ளன? நிறைய என்று சொல்லலாம். நான் சிந்துவெளி முத்திரைகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஐராவதம் மகாதேவனும் அஸ்கா பர்போலாவும் ஒரு முத்திரையைக் கூட படிக்க இயலவில்லை. அவர்கள் முகமதியர்கள்போல வலமிருந்து அந்த முத்திரைகளைப் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர். சிந்துவெளி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில் 75 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளன. அப்படி இருப்பின் இந்திய மொழிகள் அனைத்தும் அரபியைப் போல வலமிருந்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும்? அப்படியா உள்ளன? இடமிருந்துதானே எழுதுகிறோம்? சிந்துவெளி முத்திரைகள் இடமிருந்துதான் எழுதப்பட்டவை என்று நான் ஐயாயிரம் முத்திரைகளைப் படித்துக் காட்டியுள்ளேன்.

ஆனால் நீங்கள் படித்தவற்றுக்கு அங்கீகாரம் இல்லையே? ஏன்?

வலமிருந்து படிக்கவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை. சரி. அப்படி முடிவெடுத்தவர்களை ஒரு முத்திரையையாவது அவர்களைப் படித்துக்காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். லைக் என்று ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லை எகில் என்று வலமிருந்து படிக்கமுடியுமா? முடியாது. அதுபோல்தான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஸ்கோ பர்போலாவாலும் ஐராவதம் மகாதேவனாலும் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க இயலாது. அப்புறம் இவர்கள் அதை அசை எழுத்து(syllabic) என்று சொல்லிவிட்டு படமாகப் (pictographic) படிக்கிறார்கள். ஒரு மீன் படம் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஆறு கோடுகள் இருக்கின்றன. இதை அறுமீன் என்று படிக்கிறார் கள். வணிகர்கள் பயன்படுத்திய முத்திரைகளில் அவர்கள் பெயர் தானே இருக்கவேண்டும்? நான் படித்ததில் சாத்தன் என்றொரு பெயர் உள்ளது. பல பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக உள்ளன. கூத்தழகன் சாத்தன் என்றே வருகிறது. ‘ழ’கரமே நன்றாக உள்ளது.

சிந்துவெளி முத்திரைகளில் சிவனின் பெயர் கோ அவ்வன் என்று உள்ளது. யோக நிலையில் உள்ள சிவன். ஆரிய திராவிட நாகரிகங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உண்டு. யாகம் செய்தது ஆரிய நாகரிகம். யோகம் அதாவது தவம் செய்தது திராவிட நாகரிகம். இப்போது யோகத்தை அவர்களும் யாகத்தை இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில் யோக நிலையில் சிவன் இருப்பதால் அது தமிழர்கள் நாகரிகமாக இருக்கவேண்டும். சிந்துவெளியில் அந்த சிவன் மீது கோ அவ்வன் என்று உள்ளது. கோ என்றால் மலை. மலையப்பன், கொண்டப்பன், கட்டப்பா என்கிறோம் அல்லவா? சிந்துவெளி நாகரிகத் தமிழில் அவ்வன் என்றால் அப்பன்; அவ்வை என்றால் தாய் என்று நான் சொன்னேன். ஆனால் இலக்கியத்தில் எங்குமே இதற்குச் சான்று இல்லையே என மறுத்தார்கள்.

இலக்கியத்தைவிட 2000 மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளி. அந்த சொல் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சொல் சங்ககாலம் வரை இருந்திருக்கிறது என்பது இப்போது புலப்படுகிறது. புதுச்சேரி பல்கலைப் பேராசிரியர் ராஜன், புலிமான் கோம்பை என்ற ஓர் இடத்தில் செய்த ஆய்வில் ஒருநடு கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களைப் படித்தார். அதில் அவ்வன் பதவன் என்று ஒரு பெயர் உள்ளது. ஆக, சங்ககாலத்திலேயே அவ்வன் என்ற பெயர் இருந்திருக்கிறது. எனவே சிந்துவெளியில் நான் படித்ததும் சரியே என்ற முடிவுக்கு வந்தேன்.

மேலை நாட்டு மொழியியல் ஆய்வுக்கும் உங்கள் ஆய்வுக்கும் என்ன தொடர்பு? அந்த கொள்கைகளை எப்படிப் பயன்படுத்திக்கொண்டீர்கள்?

அவர்கள் உலக மொழிகளுக்கு ஒரு பொது அளவுகோல் வைத்து ஆய்ந்தார்கள். ஆனால் வேர்மூலம் காண்பதில் தவறான பாதையில் சென்றுகொண்டுள்ளனர். சொற்களால் சொற்களை மீட்டமைக்கிறார்கள். ஆனால் அதற்குப் பொருள் இருக்கும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. காரணம் கருதித்தான் பொருட்களுக்குப் பெயர் வைத்துள்ளனர். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் தொல்காப்பியர். இந்த அடிப்படையில்தான் பாவாணர் அணுகுமுறையும் மேனாட்டவர் அணுகுமுறையும் வேறுபடுகின்றன. சொல் மூலம் மட்டும் காட்டினால் போதும் என்கிறார்கள் அவர்கள். நாங்களோ சொல் மூலத்துடன் பொருள் மூலமும் காண்பிக்கிறோம். நிழல் என்பது பழங்காலத்தில் நீழல் என்று இருந்தது. நீள்வதால் நீழல் என்று பெயர்வைத்தான் என்று நான் சொல்கிறேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம் நிழல் என்று பெயர்வைத்துவிட்டான் என்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்; காரணம் வேண்டாம் என்பது மேலைநாட்டு அணுகுமுறை. உங்கள் மொழியில் தெரியவில்லை. நீங்கள் சொல்ல இயலாது. ஆனால் எங்கள் மொழியில் தெரிகிறது. நாங்கள் சொல்கிறோம். எங்களு டைய சொற்பிறப்பியல் அகராதி, உலகில் வந்துள்ள பிற சொற் பிறப்பியல் அகராதிகளைவிட வேறு பட்ட அமைப்பு கொண்டது. மிகவும் விஞ்ஞானரீதியிலானது. சொல்லை ஆராயும்போது அதன் பொருளுக்கு முதலிடம் கொடுக்கிறோம்.

பாவாணருக்குப் பின்னால் இப்பதவியில் நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு பெருஞ்சித்திரனார் எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டதே...

பாவாணருக்கும் பெருஞ்சித்திரனாருக்கும் கடைசி காலத்தில் வேறுபாடுகள் வந்துவிட்டன. பாவாணரை, அவர் தன் வீட்டைக் கட்டுவதில்தான் கவனமாக உள்ளார். அகரமுதலியை மறந்து விட்டார் என்று விமர்சனம் செய்தார். இடையில் நானும் சிக்கிக் கொண்டேன். ஆனால் பின்னால் மதிவாணன் தக்கவர்தான் என்று என்னைக் குறிப்பிட்டு எழுதினார். இத்திட்டம் உருவானபோது தமிழோடு பிற மொழிகளும் தெரிந்த தமிழாசிரியர்கள் வேண்டும் என்று பாவாணர் தேடியபோது, அவரிடம் சொல்லி சேலத்தில் பணிபுரிந்த எனக்கு இவ்வாய்ப்பை பெருஞ்சித்திரனார்தான் அளித்தார். இன்றைக்கு அவர் இருந்திருந்தால் இப்பணி முடிந்திருப்பது கண்டு பெருமகிழ்வு கொண்டிருப்பார்.



ஞாயிறு, 12 ஜூன், 2011

ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில்




கனடா நாட்டு பாராளுமன்றத்துக்கு 30 மே 2011 அன்று தேர்வு பெற்ற தமிழ்ப்பெண் ராதிகா சித்சபை ஈசன் கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய செயல் உலகத் தமிழர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 23 திசம்பர் 1981ல் பிறந்து 5 வயதில் கனடாவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் பணியிடத்தில் விபத்து காரணமாக ஊனமுற்றார்.நர்சிங் கல்வியை இதனால் பாதியில் நிறுத்திய இவரது தாய் கொடவுன் ஒன்றில் கடும் வேலைகளை செய்து இவரை படிக்க வைத்தார்.

டொரண்டோ பல்கலையில் முதலில் படித்தார்.அங்கு தமிழ் மாணவர் மன்றத் துணைத் தலைவியாக இருந்தார்.கார்லெடன் பல்கலையில் பி.காம் படித்து குயின்ஸ் பல்கலையில் தொழில் உறவுகளில் முதுகலை பட்டம் பெற்று 2004 ஆம் ஆண்டில் புதிய குடியரசுக்கட்சியில் உறுப்பினராகி ஸ்கார்ப்ர்ரோ-ரப் ரிவர் தொகுதியில் இருந்து 40 சதவிகித வாக்கு பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வு பெற்ற ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில் நிகழ்த்தியதற்கு திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் தமிழ்மாமணி நந்திவர்மன் பாராட்டுகளை மடல் மூலம் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம் அழிய விடமாட்டோம்



அறிஞர் அண்ணா உருவாக்கிய கழகக்குடும்பத்தினை இன்று நடத்தும்
தலைமையின் மீதான கோபத்தில் ஒருவரது குடும்பச் சொத்து என்பது
சரி அன்று.

தேக்குமரத் தேகத்தை தீக்கிரையாக்கிய தீரர்களும் இந்த இயக்கத்துக்காக திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் முழு நேரமும் உழைப்பவர்களும் பொளத்தம் போல, சமணம் போல, சித்தர் இயக்கம் போல, நீதிக்கட்சி போல இவ்வியக்கம் அழிய விடமாட்டோம் என உறுதி பூண்டவர்களும் இன்றும் வாழ்கிறோம். வட எழுத்து நீக்கித் தமிழ் எழுதுக என தொல்காப்பியர் நூற்பா எழுதியபோது உருவான திராவிட இயக்கத்தை அழிப்பவர் மகிழ புலவர் பிரபஞ்சனா சாடுவது ?



நந்திவர்மன்

வெள்ளி, 3 ஜூன், 2011

அகவை 88 காணும் ஆலமரம் : தமிழருக்கு நிழல் தர நீடு வாழ்க


1974 புதுவை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இலாசுப்பேட்டையில் முடிந்த பின் அந்தத தேர்தலுக்காக பிரச்சாரச் செயலாளராக இரூந்த நந்திவர்மன் இல்லத்தில் விருந்துக்கு தலைவர் கலைஞர் வந்தபோது எடுத்த படத்தில் நந்திவர்மன், அவரது சித்தப்பா மகள்கள் மறைந்த அலமேலுமைதிலி,சுந்தரவல்லி ஆகியோர் உள்ளனர்.அந்த விருந்தில் சிட்டிபாபு, பண்ருட்டி இராமச்சந்திரன்,தென் ஆற்காடுமாவட்டச் செயலாளர் தியகதுர்கம் இராமகிருட்டினன், திண்டிவனம் தங்கவேலு எம்.எல்.சி,பரூக் மரைக்காயர் அவர் தம்பி இக்பால், பேராசிரியர் இராசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தலில் தி.மு.கழகம் தோற்றது. இலாசுப்பேட்டையில் பரூக் மரைக்காயரும் திருநள்ளாறில் சொளந்தரரங்கன் மட்டுமே வென்றனர்.21 நாளில் இராமசாமி தலைமையில் அமைந்த அதிமுக ஆட்சி கவிழ்ந்தது
21 நாள் அதிமுக ஆட்சி மீது அலைஒசை ஏட்டில் ஆற்காடு வீராசாமி 21 ஊழல் புகார்களை கூறினார். உடனே அதிமுக வின் 21 நாள் ஆட்சி முதல் அமைச்சர் இதை சொல்ல புதுவை தி.மு.கவில் ஆள் இல்லையா என சவால் விட்டார்.21 நாள் அதிமுக ஆட்சி மீது 21 ஊழல் புகார்களை புதுவை தி.மு.க பிரச்சாரச் செயலாள்ர் நந்திவர்மன் அப்போதைய துணைநிலை ஆளுனர் சேத்திலாலிடம் தந்தார் என்பது வரலாறு

திங்கள், 16 மே, 2011

காந்தியாரே கண்டித்தும் திருந்தாத ஊழல் வரலாறு!

ஊழலை ஒழிப்பதாக ஊரெல்லாம் முழங்கிய காங்கிரசார் பொது வாழ்க்கையில் சரியான முன்னுதாரணம் படைக்கத் தவறி விட்டார்கள். கொண்டா வெங்கடப்பய்யா குழு பொது வாழ்க்கையின் தரத்தைக் குலைக்கும் காங்கிரசாரின் போக்குக் குறித்து தன் மனவேதனையை வெளிப்படுத்தி எழுதிய மடலை மகாத்மா காந்தி தன் பிரார்த்தனைக்கூட்டத்திலேயே 1948 ஜனவரி 12-ஆம் நாள் படித்து வேதனைப்பட்டார். ஆந்திரத்திலே பரவி வந்த ஊழல் பற்றிய அம்மடலை மனவேதனையோடு படித்த காந்தியார் ஊழல் ஆந்திராவின் ஏகபோக உடமையாக இல்லை. நாடெங்கும் காணப்படும் கேடாகவே வளர்ந்து நிற்கின்றது என்று வருந்திக் கூறினார்.

இந்தக் குமுறலின் பின்னுள்ள கதை இதுதான். 1945-ல் சென்னை நாளேடுகள் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் டி. பிரகாசம் பல இடங்களில் பொற்கிழி பெற்ற செய்திகளைச் சுமந்து வந்தன. காந்தியார் 1946 ஜனவரியில் தன்னுடைய ‘அரிஜன’ வார ஏட்டில் காங்கிரஸ் தலைவர்கட்குப் பொற்கிழி அளிக்கப்படுவதைப் பொதுப்படையாகக்கண்டித்து எழுதினார். சர்தார் பட்டேல் பிரகாசத்திற்கு விளக்கம் கேட்டுச் சு10டான கடிதம் ஒன்றை அனுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரகாசம் விடுதலைப் போரில் தனக்கேற்பட்ட இழப்பினை ஈடு செய்ய மக்கள் மனமுவந்து நல்கிய காணிக்கைகள் என்று பொற்கிழி தரப்படுவதைப் பற்றிப் பதிலளித்தார். பட்டேல் ஏழை எளிய மக்களை கசக்கிப் பிழிந்து மிரட்டி உருட்டி பெறப்பட்ட காணிக்கையானது தவறான ஒரு முன்னுதாரணத்தைத் தோற்றுவிக்கும் என்றார்.

ஏட்டோடு கண்டனம் செல்லாதுபோயிற்று. நாட்டிலே கேட்டிற்கான வித்து வேரூன்றிவிட்டது. காங்கிரஸ் பட்டேல் அஞ்சியபடி தோற்றுவித்த தவறான முன்னுதாரணம் ஊழலைப் பெருமளவில் உற்பத்தி செய்து விட்டது.

காந்தியார் கடுமையாக எச்சரிக்கவேää பிரகாசம் தாம் பெற்ற காணிக்கைகளைக் காங்கிரஸ் கட்சியின் கணக்கிலே ஒப்படைத்தார். பிரகாசம் அரசியலை விட்டு அப்புறப்படுத்தப்படவேண்டும் என்று ‘அரிஜன’ ஏட்டில் அவரைக் கண்டித்து காந்தியார் எழுத நினைத்ததை பட்டேலும் நேருவும் தடுத்து நிறுத்தினார்கள்.

கொண்டா வெங்கடப்பய்யா காந்தியார்க்கு எழுதியது போலவே சென்னை அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களைக் காங்கிரஸ் தலைவர் இராஜேந்திர பிரசாத்திற்கு அனுப்பினார். காங்கிரஸ் தலைவரோ கட்சியின் பொதுச் செயலாளர் சங்கர் ராவ் தேவிடம் புகார்களின் உண்மை தன்மை பற்றிக் கண்டறியச் சொன்னார். அந்தச் செயலாளர் முன்னாள் முதல்வர் பிரகாசம் மீதும் அப்போதைய முதல்வர் குமாராசாமி ராஜா மீதும் சொல்லப்பட்ட புகார்களைப் பற்றி ஒரு முடிவும் எடுக்க முடியாமற் போகவே நேருää பட்டேல்ää இராஜேந்திர பிரசாத் ஆகிய மூவர் குழுவிடம் ஊழல் புகார்கள் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன. பிரகாசம் குற்றவாளி அல்லர் என்று விடுவிக்கப்பட்டார். குற்றவாளி என்று அந்த மூவர்குழு கண்டுபிடித்த ஏனைய அமைச்சர்கள் அப்போது அமைச்சர்களாக இல்லாத காரணத்தால் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என 1950 பிப்ரவரியில் தள்ளுபடி செய்தனர்.

காங்கிரஸ் நாட்டைத் தன் சொத்தாகக் கருதியதோடு ஊழலை உட்கட்சி விவகாரமாகக் கருதி அன்றே செயல்பட்டது. தன் கட்சிக்கொரு நீதி மாற்றுக் கட்சிக்கொரு நீதியா? என்ற கேள்வி எழக்கூடும். கேள்வி நியாயமானதே தன் கட்சிக்காரர் ஊழல் புகார்கட்கு உட்படுத்தப்பட்டால் புகார் உண்மையா? பொய்யா? ஆதாரமுண்டா? என்று கண்டறியும் பொறுப்பைத் தன் கட்சித் தலைமையிடம் ஒப்படைப்பதும்ää மாற்றுக்கட்சி விவகாரமென்றால் விசாரணைக் கமிஷன் நியமித்து அரசியல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைப்பதும் காங்கிரஸ் அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டு வரும் போக்காகும்.

1950-ல் மட்டுமல்ல 1958-ல் கெய்ரான் விவகாரத்தின்போதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. கிருஷ்ணமேனன் சம்பந்தப்பட்ட ஜீப் ஊழலை நாடாளுமன்றப் பொதுக் கணக்குக்குழு தன் ஒன்பதாவது அறிக்கையில் குறிப்பிட்டு – ஒருவர் அல்லது இருவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய விவகாரம் என எழுதிற்றுää மத்திய அரசோ 1954 டிசம்பர் 18-ம் நாள் குழு தன் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டதே ஒழிய உயர் நீதிமன்ற நீதிபதியிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்பது வேதனைக்குரியதுää இதனைவிடக் கொடுமையான செயல் பொதுக்கணக்குக்குழு மறுத்தவுடன் விவகாரம் இத்தோடு முடிந்தது என்ற மத்திய அரசின் அறிவிப்புத்தான்!

விசாரணைக் கமிஷன் நியமிக்கவேண்டும் என்ற பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரையைப் புதைகுழிக்கு அனுப்பியது பெரிதல்ல விசாரணைக் கமிஷன் தீர்ப்பையே தூக்கி எறிந்ததும் உண்டு. முந்திரா ஊழலில் அன்றைய நிதி அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் மீதான எம்.சி.சாக்ளா கமிஷன் அறிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் நேரு டி.டி.கே.விற்கு மடலெழுதினார். டி.டி.கே யின் பதவி விலகல் மடலை ஏற்றுக்கொண்டு நேரு எழுதிய மடலில் விசாரணைக் கமிஷன் வெளிப்படுத்திய உண்மை எதுவாக இருப்பினும்ää என்னைப் பொறுத்தவரை உங்களுடைய (டி.டி.கே) பங்கு மிகச் சிறியது என்றும் என்ன நடந்தது என்பது நிச்சயமாக உங்களுக்கே (டி.டி.கே) தெரியாது என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று நேரு எழுதினார். நேருவின் நற்சான்றிதழ் கிட்டிவிட்டால் ஊழல்பேர் வழி உத்தமனாகிவிடுவார்.

மூன்று விசாரணைகள் டி.டி.கே மீது நடந்ததால் நேரு காலத்திற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.டி.கே. மீதான புகார்களை அடுக்கியபோது சாஸ்திரி விசாரணை நடத்த விரும்பினார். டி.டி.கே. அவர்களோ நேரு பாணியிலேயே விவகாரத்தை முடிக்குமாறு வேண்டினார். சாஸ்திரியால் விசாரணை நடத்த உறுதி பூண்டிருந்ததனால் டி.டி.கே. பதவி விலகலோடு கதையை முடித்துக் கொண்டார்.

கே.டி.மாளவியா சம்பந்தப்பட்ட சிராஜூதீன் விவகாரத்தில் நீதிபதி தனது அறிக்கை தந்தபின் கே.டி. மாளவியா இராஜினாமா செய்தார். அந்தப் பதவி விலகலை ஏற்றபோதும் மாளவியாவின் ஒழுக்கம் - நிதி நிலைமை ஆகியவற்றை முழுமையாகத் தான் நம்புவதாக எழுதி நற்சான்று நல்கினார்.

பிரதாப் சிங் கெய்ரான் மீதான ஊழல் புகார்களை விசாரணைக்கு உட்படுத்தும் நேரத்தில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய குறிப்பு புகார்களைத்தான் கிஞ்சித்தும் நம்பவில்லை என நேரு கூறினார். வேண்டியவர் மீது விசாரணை வந்தபின்னரும் அவர்கள் உத்தமர்கள் எனத் தாம் நம்புவதாக ஒரு பிரதமர் கூறலாமா? இது நீதித்துறையில் தலையிடுவதாக ஆகாதா? தீர்ப்பு எவ்வாறு அளிக்கவேண்டும் என்று முன்னாடியே எடுத்துச் சொல்வது ஆகாதா? என்று எவரும் கேட்டாரில்லை. இந்த முன்னுதாரணம் நேரு புத்திரியாலும் மேற்கொள்ளப்படலாயிற்று.

கெய்ரான் மீதான புகார்களைக் காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டுத்தான் முதலில் விசாரித்தது. அது எப்படி நியாயமாகும்? நீதிபதி நடத்த வேண்டும் விசாரணையை ஒரு மேலிடமே நடத்தலாமா? என்று செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு “யார் விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்களோ அவர்கள் விசாரிக்கலாம் என்றார் நேரு பண்டிதர்.

நாட்டையும் கட்சியையும் ஒன்றாகவே கருதும் மனப்பான்மை இந்திரா மனதிலும் குடிபுகுந்தது. நாட்டை தன் கட்சியின் பொதுச் சொத்தாக கருதினார் தந்தை வழியில் இந்திரா. வேறு வழியின்றி எஸ்.ஆர்.தாஸ் என்ற நீதிபதியிடம் கெய்ரோன் விவகாரம் பின்னால் ஒப்படைக்கப்பட வேண்டிய அளவு கோரிக்கை வலுத்தது. தாஸ் கமிஷனே முதல்முதலாக அறிவிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் மட்டுமல்ல ஏனைய விசாரணைக் கமிஷன்களுக்கும் முன்னோடியாகியது.

புகார் கொடுத்தவர்களே புகார்களை நிருபித்தாக வேண்டும் என்பது தான் தாஸ் கமிஷன் அணுகுமுறை! மத்திய அரசு விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் பலனில்லை அன்று! விசாரணைக்குட்படுத்தப்பட்ட கெய்ரான் பஞ்சாப் முதல்வராகப் பதவியில் நீடித்தபோதுதான் விசாரணை நடத்தப்பட்டது.

தாஸ் கமிஷன் அறிக்கை கெய்ரானுடைய நேர்மையான நிர்வாகம் - பஞ்சாப்பைப் பசுமைப் புரட்சி குலுங்கும் பூமியாக மாற்றியபாங்கு – தொழில் மயமாக்கிய தொண்டுää நிலையான அரசுää நிர்வாக நேர்த்தி – எல்லைப்பிரச்சினைகளில் ஏற்பட்ட தொல்லைகளை வென்று மளமளவென்று ஒருமைப்பாட்டை இறுதி செய்த ஆற்றல் இவை போற்றிப் புகழப்பட்டன.

ஒரு கண்ணில் வெண்ணெய் - மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா? ஏன்ற கேள்வி எழவே செய்யும்.

கெய்ரான் கீர்த்தி பற்றி குற்றம் வெளியான பின்பும் பாராட்டுரை! கேரளத்தில் 1967 தேர்தலுக்குப்பின் எதிர்க்கட்சி அரசுகளும் விசாரணைக் கமிஷன் நியமித்துள்ளன. 1967 மார்ச் 6ம் தேதி மார்க்சிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரி தலைமையில் எட்டுக் கட்சிக் கூட்டணி அரசு பதவி ஏற்றது. வலது-இடதுகளுக்கான அரசியல் தகராறுகளினால் அமைச்சரவையின் ஆயுள் முடிக்கப்பட்டது. புகழ்பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லாவை நீதிபதியாகக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப் பெற்றது. இரண்டாண்டுகளாகக் கேரள அரசியலில் 67 முதல் நடை பெற்ற சு10ழ்நிலைகளைத் தன் சொற்றொடர்களால் உருதுக் கவிஞரான நீதிபதி அழகுறப் படம் பிடிப்பது சுழலை வர்ணிப்பதாகவே தோன்றுகிறது.

“அமைதியான அணுகுமுறைக்கோ தெளிவான சிந்தனைக்கோ அங்கே இடமில்லை. குற்றச்சாட்டு ஒவ்வொன்றும் உண்மையா என்று உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிட நேரமும் நினைப்பும் இல்லை.

“அவசரமாகத் தேவைப்பட்ட வெடிமருந்தாக ஒவ்வொரு குற்றச்சாட்டும் தேவைப்பட்டது. ஒவ்வொரு தோட்டாவும் வெற்றுத்தோட்டாவாகப் போனாலும் வெடிப்பதற்குத் தேவையாயிற்று. ஓசைக்காக வெற்றுத் தோட்டா வெடிக்கப்பட்டது போல ஆசைக்காக அவசர அவசரமாக குற்றச்சாட்டுக்கள் கொடுக்கப்பட்டன.” என்று கேரள நிலைமையை மேலும் வருணிக்கிறார் நீதிபதி முல்லா.

ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச்சரவை கவிழ்ந்தது. பல அமைச்சர்கள் அந்தச்சமயம் விசாரணைக் கமிஷன்களைச் சந்திக்க நேரிட்டது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சிமீது ஊழல் புகார்களைக் குவித்தது. ஒரு கட்சி அரசு முந்தைய அரசு மீதான புகார்களை விசாரிக்கக் கமிஷன் நியமித்தால் அடுத்து வரும் அரசும் அதே பாணியில் விசாரணைக் கமிஷன்களை நியமித்தது. 1969 செப். 9ல் வலது கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கே. சேகரன் (நாயர்) இடது அமைச்சர்களான திருமதி கே.ஆர். கௌரி (வருவாய்த் துறை)ää இ.கே.இம்பிச்சி பாவா (போக்குவரத்து) ஆகியோர் மீதான புகார்களை உள்துறை அமைச்சரிடம் தந்து விசாரணைக் கமிஷன் நியமிக்குமாறு வற்புறுத்தினார்.

மத்தய அரசினிடம் மர்மப்பெட்டி தூக்கி அலையவில்லை சேகரன் நாயர்! மாநில உள்துறை அமைச்சரிடமே புகார்களை தந்து ‘விசாரித்திடுக’ என்று குரலெழுப்பியது கவனிக்கத்தக்கது. கர்ஷக தொழிலாளிக் கட்சித் தலைவரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான பி. வெல்லிங்டன்மீது விசாரணைக்கமிஷன் நியமிக்க வேண்டும் என்று வலது கம்யூ. உறுப்பினர் இ. சந்திரசேகரன் (நாயர்) சட்டமன்றில் தீர்மானமே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. 1969 அக்டோபர் 10-ம் தேதி இந்திய சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் கேரள சோஷலிஸ்டகட்சியைச் சார்ந்த மத்தாய் மஞ்சு10ரன் மீது பேரவைத் தலைவரிடம் புகார்பட்டியலைத் தந்தார். முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பதிலடி தந்தார். வெலிங்டன்மீது விசாரணைக்கு உத்தரவிட்டதோடு கூட்டணியில் இடம் பெற்ற வலது கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் எம்.என்.கோவிந்தன் நாயர் (வேளாண்மை) டி.வி.தாமஸ் (தொழில்) ஆகியோர் மீதும் இந்திய சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த பி.ஆர். குரூப் மீதும் விசாரணைக் கமிஷன்களை நியமித்தார். அரசியலில் தங்களை வஞ்சிக்க நம்பூதிரிபாடு முயல்கிறார் என்றதும் இடது கம்யூ. அமைச்சர்கள் கே.ஆர்.கௌரி இ.கே.இம்பிச்சி பாவாää எம்.கே.கிருஷ்ணன்ää ஆகியோர் மீதும் மத்தாய் மஞ்சு10ரன் (கே.எஸ்.பி.) மீதும் விசாரணைக்கமிஷன் நியமிக்க வேண்டும் என்று வலதுசாரிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானம் நிறைவேறிய காரணத்தால் நம்பூதிரிபாடு அமைச்சரவை பதவி விலக நேர்ந்தது.

சி. அச்சுதமேனன் தலைமையிலான புதிய அரசு 1969 நவம்பர் 1ல் பொறுப்பேற்று ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி வேலுப்பிள்ளை தலைமையில் நான்கு விசாரணைக் கமிஷன்களை அமைத்தது. முல்லா கமிஷன் ஏற்கனவே நம்பூதிரிபாடினால் அமைக்கப்பட்டிருந்தது. கேரள விசாரணைக் கமிஷன்களில் சில அணுகு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. வேண்டியவர்க்குச் சலுகை வழங்குதல்ää ஊழல் அல்ல என்று கேரள விசாரணைக் கமிஷன்கள் தீர்ப்பு நல்கின. வேண்டியோர்க்குச் சலுகை காட்டுவது (குயஎழரசவைளைஅ) பற்றி நீதிபதி முல்லா தன் அறிக்கையில் குறிப்பிடுவதாவது. “ஒருவர் தான் விரும்புபவர்க்கு ஆதரவாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துதல் மனித இயற்கை’ ஆதரவாளர்க்கு ஆதரவாகவே ஒருவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவாரே ஒழிய எதிரிக்கு இசைவாகப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு மாறானது.

அரசியல் ரீதியாக வேண்டியோர்க்குச் சலுகை வழங்குதலை நியாயப்படுத்தும் சிலநெறி முறைகளும் கோட்பாடுகளும் ஜனநாயக அரசியல் முறையில் தோன்றிவிட்டன. தொகுதி நலன் பேணுதல் என்பது (ரேசளiபெ வாந ஊழளெவவைரநnஉல) இவற்றில் ஒரு கோட்பாடாகும். தொகுதி நலன் பேணல் என்றால் என்ன? உங்கள் ஆதரவாளர்க்கு முன்னுரிமை காட்டாமலும்ää உங்கள் அரசியல் கட்சி நலன்களுக்கு இசைவாக நடக்காமலும் நடுவுநிலைமை என்று சொல்லி உங்கள் தொகுதியைப் பேணுதல் இயலுமா?

தகுதி அடிப்படையில் ஒருவரைத் தேர்வுசெய்வது என்பது முற்றிலும் இயலாததுää ஆதாம்-ஏவாள் பெற்றெடுத்த எந்த மனிதனும் ஒரு வேலைக்குப்போட்டியிடுகின்ற பல்லாயிரக்கணக்கான மனுதாரர்களில் இருந்து ஒவ்வொரு பொறுப்புக்கும் தகுதியானவனைத் தேர்ந்தெடுத்தல் இயலவே இயலாது. தன் குழுவின் செல்வாக்கை வாக்காளரிடையே வலுப்படுத்துவது ஒவ்வொரு அரசியல்வாதியின் கடமை. தன் ஆதரவாளர் நலன் பேணினால் ஓர் அரசியல்வாதி வீழ்ச்சியுறமாட்டான்”.

என்றுää “நீதிபதி முல்லாகோட்பாடு” கூறுகின்றது. ஓர் அமைச்சர் தன் சொந்தத் தொகுதிக்கு முன்னுரிமை தருதல் இயற்கை. சொந்தக்கட்சியின் நலன் பேணுதலும் கட்சிக்காரர்களுக்குச் சலுகை காட்டுதலும் இயற்கை என்று நீதிபதி முல்லா தந்த தீர்ப்பால் எதிரிகள் ஊழல் என்று சொன்ன எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் அடிபட்டு விழுந்தன. ஓர் அமைச்சரின் செயலுக்கு அமைச்சரவை ஒப்புதல் நல்கி இருந்தால் அந்த அமைச்சர் தவறு செய்தவர் அல்ல என்பது கேரளக்கமிஷன்கள் கையாண்ட அணுகுமுறை அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றிருந்தாலேபோதும் அமைச்சர் ஒரு தவறும் செய்தவர் அல்லர் என்பது கேரளத் தீர்ப்பு!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளைவதிருக்கட்டும். முற்பகலில் எப்படியெப்படியெல்லாம் விசாரணைக் கமிஷன்கள் முடிந்தன ; என்பதையும் நாட்டோரும் நல்லோரும் ஒப்பிட்டுப் பார்த்தாக வேண்டும்.

. இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.




சனி, 9 ஏப்ரல், 2011

என் உயிரின் இயக்கம் கனிமொழி



பேரண்டத்தில் எங்கோ இருக்கும் கருந்துளையால் உலகில் நேரும் நிலநடுக்கம். நிலநடுக்கத்தாலும் கடலடியில் எரிமலை வெடிப்பாலும் குமரிக்கண்டத்தின் பகுதியான் சப்பான் சந்தித்த பேரழிவை உலகறியும்.

பிறந்தது முதல் அறுவைப் பண்டுவர் நிகழ்த்திய அறுவைகளால் மூளையில் கனிமொழிக்கு இதுவரை நேர்ந்த அதிர்வுகளால் நடுங்கினோம்.ஆயின் அவள் உள்ள உறுதியால் மீண்டெழுந்தாள். குறும்புப்பேச்சால் குடும்பத்தை குதூலிக்க வைத்தாள்.கட்வுள் உண்டா இல்லையா சண்டையில் என்னை வாதத்தில் மடக்கி மகிழ்வாள்.மாமா இந்தச் சாராய் ஆலை துர்நாற்றம் கடற்கரைக்கு வருவோரை தாக்குகிறதே என்றாள். உச்ச நீதிமன்றம் சென்று பொதுநல வழக்கு மூலம் துரத்தினேன் அந்த ஆலையை ஊருக்கு வெளியே.கனிமொழியின் கட்டளை நிறைவேறியது.

தோழர் ஜார்ஜ் பெர்ணான்டசு எப்போது மடல் எழுதினாலும் கனிமொழியையே  முதலில் விளிப்பார்.அவள் பிறந்த நாளும் ஜார் ஜ் பிறந்த நாளும் கலைஞர் பிறந்த நாளும் சூன் 3.கடந்த ஆண்டு நினைவு இழப்பு நோயால் படுத்த படுக்கையாக் உள்ள தோழரின் பிறந்த நாளை கனிமொழி கொண்டாடினாள்.


கடந்த ஆகத்து முதல் அப்பல்லோ மருத்துவ மனையின் கசாப்புக் கடைக்காரர்கள் 4 அறுவை முடிப்பதும் வீட்டுக்கு அனுப்புவதும் பின்னரும் மீண்டும் மருதுவமனை செல்வதும் வாடிக்கை ஆகி விட்டது.

போன அறுவைகுப்பின் சுற்றி இருபோர் யாரெனத் தெரியா நிலை ஏற்பட்டு நினைவு கிடைக்கப்பெற்றாள்.உண்ணும் உணவு உடனே வாந்தியாக வரும். தலை வலிக்கும்.கடுஞ்சுரமடிக்கும்.

தூங்கிக்கொண்டே இருந்தாள் இரவுபகலாக. நேற்று 8.4.2011 இரவு மீண்டும் மண்டையில் ஓட்டை போட்டு குழாய் பொருத்தி அவள் மூளையில் சுரக்கும் நீரை வடியச் செய்துதுள்ளனர்.

பெரியாரின் மண்டைச்சுரப்பை உலகு தொழுதது,

கனிமொழியின் மண்டை சுரப்புக்காக என் உயிர் அழுதது.


நந்திவர்மன்

ஞாயிறு, 27 மார்ச், 2011

புதுவைப் பல்கலைக்கழ்க சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம்

புதுவைப் பல்கலைக்கழ்க சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம்  தமிழ் வளர்ச்சிகுப் புதுவையின் பங்களிப்பு என்ற தலைப்பில்  நடத்திய கருத்தரங்கில் 26.03.2011 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் புல முதன்மையர் ஆரோக்கியநாதன்  தலைமையில் தமிழ்மாமணி நா.நந்திவர்மன், பொதுச் செயலாளர் திராவிடப் பேரவை நிறைவுரை ஆற்றினார்..முனைவர் மு.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடான் தமது விடுதலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளது!

ஆக்கம்: ஊடக அறிக்கை

தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் இது பற்றி வெளியிட்ட செய்தியில் "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசாங்கத்துக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தென்சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத்தமிழ் மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கிறது. விடுதலை பெற்ற தென்சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்;குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியா நகரத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுஆச் அவர்களை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப்போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழத்தமிழ் மக்களுடனான தமது திடவொற்றுமையுணர்வினைக் குறிப்பிட்டும் அவர் உரையாற்றினார்.

வடக்கு சூடானிலிருந்து தெற்கு சூடானிய மக்கள் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் முன்னின்று நடத்தி வந்துள்ளது. மக்களின் பேராதரவைப் பெற்ற அமைப்பான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் சுதந்திர தென்சூடான் அரசாங்கத்தினை அமைக்கவுள்ளது. அவர்கட்கென ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென்சூடானிய மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த பேரளவிலான துன்பங்கள் தொலைந்து போகும். அவர்களது போராட்டத்தின் போது கிட்டத்தட்ட இருபது இலட்சம் மக்கள் மடிந்துள்ளார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டும்; இறந்து போனார்கள். இவர்கட்கெனப் புதிய நாடொன்று பிறப்பதைக் காணும் இவ்வேளையில் ஈழத்தமிழர்கள் தாமும் ஆண்டுக்கணக்காக விடுதலையின் பெயரால் அனுபவித்து வரும் துயரங்களை நினைவுகூர்வதுடன், தென்சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெறுமென நம்பிக்கை கொள்கிறார்கள்.

வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அரசதலைவர் ஒபாமா அவர்கள் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் "இலட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். அரசதலைவர் ஒபாமா அவர்களின் இச்செய்தியை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேவகையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

1977ல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கமைய இறைமையுள்ள தமிழீழத் தனியரசினை அமைப்போம் என்று வாக்குக்கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே உரத்துத் தெரிவித்துவிட்டார்கள். ஆயுதப்போராட்டம் சிறீலங்காவில் ஆரம்பமாவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே ஈழத்தமிழர்கள்; தம் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள். புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009இல் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலை தமிழருக்கெனத் தனியான நாடு உருவாகுவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உறுதிசெய்யும் ஒரே தீர்வாகுமென்பதைத் தெளிவாக்கி தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினை மேலும் நியாயப் படுத்துகிறது.

அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய சிறீலங்காவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை சிறீலங்கா அரசதலைவர் ராஜபக்ச இனப்படுகொலைக் குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார்.

திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தமது செய்தியில் "விடுதலை பெற்ற தென்சூடானிய மக்களுக்கும் அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும்;, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ மக்களும் தமது இதயம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விடுதலை பெறவென நீங்கள் ஆற்றிய தியாகங்களையெண்ணி நாம் சிரம்தாழ்த்துவதுடன் உங்களது துணிவையும் திடசங்கற்பத்தையும் நாம் பாராட்டுகிறோம். உங்களுக்கு மிகவும் வெற்றிகரமானதும் வளமிக்கதுமான எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்"என்று மேலும் தெரிவித்துள்ளார்.


பிரதமர் அலுவலகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


மூலம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - தை 18, 2011

பிரசுரித்த நாள்: Jan 18, 2011 10:42:35 GMT

சனி, 1 ஜனவரி, 2011

மலேசியாவும் பாக்கிஸ்தானும் பெட்ரோல் விலையை குறைக்கும்போது மக்கள் தலையில் சுமை ஏற்றும் இந்திய அரசு

காரைக்காலில் நந்திவர்மன் பேச்சு


காரைக்கால் யூனியன் பிரதேசப் போராட்டக்குழு திங்கள் 28 அன்று உண்ணாவிரதம் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியது. கோட்டுச்சேரி போராட்ட குழு அமைப்பாளர் சுரே~;ராஜன் தலைமை தாங்கினார். போராட்டக்குழு பொதுச்செயலாளர் அன்சாரிபாபு முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் சுப்பிரமணியன் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் அசனா, மலையபெருமாள் பிள்ளை, சின்னையா பிள்ளை, ஓ.எஸ். உதுமான் அய்யம்பெருமாள், ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் கௌரவத் தலைவர் நந்திவர்மன் பேசியதாவது:

காரைக்கால் தனி ய+னியன் பிரதேசம் கேட்டுப் போராடுபவர்களுக்கு தேசியப்பார்வை உண்டு. குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் அல்ல நாங்கள் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கோபுரம் மீதேறி வைகுந்தம் போக வழிகாட்டுவான் என அறிஞர் அண்ணா நாட்டு வாட்டம் போக்கிட முடியாத காங்கிரஸ்காரர்களை அந்தக் காலத்தில் சாடுவார்.

இன்று பெட்ரோல் விலையை காங்கிரஸ் அரசு மத்தியில் எப்படி நிர்ணயம் செய்கிறது? ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 58.90 ஆக வைத்து கொண்டால் பெட்ரோலின் அடிப்படை விலை 28.93 ஆகும். பிறகு எப்படி விலை ஏறுகிறது! இந்த ஆண்டு பிப்ரவரியில் இயற்கை எரிவாயு டீசல் பெட்ரோல் விலைகளை அரசு கட்டுபாட்டில் இருந்து விடுவித்தது.

 சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து கொள்ள மன்மோகன் சிங் அரசு தாராளமயத்தை கடைப்பிடித்தது. பிப்ரவரி 27ல் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இறக்குமதி வரியும் எக்சைசு வரியும் விதித்தார். இன்று ஒரு லிட்டர் பெட்ரோலில் எக்சைசுவரி 14.35 ரூபாயாகும். கல்வி வரி 0.43 பைசா ஆகும். டீலர் கமி~ன் 1.05 ஆகும். குரூட் ஆயில் கஸ்டம்சு வரி ரூ. 1.1 ஆகும். பெட்ரோல் மீது கஸ்டம்சு வரி 1.54. ஏயுவு மதிப்பு கூட்டுவரி 5.5 போக்குவரத்து 6.00 ஆகிறது. ஆக இப்படித்தான் ரூ.58.90 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிமேதாவிகள் இந்தியாவில் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.

2008ல் இந்தியாவில் 50.64 விற்றபோது ஆஸ்திரேலியாவில் ரூ. 31.99 கனடாவில் 31.42 பாகிஸ்தானில் 36.09, அமெரிக்காவில் 17.57, மலேசியாவில் 30.12 சௌதி அரேபியாவில் 5.71, ஐக்கிய அரபு எமிரேட்சில் 15.95, நியுசிலாந்தில் 32.28 கத்தாரில் 9.82, பஃரெயினில் 9.57 இந்திய ரூபாய் மதிப்பில் 1 லிட்டர் பெட்ரோல் கிடைத்தது. 2010ல் மலேசியாவில் ரூ. 30.12 ரூபாயில் இருந்து ரூ. 20.99 ஆக குறைக்கப்பட்டது. பாகிஸ்தானில் ரூ. 36.09 லிருந்து ரூ. 31.43 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள் முட்டாள்களா? 1967ல் நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அலைவீசி தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது மேற்கு வங்கத்தில் அஜய் முகர்ஜி தலைமையிலான பங்களா காங்கிரஸ் வென்றது. அதில் பங்களா காங்கிரசின் பிரதிநிதியாக பங்கேற்றவர் பிரணாப் முகர்ஜி ஆவர் இப்போது காங்கிரசின் நிதி அமைச்சர்.காங்கிரசில் அறிவாளிகளே இல்லையா? அடிக்கடி காங்கிரசை விட்டு வெளியே சென்று குப்பை கொட்ட முடியாமல் மீண்டும் காங்;கிரசுக்கு திரும்பும் இந்த அறிவாளி மலேசியா போல பாகிஸ்தான் போல பெட்ரோல் விலையை ஏன் குறைக்கவில்லை?

இதில்தான் 2ஜி ஊழலைவிட பெரிய கேஜி ஊழல் வருகிறது. உலகப் புகழ்பெற்ற கதாநாயகி நீரா ராடியாவும் இந்துஸ்தான் டைம்சு ஆசிரியர் வீர் சங்வீயும் உரையாடியதை ழிநn ஆங்கில வார இதழ் வெளியிட்டது. அதை தினமணி 21 ஞாயிறு நவம்பர் 2010ல் முழுப்பக்கத்தில் பாதிபக்கம் வெளியிட்டது.

வீர்சங்கி சொல்கிறார் “நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறை இல்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது என்று பத்திரிக்கையில் எழுதப்போகிறேன்.

நீரா ராடியா சொல்கிறார் : ஆனால் விர் அவருக்கு எரிவாவு எடுக்கும் அனுமதியை

அரசு வழநு;கி உள்ளது அதில் அவர் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்சங்கி : சரி

நீரா ராடியா :அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கப் பார்க்கிறார்

இது நீரா ராடியா டேப்பில் உள்ளது. இயற்கை எரிவாவு எடுக்க முகே~; அம்பானி 1000 கோடி டாலரை எங்கே கொடுக்கிறார்? அதன் தலமையகம் எங்கே உள்ளது? நம் மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனாமை மறந்து விட்டர்களா? அங்குதான்.

2009 ஏப்ரல் 2009-ல் முகே~; அம்பானி நிறுவனம் புதுச்சேரியை ஒட்டி (ஏனாம்) ஆழ்கடலில் இயற்கை எரிவாயுவு உற்பத்தியை தொடங்கியது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். 2ஜி யை மிஞ்சும் கேஜி. கேஜி என்றால் கிரு~;ணா-கோதாவரி கடலில் கலக்கும் படுகை. இங்கு 44175 கோடியில் அதாவது கூ8875 டாலரில் முகே~; அம்பானியின் திட்டம் செயலாகிறது. இதற்காகத்தான் முகே~; அம்பானி 1000 கோடி டாலர் செலவிட்டதாக நீரா ராடியா டேப்பில் பேசியுள்ளார்.

ஆயிரம் கோடி பலரை யாருக்கு ரிலையென்சு செலவிட்டது? ஏன் செலவிட்டது? கேஜி டி6 பிளாக்கில் எரிவாயு எடுக்க அனுமதி பெறவா? எரிவாயுவுக்கு அரசுக்கு பிச்சைக்காரனுக்கு போடுவது போல் ராயல்டி தர அனுமதி பெறவா? நீரா ராடியாவுக்கே வெளிச்சம். ஆனால் 2009 ஏப்ரல் 2-ல் தொடங்கி 2010 மார்ச்சுக்குள் தீரூபாய் 1 மற்றும் 3 கிணறுகளில் இருந்து கிடைத்த வருவாய் மட்டும் 4000 கோடி டாலர் என ரிலையன்சின் வருடாந்திர கணக்கு கூறுகிறது.

இதற்காகத்தான் முகே~; அம்பானியின் சகோதரர் அணில் அம்பானியின் ரிலையன்ஸ் நேட்சுரல் ரிசோர்சஸ் லிமிட்டெட் உடன் மோதியது. உச்ச நீதிமன்றத்தில் சகோதரர்களின் நிறுவனங்கள் மோதிக் கொண்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிரு~;ணன், சதாசிவம், பி. சுதர்சன் ரெட்டி அடங்கிய மூன்று நீதிபதிகள்.

இயற்கை வளங்கள் ஒரு நாட்டு அரசுக்கே சொந்தம். அதன் மீது தனியாரோ நிறுவனங்களோ உரிமை கொண்டாட முடியாது. எனத் தீர்ப்பளித்தனர். முகே~; அம்பானி 1000 கோடி டாலர் செலவு செய்து இயற்கை வாயு எடுக்கத் தொடங்கி விட்டார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு கேஜி படுகையில் சாமல்கோட்டில் உருவாகும் அணில் அம்பானியின் தொழிலகத்துக்கும் இயற்கை வாயு அளிப்பதை பரிசீலித்துக் கொண்டுள்ளனர்.

2ஜி வி~யம் போலத்தான் கே.ஜி விவகாரமும். எப்படி விலை நிர்ணயம் செய்தீர்கள்? உலகின் பிறநாடுகள் போல் அல்லாமல் குறைந்த ராயல்டிக்கு கம்பெனிகளுக்கு தாராளமயம் காட்டிவிட்டு பெட்ரோல் ஃ டீசல் ஃ எரிவாயு விலையை பாகிஸ்தானை விட கூடுதலாக ஃ மலேசியாவை விடக் கூடுதலாக விற்று மக்களை சுரண்டுவதுதான் மக்களாட்சியா? இந்தியாவில் நடப்பது மக்களாட்சி அல்ல பேயாட்சி என்பார் சண்டே இண்டியா ஆசிரியர் அரிந்தம் சொத்திரி. அமெரிக்காவில் நடப்பது மக்களாட்சி அல்ல கம்பெனிகள் ஆட்சி என அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் வாக்கு மூலமே வழங்கி விட்டார்.

1,76,000 கோடி 2ஜி ஊழலை மிஞ்சும் 3,00,000 கோடி ஊழல் பற்றி ஓரிசாவே அலறுகிறது. சட்டமன்றமே முடங்குகிறது. ஒரிசாவில் செயல்படும் 341 சுரங்கங்களில் 215 சுரங்கங்கள் அனுமதி இல்லாமல் எப்படி செயல்படுகின்றன என உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது பிஜீஜனதா தள ஆட்சியில் நடக்கிறது என்று மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா முழுவதும் 15000 சட்டவிரோதமாகச் செயல்படும் சுரங்கங்கள் உள்ளன. 8700 சுரங்கங்களே சட்டபூர்வமாகச் செயல்படுகின்றன என மத்திய அரசு நிறுவனங்களே கண்டுபிடித்துள்ளன.

நாட்டில் 1.64 லட்சம் ஹெக்டேர் காடுகளை சுரங்கத்துக்காக மாற்றியுள்ளார்கள். இரும்புக்கனி சுரங்கங்களில் மட்டுமே 2005-2006 கணக்குப்படி ஓராண்டில் 77 மில்லியன் டன் தண்ணீர் செலவாகியுள்ளது. 3 மில்லியன் மக்களின் அன்றாடக் குடிநீருக்குத் தேவைப்படும் தண்ணீர் கபளீகரம் செய்யப்படுகிறது.

2006-ல் எடுக்கபட்ட கணக்குப்படி 1.84 மில்லியன் கழிவுகள் அந்த ஆண்டில் மட்டுமே சுரங்கங்கள் சுற்றுச்சூழலை பாதிக்க வெளியே கொட்டியுள்ளன. இதில் நிலக்கரி சுரங்கங்களே மிகுதியான கழிவுகளை வெளியேற்றுகின்றன. ஒரு டன் நிலக்கரி வெட்டி எடுக்க மூன்று அல்லது நான்கு டன் கழிவு வெளியாகும் இந்தோனிசியாவில் நிலக்கரி சுரங்கங்கள் எடுத்து வெட்டிக் கொண்டு வந்து காரைக்கால் மார்க் துறை முகத்தில் இறக்க திட்ட தீட்டியவர்களும் சிந்திக்க வேண்டும்.

கள்ளத்தனமாக செயல்படும் 15000 சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களால் தனியாருக்கு கொள்ளை லாபம். அரசுக்கும் வருவாய் இழப்பு, அந்த வருவாய் இழப்பை கணக்கிட 2ஜி இழப்பை கணக்கிட்ட கணக்கு தணிகை அதிகாரியை பணிக்கமர்த்தினால் எத்தனை இலட்சம் கோடி இழப்பு என்று சொல்வார். அதைக் கொள்ளையிட்ட அரசு கட்சி வித்தியாசமில்லாதது என்றும்; மத்தியில் ஆண்;ட ஃ ஆளும் அரசுகள்! பல மாநில அரசுகள்! பல கட்சிகளின் கீழுள்ள அரசுகள்!

இதில் கே.ஜி ஊழலில் புதுவை அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய மல்லாடியே வருவாய் துறை அமைச்சர்! கில்லாடிகளின் பலே கில்லாடி இவரே! காடு கெடுத்து நாடாக்கினார்கள் பழந்தமிழ் மன்னர்கள். காடழித்து கனிமம் தோண்டி இயற்கையை சூறையாடினார்களை இந்நாளைய ஆட்சியாளர்கள். சுரங்கத்துக்காக காடுகளை மாற்றித் தந்த மாநிலங்களில் ஆந்திரபிரதேசம் 13532 எக்டேர் ஃ அருணாச்சலம் பிரதேசம் 142 எக்டேர் அசாம் 87 எக்டேர் ஃ பீகார் 414 எக் இ சட்டிங்கார் 14,42 எக், கோவா 1282 எக், குசராத் 9664 எக், இமாச்சலப்பிரதேசம் 1228 எக், ஜார்கண்ட் 9059 எக், கர்நாடகா 7558 எக், கேரளா 29எக், மத்திய பிரதேசம் 10058 எக், மகாராட்டிரா 4057 எக், ஒரிசா 15397 எக், ராஜஸ்தான் 4996 எக், மேற்கு வங்கம் 277 எக், அந்தமான் 20 எக், நிகோபார் தீவுகள் 95,000 எக், இப்படி காடுகளை அழித்து சுரங்கங்களுக்கு வழிவிட்டவர்கள், சுரங்கங்கள் மூலம் அரசு கஜானாவை எப்படி நிரப்புகிறார்கள் தெரியுமா?

2000-01-ல் இந்தியா ஏற்றுமதி செய்த இரும்புக்கனியின் மதிப்பு ரூ.358 கோடி ஆகும். 2008-09-ல் இரும்புக்கனி ஏற்றுமதி 21,725 கோடியாக உயர்ந்தது. ஒரு டன் இரும்புக்கனி 6000-7000 ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியானது. கர்நாடக லோக் அயுக்தா நீதியரசர் சந்தோ~; ஹெக்டே அரசுக்கு ராயல்டியாக ரூ.16 முதல் ரூ. 27 வரையே கிடைப்பதை கண்டுபிடித்தார். 2004-ல் லோகிரேடு இரும்புக்கனிக்கு ரூ.4 ராயல்டி உயர்ரக இரும்புக்கனிக்கு 27ரூபாய் ஒரு டன்னுக்கு ராயல்டி என நிர்ணயித்த அரசு எது? இரும்புக் கனிக்கு ஏற்றுமதி வரி இ;லை என விலக்களித்த அரசு யாருடைய அரசு?

கர்நாடக அரசு கணக்குப்படி 1 டன் இரும்பு வெட்டி எடுக்க 150 ரூபாய் போக்குவரத்து 250 ரூபாய் அரசு ராயல்டி 27 ரூபாய்! ஏற்றுமதியானதோ டன் 7000 ரூபாய்! அரசுக்கு வெறும் 27 ரூபாய் வருவாய்.

மன்மோகன்சிங் குழுமத்தின் உறுப்பினர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான திட்டக்குழு 2005-ல் ஏற்றுமதி விலையில் 10 சதவீதம் அரசுக்கு வரியாக கிடைக்க வேண்டும் என்றது. இதை ஏற்க மூன்றாண்டு யோசித்த மத்திய சுரங்கத்துறை அமைச்சரகம் 2009 ஆகஸ்டில் பரிந்துரையை ஏற்றது. ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்ய இந்தியன் பீரோ ஆஃப் மைன்சு நிறுவனத்தை நியமித்தார்கள். அந்த அதிகாரிகளோ 1760 முதல் 1949 வரை தர வாரியாக நிர்ணயம் செய்தனர். 6000-7000 ஏற்றுமதி விலை! அதிகாரிகள் கண்ணை குருடாக்கிக் கொண்டு சொன்னார்கள் ரூ.1760 முதல் 1949 வரை என! இதில் 10 சதவிகித வரி விதிப்பாம் பிரணாப் முகர்ஜி எவ்வளவு பெரிய அறிவாளி பாருங்கள்! ஏற்றுமதி ஆகும் போது பில் ஆப் லேடிங் தருவார்கள். அதை வங்கிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் அளித்து லெட்டர் ஆஃப் கிரடிட்படி தமக்குரிய தொகையை பெறுவார்கள். அப்படி பெறும்போது 10 சதவீதம் வரி பிடித்தம் என்று நிர்ணயித்தால் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் வந்துவிடுமாம்! அது கூடாதாம் தனியாருக்கு கொள்ளை வாமம் சேருவதே எங்கள் கொள்கை என்று செயல்படும் மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி கம்பெனி பெட்ரோல் விலையை உயர்த்தும்! வெங்காய விலையை உயர்த்தும். கனிம ஏற்றுமதிக்கு வரி விதிக்காது எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிக்கும்! 2 ஜி போல எல்லா அமைச்சகங்களும் எவ்வளவு ஆயிரம் கோடி வருவாயை அரசுக்கு கிடைக்க ஒட்டாமல் செய்திருக்கும்.

ஏனாம் - எண்ணெய் வளத்தைச் சுரண்டும் கம்பெனிகளின் கூடாரம். இதனால்தான் மாநில அந்தஸ்து கோரி எத்தனையோ முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய புதுவை மாநிலத்துக்கு இந்த முறை மாநில அந்தஸ்து கிடைத்த விடக்கூடாது என அரசமைப்புச் சட்ட விதி 74 பிரிவை மீறி காபினட்முடிவை எதி;ர்த்து இந்தியப் பிரதமர்க்கு கடிதம் எழுதினார். இந்திய அரசியல் சட்ட 164(3) விதிப்படி இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்த மல்லாடி கிரு~;ணாராவ் பிரான்சு சென்று 21-27 செப்டம்பர் 2009க்குள் பிரான்சு அதிபர் அலுவலகத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்துகொடுக்கக்கூடாது என்று இருநாட்டுப் பிரச்சினையாக மாற்றினார். புதுவை மாநில அந்தஸ்து பெற வேண்டும். அப்போதுதான் கோவா முன்உதாரணத்தை பின்பற்றி காரைக்கால் தனியூனியன் பிரதேசமாக முடியும். மாகே அதே அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவுகளுடன் சேரலாம். ஏனாமில் இருந்து ஸ்ரீ கிரு~;ணா கமி~னில் மனு அளித்தவர்கள் ஏனாமை தெலுங்கானாவில் சேர்க்கக் கோரியுள்ளனர். ஏனாமை தன் கைக்குள் வைத்துக் கொண்டு ரிலைன்சின் முகவராக செயல்பட்டு சம்பாதிப்பது தடைப்படும் என்பதாலேயே கடந்த வருடம் குளிர் காலக் கூட்டத்தொடரில் நிறைவேறும் என்று சொன்ன மாநில அந்தஸ்து மசோதாவை மல்லாடி முடக்கியுள்ளர். இவ்வாறு நந்திவர்மன் காரைக்காலில் பேசினார்.